மேஜர் சுந்தர்ராஜன் தன் அனுபவங்களை சுவாரஸ்யமாக பேட்டிகளில் சொல்வார்.
ஒரு முறை காலத்தின் விசித்திர மாற்றம் பற்றி சொன்னார்.
'குல தெய்வம்'என்ற ஒரு பழைய படம் பார்க்க தியேட்டருக்கு போயிருக்கிறார்.
ராஜகோபால் என்ற நடிகர் வருகிற காட்சிகளில் எல்லாம் ஏளனமாக ' இது என்னடா நடிப்பு' என்று அவர் வருகிற காட்சிகளில் எல்லாம் சலித்து ரசிகர்கள் எரிச்சல் பட்டிருக்கிறார்கள். சத்தம் போட்டு திட்டியிருக்கிறார்கள். அந்த நடிகர் அந்த படத்தில் சிறப்பாக நடித்தவராக கருதப்பட்டவர்.
'குல தெய்வம் ' ராஜகோபால் என்று அந்த படத்தின் பெயரை சேர்த்தே அழைக்கப்பட்டவர்.
படங்களில் அவருடைய பெயர் குலதெய்வம் ராஜகோபால் என்றே டைட்டிலில் வரும்.
மேஜர் சுந்தர்ராஜன் இதை குறிப்பிட்டுசொல்லியிருந்தார். அவருடைய நடிப்பு வெளிறி பழசாகி அவுட் ஆஃப் டேட் ஆகி விட்டதே.
(எங்க சின்ன ராசா, ஆரோரோ ஆரீரரோ போன்ற படங்களில் குலதெய்வம் ராஜகோபால் நடித்திருந்தார்.
சகஸ்ர நாமத்தின் சேவாஸ்டேஜ் நடிகர். சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டவர்.)
நேற்று ஒரு சேனலில் மேஜர் சந்திரகாந்த் பார்த்த போது இது ஞாபகம் வந்தது.
இதில் ஏ. வி. எம். ராஜன் பெயர் ரஜினி காந்த்.
இந்த கதாபாத்திரத்தின் பெயரை சிவாஜி ராவுக்கு வைத்து பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினார்.
மேஜர் சந்திரகாந்த் நாடகமாக சுந்தர்ராஜனை மேடையேற்றி பாலச்சந்தர் நடிக்க வைத்தார்.
அதன் பின் தான் படமாகவும் எடுத்தார்.
சுந்தர்ராஜன் அதனாலேயே மேஜர் சுந்தர்ராஜன் என்று காலம் முழுவதும் அழைக்கப்பட்டார்.
மேஜர் சந்திரகாந்த் படத்தில் அவருடைய நடிப்பு ரொம்ப வெளிறி பழசாக பொறுமையை சோதித்தது. டைட்டில் ரோல் இப்போது பார்க்க
படு நாடகத்தனமாக நாகேஷும் தான்.
இப்படி சீரியஸாக நடிக்க வைத்துத்தான் நாகேஷை பாலச்சந்தர் கெடுத்தார்.
குலதெய்வம் ராஜகோபால் பற்றி மேஜர் சொன்னதைத் தான் இதற்கும் சொல்ல வேண்டியிருக்கிறது.
இதற்கு முந்தைய வருடம் 'நாணல்' என்று
ஒரு பாலச்சந்தர் படம். அதில் நாகேஷும்
மேஜர் சுந்தர்ராஜனும் நல்ல பெர்ஃபாமன்ஸ்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.