Share

Nov 5, 2019

Let the cat out of the bag

ஒரு பிரமுகன். எழுத்தாளன்.
அஷ்டாவதான பிரமுகன்.
அந்தாளுடைய புத்தகம் எதையுமே நான் படித்ததில்லை
ஒரு வேலையாக ஒரு பக்கம் போயிருந்த போது அங்கே ஒரு கடையில் பெயர் பலகையில் பெயர் இருந்ததாலும் அவன் பெயர் பரிச்சயம் தான் என்பதாலும் நான் கடைக்குள் நுழைந்து அங்கே இருந்த ஆளிடம் கேட்டேன். ’அவர் இருக்கிறாரா?’. எனக்கு முக பரிச்சயம் கிடையாது.
அந்த ஆள் வாயெல்லாம் பல்லாகி ’நான் தான்’ என்றான்.
”ஓ, தற்செயலாக ஒங்க கடைன்னு தெரிய வந்ததால வந்தேன். என் பெயர் ராஜநாயஹம். R.P.ராஜநாயஹம்.”
பிரமுகன் ”நீங்க லொயோலா காலேஜா?”
”இல்லங்க. அவுரு ச.ராஜநாயகம். கிருஸ்தவ பாதிரியார்.
நான் சன்னியாசி கிடையாது.
குடும்பஸ்தன் R.P.ராஜநாயஹம்.”
என்ன பண்ணிறீங்க?
நான் சொன்னேன்.
;நானும் எழுதுவேனுங்க.’
பிரமுக எழுத்தாளன் ’அப்படியா?’
”ரெண்டு புத்தகம் கலைஞன் பதிப்பகத்தில் பப்ளிஷ் பண்ணியிருக்காங்க.”
’அப்படியா?’
இயல்பாக பல விஷயங்கள் அப்புறம் பேச வேண்டியிருந்தது.
சென்னையில் உள்ள எல்லா சினிமாக்கார எழுத்தாளன்கள் போல இவனும் சினிமா டைரக்ட் பண்ணப்போறேன் என்று சொன்னான்.
பிரமுகன் : படம் ஒன்னு டைரக்ட் பண்ணப்போறேன்.
நான் “ எனக்கு ஒரு நல்ல ரோல் கொடுங்க.”
பிரமுகன் “ ம். சரி”
இன்னும் சினிமா, இலக்கியம் இப்படி கொஞ்சம் பேச்சு வளர்ந்தது.
பிரமுகன் தன்னிலை மறந்து சற்றே இளகிய நிலையில் அவனில் ’மியா மியா’ சத்தம். பூன வெளிய வந்து விட்டது. மைண்ட் வாய் ஓவர்ஃப்ளோ ஆகி விட்டது.
“ ஏதாவது ஆர்ட்டிக்கிள் எழுதறதுக்கு ரெஃபரன்ஸ் தேவப்பட்டா R.P.ராஜநாயஹம் blog அப்பப்ப பார்ப்பேன். ரொம்ப வருஷமா உங்கள படிச்சிக்கிட்டிருக்கேன்.”



,….

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.