Share

Mar 5, 2018

டைம் மிஷின்ல ஏறுங்க...


1965
விக்ரம சிங்க புரம்
அகஸ்தியர் பட்டி
கிருஷ்ண பிள்ளை வீடு.
வீட்டின் முன் பகுதியிலேயே திருக்கை வால், அரிவாள், பட்டா கத்தியெல்லாம் தொங்கும்.
அவர் வீட்டின் வாசலில் ஒரு மூன்று வாட்ட சாட்டமான ஆட்கள் வந்து நிற்கிறார்கள்.
கிருஷ்ண பிள்ளை வெராண்டாவிற்கு வந்து திருக்கை வால் சவுக்கை எடுத்து ஒரு உதறு உதறி தொங்க விடுகிறார்.
வந்த ஆட்களில் ஒருவன் செருமுகிறான்.
கிருஷ்ண பிள்ளை நீளமான வீச்சரிவாளை எடுத்து விளிம்பை ஒரு உள்ளங்கையால் தடவி விட்டு அதை தொங்க விடுகிறார்.
இன்னொருவன் “ ஏலே என்ன மிரட்டுதியா?”
கிருஷ்ண பிள்ளை திரும்பியே பார்க்காமல் கத்தியை எடுத்து வீட்டுக்குள்ளேயே ஒரு முறை வீசுகிறார்.
மூன்றாமவன் “திரும்பியே பாக்காம என்னல எசளி பண்ணுத.”
இப்போது கிருஷ்ண பிள்ளை திரும்பி வீட்டின் முன் நடுத்தெருவில் நிற்பவர்களை பார்க்கிறார்.
மூவருக்கும் பெரிய மீசை. கெடா மீச. சொல்லி வைத்தாற் போல மூவரும் மீசையை தடவுகிறார்கள்.
மீசையை தடவிக்கொண்டே சிவந்த கண்களுடன் கிருஷ்ண பிள்ளையை முறைக்கிறார்கள்.
கிருஷ்ண பிள்ளை மீசை வைத்துக்கொள்பவரல்ல. ஆள் பார்க்க செவப்பா ஹாலிவுட் ஆக்டர் மாதிரியிருப்பார்.
புத்ர பாக்யம் கிடையாது.
வீட்டுக்குள்ளிருந்து அவருடைய அம்மை “ எல... வேண்டாம்ல.. உள்ள வந்துருல...”
கிருஷ்ண பிள்ளையின் மனைவி “யய்யா...பயமாயிருக்குய்யா...உள்ள வாங்கய்யா... கதவ பூட்டுங்க...”
“ செத்த மூதிகளா.. வாய மூடிக்கிட்டு கிடங்க.”
கிருஷ்ண பிள்ளை உள்ள பாத்து சத்தம் விட்டு, திரும்பி தெருவை பார்க்கிறார்.
நடுத்தெருவில் மீசைய தடவிக்கொண்டு அந்த மூவரும்.
கிருஷ்ண பிள்ளை “ எலே...ஏம்ல மயித்த தடவுறிங்க.. மயிரு தானல்ல அது.. எலெ... என் சாமான பாக்கியா... எவ்வளவு மசுறு என் சாமான்ல இருக்கு பாக்கியா” என்று வேட்டிய விலக்கி காமிக்கிறாரு.
” காடா இருக்குது லே...இந்த மசுத்த வந்து தடவுங்களேம்லே....சிறுக்கி மகன்களா...”
ஒரு கையில் திருக்கை வாலையும் மறு கையில் அரிவாளையும் எடுத்துக்கொண்டு தெருவில் வேகமாக இறங்குகிறார்.
மூன்று கெடாமீசக்காரனுங்க மீசைய தடவுறத நிறுத்தி விட்டு ”பண்ணயார் ஒன்ன கூட்டி வரச்சொன்னாரு... எங்களுக்கென்ன வேர்க்குதா..”ன்னு சொல்லிக்கொண்டே விறுன்னு வேகமா நடந்து தெருவை விட்டு நீங்குகிறார்கள்.
................................

1985
விக்ரம சிங்கபுரம் தாய் சினிஸ் ரோடு.
அதிகாலை ஐந்து மணி. ஒரு பெட்டிக்கடை.
ஒரு பால்காரர் சைக்கிளில் பால் கேனோடு நிற்கிறார்.
பெட்டிக்கடைக்காரர் கடையை திறந்து ஒழுங்கு வைத்துக்கொண்டிருக்கிறார். அந்த அதிகாலையில் கடை முன் அந்த விடிகாலையில் ஏற்கனவே ஒரு குடிகாரன் நின்று கொண்டிருக்கிறான்.
சிகரெட் வாங்கி அதைப் பற்ற வைக்கும் பால்காரரை பார்த்து “ ஏல..என்னல.. எம் முன்னாடி சிகரட்ட பத்த வக்க...”
பால்காரர் பதிலே சொல்லாமல் சிகரெட்டை இழுத்து ஊதுகிறார்.
குடிகாரன் “ என்னல பொகய ஊதுற....என்னல.. மொறக்க..”
கடைக்காரரை பார்த்து “ மொறக்கான்...”
கடைக்காரரருக்கு தர்ம சங்கடம். விடிய முன்ன ஒர்த்தன் ஊத்திட்டு வந்து சலம்புறானே..
பால்காரரை பார்த்து குடிகாரன் “ எல... ஈனப்புண்டழுத... என்னல முழிக்க...”
கடைக்காரரை திரும்பி பார்த்து “ முழிக்கான்”
மீண்டும் பால்காரரிடம் திரும்பி “ ஏல...குடிச்சிட்டு ஒளருதாம்னு பாக்கியோல்ல...? நாரப்புண்டழுத...ஒன் முழிய நோண்டிருவம்ல...என்னல முழிக்க... முழிக்கான்...ஏல..என்னல..குடிச்சிட்டு ஒளருதாம்னு பாக்கியோ...”
பால்காரர் இப்ப சிகரெட்ட கீழ போட்டுட்டு பெட்டிக்கடையில் இருந்து ஒரு சோடா பாட்டில எடுத்து தரையில் ஓங்கியடிக்கிறார்.
குடிகாரன் உடனே உயிரை வெறுத்து ஓட ஆரம்பிக்கிறான். ஓட ஆரம்பிக்கும் போதிருந்து
“ ஐய்யய்யோ... என்ன கொல்லப்பாக்குதானெ... காப்பாத்துங்க... காப்பாத்துங்க...காப்பாத்துங்க...என்ன காப்பாத்துங்க..” என்று நிறுத்தாமல் கத்தி கூப்பாடு போட்டுக்கொண்டே அந்த நீளமான ரோட்டில் ஓடிக்கொண்டே போகிறான்.
........................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.