Share

Feb 14, 2009

சீமான்

Rejoice! Happy Valentine’s day!!
மேற்கண்ட வார்த்தைகள் காதலர்களுக்காக மட்டும் அல்ல கலாச்சார காதலர்கள்... கவனத்திற்காகவும் தான் !
.....

இன்று தினமலரில் சீமான் பேச்சு படித்தேன் . உள்ளே தூக்கி போட்டால் ஜாமீன் கேட்டு கெஞ்சுகிறார் . 'இனி சர்ச்சைக்குரிய விதமாக பேச மாட்டேன்' என்று எழுதிகொடுக்கிறார் . வெளியே வந்து விட்டால் பேட்டியும் ,மேடை பேச்சும் 'கெட்ட அப்பன் மகனே ,சீமான் சிங்கம்டா ' தாட் பூட் தஞ்சாவூர் என்று குதிக்கிறார் .
'விடுதலை புலிகள் தப்பிக்க நினைக்கும் பொதுமக்களை சுடுகிறார்கள்' என்று இன்று கூட இலங்கை ராணுவத்தால் காயமடைந்து செஞ்சிலுவை சங்கத்தால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் கூறியுள்ளதை தினமலரில் படிக்க முடிந்தது . புலிகள் வேறு , இலங்கை மக்கள் வேறு என்று யாரும் சொல்லக்கூடாதாம் . சீமான் மிரட்டல் கர்ஜனை வேடிக்கையாக இருக்கிறது . ஒரு கேள்வி . ஜெயலலிதா ஆட்சியில் இவரால் இப்படி பேச முடியுமா ? ஜெயலலிதா ஆட்சி இதற்காகவேனும் வந்தால் நல்லது என்று தோன்றுகிறது . ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உறுதியாக இருக்கிறது சீமான் அவர்களே ! அப்புறம் ஜாமீன் கேட்டாலும் கிடைக்காது .' இனிமே மூச்சு விடமாட்டேன் . இப்படி பேசமாட்டேன் ' என்று எழுதிகொடுக்கவும் கிஞ்சித்தும் வழியே கிடையாது .உஷார் !உஷார் !
தமிழ் பற்று உள்ள சீமான் இந்தியாவில் உள்ள தமிழர்களை 'ஈன ஜாதி , நல்ல அப்பனுக்கு பிறக்காதவனுங்க' -சகட்டுமேனிக்கு வர்ணிக்கிறார் .சீமான்கள் சாமானியர்களை இப்படி தான் அந்த காலத்திலும் அவமானப்படுத்துவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .'சீமான் 'என்று பெயர் இருந்தால் கூட வாய் அப்படித்தான் கொழுப்பெடுத்து விடும் போலிருக்கிறது.

10 comments:

 1. இலங்கை இராணுவத்தால் காப்பாற்றப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் ஒருவர் தான் புலிகளால் சுடப்பட்டேன் என்றல்லாது இராணுவத் தாக்குதலில் காயமடைந்தேன் என்றா சொல்லுவார்.அதனை முன் பக்கத்தில் போட்டு மகிழுது தினமலர் என்றால் அதனை மேற்கோள் காட்டும் ராஜநாயகம். என் தலையை எங்கே கொண்டு போய் உடைக்க?

  ReplyDelete
 2. http://www.tamilwin.com/view.php?2aIWnTe0d1j0W0ecGG773b4P9EY4d2g2h2cc2DpY3d436QV2b02ZLu3e

  http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dRj0W0ecGG7N3b4P9EO4d2g2h2cc2DpY2d426QV2b02ZLu3e
  இவற்றையெல்லாம் பார்த்த பின்பும் வாய்மூடியிருந்தால் சீமான் தேசாபிமானி.எதிர்த்துக் கேட்டால் தேசவிரோதி. வாழ்க தினமலர் வாழ்க ராஜநாயகம்.
  ஜெய்ஹிந்

  ReplyDelete
 3. என் உறவுகளே.........உலகத் தழிழர்களே ...........என வாய் கிழிய கத்தும் சீமானுக்கு சரியான சாட்டையடி.

  ReplyDelete
 4. கட்டுரை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது!
  One more blocked link in my computer includind Dina Malar.
  நல்லாருங்க !

  ReplyDelete
 5. எது எப்படி இருப்பினும், அடுத்தவர்களை இழித்து பேசுவது என்பது அழகல்ல. அதுவும், மிகவும் கேவலமான பேச்சு அது. சீமான் போன்ற ஆட்களிடம் இதைத்தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பது தப்பு.

  ReplyDelete
 6. சீ! மான் - இவனெல்லாம் ஒரு தமிழனா!
  அந்த நாளிலே பாண்டிசேரிலே பேசினால்
  ப்ரிடிஷ் ராஜ்யத்திலே ஒண்ணும் செய்ய
  முடியாது - அது மாதிரி எண்ணிக்கிட்டு
  புதுச்சேரியிலே போய்ப் பிளந்து
  கட்டுகிறாரா? புலிங்கள்கிட்டே
  நிறையவே கொடுக்கல் வாங்கல்
  இருக்கும் போலிருக்கிறது.

  ReplyDelete
 7. தின மலர், இந்து கொடுக்கும் செய்திகளை வைத்துப் பேசும் அறிவுசீவிகளை நினைத்தால் எங்கு போய்ச் சிரிப்பதெனத் தெரியவில்லை. சீமான் ஒன்றும் திருத்தூயவர் அல்லர். அந்நேரத்தில் தோன்றும் உணர்ச்சிகளை மெய்யியல் உரைகல்லில் உரசாது நாசுக்கேதுமில்லாமற் (இந்த மாதிரி நாசுக்கில்லாது பேசுபவர் இன்னொருவர் இருந்தார், அவர் பேச்சில் உணர்ச்சிக் கொந்தளிப்பு இருக்காது, மெய்யியல் அணுகல் இருக்கும்,
  அவர் பெயர் பெரியார்!)பேசுவர். அவ்வளவே! அவரிடம் இருப்பது ஈழத்தில் மக்கள் மடிகிறார்களே என்ற உணர்ச்சிக் கொந்தளிப்பே! அவரின் ஓவ்வோர் பேச்சின்
  அடிபொருள் என்னவென்று அறிவது ஒன்று பெரிய விடையம் அல்ல. நாம் அதை அறிய விரும்பவில்லை அவ்வளவே!

  ஈழநாதன், நாங்க இந்து, தினமலர் கொடுக்காத எந்த செய்திகளையும் படிக்க மாட்டோம். படிச்சாலும் உண்மைன்னு ஒத்துக்க மாட்டோம். முதல்ல தற்கொலைத் தாக்குதல்ன்னு இராணுவப் பேசாளர் சொன்னத நம்புவோம், அப்புறம் எங்கடா செத்தவன் உடல்ல குண்டு தானே பாய்ஞ்சிருக்கு எப்படி தற்கொலைத் தாக்குதல் ஆகுமுன்னு கேட்டா? அவனும் அடுத்த நாள் புலிகள் சுட்டுத் தான் இறந்துள்ளார்ம்பான்! புலிகள் எங்க இடைநிலைப் பகுதி சோதனைக் கூடங்கள்ள வந்து சுட்டாங்கன்னு யோசிக்க மாட்டோம். உதய நாணயக்கார, பிரியதர்சன யாப்ப, கெகலிய இரம்புக்க்வல்ல போன்ற வாக்கில் நாணயமும், உண்மையும் கொண்டோர் எங்கள் இராம்களுக்கும், தினமலர் காரர்களுக்கும் கொடுக்கும் உண்மை நிலவரத்தைத் தாம் நாம் நம்புவோம். திரு ஈழ நாதன் உங்கள் செய்தியையும் படங்களையும் போயிக் குப்பையில்ல போடுங்க! எல்லாம் வரைகலை, கிராபிக்சு வேலை!

  ReplyDelete
 8. தல சீமான்கிறதால இதையும் சினிமா கிசுகிசு நெனச்சிட்டீங்களோ

  ReplyDelete
 9. பன்னாடை
  தினமலரையும் நாகார்சுனனையும் மேற்கோள் காட்டுற
  அறிவே இல்லையாஉனக்கு
  நீ சொல்றத கேட்டுட்ட இருக்க எல்லாரும் செயமோகனா
  பொத்திக்கிட்டு போடா .மவனே

  ReplyDelete
 10. Your thought is very true

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.