Share

Dec 4, 2018

ஆகவே


’கயல்’ பிரபு சாலமோன் படம். பெண்ணை காணாமல் தவிக்கும் ஒரு குடும்பத்தில், நிலவரம் புரியாமல் ஒரு பெரிசு ’ஜமிந்தார் பவுசு’ காட்டி படத்தில் செம ரவுசு பண்ணும்.
அக்னி புத்திரன் கோமணத்தைக் கட்டிக்கொண்டு மேடைக்கு வந்ததுண்டும்.
இவருடைய கவிதையொன்றில் ”பெண்களே, உங்கள் கண்களில் என்ன? சிறுநீர்ப் பைகளா?” என கேட்டதுண்டும்.
Women piss on your male chauvinism.


அந்த கால இலக்கிய அரசியலின் பொறி சிந்தும் வெங்கனல்

ஞானக்கூத்தன் : தூக்கிக்காட்டுறேன் பாக்கறியா?

ந.முத்துசாமி : இவருக்கு மட்டும் என்ன தங்கத்துலயா தொங்குது.


விகடன் தடம் இந்த மாத இதழில் மறைந்த வே.பாபுவின் இந்தக் கவிதை காணக்கிடைத்தது.
‘கட்டிங்கைத் தண்ணீரில்லாமல்
ஒரே மடக்கில் குடிப்பவருக்கு
இரண்டு வெள்ளரித் துண்டுகள்
கொடுங்கள் தோழர்
ஏழு வருடங்களுக்கு முன்
5 லாரிகளுக்கு
ஓனர் அவர்.”

குமுதம் தீராநதி இந்த டிசம்பர் இதழில் அபராஜிதாவின் “ஆயுசைக் கடத்திவிட” என்ற கவிதையொன்று
’என்னதான்
கவலையிருக்கட்டுமே
மருதகாசி வரிகளைக் கேட்கையில்
மறந்துவிடும் இயல்பு மாறிவிடவில்லை
எப்பேர்ப்பட்ட
துன்பமென்றாலும்
ஏ.எம்.ராஜா – ஜிக்கி குரல் ஒலிக்கும்போது
மறைந்து போகும் தன்மை
தொலைந்து போய்விடவில்லை.
எவ்வளவு
சோகமானாலும்
ஜி.ராமனாதன் இசை காற்றினில் வந்தால்
மாறிவிடும் மாயம் நிகழ்ந்து கொண்டு தான் வருகிறது.
நடிப்பது
சிவாஜி – பத்மினி
ஜெமினி – சாவித்ரி
எஸ்.எஸ்.ஆர் – விஜயகுமாரி
எம்.ஜி.ஆர் – பானுமதியாக
இருந்து விட்டாலோ
பேரானந்தம் தான்.
முன்னமுள்ள
திரை இசைப்பாடல்கள் மட்டுமே
போதுமானவை தாம்
ஆயுசைக் கடத்தி விட’
சிற்றேடு காலாண்டிதழில் ( அக்டோபர் - டிசெம்பர் 2018)
கிடைத்த
றாம் சந்தோஷ் கவிதை
’தலைவனும் நானும்
ஒரு பார்க்கிடையே
பார்த்துக்கொண்ட போது
மெல்லிய பூவாசம்
ஒருவித போதையைத் தந்தது
மலர் மொய்க்கும் வண்டென அவனான போது
குறிகளைக் கழற்றி நிலத்திடை வீசினோம்
அவை தனித்து
ஏதேதோ செய்துகொண்டிருந்தன
அவன் கொக்காகவும் நான் மீனாகவும் மாறி
விளையாடத் தொடங்குகிறோம்’

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.