Share

Jun 2, 2016

முத்துசாமியும் சிறுகதைகளும்




விகடன்தடம்பத்திரிக்கை விளம்பரத்தில் தடம் பதித்து பங்கேற்கும்  தமிழக எழுத்தாளர்களில் ஒருவராக கி.ரா, .பா போன்ற ஜாம்பவான்களுடன்
.முத்துசாமியின் புகைப்படத்தையும் போட்டிருந்தார்கள். அவர்களுக்கு  ந.முத்துசாமியின் பெருமை தெரிந்திருக்கிறது.  

முதல் வணக்கம் சொல்லும்தடம்இந்த ஜூன் முதல் இதழில்சிறுகதையின் வழிகள்என்ற கட்டுரையில்  .முத்துசாமியைப் பற்றி குறிப்பிடப்படவில்லை.அதனால் இந்த கட்டுரை குறைப்பட்ட ஒன்று தான்.சிறுமை இந்தக்கட்டுரைக்குத்தான். மகத்தான சிறுகதைகளை எழுதிய .முத்துசாமிக்கு இல்லை
நாடகத்தில் முழு கவனம் திரும்பியதால் தமிழுக்கு க்ரியா 1984ல் வெளியிட்டநீர்மைமட்டுமே நீண்ட காலம் வாசக கவனத்தில் நெடுங்காலமாக இருந்தது. சொல்லப்போனால் 1980களில் வெளி வந்த சிறுகதை தொகுப்புகளில் முதலிடம் பெற்ற தொகுப்பு இது தான்நீர்மை, இழப்பு, நடப்பு, வண்டி, சூழ்நிலை, புஞ்சை கிராமத்தின் பொழுது, வண்டி, அப்பாவின் பள்ளிக்கூடம், பிற்பகல், வெட்கம், கற்பனை அரண், கருவேல மரம் என்று பிரமாதமான சிறுகதைகள்.

அது மிக கனமான தொகுப்பு என்று எந்த மனசாட்சியற்ற, மனச்சாய்வுள்ள மனிதனால் கூட உணர முடியும்.

அவருடைய நீர்மை தொகுப்பில் இடம் பெற்ற செறிவான கதைகள் அனைத்தும் 1966லிருந்து 1974 வரை எழுதப்பட்டவை. பின்னர் கூத்துப்பட்டறையை ஆரம்பித்த பின் முழுக்க நாடக உலகம் அவரது சாதனைக்களமாகி விட்டது. பின்னர் 2004ம் ஆண்டிலிருந்து தான் பாஞ்சாலி, நெய்ச்சொம்பு என்று ஆரம்பித்து மேற்கத்திக் கொம்பு மாடுகள், கல்யாணி, தொறச்சி என்று சிக்ஸர், பவுண்ட்ரி என்று அமர்க்களப்படுத்தியவர் .முத்துசாமி.

2009ம் ஆண்டு க்ரியா ராமகிருஷ்ணன் மீண்டும் அவரது புதிய சிறுகதைகளுடன் நீர்மைதொகுப்பில் இடம்பெற்ற பத்து சிறுகதைகளை சேர்த்துமேற்கத்திக் கொம்பு மாடுகள்என்ற தலைப்பில் முத்துசாமி சிறுகதைகளை வெளிக்கொண்டு வந்தார்.

ஒரு இருபது சிறுகதைகளை எழுதி  நவீன தமிழ் சிறுகதை உலகில் உன்னதமான இடம் பெற்ற கலைஞன் .முத்துசாமி.
மௌனி போல குறைவான சிறுகதைகளால் விஸ்வரூபம் எடுத்த ஒரே எழுத்தாளர் .முத்துசாமி மட்டுமே.
மௌனி, லாசரா, நகுலன், .முத்துசாமி நால்வரையும் ஒரே மரபினர் என்று கருதலாம்.
இவர்களில் மௌனி, நகுலன், .முத்துசாமி மூவருமே
ஒரு ஆரம்ப வாசகனுக்கு முதுகலை படிப்பு என்ற தூரத்தில் உள்ளவர்கள்.
 


விகடன்தடம்பத்திரிக்கை கட்டுரையில் நீக்கம் பெற்றிருக்கும் இன்னொரு சிறந்த எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன்.

அவருடைய அறியாத முகங்கள், முடவன் வளர்த்த வெள்ளைப்புறா, உயிர்த்தெழுதல் ஆகிய மூன்று சிறுகதை தொகுப்புகளை படித்தவர்கள் யாரும் அவரை நிராகரிக்கவே முடியாது.
தமிழ் சிறுகதை நூற்றாண்டு குறித்து எழுதும் போது மிகுந்த கவனத்துடன் கட்டுரையாளர் செயல்படுவது அவசியம்.மனச்சாய்வு இல்லாமலும் எழுத வேண்டும்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.