Share

Mar 30, 2013

காலச்சுவடில் R.P.ராஜநாயஹம் கடிதம்

காலச்சுவடு இதழ் 160  ஏப்ரல் 2013 ல் பிரசுரமாகியுள்ள R.P.ராஜநாயஹத்தின் கடிதம்.
ரவி சுப்ரமணியனின் கரிச்சான் குஞ்சு பற்றிய
கட்டுரை ( காலச்சுவடு 157 .ஜனவரி 2013) க்கு R.P.ராஜநாயஹம் எதிர் வினை.
.............


”காலச்சுவடு 157- ஜனவரி 2011கரிச்சான் குஞ்சு பற்றி ரவி சுப்ரமணியன் எழுதிய கட்டுரையில் பசித்த மானிடம் நாவல் ஜேகேயின் முயற்சியால் வெளி வந்ததாக குறிப்பிடுகிறார்.

ஆனால் மதுரையில் மீனாக்ஷி புத்தக நிலையம் பதிப்பக அதிபர் செல்லப்பன் தி.ஜானகிராமன் சிபாரிசில் இதை அச்சிட்டதாக என்னிடம் கூறினார்.
தி.ஜானகிராமன் தான் மீனாக்ஷி புத்தக நிலையம் செல்லப்பனிடம் இந்த நாவலை பிரசுரிக்க சொல்லி வற்புறுத்தியிருக்கிறார் .
 நாவலின் தனி தன்மைக்காக மட்டுமல்ல.
கரிச்சான் குஞ்சு வின் மகளுக்கு அப்போது கல்யாண செலவுக்கு பணம் தேவை பட்டது .
செல்லப்பன் வியாபார நோக்குடன் தயங்கியிருக்கிறார். தி.ஜா வின்
வற்புறுத்தல் தான் 'பசித்த மானிடம்' நூலை பதிப்பிக்க காரணம் ஆகியிருக்கிறது .

என்னிடம் செல்லப்பன் இந்த விஷயத்தை நாவல் வெளியான மூன்றாம் ஆண்டு நான் நாவலை வாங்கிய போது தெரிவித்தார் .
விற்பனையும் படு மந்தம். செல்லப்பன் என்னிடம் பேசும்போது பசித்த மானிடம் நாவல் பிரசுரம் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது என்பதை பற்றி தான் ஆதங்கமாக பேசினார்
கு.ப.ரா வின் சிஷ்ய பரம்பரையில் வந்தவர்கள் தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், ஸ்வாமினாத ஆத்ரேயன் ஆகியோர். கு.ப.ரா மரணப்படுக்கையில் இருந்த போது தி.ஜா வும் கரிச்சான் குஞ்சுவும் அனுபவித்த வியாகூலம் பற்றியெல்லாம் வாசகர் வட்டம் வெளியிட்ட கு.ப.ரா சிறிது வெளிச்சம் நூலில் எழுதிய கட்டுரையொன்றில் தி.ஜா குறிப்பிட்டிருக்கிறார். கரிச்சான் குஞ்சு ஒரு வகையில் தி.ஜானகிராமனின் தூரத்து உறவினர் கூட.

இதையெல்லாம் இங்கு குறிப்பிட காரணம் கரிச்சான் குஞ்சு வின் ’ பசித்த மானிடம்’ என்ற மகத்தான படைப்பின் பிரசுர விஷயத்தில் தி.ஜானகிராமனின் அக்கறையும் பெரும்பங்கு காரணம் என்பதை வலியுறுத்த வேண்டித்தான்.ஜெயகாந்தனும் சிபாரிசு செய்திருக்கலாம் தான்.”

R.P.ராஜநாயஹம்

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_02.html

http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.