Share

Feb 4, 2009

பந்த்

அநேகமாக இது தான் முதல் முறை. ஒத்த கருத்து திமுக ,அதிமுக இடையே அபூர்வம் . ஈவு இரக்கமற்ற விடுதலைப்புலிகளை கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆதரிக்கவில்லை என்பது ஒரு வரலாற்று ஆச்சரியம் . முதல் முறையாக ஆளுங்கட்சி ,பிரதான எதிர்க்கட்சி ஆதரவில்லாமல் தமிழகத்தில் ஒரு பந்த் இன்று நடக்கிறது . சர்வாதிகார விடுதலைப்புலிகள் பற்றி கடுமையாக கருணாநிதி கருத்து தெரிவித்திருக்கிறார். உமா மகேஸ்வரன் , பத்மநாபா , அமிர்தலிங்கம் கொலைகள் அப்போதே கருணாநிதியை கலங்க வைத்தது . தமிழ் ஈழம் அமைந்தால் சர்வாதிகார ஆட்சி தான் என்ற பிரபாகரனின் பேட்டி அன்று அவரை மாற வைத்தது . அது தான் இன்று கருணாநிதியை 'கருணா' பற்றி சகஜமாக ஆதரவுக்கருத்து சொல்லவைக்கிறது . ஜெயலலிதா இந்த விடுதலைப்புலி எதிர்ப்பு நிலையை வெளிப்படையாக பல வருடம் எடுத்துள்ளவர்.ஆனால் இலங்கை தமிழ் மக்களுக்கும் எதிர்ப்பு நிலை எடுத்து விட்டது போல இலங்கை ராணுவத்துக்கு ஆதரவாக பேசுவது தான் துரதிர்ஷ்டம் .

வைகோ, ராமதாஸ் , திருமாவளவன் ஆகியோரின் வெளிப்படையான விடுதலைப்புலி ஆதரவு ஒரு வக்கிரம் . இலங்கை மக்கள் நிலை பற்றி செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ள செய்திகளில் இலங்கை அரசின் ஈன குணம் மீண்டும் ,மீண்டும் நிரூபணமாகிறது .

இந்த பழ நெடுமாறன் முன்பு இந்திராகாந்தியை திமுக காரர்கள் மதுரையில் தாக்கிய போது அவர் மீது அடி படாமல் காப்பாற்றி ,மண்டை உடைந்து "கண்ணகியை அடித்து விட்டீர்கள் ,மதுரையே பற்றி எரியபோகிறது " என்று ஆவேசப்பட்டவர் . காங்கிரஸ் அட்ஹாக் கமிட்டியில் இந்திரா காந்தி "My son who saved my life!" என்று பெருமிதத்துடன் அறிமுகப்படுத்தினார். அந்த இந்திராகாந்தியின் மகனை கொன்றவர்களை நெடுமாறன் இன்று ஆதரிப்பது ஒரு வரலாற்று முரண்.தமிழகத்தின் முதல் "மாவீரன்" நெடுமாறன் தான் தெரியுமா ? இன்று அந்த பட்டம் ஒரு நூறு பேர் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் .

கண்ணதாசன் இந்த மதுரை நெடுமாறன் பற்றி மிக பிரமாதமாக வன வாசத்தில் எழுதியிருக்கிறார் . திமுகவை விட்டு நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் சம்பத்தோடு வெளியேறி, 'திராவிட இயக்கத்தின் இரும்புமனிதர்' மதுரைமுத்துவுக்கு எதிராக தைரியமாக அரசியல் செய்தவர் தான் நெடுமாறன். அப்போது தான் மதுரை மக்களுக்கு இவர் மாவீரன் ஆனார் !

2 comments:

  1. //ஜெயலலிதா இந்த விடுதலைப்புலி எதிர்ப்பு நிலையை வெளிப்படையாக பல வருடம் எடுத்துள்ளவர்.ஆனால் இலங்கை தமிழ் மக்களுக்கும் ஆதரவு நிலை எடுத்து விட்டது போல இலங்கை ராணுவத்துக்கு ஆதரவாக பேசுவது தான் துரதிர்ஷ்டம் .//

    'தமிழ் மக்களுக்கும் எதிர்ப்பு நிலை எடுத்து விட்டது போல' என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  2. ஊருக்கு ஒரு நியாயம்! தனக்கு ஒரு நியாயம்!!
    ஒற்றுமை பற்றி பேசும் கருணாநிதி ஒன்றரை ஆண்டுகளில் தனது குடும்பத்துக்குள்ளேயே சந்தி சிரித்தது ஊரறிந்த விஷயம்.
    வைக்கோ மீது கொலை பழி சுமத்தி கட்சியை விட்டு நீக்காமல் அரவணைத்து செல்ல வேண்டியது தானே!
    போராளிகளுக்கு அட்வைஸ் செய்யும் யோக்கியதை சுயநல பேய்களுக்கு இல்லை.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.