Share

Apr 1, 2016

ஹேம்லெட்


சேக்ஸ்பியரின் துன்பியல் நாடக நாயகன் ஹாம்லெட் பற்றி எழுதப்பட்ட அளவுக்கு வேறெந்த கதாநாயகன் பற்றியாவது எழுதப்பட்டிருக்கவே முடியாது.


ஹேம்லட் ஸ்பெஷலிஸ்ட் என அறியப்பட்ட ஹொரேஸ் ஹோவர்ட் ஃபர்னஸ் நூறு வருடங்களுக்கு முன்னே 1908ல் சலித்துப்போய் எழுந்து சாமானை சொறிந்து விட்டு சொன்னார்: ” கடைசியாக ஒன்று கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து இனிமேல் யாரும் ஹாம்லட் பற்றி எந்த ஒரு கட்டுரையும் எழுத வேண்டாம். என் உயிருக்குயிரான நெருங்கிய நண்பன் ஒருவன் மரணப்படுக்கையில் இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனை உயிர் பிழைக்கச்செய்ய ஒரு வழி இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.அதாவது ஹாம்லெட் பற்றிய தன் தியரியை அவன் வெளிப்படுத்தினால் அவன் பிழைக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர் சொன்னாரென்றால் நான் உடனே பதறி கதறுவேன். “போதும்! ஹாம்லெட் பற்றிய இன்னொரு தியரி வருவதற்குப்பதிலாக என் நண்பன் செத்துப்போகட்டும்.அவன் செத்தாலும் சரிதான்!”


அதன் பின் ஜான் பேரிமோர், லாரன்ஸ் ஒலிவியர், ரிச்சர்ட் பர்ட்டன் என்று எத்தனை பேர் ஹாம்லெட்டாக நடித்திருக்கிறார்கள். திரைப்படமாக ஹாம்லெட் 2015ல் கூட தயாரிக்கப்பட்டு வெளி வந்திருக்கிறது. இந்தியில் ஹாம்லெட் சென்ற வருடம் ’ஹெய்தர்’ ஆக வெளி வந்து நிறைய விருதுகள் பெறுகிறது.


ஹாம்லெட் சாசுவதமான Evergreen காவிய நாயகன்!

“After Jesus, Hamlet is the most cited figure in Western consciousness” என்று சொல்லப்படுகிறது.

சென்ற டிசம்பர் மாதம் கூத்துப்பட்டறை முழு நேர நடிகர்கள் பாண்டிச்சேரியில் ஒரு வொர்க் ஷாப் போன போது அங்கே அரியான் முஷ்கின் என்ற பெண் பிரஞ்சு நாடக அறிஞர் கேட்கிறார்: “How many of you know Shakespeare? If you don’t know Shakespeare, how can you say you are an actor?”
……………..




ஹேம்லெட்டின் அப்பாவின் ஆவி!
Revenge your father’s foul and most unnatural murder! The serpent that did sting your father’s life now wears his crown. But leave your mother to heaven. 

அப்பா ஹாம்லெட்டின் ஆவி ஹாம்லெட்டை ஆக்கிரமித்தது என்பது தெரிந்ததே. ஹாம்லெட்டாக நடித்த நடிகர்களைக்கூட அவர்களுடைய சொந்த அப்பாவின் ஆவி ஆக்கிரமித்த சுவாரசியம் தான் தெரியாததே!


எட்வின் பூத் 1853 துவங்கி1891 வரை ஹாம்லெட்டாக நாடகங்களில் நடித்தவர். இவருடைய அப்பா ப்ரூட்டஸ் பூத் முன்னதாக 1829 முதல்1849 வரை சேக்ஸ்பியரின் ஹாம்லெட்டாக நடித்தவர்.

எட்வின் பூத் சகோதரன் ஜான் பூத் infamous ஆக வரலாற்றில் அறியப்பட்டவன்.

 அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனை 26.04.1865 ல் சுட்டுக்கொன்ற நடிகன் ஜான் பூத்.


இதனால் எட்வின் பூத் ஹாம்லெட்டாக ஒரு ஒன்பது மாதம் நடிக்க முடியாமல் போய் விட்டது. பின்னர் மீண்டும் ஹாம்லெட்டாக மீண்டு, மேடையில் கலக்கு கலக்கென்று கலக்கி விட்டார்!

விஷயம் என்னவென்றால் ஹாம்லெட்டாக நடித்த எட்வின் பூத்துடன் அப்பா ப்ரூட்டஸின் குரல், ஹாம்லெட் அப்பா ஃபாதர் ஹாம்லெட்டின் ஆவி மூலம் எப்போதும் பேசுவதாக உறுதியாக சொல்லிக்கொண்டே இருந்தார். நாடகத்திலேயே அப்பா ப்ரூட்டஸ் பூத் சிறு உருவம் ஒன்றை ஹேம்லெட் அப்பாவின் ஆவி வரும் காட்சிகளுக்கு எட்வின் பயன்படுத்தினார்.
இதெல்லாம் 150 வருடங்களுக்கு முந்தைய சமாச்சாரம் என்று ஒதுக்கலாம்.


டேனியல் டே லூயிஸ் ஹாலிவுட் நடிகர். ஹாலிவுட் சரித்திரத்தில் ஹீரோவாக மூன்று படங்களுக்கு ஆஸ்கார் அவார்ட் வென்ற ஒரே நடிகர்.
My left foot, There will be blood, Lincoln ஆகிய படங்கள் தான் அவருக்கு ஆஸ்கார் பரிசு வாங்கிக்கொடுத்தன.
இவர் My left foot படம் நடித்த 1989ம் வருடம் ஹாம்லெட்டாக ஒரு மேடையில் நடித்துக்கொண்டிருந்தார். அவருடைய அப்பா கவிஞர் சிசில் டே லூயிஸ் 1972ல் இறந்து விட்டார். எப்போதோ மறைந்து விட்ட  தன் அப்பா சிசில் ’ஆவி’யை 1989ல் மேடையில் டேனியல் பார்த்து விட்டு அலறி நாடகத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் இடையிலேயே வெளியேறி விட்டார்!

“Tell why your canonized bones hearsed in death have burst their cerements, why the sepulchre wherein we saw you quietly interred has oped ponderous and marble jaws to cast you up again.( The tomb is personified here as vomiting the Ghost from it’s mouth!) What may this mean? Say why is this?”


“சவப்பெட்டியில் பூஜை செய்து அடக்கம் செய்யப்பட்ட உமது எலும்புகள், பெட்டியை உடைத்துக்கொண்டு இப்படி ஏன் தான் வெளியேறி விட்டதோ? உம்மை அமைதிப்படுத்தத்தானே கல்லறையில் புதைத்தோம்? அந்தக் கல்லறை, தன் பளிங்கு வாயைத் திறந்து ஏன் உம்மை வாந்தியெடுத்து விட்டது!”

…………………………..

http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html


http://rprajanayahem.blogspot.in/2013/03/blog-post_27.html


http://rprajanayahem.blogspot.in/2010/01/blog-post_11.html


http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post_02.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_26.html


..........................................



1 comment:

  1. The first Oscar for Daniel Day Lewis was for the movie "My Left foot". Please make the correction. ~Chandrakumar

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.