Share

Feb 6, 2015

கண்டதே காட்சி! கொண்டதே கோலம்!




ஜெய சித்ரா தான் கமல்ஹாசனுடன்  நடித்த முதல் நடிகை எனலாம்.  
( மாணவன் படத்தில் விசிலடிச்சான் குஞ்சுகளா பாட்டில் கமலோடு ஆடிய குட்டி பத்மினி ஆட்சேபிக்கவில்லையென்றால்! ) 
குறத்திமகனில்  ஜெயசித்ரா மாஸ்டர் ஸ்ரீதருடன் டூயட் பாடி நடித்த போது கூட கமல் ஒரு ஓரமாக இருந்தார். 



அடுத்து அரங்கேற்றத்தில் கண்ணுக்கு தெரிகிற மாதிரி வந்த போது அவருடைய சகோதரியாக ‘மூத்தவள் நீ கொடுத்தாய்’ ஜெயசித்ரா பாடியிருக்கிறார். 
சொல்லத்தான் நினைக்கிறேன் --  சிவகுமாரை காதலித்தாலும் தன்னை கற்பழிக்கும் கமலை கல்யாணம் செய்வதாக அவரோடு நெருங்கி வந்தார்.



அதன் பிறகு கமலுடன் சினிமா பைத்தியம், மாலை சூடவா, பட்டாம்பூச்சி, குமாரவிஜயம்.....
இப்படி கமலோடு ஆரம்பத்தில் இணைந்து நடித்த Colleague.


ஸ்ரீப்ரியாவின் முதல் படம் முருகன் காட்டிய வழி. அவர் பிரபலமானது அவள் ஒரு தொடர்கதை.
கமல் ஆரம்ப கால கதாநாயகிகளாக பிரபலமானவர்களில் ஸ்ரீப்ரியாவை  ஜெயசித்ராவுக்கு அடுத்து ஜூனியராகவும், ஸ்ரீதேவிக்கு சீனியர் எனவும் கொள்ளலாம்.
ஸ்ரீப்ரியா கமல் ஜோடி ‘தங்கத்திலே வைரம்’ தொடங்கி பொருத்தமாய் இருந்தது.
ஜெயசித்ரா, ஸ்ரீப்ரியா இருவருமே “ இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் மறக்கமுடியாதபடி  நடித்திருந்தார்கள்.
அவள் அப்படித்தான் ஸ்ரீப்ரியா காவிய நாயகி என்றே சொல்லவேண்டும்.


 ஜெயசித்ரா,ஸ்ரீப்ரியா இருவரின் நடிப்பிலும் Humour sense அதிகம். காமெடி நடிப்பில் தூள் கிளப்புவார்கள்.




கமலின் ஆரம்ப கால  நடிகைகளில்,ஜெயசுதாவை தீபாவை,சுஜாதாவை ஏன் சொல்லவில்லை என கேட்கவேண்டாம். இங்கே ஜெயசித்ரா, ஸ்ரீப்ரியா இருவரைப் பற்றி தான் சொல்ல வரும் விஷயம்.
ஜெயசித்ரா 1980களின் முன் பகுதியிலும் ஸ்ரீப்ரியா கடைசியிலும் சிக்கி சிக்கலான காதல் விவகாரங்கள்.

ஜெயசித்ரா – சுதாகர் காதல்
சுதாகர் திருமணச்செய்தி வந்தவுடன் ஜெயசித்ரா பொங்கிவிட்டார். சுதாகர் மீது தன் காரை எடுத்துக்கொண்டு போய்விட்டதாக போலீஸ் புகார் கொடுத்து ரொம்ப ரசாபாசமாக முடிந்த முறிந்த காதல்.
ஜெயசித்ரா மனதை தேற்றிக்கொண்டு கும்பகோணம் கணேஷை மணந்துகொண்டார்.

ஸ்ரீப்ரியா – கார்த்திக் காதல்


சோலைக்குயில் படத்தில் தன்னுடன் நடித்த ராகினியை கார்த்திக் திருமணம் செய்து கொண்ட போது ஸ்ரீப்ரியா பொங்கி எழுந்தார். கார்த்திக் நடித்துக்கொண்டிருந்த ஒரு படத்தின் செட்டுக்கே சென்று சண்டை போட்டு மயங்கி விழுந்து, இனி செய்வதற்கு ஒன்றுமில்லையென்ற நிலையில் கரிசனத்துடன் ஸ்ரீப்ரியா டயலாக் ‘அவரு நல்லாயிருக்கணும்’
ஸ்ரீப்ரியா மனதைத் தேற்றிக்கொண்டு லதாவின் தம்பி ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டார். 






Feb 3, 2015

ஔவை யார்?



சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று பால கந்தன் கேட்டானே! அப்படி கேட்டது புராண கால ஔவையாரிடம்.


சங்க கால ஔவையார் கிழவியல்ல. இளம்பருவப்பெண்ணாம்! 
அதியமானைப் புகழ்ந்து பாடிய சங்ககால புறநானூற்று ஔவையார்.
ஆனால் நெல்லிக்கனி பெறும் ஔவை கிழவியாகத்தான் தெரிகிறார்!


ஆத்திச்சூடி,கொன்றை வேந்தன், நீதி நூல், மூதுரை, நல்வழி முதலியவையெல்லாம் சோழர்கால ஔவையாரால் பாடப்பெற்றவை என்று சொல்கிறார்கள்.
தாயொடு அறுசுவை போம், தந்தையோடு கல்வி போம் என்று தனித்திரட்டு  பாடியவர் வேறொருவர். அவர் இடைக்கால ஔவையார்.
வினாயகர் அகவல், ஞானக்குரல் போன்றவற்றை இயற்றியவர் பிற்கால ஔவையார்.
 'கான மயிலாட கண்டிருந்த வான் கோழி' பாடலை எழுதிய பிற்கால ஔவை பதினாறாம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட காலத்தை சேர்ந்தவராக இருக்கலாம். ஏனெனில் வான் கோழி ஐரோப்பியர் மூலம் அப்போது தான் இந்தியாவிற்கு வந்ததாம். என்னன்னவோ சொல்கிறார்கள்!


சண்டாளி,சூர்ப்பனகை, தாடகையைப்போல் வடிவு கொண்டாளை பெண் என்று கொண்டாயே ...நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்.
...விருந்து வந்ததென்று விளம்ப - வருந்தி ஆடினாள்; ஆடிப்பழமுறத்தால் சாடினாள் ஓடோடத்தான்.
..ஐயயோ அன்பிலால் இட்ட அமுது 
 பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கூடி இருக்கலாம்- சற்றேனும் ஏறுமாறாக இருப்பாளே ஆமாயின் கூறாமல் சன்னியாசம் கொள் 
இப்படியெல்லாம் பாடிய ஔவையார் ஒரு பெண் தான். 
இவர் Misogynist(One who hates women)மாதிரி தெரிகிறதே என்று Feminism பேசுகிற குசும்பன் ஒரு நாள் என்னிடம் வந்து சந்தேகம் கேட்டான். ஔவை பற்றி ஆண்டாள் போல தன் தடமுலைகளை எந்த ஆணுக்குமே கொடுக்க விருப்பமில்லாத misogamist (a marriage-hater)   என்பதாகவும்  misandrist (one who hates men )
என்ற அளவிலும் தான்  இது வரை நினைத்திருந்தானாம்.


http://rprajanayahem.blogspot.in/2009/11/blog-post_20.html

http://rprajanayahem.blogspot.in/2009/08/carnal-thoughts-22.html