Share

May 11, 2018

Helium balloon


சென்ற ஏப்ரல் மாதம் 6, 7 தேதிகளில் திருச்சியில் இருந்தேன். திருச்சி NIT எஞ்ஜினியரிங் காலேஜில் நடந்த ஒரு கூத்து போட்டி நிகழ்ச்சியில் நடுவராக நான் அழைக்கப்பட்டிருந்தேன். 2017ம் ஆண்டு போல இந்த வருடமும் என்னை மாணவர்கள் அழைத்து இந்த கௌரவத்தை தந்திருந்தார்கள்.
இரண்டு நாட்கள் இருந்த போதும் நான் திருச்சியில் வேறு யாரையும் போய் சந்திக்கவில்லை.
ஆச்சரியம். ஒரு விசித்திரமான விஷயம். யாராயிருந்தாலும் சில இடங்களுக்கு போய் ஒரு சிலரை சந்திக்காமல் இருக்கவே மாட்டார்கள்.
திருச்சியில் நான் சந்திக்க பலரும் உண்டு. நேரமும் இருந்தது தான்.
ஆனால் நான் ஜங்ஷனில் இருந்து National Institute of Technology போனேன். அங்கிருந்து பின் 7ம் தேதி இரவு ஜங்ஷன் வந்து ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் ஏறி சென்னை வந்து சேர்ந்தேன்.
திடீரென்று இன்று தான் இன்னொரு விஷயம் ஞாபகம் வந்தது.
சென்ற நவம்பர் மாதம் என்னை இளமைக்கால சிநேகிதி ஒருவர் தேடி கண்டு பிடித்திருந்தார். இவரை 2009ல் தேட நான் ஒரு முயற்சி செய்த போது ஈடேறவில்லை.
மொபைலில் இருவரும் பேசிக்கொண்டோம்.
இரண்டு விஷயம் தெரிந்து கொண்டார்.
1.நான் வசதியாக இப்போது இல்லை
2.அவருடைய இஷ்ட தெய்வத்தை நான் வணங்குவதில்லை.

இப்போது திருச்சியில் தான் இருக்கிறார். வினோதம் என்னவென்றால் அவர் அங்கிருக்கிறார் என்கிற விஷயமே திருச்சியில் இரண்டு நாட்கள் நான் இருந்த போது என் பிரக்ஞையில் இல்லை.
People do look different when you fall out of love with them.
If you don't hold the helium balloon, it flies away into the sky.
photos

Rajanayahem's performance in Koothuppattarai on 5th May, 2018
...........................................................








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.