Share

Oct 30, 2017

Carnal Thoughts – 43


கிளர்ந்தெழும் தாபம் - 43
When a woman gives a man the whole of herself because of lust, and if he refuses and throws her away, something inside of her breaks.
A man should never reject the lust, sex and romance demands of a woman.
சூர்ப்பனகை ராமன் உடல் உறவை வேண்டினாள்.. ஆனால் கருப்பு ராமன் மறுத்தான். ஏகபத்தினி விரதன். தன் சிவப்பு தம்பி லட்சுமணனிடம் போகச் சொன்னான். தம்பி அவள் மூக்கறுத்தான்.



 ராவணன் அடிமடியிலேயே கை வைத்தான். ராமனோட பொஞ்சாதியை தூக்கிட்டுப் போயிட்டான். சூர்ப்பனகைய ராமன் ஒரு டொக்கு போட்டிருந்தா இப்படி ஆயிருக்காதே.
சூர்ப்பனகை அழகானவள் என்று சில பிரதிகளில் எழுதப்பட்டுள்ளதாம். வால்மீகி ஏனோ அவளை கறுப்பாக அழகற்றவளாக வர்ணித்திருக்கிறார்.

சூர்ப்பனகை இல்லாவிட்டால் ராமாயணக்கதையின் முகமே மாறிப்போய் இருக்கும்.

ஒரு பெண் ஆணிடம் காம வசப்பட்டு தன்னுடன் படுக்கச் சொல்லி யாசித்தால் மறுக்கக்கூடாது. தர்ம சிந்தனையுடன் அவளுக்கு இணங்கி சுகம் தர வேண்டும். நிராகரிப்பது அதர்மம்.
ஊர்வசியின் தாபத்தை அலட்சியப்படுத்து நிராகரித்ததால் அர்ச்சுனன் வனவாசத்தின் போது விராட நாட்டில் அரவானி பிரஹன்னளையாக இருந்தான்.


’பிரஹன்னளை’ நாடகத்தில் ந.முத்துசாமி

”அர்ச்சுனன் தபசு பண்ணி பாசுபதாஸ்திரம் வாங்கினான்லே.. அதுக்குப்பின்னாலே இந்திரன் ரதத்தோட மாதலியே அனுப்பிச்சாரு. போய் கூட்டிக்கிட்டு வான்னு.
அர்ச்சுனன் இந்திரலோகத்துக்குப் போனானா.. இந்திரனோட பிள்ளை தானே அவன். அவனுக்கு தன் ஆசனத்தை கொடுத்து அதுலே ஒக்காரச் சொன்னாரு. அவனும் ஒக்காந்தான். ஊர்வசி நடனம் ஆடினா. அதையே பாத்துக்கிட்டிருந்தான் அர்ச்சுனன்.
ஊர்வசியையே பார்த்துக்கிட்டிருந்தான் அர்ச்சுனன். 
அதை இந்திரன் பாத்துட்டாராம். பாத்தவரு ஆகா… அர்ச்சுனன் ஊர்வசி மேலே ஆசைப்பட்டுட்டான்னு.. சித்திர சேனனைக் கூப்பிட்டு ‘ ஏ கந்தர்வ ராஜனே, ஒடனே ஊர்வசி கிட்டே போ…. அவ அர்ச்சுனனெ அடையனும். கந்தர்வ ராஜாவே, உன்னால் காந்தர்வ வித்தையில் அர்ச்சுனன் சமர்த்தனாக்கப்பட்டது போல அவன் ஸ்திரிகளை அடைவதிலும் சமர்த்தனாக்கப்பட வேண்டும்னான். சித்திரசேனன் அப்சரஸான ஊர்வசி கிட்டே போனான். தான் இந்திரனால் அனுப்பப் பட்டதாகவும், இந்திரனால் அனுமதி கொடுக்கப்பட்டதென்றும் அர்ச்சுனன் அவளுடைய பாதங்களில் சரணடைய வேண்டும்னும் சொன்னான்.

சித்திரசேனன் சொன்ன ஒடனே ஊர்வசி புறப்பட்டா…
அர்ச்சுனன் மேல் ஆசை கொண்டவளாகி மன்மத பாணங்களால் அடிக்கப்பட்டு.. அழகிய இடை உடையவளான ஊர்வசி.

பிரதோஷகாலம் கடந்து சந்திரன் உதயமாவதைக்கண்டு, அர்ச்சுனனுடைய பெரிய வீட்டை நோக்கி, மகிழ்விக்கும் தன்மை உடையவளான ஊர்வசி, மெல்லியதும், சுருண்டதும், நீண்டதும், சிறந்த மலர்கள் அணிந்ததுமான கூந்தலுடன், புருவத்தை அசைத்தலாலும், பேசாலும், சிருங்கார சேஷ்டைகளாலும், காந்தியாலும், அழகான முக சந்திரன் சந்திரனை சண்டைக்கு அழைப்பது போலவும் போனான்.

அவ நடந்து போறதாலே அந்த ஸ்தனங்கள் அசைஞ்சதாம்.
அந்த ஸ்தனங்களை சுமக்கும் கஷ்டத்தால் அடிதோறும் துவளுகிற அவளோட இடை மூன்று மடிப்புகளோடு அழகாக இருந்துச்சாம்.

(Bosom – The dual wonders with nipples! Inviting Cleavage!
A breast is the most restless thing in the world.)

 மலையின் தாழ்வரை போல அகன்றதும் உயர்ந்தும் பருத்துமுள்ள நிதம்பத்தையுடையதும், சுத்தமானதும், மேகலையால் அலங்கரிக்கப்பட்டதும், தேவலோகத்திலுள்ள ரிஷிகளின் மனத்தையும் கூட கெடுப்பதற்குக் காரணமாவதும், மெல்லிய உடை தரித்ததும், குற்றமற்றதும், மன்மதனுடைய வீடுமான ஜனகமும் பிரகாசித்ததாம்.

அவ கொஞ்சம் மது மயக்கத்துலெ இருந்தா.. 

அர்ச்சுனன் அவளெ ஏத்துக்கலே. அதனாலே அவ அவனெ நீ பேடி போல திரியக்கடவது என்று சாபம் கொடுத்துட்டா… 

மறுநாள் இது நம்ம தேவேந்திர மகாராஜாவுக்கு தெரிய வந்து இந்த சாபத்துக்கு விமோசனம் கொடுத்தாரு.. அர்ச்சுனன் அஞ்ஞாத வாச காலத்தில் இதை பயன்படுத்திக்கட்டும்னு.”



..........................................








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.