Share

Feb 6, 2025

AVM ராஜன் - புஷ்பலதா ஜோடி

AVM ராஜன் - புஷ்பலதா ஜோடி 
- R.P. ராஜநாயஹம் 

1964 மே மாதம் 27ம் தேதி மாலை முரசில் இந்திய பிரதமர் நேருவின் மரணம் தலைப்பு செய்தி.

அதே மாலை முரசின் இரண்டாவது முக்கிய செய்தி AVM ராஜன் - புஷ்பலதா திருமணம்.

தமிழக டீக்கடை மக்கள் சூடான தேநீரை ஊதி ஊதி உறிஞ்சி குடிக்கும் போதே இந்த நேரு மரணச் செய்தியில் ஊறித் திகைத்து சினிமா திருமண செய்தியிலும் அன்று ஊறித் திளைத்தார்கள்.

அன்று நள்ளிரவு தாண்டிய அதி காலையில் சென்னை அருணாசலம் ஸ்டுடியோவில் ஷூட்டிங் ப்ரேக்கின் போது ( அங்கே படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்கள்)
ஸ்டுடியோ முன் பகுதியில் இருந்த பிள்ளையார் கோவிலில் ராஜன் தாலி கட்டி புஷ்பலதாவை திடீர் திருமணம் செய்து கொண்டார்.

அவசர கல்யாணமாக இருளில் நடந்த கல்யாணம் தான். ஆனால் எவ்வளவோ வருடங்கள் இந்த நட்சத்திர தம்பதிகள் இணைந்து வாழ்ந்திருக்கிறார்கள்.
நின்று நீடித்த ஜோடி.

ஜெமினி கணேசன் - சாவித்திரி,
எஸ்.எஸ். ஆர் - விஜயகுமாரி போலவெல்லாம் இவர்கள் கல்யாண வாழ்க்கை துவண்டு விடவேயில்லை. 

ராஜனுக்கு இரண்டாவது திருமணம்.
இரண்டாவது மனைவியாக ஆக நேர்ந்து விட்டதே என்ற ஆயாசம், வருத்தத்தை பல முறை பேட்டி, கேள்வி பதிலில் புஷ்பலதா பகிர்ந்து கொண்டதுண்டு.

புஷ்பலதாவுக்கு மிக களையான அழகான விசேஷ முகம்.
 விஷேச நடிகரான ராஜனும் அழகன்.




......

ராஜநாயஹம் எழுதிய 
'ஏசுவின் அடிமையின் ஜெபக்கூட்டம்'
பதிவில்

புஷ்பலதா பற்றி ராஜன் 1993ல் :

‘ அடிமை கும்பிடாத சாமி இல்ல. 
ஒரு முறை இந்த மைக் கை கூட கும்பிட்டிருக்கிறேன்.
அடிமையிடம் ஒரு காலத்தில் 
நிறைய கார் இருந்தது.

என் வீட்டில் என் மனைவி கேட்டார்.
 ‘ ஏங்க நிம்மதி கிடைத்ததா?’

‘இல்லை,இல்லை’

அடிமை அழுதுகொண்டே பல நாள் ஒரு அறையில். வெளியே வராமல் அந்த அறையிலேயே.

 பல நாள் கழிந்தவுடன் ஒரு நாள் அறை வாசலில் ஒரு தேவதை. என் மனைவி தான்!
அன்றைக்கு தான் தரிசனம் கிடைத்தது’

அதன் பிறகு ஒரு நாள் 
சிகரெட் பிடித்துக்கொண்டு நான்.

என் மனைவி கேட்டார்’ ஏங்க இது இன்னும் தேவையா?’

அடிமை மீண்டும் தேம்பி தேம்பி அழுது...'

  

.....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.