Share

Nov 11, 2016

குழந்தை நட்சத்திரம் கமல்



சென்ற வாரம் வெள்ளியன்று தினத்தந்தியில் ஏ.வி.எம் சரவணன் எழுதியதைப் படிக்க வாய்த்தது. டாக்டர் சாரா ராமச்சந்திரன் கமலை ஏவிஎம் வீட்டுக்கு கூட்டி வந்த போது, செட்டியார் பையனை மறு நாள் ஜெமினி சாவித்திரியிடம் காட்டச்சொன்ன விஷயத்தை குறிப்பிட்டிருக்கிறார்.
எனக்கு உடனே இதன் தொடர்ச்சி பற்றி ஜெமினி கணேசன் சொன்னதெல்லாம் நினைவில் வந்தது.



சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஜெமினியுடன் காரில் வந்து கொண்டிருக்கிறோம். “ பாட்டு பாடவா, பார்த்துப் பேசவா” பாடலைத் தொடர்ந்து
“ கண்களின் வார்த்தைகள் புரியாதோ, காத்திருப்பேன் என்று தெரியாதோ” பாடல் காரில் இருந்த டேப் ரிக்கார்டரில் ஒலித்த போது உற்சாகமாக “ சாவித்திரி படம்!” என்றார்.
”இதற்கு மியூசிக் யாருன்னு மறந்து போச்சே”
நான் உடனே நினைவு படுத்தினேன். “சுதர்ஸனம்”
அவருக்கு இன்னொரு விஷயம் கூட ஞாபகமில்லை. தேவரின் ”வாழ வைத்த தெய்வம்” படத்தில் சிலம்புச் சண்டை பற்றி பேச்சு வந்தது. அந்தப் படத்தில் ஜெமினிக்கு அப்பாவாக நடித்தவர் எஸ்.வி. சுப்பையா. இதை நான் சொன்ன போது கொஞ்சம் யோசித்து விட்டு தலையை ஆட்டினார்.“ அப்படியா! ஞாபகமில்ல…மறந்துடுச்சி..”


“ கண்களின் வார்த்தைகள் புரியாதோ” பாட்டு ஷூட்டிங் போது தான் கமல் வந்தான். அவனோட அண்ணா சந்திர ஹாசன்னு ஒர்த்தன். அவன் தான் இவன கூட்டிண்டு வந்திருந்தான். சாவித்திரி உடனே கமல தூக்கிக் கொஞ்சினா. நான் பிள்ளையாண்டான தூக்கி கொஞ்சினேன். விளையாண்டேன். முன்னால ’யார் பையன்’ல நடிச்ச டெய்சி இரானிக்கு பதிலா இந்த பையன படத்தில போடலாமான்னு செட்டியாருக்கு ஒரு யோசனை. ஏவிஎம் செட்டியார் சொன்னார்: ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் பையன பிடிச்சிப்போச்சி. இவனயே களத்தூர் கண்ணம்மாவில குழந்தையா நடிக்க வச்சுடலாம்!”









சந்திர ஹாசனை நான் திருச்சியில் சந்தித்த போதினில் ஜெமினி சொன்ன இந்த விஷயம் பற்றி சொல்லியிருக்கிறேன்.



கமல் தொடர்ந்து “ பார்த்தால் பசி தீரும்”,” பாதகாணிக்கை”. ”வானம்பாடி”, ”ஆனந்த ஜோதி” ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரம்.



அப்புறம் ”மாணவன்”!
” விசிலடிச்சான் குஞ்சிகளா, குஞ்சிகளா! வெம்பி பழுத்த பிஞ்சிகளா, பிஞ்சிகளா!” பாடல் காட்சியில் குட்டி பத்மினியுடன்!
…………………………………………………………………

http://rprajanayahem.blogspot.in/…/left-handed-compliment.h…

http://rprajanayahem.blogspot.in/…/loose-words-are-gold-coi…

http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_2678.html

http://rprajanayahem.blogspot.in/2016/06/blog-post_4.html

http://rprajanayahem.blogspot.in/2016/11/blog-post_4.html


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.