Share

May 28, 2018

Dirty little secrets


ஒரு நாள்
ஆலப்பாக்கத்தில் இருந்து மினி பஸ். வளசரவாக்கத்தில் இறங்கியவுடன் விருகம்பாக்கத்திற்கு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன். சில சமயங்களில் ஷேர் ஆட்டோவிலும் போவதுண்டு.
விருகம்பாக்கம் போகும்போது பின்னாலிருந்து மொபைல் பேச்சு சற்று சத்தமாக வந்தது.
“இங்கே பார், நான் கேட்டது என்ன? நீ ஏன் என்னன்னமோ பேசுற.”
“ சரி… நீ சொல்ல வேண்டியத சொல்லு. எவ்வளவு நேரமோ நீ பேசி முடி.”
சில நிமிடங்கள் கழித்து “ முடிச்சிட்டியா.. இப்ப ஏன் ஒன் புருஷன பத்தி எங்கிட்ட பேசற… நான் கேட்டது என்ன… என் குழந்தைக்கு பிறந்த நாள். என் பொண்டாட்டி கொண்டாடனும்னு உயிர எடுக்குறா…ஒரு ஐயாயிரம் ரூபா ஒங்கிட்ட கேக்கறேன்… அதுக்கு ஏன் என்னன்னமோ சொல்ற..”
Extraordinary love. A fiery affair. Pure selfishness.
“ நான் என் பொண்டாட்டி பத்தி பேசுறனா.. குத்தி காமிக்கிற.. நீ ஒன் புருஷன பத்தி தேவையில்லாம என்கிட்ட பேசுற.. அத கேட்டது தப்பா? இந்தா பார் என் கொழந்த பொறந்த நாள கொண்டாட ஐயாயிரம் ரூபா கேட்டேன். அதுக்கு பதில் சொல்லு..”
Dirty little secrets always comes out.
“ என் கொழந்த பொறந்த நாள் கொண்டாட ஐயாயிரம் கேட்டேன். அதுக்கு பதில சொல்லு நீ..” பின்னால் உள்ள முப்பத்தைந்து வயது மதிக்க நபரின் குரல் மிகவும் உயர்கிறது.
அந்தப்பக்கம் பெண் கட் செய்து விட்டாள் போல தெரிந்தது. Not responding itself is a response. Silence is just another word for pain.
They both will always be unfinished business.

……….



இன்னொரு நாள்
வீட்டில் இருந்து கிளம்பி வெளியே வந்து பஸ் ஸ்டாப்பில் நிற்கிறேன்.
நொங்கு வெட்டிக்கொண்டிருப்பதை பார்த்து மூன்று நொங்கு இருபது ரூபாய்க்கு வாங்கி சாப்பிடுகிறேன். வெய்யில் உக்கிரம் தாள முடியவில்லை.
வளசரவாக்கத்தில் இறங்கியவுடன் ஷேர் ஆட்டோவில் ஏறுகிறேன். விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் மார்க்கெட் முனையில் இறங்க வேண்டும்.
நீல்கிரிஸ் அருகில் ஒருவர் ஏறுகிறார்.
பொதுவாக எனக்கும் ஆட்டோக்காரருக்கும் கேட்கிறார் போல் “வளசரவாக்கம் தாஸ்மாக் மூடிட்டாங்க.. சாலி கிராமம் போக வேண்டியிருக்கு….என்ன செய்ய..”
இந்த பிரயாணமே அவருக்கு தேவையில்லை. நிர்ப்பந்தம்.
நான் அவரிடம் “நான் இப்ப மூனு நொங்கு சாப்பிட்டிருக்கேன். எனக்கே வெய்யில் தாங்க முடியாம  சிரமமா இருக்கு. இந்த வெய்யில்ல சரக்கு நீங்க சாப்பிடனுமா?”
குடிமகன் பதில் : சார்.. நான் எப்பவாவது மாசத்திற்கு ஒரு தடவ தான் குடிப்பேன்.
“ நான் இப்படி வெய்யில்ல நீங்க தாஸ்மாக் போறீங்கன்னவுடனே Day Drunkardனு நெனச்சேன். எப்பவாவது குடிக்கிறதுன்னா நீங்க வெய்யில் எறங்குன பிறகு சாயந்திரம் ஆறு மணிக்கு சாவகாசமா போய் சௌகரியமா சந்தோஷமா குடிக்க வேண்டியது தான? ஏன் இப்படி இந்த வெய்யில்ல குடிச்சி சிரமப்படனும். குடிக்கிறத கொண்டாட்டமா சுகமா சாயந்திரமே செய்யலாமே.”
அவர் பதில் சொல்லாமல் என்னைப் பார்த்து சினேகமாக சிரித்தார்.
“குடிக்கனும்னு நெனப்பு வந்துட்டா தள்ளிப்போட முடியாது?”ன்னு கேட்டதற்கும் அப்பாவிச் சிரிப்பு. Silence is just another word for pain. Not responding is a response.
காளியம்மன் கோவில் மார்க்கெட் முனையில் நான் இறங்கும்போது அவர் “ போய்ட்டு வாங்க சார்” என்றார். கொஞ்சம் அர்த்த சாரமாக, இணக்கமாக நான் பேசியதற்கு அவருடைய நல்லெண்ண சமிக்ஞை.
An aged drunkard becomes a second time a child.
அவர் Day Drunkard தான். என்ன செய்ய? A dirty little secret.
…………………………………

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.