Share

Oct 12, 2009

மனோதர்மம்

நாதசுர சக்கரவர்த்தி டி. என்.ராஜரத்தினம் அவர்கள் கச்சேரி சுதந்திரமாக செய்ய விரும்புவது வழக்கம் . மனோதர்மப்படி நாக ஸ்வரம் அவர் விரும்பிய கீர்த்தனைகளை வெளிப்படுத்தும் . கச்சேரியில் சீட்டு எழுதி அனுப்புவதை அவர் ரசிக்க மாட்டார் . ராமேஸ்வரத்தில் ஒருமுறை ஒருவர் தோடி ராஜரத்னத்திடம் " 'மகுடி ' வாசிக்க சொல்லி அனத்தினார் . வித்துவான் கொஞ்ச நேரம் சட்டை செய்யாமல் இருந்து பார்த்தார் . மனோதர்மப்படி தான் விரும்பிய கீர்த்தனைகளை வாசித்துக்கொண்டிருந்தார் . ' மகுடி ' அனத்தல் அதிகமாகியது . உடனே நாகசுரத்தை மகுடி கேட்ட ரசிகரிடம் கொடுத்து அவரையே மகுடி வாசித்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டார் !

பாலமுரளி கிருஷ்ணா மேடையில் கச்சேரியில் உட்கார்வார் . ரசிகர்கள் சீட்டுகள் பல மேடைக்கு பறக்கும். இந்த பாடல் பாடுங்க .. அந்த பாடல் பாடுங்க ..தொண்டையை லேசாக செருமுவார். சுற்றுமுற்றும் பார்த்து விட்டு சொல்வார் :

“Lend thy ears! This is Balamurali music! Don't ask for this and that. Lend thy ears! ”

இதை ஏன் சொல்லவேண்டியிருக்கிறது எனில் எனக்கும் இப்படி விருப்பசீட்டுகள், அனத்தல்கள் வருகின்றன! இவரைப்பத்தி எழுதுங்க .. அவரைப்பத்தி எழுதுங்க ..அதைப்பத்தி எழுதுங்கன்னு ..இதைப்பத்தி எழுதுங்க ..

Don't annoy continually or chronically.

6 comments:

  1. lol! What else can you expect from us Tamils?

    jokes aside, i pray to the almighty to not dirupt your blogging as it happened on previous occassions.

    ReplyDelete
  2. அன்பிற்குரிய ஐயா,

    தாங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ என்னை குறிபிடுவது போல் உள்ளது. எனினும், உங்கள் பதிவுகள் வராதா என்ற ஏக்கத்துடன் இருக்கும் பல ஆயிரம் வாசகர்களில் நானும் ஒருவன். இந்த பதிவை படிக்கும் போது கூட எனக்கு வருத்தம் இல்லை, தங்களிடமிருந்து மேலும் ஒரு கட்டுரை படித்த த்ரிப்த்யே.

    தங்களுடிய கோபம், புரிந்து கொள்ள கூடியதே, இருப்பினும் நான் மற்ற என் நண்பர்களுக்கு தங்கள் வலைப்பதிவை பற்றியும், தங்களை பற்றியும் உயர்வாக கூறி கொண்டு திரிவதை தங்களால் தடுக்க முடியாது. உங்களை எனக்கு திருசியிலிருந்தே தெரியும்.

    தங்கள் மீது பெருமதிப்பு கொண்ட வாசகன்,-திருச்சி

    ReplyDelete
  3. //இதை ஏன் சொல்லவேண்டியிருக்கிறது எனில் எனக்கும் இப்படி விருப்பசீட்டுகள், அனத்தல்கள் வருகின்றன! இவரைப்பத்தி எழுதுங்க .. அவரைப்பத்தி எழுதுங்க ..அதைப்பத்தி எழுதுங்கன்னு ..இதைப்பத்தி எழுதுங்க ..

    Don't annoy continually or chronically.//

    :-)

    ReplyDelete
  4. Mr.RPR,
    " Write what you like: there is no other rule.".....O Henry

    I am sure you like what you write.. and thats what is important....

    the rest can go ...UNWRITTEN !!!

    ReplyDelete
  5. I dare to annoy you but you can pardon me as mine is neither continually or chronically :-)

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.