Share

May 30, 2022

தலைமுறைகள்



மூன்று தலைமுறை 

தெலுங்குப் படம் ‘மனம்’. 

நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, 
நாக சைதன்யா இணைந்து நடித்து வெளி வந்தது.
 மூன்று தலைமுறை நடிகர்கள் அப்பா, மகன், பேரன் இணைந்து நடித்த படம்
 உலக சினிமாவில் இது ஒன்று மட்டுமே
 என்று பரவலான நம்பிக்கை இங்கே இருக்கிறது. 


 
 ‘தி இந்து’ செய்தித்தாளில் இந்து டாக்கீஸ் உலகத் திரை உலா விலும் இப்படியே அபத்தமாக குறிப்பிடப்பட்டது. ஆனால் அது உண்மையல்ல.
 மூன்று தலைமுறை இணைந்து நடிப்பது 2014ல் நிகழ்ந்து விட்ட அதிசயம் என்ற பிரமை தவறாகும்.

1971ல் பிருதிவிராஜ் கபூர், ராஜ் கபூர், ரண்திர்கபூர் இணைந்து நடித்து
 ‘கல் ஆஜ் அவுர் கல்’ அதாவது 'நேற்று, இன்று, நாளை' என்ற பெயரில் ஒரு படம் 
பேரன் ரந்திர் கபூர் இயக்கத்தில் வந்துள்ளது.


 ரந்திர் கபூர் தான் கரிஷ்மா கபூர், கரீனா கபூர் இருவரின் அப்பா. ரன்பிர் கபூரின் பெரியப்பா.

ஜெயா டிவியில்
  மறைவதற்கு முன்பு நாகேஸ்வர ராவ் பேட்டி                                         ஒன்று பார்க்க கிடைத்தது. 
என்ன அழகாக நாகேஸ்வர ராவ் 
தன் நினைவுகளைச் சொன்னார். 
You should look gracefully old. 
முதுமையில் அழகு என்றால் என்ன என்பதை அவரது தோற்றம் உணர்த்தியது.

....

பின்குறிப்பு

Zali Lizamzali 

இலங்கை நண்பர் லிஷாம்ஷாலி எனக்கு மறந்து விட்ட
ஒரு விஷயம் 
நினைவூட்டியதற்கு நன்றி.

1951லேயே 
ஆவாரா படத்தில் ராஜ்கபூருடன் அப்பா பிருத்விராஜ் கபூர், தாத்தா பேஷேஸ்வர் நாத் கபூர் நடித்திருக்கிறார்கள். 
பேஷேஸ்வர்நாத் கபூர் ஜட்ஜாக வந்திருக்கிறார்.
ராஜ் கபூர் தம்பி சசி கபூர் சிறுவன் ராஜ் ஆக தலைகாட்டியிருந்தார்.
பிருத்வி ராஜ்கபூர் கதாநாயகனின் அப்பாவாகவே.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.