Share

Apr 10, 2016

"க்ரைம் ரைட்டர்!? - த்ரில்லர் ரைட்டர்!?"



இயன் ராங்க்கின் (Ian Rankin) ஸ்காட்டிஷ் க்ரைம் ரைட்டர்.
 மார்க்ஸிஸ்ட் பிரகாஷ் காரத்தினுடைய ஃபேவரிட் ரைட்டர்.
இவருடைய Hide & Seek படித்திருக்கிறேன். செய்தி இதுவல்ல.

Right now, I’m reading Ian Rankin’s Hide and seek என்று ட்விட்டரில் நான் அவருக்கு குறிப்பிட்டபோது உடனே ராங்கின் பதில் கொடுத்தார். “With it’s many references to Dr.Jekyl and Mr Hyde, including Character names… Hope you enjoy it.”

பௌலோ கொய்லோ வுடைய ’அல்கெமிஸ்ட்’ நாவல் படித்துவிட்டு நான் கொய்லோவுடன் இரண்டு ஈமெயில் பரிமாற்றம் நடத்தியிருக்கிறேன்.

ஆர்.எல்.ஸ்டீவன்ஸனின் டாக்டர் ஜெக்கிள் அண்ட் மிஸ்டர் ஹைட் நாவல் படமான போது ஸ்பென்சர் ட்ரேசி நடித்தார்.அந்த இரட்டை மனிதன்! இங்கிரிட் பெர்க்மனுடன் ஸ்பென்சர் ட்ரேசி நடித்த படம்.

இப்படி ஒரு படம் Dr.Jekyl and Mr.Hyde (1941) நடித்து விட்டு ட்ரேசி

 It’s a mad, mad, mad, mad world (1963) ல் ரிலாக்ஸ்டாக, ஜாலியாக நடித்திருந்தார்!

சில வருடங்களுக்கு முன் இந்தியா வந்திருந்த இயன் ராங்க்கின் உடன் பிரகாஷ் காரத் உரையாடும் நிகழ்வை ’ஹிண்டு’ பத்திரிக்கை ஏற்பாடு செய்து வெளியிட்டிருந்தது.

இயன் ராங்க்கின் அப்போது சொன்னார் “ நான் ஒருவன் மட்டுமே க்ரைம் நாவல்களுக்கு முன்னதாக ரசிகனாக எல்லாம் இருக்காமல் இருந்து பின் க்ரைம் ரைட்டராக ஆனவன்!”

நாடகத்திற்காக உயரிய ’சரஸ்வதி சம்மான் விருது’ பெற்ற இந்திரா பார்த்த சாரதி இரண்டு மணி நேரம் உட்கார்ந்து நாடகம் பார்க்க எப்போதுமே தனக்கு பொறுமை இருந்ததேயில்லை என்று கூறியிருக்கிறார்!

Inspector Rebus in Ian Rankin’s crime novels.
அயன் ராங்க்கின் வருத்தம் “ There is still a certain literary snobbery. A lot of people won’t read crime fiction.”

ராங்க்கின் விளக்கம்: Crime fiction is about social inequality.

ராங்க்கின் நம்பிக்கை: The prizes will start to consider – the Booker Prize, the Pulitzer in America will start to consider crime fiction.

அந்த உரையாடலில் பிரகாஷ் காரத் : ஒரு க்ரைம் ரைட்டர் வலதுசாரியாக இருக்கவே முடியாது என்று நான் நினைக்கிறேன்.
ராங்க்கின்: பிரிட்டனில் த்ரில்லர் ரைட்டர் ஜெஃப்ரி ஆர்ச்சர் ஒரு கன்சர்வேடிவ். ஃப்ரட்ரிக் ஃபார்சித் கூட வலது சாரி தான்.
பிரகாஷ் காரத் : But they are thriller writers!

ராங்க்கின் : You are right, thriller writers. Thriller writers in the U.S. tend to be right wing. That is an interesting distinction, perhaps.

பிரகாஷ் காரத் – ராங்க்கின் உரையாடலில் வினோத விசித்திரம் – க்ரைம் ரைட்டர் என்பவர் வேறு. த்ரில்லர் ரைட்டர் என்பவர் வேறு. அதோடு க்ரைம் ரைட்டர் ஒரு இடது சாரி! த்ரில்லர் ரைட்டர் எனப்படுபவர் வலது சாரி!
ஜெஃப்ரி ஆர்ச்சர், ஃப்ரெட்ரிக் ஃபார்சித் முதலியோர் த்ரில்லர் ரைட்டர்ஸ். அதோடு வலது சாரிகள் என்கிறார் இயன் ராங்க்கின்.
இயன் ராங்க்கின் ஒரு இடது சாரி என்பதாக பிரகாஷ் காரத் நிறுவ விரும்புகிறார். (அதனால் தான் மார்க்ஸிஸ்ட் ஆகிய நான் ராங்க்கினுடைய ரசிகன்!)

இதில் ’த்ரில்லர் ரைட்டர் வேறு. க்ரைம் ரைட்டர் என்பது வேறு’ என்பது மண்டையில் மரம் முளைக்க வைக்கும் விஷயம்!

’கேள்வி நேரம்’ என்ற ஒரு டி.வி ஷோவிற்காக, ஷோவிற்கு முன்னதாக ஒரு மணி நேரம் இயன் ராங்க்கினை, அவரது அரசியல் நோக்கைக் கண்டறிவதற்காக இன்டர்வியூ செய்திருக்கிறார்கள்.

கடைசியில் சலித்துப்போய், மண்டையில் மரம் முளைத்துப்போய் அவர்கள் :
“ It’s very difficult Mr.Rankin, very difficult! In some ways you are Liberal, in some ways you are slightly to the Right, and in others you are quite far to the Left!”
.....................................................


க.நா.சு. : ” எனக்கு மர்ம நாவல்கள் படிப்பதில் கனமான நாவல்கல் படிப்பதிலே போல ஈடுபாடு உண்டு.
நான் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்தே மர்ம நாவல்கள் எழுதி வந்திருக்கிறேன். சக்தி விலாசம், ஆயுள் தண்டனை, கந்தர்வ லோகத்தில் கொலை என்று பல தொடர்கதைகளாகப் பல பத்திரிக்கைகளில் வெளி வந்தபின் சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்குக் கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து ‘ அவரவர் பாடு’ என்கிற நாவலை எழுதினேன்.”
” வரலாறு எழுதுவது போல அறிவு பூர்வமான துப்பறியும் நாவல்களில் எல்லா விஷயங்களும் மிக மிகத் தெளிவாக முடியும்போது சொல்லப்பட்டு விடவேண்டும். மர்மநாவல்களில் அப்படியில்லை; ஒரு மர்மம் துலங்கிய மாதிரியும் இருக்க வேண்டும் - முழுக்கத்துலங்கி விடாமலும் இருக்க வேண்டும். சம்ஸ்கிருத இலக்கியத்தில் த்வனி என்று ஒரு சித்தாந்தம் சொல்லுகிறார்களே அது மர்ம நாவலில் அதிகமாக இடம் பெற வாய்ப்பு இருக்கிறது”
(க.நா.சு துப்பறியும் நாவல்கள் வேறு. மர்ம நாவல்கள் வேறு என்கிறார்.)
“ டாஸ்டாவ்ஸ்கியில் பல நாவல்களில் மர்மம் என்பது மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. அதே போல சில ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் நாவல்களிலும் இருக்கிறது. பிரெஞ்சு வாசகர்கள் சேஸை நல்ல இலக்கியாசிரியராகக் கருதுகிறார்கள் என்று கேள்விப்படும்போது ஓரளவு நியாயம் என்றே தோன்றுகிறது.”
”இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசையுண்டு. செய்யவேண்டும்.”
’அவரவர் பாடு’ என்ற மர்ம நாவலுக்கு
எழுதியுள்ள முன்னுரையில் க.நா.சு. இப்படி எழுதியுள்ளார்.
...................................................

(மின்னம்பலம் மார்ச்,31, 2016ல் பிரசுரமாகியுள்ளது.)
 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.