Share

May 29, 2023

R.P. ராஜநாயஹம் நூல்கள் வெளியிடும் ஜெய்ரிகி சாய் ரமணா

ஜெய்ரிகி பதிப்பக உரிமையாளர் சாய் ரமணா :

பெங்களூரு இரவிச்சந்திரன் புத்தகம் வெளிவர முடிவு எடுத்தாகவிட்டது.

சரி யாரு அவரை பற்றி எழுதியிருக்கிறார்கள் என பார்க்கலாம் என்று தேடியபொழுது அகப்பட்ட பெயர் ராஜநாயஹம்.

அவரை தொடர்பு கொள்ளலாம் என நினைத்தபோது முடியவில்லை, புத்தகம் வெளிவந்தது.

 சரவணன் மாணிக்கவாசகம் அவர்களிடம் கொடுக்க சென்றபோது, "இவர் புத்தகத்தை நிறைய இடங்களில் தேடியிருக்கிறோம் நானும் ராஜநாயஹம் அவர்களும்" என்றார்.

"சார் அவர் முகவரி குடுங்க, அவருக்கும் புத்தகத்தை அனுப்பி வைக்கலாம் "

"இல்லைங்க அவர் வீடு மாத்துறார், இப்ப முடியாது, அப்புறம் பார்க்கலாம்.."
கிளம்பி வந்துவிட்டேன்,
அதனை மறந்தும்விட்டேன்.

அடுத்து ஒரு ஆறு மாதம் கழித்து சரவணன் மாணிக்கவாசகம் அவர்களிடம் இருந்து ஓர் அழைப்பு

சாய்.. "நண்பர் R.P. ராஜநாயஹம் மூன்று புத்தகங்கள் பதிப்பிக்க வேண்டும் என்கிறார், நீங்க பண்ணி தர முடியுமா?

என்னது முடியுமாவா ? அவர் எண்ணை அனுப்புங்கள்,பேசுகிறேன்..

எதிர்முனையில் ராஜநாயஹம், சாய் புத்தகம் பதிப்பிக்க முடியுங்களா...?

"சார், ஒரு வருஷமா உங்களை தேடி கொண்டிருக்கிறேன், கண்டிப்பாக பண்ணிடலாம்" என சொல்லி, இதோ அவரது முத்தான மூன்றில் முதலில் "தழல் வீரம்".

நான் அவரின் சினிமா என்னும் பூதம் ரசிகன், அவரது புத்தகங்கள் 
பதிப்பிப்பது என்பது இன்னும் சிறப்பு.

வாங்குங்கள், வாசியுங்கள், மகிழுங்கள்..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.