Share

Aug 1, 2021

அம்மா சென்ட்டிமென்ட் - Cock a snook at mother

 அம்மா சென்ட்டிமென்ட் 


’பத்து மாசம் சுமந்திருந்து பெற்றாள்’ பாட்டு இருக்கிறது.


’ முன்னூறு நாள் சுமந்தாள்’ – இப்படியும் 

ஒரு டப்பா பாட்டு 

நான் சிறுவனாயிருக்கும் போது 

கேட்டிருக்கிறேன்.


அப்போது நினைத்திருக்கிறேன். 

அடுத்து  ‘7200 மணி நேரம் வயிற்றில் அன்னை என்னை வைத்திருந்தாளே’ பாட்டு அடுத்து வரப்போகிறது. 


வில்லன் பிரகாஷ் ராஜ் வசனம்

 ஒரு படத்தில் இந்த மாதிரியிருந்தது. 

டி.வியில் ஓடிக்கொண்டிருந்ததை

 ஒரு நிமிஷம் கவனிக்க நேர்ந்த போது:

 – “என் அம்மா செத்துட்டா. 

அவ மட்டும் இப்ப உயிரோடு இருந்தா 

'ஏண்டி என்ன பத்துமாசம் உள்ள வச்சிருந்தே'ன்னு                   கேட்டு அவள கொன்னுடுவேன். ")


Cock a snook at Mother


 வலம்புரி ஜான் ஒரு பத்திரிக்கைக்கு ஆசிரியராய் இருந்தார். பத்திரிக்கையின் பெயர் "தாய்". 


எம்.ஜி.ஆர் – ஜானகியின் வளர்ப்பு மகன் அப்பு என்ற ரவீந்திரன் தான் பத்திரிக்கை அதிபர்.

 ஜெயகாந்தன் மடத்திற்கு போயிருந்த வக்கீல் ஹபீப் ராஜா (’ஏழாவது மனிதன்’ படத்தின் அசிஸ்டண்ட் டைரக்டர்) ஜெயகாந்தனின் அடைமழை பிரசங்கத்தின் இடையில் கொஞ்சம்  கேப் கிடைத்த போது

 “இந்த ‘தாய்’ பத்திரிக்கையில ஒங்களைப் பத்தி..” 


ஜெயகாந்தனோ வாக்கியம் முடியுமுன்னே மின்னலாக சீறினார் “அந்த  ‘த்தாயோளி’ பத்திரிக்கையெல்லாம் நீங்க ஏன் படிக்கிறீங்க?”


‘அம்மா வந்தாள்’ நாவல் தி.ஜானகிராமனின் மிகப்பிரபலமான நாவல்.

‘மோகமுள்’ நாவலை பிரமாதமாக புகழ்ந்த க.நா.சுவுக்கு ‘அம்மா வந்தாள்’ பிடிக்கவில்லை. 


டெல்லியில் ‘THOUGHT’ ஆங்கிலப்பத்திரிக்கையில் அம்மா வந்தாளுக்கு எழுதிய விமரிசனத்திற்கு க.நா.சு கொடுத்த தலைப்பு ‘Janakiraman’s Mother’. அம்மா வந்தாள் படித்திருந்தால் தான் இந்த தலைப்பின் வக்கிரம் புரியும்.


ஹேம்லட் தன் தாய் மீதான வெறுப்பை உமிழ்ந்த போது சொன்ன வார்த்தை - 

"Frailty! Thy name is woman!" - One of the mighty lines of Shakespeare - one of the memorable expressions. 


த்ரூஃபோ ( Francois Truffaut ) எடுத்த படம் Bed and Board.  படம் பார்க்கும்போது அதில் ஒரு சுவாரசியமான தகவல். “Mother’s day” was invented by the German Nazis, During  the second world war". 


..

இரண்டு கிழவிகள் எழுதிய புத்தகங்கள்



வானதி பதிப்பகம் 1996 ல் வெளியிட்ட நூல் 

எம். எஸ் சௌந்தரம் எழுதிய 

"சங்கீத நினைவு அலைகள் "

இவர் அப்போது எண்பது வயது மாமி. 

பத்மா சுப்பிரமணியத்தின் 

 மன்னியின் தாயார். 


இந்த நூல் ரொம்ப சின்னது.

 மேலோட்டமாக கர்நாடக சங்கீத நூல் என்ற எண்ணத்தை படிப்பவருக்கு ஏற்படுத்தும்.

ஆனால் சென்ற நூற்றாண்டின் 

 பிராமண பெண் வாழ்க்கை போராட்டங்களை பற்றிய நூல்.


 சௌந்தரம் அவர்களின் கணவன் மட்டுமல்ல,                 அவரது குரு கூட அவர் வாழ்க்கையை எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார்கள் என்பதை சுருக்கமாக விளக்கிய அற்புதமான நூல். 


அவரது குருநாதர் அரியக்குடி. 

அதோடு அந்தக்கால கர்நாடக சங்கீத உலகம், அன்றைய ஜாம்பவான்கள், சிஷ்யர்கள் பற்றியும் அருமையான Reference book. 

ஆனால் ரொம்ப சின்ன புத்தகம். 

பக்கங்கள் ரொம்ப குறைவு .


அழகிய நாயகி அம்மாள் அப்போது எண்பது வயது. எழுத்தாளர் பொன்னீலனின் தாயார். 


இவர் எழுதிய " கவலை " பெரிய புத்தகம். பக்கங்கள் ரொம்ப அதிகம். 


1998 ல் பாளையங்கோட்டை வளனார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை 

இந்த நூலை வெளியிட்டது.

 சென்ற நூற்றாண்டின் நாகர்கோவில் பகுதி                             நாடார் பெண்கள் வாழ்க்கை பற்றி 

அருமையான சித்திரம். 

நெஞ்சு வெடித்து விடுமோ என்று பயப்படுகிற அளவுக்கு பெண்கள் துயரங்கள் பதியப்பட்டது.


இரண்டு முதிய பெண்மணிகள் 

இருவரும்  

இறந்து விட்டார்கள். 


'சங்கீத நினைவு அலைகள் ' 'கவலை ' இரண்டு நூல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் என்று உரக்க பேசக்கூட, விளக்குவதற்கு 

இங்கே ஆட்கள் உண்டு. 


2000 ல் திருச்சி தமிழ் இலக்கிய கழகத்தில் 

நான் அழகிய நாயகி அம்மாளின்

 'கவலை ' புத்தகம் பற்றி பேசினேன். 


அப்போது எம் எஸ் சௌந்தரம்

 ' சங்கீத நினைவு அலைகள் ' 

நூலை ஒப்பிட்டு பேசினேன்.


....