வேர்கள் மு. ராமலிங்கம் என்று இலக்கிய உலகில் அறியப்படும் முத்துக்குமாரசாமி ராமலிங்கம் அவர்கள்
என் இரண்டு புத்தகங்கள்
'அரசியல் பிழைத்தோர்',
'மணல் கோடுகளாய்.. ' படித்த அனுபவம்
பற்றி எழுதியுள்ளதை படிக்கும்போது
மன உருக்கம் கொள்கிறேன்.
"ராஜநாயஹம் எழுத்தில்
சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய இரு நூல்கள் அரசியல் பிழைத்தோர்,
மணல் கோடுகளாய்
படித்து முடித்தேன்.
ஏற்கனவே அவரது வலைப்பூவிலும் முகநூலிலும் பெரும்பாலான கட்டுரைகளை படித்திருந்தாலும் ஒருசேர படிப்பது தனியான ஒரு புதிய அனுபவத்தை தந்தது.
புதினங்களை படிப்பதில் கிடைக்கும்
ஆனந்தத்தை விட எனக்கு
சிறப்பான அனுபவமாக இருந்தது. நன்றி .
மிகச் சிறப்பான எழுத்து நடையை உடைய ராஜநாயஹம் சிறுகதைகளோ புதினமோ எழுத வேண்டும் என்ற என் அவாவை மீண்டும் வலியுறுத்துகிறேன். இன்னும் ஏராளமான பதிவுகளையும் அவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
குறிப்பு :" இந்த உலகில் பிறந்த அனைவரும்
ஒரு நாள் மண்ணை விட்டுப் பிரிந்து விடுவார்கள் என்ற உண்மையை அறிவு பூர்வமாக
உணர்ந்து இருந்த போதும்
எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும் வழிகாட்டியாகவும் இருந்த
எனது மூத்த அண்ணன் மறைவினால்
இரண்டு வாரங்களாக எதையுமே செய்ய பிடிக்காமல், படிக்கவும் பிடிக்காமல்
இருந்த சூழ்நிலையில் ராஜநாயஹத்தின் எழுத்துக்களை படித்தால் என்ன என்று தோன்றியது.
அவரை படித்ததின் மூலமே இப்போது
மீண்டும் புத்தக உலகத்தில் நுழைய முடிந்தது."
- ராமலிங்கம் முத்துக்குமாரசாமி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.