Share

Aug 23, 2012

ஜான் ஆப்ரஹாம்

Sep 24, 2008


'பல்த்தசார் 'என்ற பிரஞ்சு படத்தை தழுவியது தான் 'அக்ரகாரத்தில் கழுதை 'என விமலாதித்த மாமல்லன் என்னிடம் கூறினார்.
அக்ரகாரத்தில் கழுதை படத்திற்கு வெங்கட் சாமிநாதன் வசனம் எழுதியிருந்தார்.
சுந்தர ராம சாமி அதன் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஆசைபட்டிருந்தார். ஆனால் நடக்கவில்லை.
எம்பி சீனிவாசன் நடித்தார். சாவித்திரி நடித்தார். விருது வாங்கிய படம்.அதன் இயக்குனர் ஜான் ஆபிரஹாம்.
ஜான் ஆபிரஹாமை நேரில் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது விருது பட இயக்குனர் என அவர் ஏ வி எம் ஸ்டுடியோவில் பிரபலம். ’அம்மே அறியான்’ பட எடிட்டிங் வேலை என்று நினைக்கிறேன். எடிட்டிங் காக ஏவிஎம் மிற்கு வருவார்.
நான் அவரை நான்கைந்து முறை பார்த்த போதும் ஒரே சம்பவம் தான்அல்லது ஒரே மாதிரி சம்பவம் நடந்தது.
நீட்ஷேயின் “The eternal recurrence of the same event”

ஆட்டோ வந்து நிற்கும். ஜான் ஆபிரஹாம் சீட்டில் உட்கார மாட்டார். கால் வைக்கிற இடத்தில் வெளிக்கி இருப்பது போல் குந்தி இருப்பார். அவர் கூட வருபவர் இறங்க சொல்லி கெஞ்சுவார். ஆபிரஹாம் ரொம்ப அழுக்காக ஆடை யுடன் எப்போதுமே குளிக்காதவர் என்று பார்த்தவுடன் தெரியும்படி உடலும் ரொம்பவே அழுக்காக இருப்பார். ஆட்டோவில் சிரித்துகொண்டே குந்திய நிலையில் இறங்க மறுப்பார். ஆட்டோகாரன் கத்துவான். இவர் இறங்க மாட்டார். எடிட்டிங் ரூமிலிருந்து இவருடைய எடிட்டரும் வந்து மலையாளத்தில் இறங்கும்படி கெஞ்சுவார் . இவர் சிரித்துகொண்டே மறுப்பார். வெகு பிரயாசைக்கு பின் இவரை சிலர் ஒன்று சேர்ந்து வலுக்கட்டாயமாக ஆட்டோ விலிருந்து இறக்குவார்கள்.

அடுத்த முறையும் அதற்கடுத்த முறையும் அதற்கடுத்த முறையும்
ஆட்டோ வந்து நிற்கும் .நான் காண நேர்வது அதே காட்சி தான். “Recurrence of the same event!”

நான் அப்போது பணிபுரிந்து கொண்டிருந்த படத்தின் இயக்குனர் ' ராஜநாயஹம் ! அவார்டு வாங்கனும்னு ஆசைப்பட்டா கடைசியில் இப்படி தான். தரைக்கு இறங்கி வா. நீயும் வித்தியாசமா படம் பண்ணனும்னு நினைக்கிறியா ? பார்த்துக்க.உனக்கும் இது தான் கதி ' என எல்லோரும் அங்கே ஜான் ஆபிரகாமை வேடிக்கை பார்க்க கூடியிருக்கும் போது என்னை பார்த்து உற்சாகமாக சத்தம் போட்டு சொல்வார். வெராண்டாவில் உள்ளவர்கள் சிரிப்பார்கள் .

'மோகமுள் நாவலை படமாக்கனும். கோபல்ல கிராமத்தை படமாக்கனும், தந்திர பூமி சினிமாவாக எடுக்க முடியுமா,புளியமரத்தின் கதை கட்டாயம் நான் தான் இயக்கி வெளிவரணும், வண்ணநிலவனின் ’கடல்புரத்தில்’நாவலை படமாக்கனும் ' இப்படி கனவு கண்டு கொண்டிருந்த என்னுள் ஜான் ஆப்ரஹாம் நிலை இடி போல் உரத்து இறங்கியது.
வேதனையை சொல்லி முடியாது. ஜான் ஆப்ரஹாமின் கால் தூசு பெறாத சினிமாக்காரன் எல்லாம் இப்படி அவரை ஏளனமாக பார்த்தான்.


ஒரு சம்பவம்

கொச்சிகோட்டையில் பரிக்ஷா ஞாநியை அறிமுகம் செய்தபோது ஜான் சிரித்தபடி சொன்ன பதில்

 ' நான் அஞ்ஞானி! '

...............................................

Where is Abel ? Bible
ஜான் எங்கே ?
ஜான் !
ஸல்ஃப்யுரிக் அமிலத்தால் நிரம்பி வழிகிற
உன் இதயமான
அந்தத் தட்டு தான் எங்கே ?
வெறுமையான
கல்லறை இதனருகே
புகை அங்கிக்குள்
எரிந்து கொண்டிருக்கும்
சகோதரத்துவத்தைக்
குலுக்கிப் போட்டுக்கொண்டு விட்ட
உன் நிர்வாண ஜுவாலை
எங்கே எங்கே
-    பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
மலையாளத்திலிருந்து ஆங்கிலத்தில் சச்சிதானந்தன் மொழிபெயர்த்தை தமிழில் மொழிபெயர்த்தவர் நாகார்ஜுனன்
மீட்சி 35  1991
 

.................................................................................................


Sep 27, 2008


நாகார்ஜுனன் said...

ராஜநாயஹம்,சொந்த அனுபவங்கள் தாண்டி ஜானின் சினிமாவைப் பார்க்க வேண்டிவரும் போது ஆச்சர்யமாக இருக்கும் என்பது சரிதான்.
உங்கள் அனுபவமும் அப்படித்தானிருக்கிறது..

ஜானின் 21-ஆம் நினைவு நாளை ஒட்டி நான் எழுதிய நம் அக்ரஹாரத்தில் ஒரு கழுதை என்ற மூன்று பதிவுகள் இதோ


http://nagarjunan.blogspot.com/2008/06/1.html

http://nagarjunan.blogspot.com/2008/06/2.html

http://nagarjunan.blogspot.com/2008/06/3.html
September 27, 2008 12:03 AM

Sep 29, 2008 

ஞாநி விளக்கம்

வணக்கம்.

நான் ஜான் ஆபிரஹாமை ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன். சங்கீத நாடக அகாதமியின் நாடக விழா எர்ணாகுளத்தில் நடந்தபோது, கூத்துப்பட்டறையின் நாடகமும் இடம் பெற்றது. அதற்கு வந்திருந்த தமிழக நாடகக்காரர்கள் சிலர் அப்போது அம்மெ அறியன் படத்துக்கு மக்களிடம் நிதி திரட்டும் பணியை தொடங்க இருந்த ஜானை சந்திக்கச் சென்றோம். ஜானும் அவர் குழுவினரும் கையால் எழுதிய சுவரொட்டிகளைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.கொச்சி கோட்டை சுவரில் சுவரொட்டியை ஒட்டிவிட்டு ஒரு ஸ்டூல் மீது ஏறி நின்று ஜான் பேசி உண்டியல் குலுக்கி நிதி திரட்டுவதைத் தொடங்கி வைத்தார். அதை நான் எடுத்த புகைப்படமும், அன்றே படகுத்துறையில் ஜானையும் ஒரு குழந்தையையும் நான் எடுத்த புகைப்படமும் ஆர்.ஆர்.சீனிவாசன் வெளியிட்ட ஜான் பற்றிய நூலில் பின்னர் பிரசுரிக்கப்பட்டன. சுவரொட்டி எழுதும் இடத்தில் ஜானிடம் என்னை ஞாநி என்று அறிமுகம் செய்தபோதுதான், ஜான் சிரித்தபடி தான் அஞ்ஞானி என்று சொன்னார்.பின்னர் அன்று முழுவதும் நாங்கள் ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்தோம். பின்னர் எப்போதும் நான் ஜானை எங்கேயும் சந்திக்கவில்லை. ஜான் படங்களில் அ.கவும் அ.அ.வும் எனக்குப் பிடித்த முயற்சிகள். செரியச்சனோட குரூர நிருத்யங்களில் சில காட்சிகள் நன்ராக அமைந்திருக்கும். ஜான் உருவாக்கிய அக்ரஹாரத்தில் கழுதையில் நடித்த இசை மேதை எம்.பி.சீனிவாசன் என் மதிப்புக்குரிய நண்பர். ஜானுடன் ஒடெசா திரைப் பட இயக்கத்தில் பங்கேற்ற பிரகாஷ் மேனனும் என் நண்பரே. பிரகாஷ் மேனன் இன்றும் சென்னையில் மலையாள டி.வி தொடர் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். இப்போது தொடர்பு இலை. ஜான் பற்றிய ஜெயமோகனின் ஒரு குறிப்பு முற்றிலும் உடன்பட முடியாதபோதும் நம் பரிசீலனைக்குரியது. அக்ரஹாரத்தில் கழுதை திரைக்கதை வசன நூலை அடிப்படையாகக் கொண்டு பரீக்‌ஷாவின் மேடை நாடகமாக்கலாம் என்று ஒரு முறை நினைத்தோம். அது கைகூடவில்லை.

.............

யமுனா ராஜேந்திரன்

முற்றிலும் உடன்படமுடியாதபோது எதற்கு மறுபரிசீலனை செய்ய வேண்டும்? ஜான் பற்றிய சீனிவாசனின் நூலில் எனது இரு கட்டுரைகள் உள்ளன. ஓரு கட்டுரை ஜெயமோகனுக்கான எதிர்விணை. பிறிதொன்று அம்மா அறியான் படம் குறித்தது. ஞானி விரும்பினால் அவரது உத்தேச மறுபரீசீலனையை ஒரு விவாதமாக முன்னெடுப்பது எனக்கு விருப்பமாக இருக்கிறது.
யமுனா ராஜேந்திரன்

http://rprajanayahem.blogspot.in/2008/10/pd.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_7735.html

http://rprajanayahem.blogspot.in/2012/06/blog-post_12.html




Aug 22, 2012

கவிதை எழுதுவதை நிறுத்திய கவிஞன்

 Aug 1,2008

   Rimbaud.PNG

ETERNITY

It has been found again,
What? - "ETERNITY"
It is the sea fled away
with the sun!

பிரஞ்சு கவிஞன் ஆர்தர் ரைம்போ 16 லிருந்து 19 வயது வரை தான் கவிதை எழுதினான். குழந்தை ஷேக்ஸ்பியர் என்ற பெயர் பெற்றவன். 37 வயது வாழ்ந்து "கவிதை எழுதுவதை நிறுத்திய கவிஞன் "என்று அடையாளமும் காணப்பட்டவன்.
ஆங்கில கவிஞன் கீட்ஸ் அவன் எழுதிய மொத்த கவிதைகளில் அவன் புகழுக்கு காரணமான கவிதைகளை எல்லாம் ஒரு ஒன்பது மாதத்திற்குள் தான் எழுதினான். Baby of the poets!26 வயதிற்குள் இவன் வாழ்வே முடிந்துவிட்டது .
இங்கே தமிழில்" ஆடு புழுக்கை போடுவது போல அப்பப்ப மொத்தம் மொத்தமா தொடர்ந்து போடும்"கவிஞர்கள் எப்போ நிறுத்தபோறான்களோ?

பால் பருவத்தில் எழுதுவதாக பூரித்து புளகாங்கிதமடையும் மடையன் எல்லாம்
ரைம்போ,கீட்ஸ் பற்றி எப்போ தான் தெரிந்துகொள்ளபோறான்?
"நான் இருக்கேனே பல விதமான கற்பனையை அப்படியே மனசில அமுக்கி வச்சுகிட்டு
தவிக்கிறேன்யா. அதையெல்லாம் எடுத்து வெளியே விட வேண்டாம?"னு
அல்லாடுறான்களே். சான்ஸே இல்ல!

Shit!புழுக்கையை போட்டுக்கங்க.என்னை எதுக்குடா  மோந்து பாக்க சொல்றீங்க?

...................

Aug 27, 2008


ரைம்போவும் ஆத்மாநாமும்



'One evening, I took “Beauty” in my arms.
I found her bitter and I insulted her'
- Arthur Rimbaud
in “ A season in Hell”


நாகார்ஜுனன் Blog ல் ஒரு சின்ன சுவாரசியமான விவாதம்

"நரகத்தில் ஒரு பருவம் - ஆர்தர் ரைம்போ - 1"
2 Comments -

ஆர். பி. ராஜநாயஹம் said...

"ஒரு மாலை "அழகு" என் கையில் அமர்ந்தாள். அவள் கசப்பாய் இருக்கக் கண்டேன். அவளை அவமானப் படுத்தினேன்" என்ற ரைம்போவின் வரிகள் ஒருவேளை ஆத்மாநாமுக்கு inspiration-ஆக இருந்திருக்கலாம் என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு. கவனிக்க: நான் ஆத்மாநாம் காப்பியடித்ததாகச் சொல்லவில்லை. வரிகள் ஏறக்குறைய இவைதாம்: "கடவுளைப் பார்த்தேன். எதுவும் கேட்கத் தோன்றவில்லை. புன்னகைத்தார். போய்விட்டார்."
26-Aug-2008 12:59:00

நாகார்ஜுனன் said...

சுட்டிக்காட்டியதுக்கு நன்றி. ஆத்மாநாம் வரிகள் நான் வாசித்தவைதாம். ஆனால் ரைம்போவைத் தமிழாக்கும்போது உறைக்கவில்லை. அந்த அளவு போதலேரும் ரைம்போவும் புதுக்கவிதைக்குள் நுழைந்துவிட்டார்கள் எனத் தோன்றுகிறது...
26-Aug-2008 13:04:00
..............
Sep 28,2009

வைகறை

நாகார்ஜுனன் மொழிபெயர்த்த ஆர்தர் ரைம்போ கவிதைகளில் ஒன்று.
ரைம்போ வைகறையை கனவிலும் கண்டிருக்கிறான்!
'' முத்தமிட்டேன் வேனில் வைகறையை "சூரியன் உதயமாவதற்கு முன் அந்த அதிகாலை வைகறை.
"இறந்து கிடந்தது நீர் " அப்போது .
'தன் பெயரை இயம்பிய மலர்' பற்றி ரைம்போ குறிப்பிடுகிறான்.
" அவளை(வைகறையை ) சேவலிடம் காட்டிக்கொடுத்தேன் " (அப்புறம் தான் 'அடடே அப்படியா. நல்லவேளை!கொஞ்சம் அசந்து தூங்கி விட்டேனே' சுதாரித்து சேவல் கூவியிருக்கும்! "கொக்கரக்கோ")

குழந்தை சேக்ஸ்பியர் ரைம்போ ''கண்விழிக்க ஆனது உச்சிப் பொழுது."கனவில் வைகறை. யதார்த்தம் உச்சிப் பொழுது. அதனால் தான இருபது வயதை எட்டியவுடன் கவிதை எழுதுவதையே நிறுத்தி விட்டான் போலும்!


வைகறையில் இருட்டு பிரிந்து சூரிய உதயம் செய்யும் எழுச்சி விந்தையை பாரதி குயில் பாட்டில் விவரிக்கிறான் :
"புல்லை நகையுறுத்தி, பூவை வியப்பாக்கி மண்ணைத்தெளிவாக்கி,நீரில் மலர்ச்சி தந்து
( இறந்து கிடந்த நீருக்கு மலர்ச்சி!)
விண்ணை வெளியாக்கி விந்தை செய்யும் சோதி.. "

பாரதி " வைகறையின் செம்மை இனிது " என்று ரசித்து வசன கவிதையில் சொன்னவன் அல்லவா!


சூரிய வெளிச்சம் இருட்டிய பூமி மீது விழுகிற கணங்களை பிரமிள் தன் படிமங்கள் கொண்டு படம் பிடிக்கிற அழகு அபூர்வமானது.
" பூமித்தோலில் அழகுத் தேமல் "
" பரிதி புணர்ந்து படரும் விந்து "
"கதிர்கள் கமழ்ந்து விரியும் பூ "
" இருளின் சிறகைத் தின்னும் கிருமி "
"வெளிச்சச் சிறகில் மிதக்கும் குருவி "
.......................................................


http://thisrecording.com/storage/poetpc.jpg?__SQUARESPACE_CACHEVERSION=1260396218576




Dec 26, 2009


A life full of sweet stupidities!


One of the first truly dissent voices to emerge in French poetry.

The poet who stopped writing poetry!

ரைம்போ - A White nigger.

"My life was nothing but sweet stupidities! "

"Ah! To return to life! To stare at our deformities. "ஆர்தர் ரைம்போ முழங்காலில் புற்று நோயால் 37வயதில் இறந்த பின் தான் அவன் சகோதரி இசபெல் ஒரு உண்மையை அறிய நேர்ந்தது. தன் சகோதரன் ஒரு கவிஞன் என்பதை அவள் ரைம்போவின் மரணத்தில் தான் தெரிந்து கொண்டாள். 
 

ரைம்போ சிறுவனாக இருக்கும்போதே ஊர் சுற்றக்கிளம்பிய Boy genius! An infant Shakespeare! Baby of the French poets!உடல் இச்சையை மறுத்த கிறிஸ்துவத்தை வெறுத்தவன். தன் பெற்றோரை வெறுத்தவன்.
“You,my parents, have ruined my life, and your own.”

   


பிரஞ்சு கவிஞன் வெர்லைன் தன் கருவுற்ற மனைவி பாரிசில் தன் தகப்பன் வீட்டுக்கு சென்ற போது ரைம்போ வை தன்னுடன் வாழ அழைத்தான். அப்போது ரைம்போவுக்கு 17வயது .வெர்லைன் 27 வயது இளைஞன். அதன் பின் இருவரும் காதலர்கள் ஆகி விட்டார்கள். வெர்லைன் தன் மனைவியை திட்ட ஆரம்பித்தான்.
The devastating love affair of Verlaine and Rimbaud...
there were reestablishing of cordial relations and partings with wife Mathilde and Partings and reconciliations with Rimbaud.
சுருக்கமாக சொன்னால் வெர்லைன் தாம்பத்தியம் ஒரு சர்க்கஸ் போல ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில் வெர்லைன் துப்பாக்கியால் ரைம்போவை சுட்டு விட்டு ஜெயிலுக்கு போனான்.




ரைம்போவின் Bad Blood


“Does this farce has no end?
My innocence is enough to make me cry. Life is the farce we all must play.”

"Where we are going? To battle? I am weak!
The others go on ahead..tools...weapons..
give me time."
"Fire! Fire at me! Here! Or I 'll give myself up!
..Cowards! I will kill myself. I'll throw myself beneath the horses hooves! Ah!
I ll get used to it.
That would be the French way, the path of honor! "




Night in Hell
I will tear the veils from every mystery...
mysteries of religion or of nature, death, birth,the future,the past,
cosmogony and nothingness,
I am a master of Phantasmagoria.


இறந்து கிட்டத்தட்ட 80வருடங்களுக்குப் பின் ஆர்தர் ரைம்போ 1968ல் பிரஞ்சு கலகக்கார மாணவர்களால் வழி பாட்டுக்குரிய புரட்சிக்காரனாக ஏற்றி உயர்த்தப் பட்டான்.

ஆர்தர் ரைம்போவாக லியோனார்டோ டி கேப்ரியோ நடித்து
Total Eclipse என்ற படம் 1995 ல் வெளிவந்திருக்கிறது. ரைம்போ-வெர்லைன் இருவருக்கிடையேயான வன்மையான உணர்வுப்பூர்வமான ஓரின உறவைப் பற்றிய படம்.




 http://images5.fanpop.com/image/photos/26000000/Leo-as-Arthur-Rimbaud-in-Total-Eclipse-leonardo-dicaprio-26095950-1066-580.jpg