அந்த 'வளர் பிறை'யில் சௌந்தர்ராஜன் பாடிய பாடலை பள்ளி, கல்லூரி படிக்கும் போதே பாடுவேன்.
Favourite பாடல்களில் இதுவும் உண்டு.
'பூஜ்ஜியத்துக்குள்ளே
ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனைப் புரிந்து கொண்டால்
அவன் தான் இறைவன்' - கண்ணதாசன்
இப்போதும் தான் இருபது வருடங்களாக கடவுள் நம்பிக்கை கிடையாது என்றாலும் இப்படி பாடல்களை பாடுவேன்.
'பச்சை மாமலை போல் மேனி,
பவளவாய் கமலச்செங்கண்'
'மலர்களிலே பல நிறம் கண்டேன்,
திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்'
'கோபியர் கொஞ்சும் ரமணா,
கோபாலகிருஷ்ணா'
' அம்பலத்து நடராஜா, உன் குணத்தை காட்டுதற்கு என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனய்யா?'
' பாஞ்சாலி உன்னிடத்தில்
சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில்
கீதை கேட்டான் '
பத்து வருடங்களுக்கு முன்பு பள்ளியில் communicative trainer (2013 to 2015)ஆக இருக்கும் போது வெள்ளிக்கிழமை பிரார்த்தனை கூட்டத்தில் பாடிய போது ஆசிரியர்களும் குழந்தைகளும் பாராட்டியதுண்டு.
நெகிழ்ந்து அழுத குழந்தைகள் நிறைய்ய
பள்ளியில் கூட்டிப் பெருக்கும் பெண்களும் கூட ' நீங்க பாடும் போது கண் கலங்கி விட்டது ' என்பார்கள்.
CBSE பள்ளியில் ரம்ஜான் கொண்டாடிய போது 'கூன் பிறையை போற்றிடுவோம், குர் ஆனை ஓதிடுவோம்' (மு.க. முத்து பாடல்) பாடினேன். நான்காவது படிக்கும் முஸ்லிம் குழந்தை தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.
Morning prayerல் ' பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம், தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மெளனம், மெளனம் ' பாடும் போது உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் கண் கலங்கி குரல் தளுதளுத்தது.
பல குழந்தைகள் கண்களில் கண்ணீர்.
பாடம் நடத்த மூன்றாம் வகுப்பு போன போது பெண் குழந்தையொன்று " Sir, when you sang about mother, I controlled my tears. I went to the rest room and cried"
2002ல் திருச்சியில் இருந்த போது பள்ளி நண்பன் ஒருவனை பார்க்க போயிருந்தேன். அங்கே ஒருவர் வந்தார். அவரிடம் அறிமுகம் செய்யப்பட்ட போது அவர் முக மலர்ந்து " நீ சின்னப் பையனாக Saint Joseph's 'அன்பு என்பது தெய்வமானது ' பாடியதை மறக்க முடியுமா?" என்றார்.
சிறுவனாக Saint Joseph's ல் ஏழாம் வகுப்பு படித்த போது
அவர் அங்கே பத்தாம் வகுப்பு படித்தவராம்.
கூத்து பட்டறையில் மாஸ்டராக நான்கு வருடங்கள் இருந்த போதும் பாடியிருக்கிறேன்.
ஆடிய காலும் பாடிய வாயும் எப்போதும் நிறுத்தாது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.