Share

Mar 3, 2025

96 வயசா? பாத்தா 95 தான் தெரியிது


இப்ப பெசண்ட் நகர் பீச்சில் பாடும் போது 
கேள்வி "உங்க வயசு என்ன சார்?"

ராஜநாயஹம் பதில் : Ninety Six running.
இப்படி சொல்லும் போது கேட்கிற யாருமே திகைத்து விளம்புவது
'என்ன சொல்றீங்க? நம்பவே முடியல. 
96 வயசா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே.
உங்கள பாத்தா 95 வயசு தான் தெரியுது. ஏன் பொய் சொல்றீங்க. 95 வயசுங்கறத ஏன் மறைக்கிறீங்க. 96 வயசுன்னு மிகையா சொல்றீங்களே.'


இன்றைக்கு 16 வருடங்களுக்கு முன்
2009ம் ஆண்டிலேயே 
வலைத்தளத்தில் ராஜநாயஹம் புகைப்படங்கள் காணக்கிடைத்ததில்லை.
நிறைய யூகங்கள். 

பழைய எழுத்தாளர்,
 ராஜநாயஹத்திடமே சொன்னார். 'வலையுலகில் "பெரியவர் ராஜநாயஹம்" என்று தான் முத்திரை.

அப்போது பின்னூட்டத்தில் கூட கேள்வி
" இந்த தள்ளாத வயதில் உனக்கு இவ்வளவு திமிரா?"

2012ல் தான் மூத்த மகன் கீர்த்தி ஃபேஸ்புக்கில், ப்லாக்கில் ராஜநாயஹம் புகைப்படங்களை பழைய பதிவுகளிலும் கூட upload செய்தான்.

பெசண்ட் நகர் பீச் 
R.P. ராஜநாயஹம் பாடிய பாடல்கள் 

1.    03. 03. 2025

கூன் பிறையை போற்றிடுவோம்.
 குர் ஆனை ஓதிடுவோம் 



2.    01. 03. 2026

அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்

https://www.facebook.com/share/p/15NFSeJZho/

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.