Share

Oct 5, 2012

பொய்த்திரள்


ஊரே உலகமே கண்ணு வச்ச ஹினா ரப்பானிய பெனாசீர் மகன் பிலாவல் லாவிட்டானாமே. What brought Hina Rabbani and Bilawal closer?
Power is the ultimate Aphrodisiac !

ஒரு பெண் எஸ்.பி. தன் டிரைவரோடு காதல் திருமணம்.
அருகுளது எட்டியேயாயினும் அல்லிக்கொடி படரும்.

 
தினம் ஒரு மாறுதல் இங்கிங்கெனாத படி எங்கெங்கும்.
மஞ்சத்துண்டு போயி கறுப்பு சட்டை !

கறுப்புச்சட்டை படையின் முதல் தொண்டராக ஈரோட்டில் பதிந்து கொண்டவராம். சரி தான். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்!

’சத்தியவாஹ ஹேளு’ என்று கேட்டால் எடியூரப்பாவின் பதில்
“I have been humiliated and victimized for no fault of mine”

காவிரிப்பிரச்னையில் ஜெயலலிதாவின் மேல் கர்நாடகா கோபமாயிருப்பதால்,அவரோடு நான் இருப்பதால் பெங்களூரு வந்தால்
என் உயிருக்கு ஆபத்து நேரலாம்.அதனால் வாய்தா வேண்டும் என அடுத்த மனு போடலாமா என்ற யோசனையில் சசிகலா.. என்று கூட பத்திரிக்கையொன்றில் படிக்கக்கிடைத்தது.

வீண் படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ.

மொபைல் போன் பொய்கள் – திருப்பூர் ரயில்வே ஸ்டேசனில் ஒரு ஆள் ரிங்கான மொபைல ஆன் பண்ணி சத்தமா சொன்னான் “டெல்லியில இருக்கேன்ப்பா. ரோமிங் பிரச்னை. அப்புறம் வந்து பேசிறேன்”

குமுதம்(10-10-2012 தேதியிடப்பட்டது) சுனில் கேள்வி பதிலில் இரண்டு பொய்கள்.
1.மோட்டார் சுந்தரம்பிள்ளை படத்தில் சிவாஜியின் மகளாக ஜெயலலிதா நடித்திருப்பார். ஆனால் காஞ்சனா தான் மூத்த மகள். ஜெயலலிதா மூத்தமகளாக நடித்திருப்பார் என்று சுனில் எழுதியது உண்மையல்ல.
2.மாஸ்டர் சேகர் இப்போது உயிருடன் இல்லை.ஆனால் கோடம்பாக்கத்தில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கிறார் என்று சுனில் எழுதியது உண்மையல்ல. அனாதை ஆனந்தன் படத்தில் நடித்த மாஸ்டர் சேகர் மறைந்து பல வருடங்கள் ஆகிறது.

........

குருவி மண்டையன் தீவிர திமுக தொண்டன்.கருணாநிதியின் அத்யந்த பக்தன். புதிதாய் கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆர் திருப்பரங்குன்றத்திற்கு முதல் முறையாக வந்தபோது ”நெருக்கியடித்துக்கொண்டு ’பொன்மனச்செம்மல் வாழ்க!மக்கள் திலகம் வாழ்க’ என்று கூப்பாடுபோட்டுக்கொண்டே எம்.ஜி.ஆரை நெருங்கி தொப்பியை தட்டி விடப்பார்த்தேன்.முடியவில்லை.குனிந்து அவர் குண்டியில் நல்லா நறுக்குன்னு கிள்ளி விட்டேன்..” என்று பெருமையாக சொல்பவன்.
மேடைகளில் எம்.ஜி.ஆரைக் குறிப்பிடும்போது ம.கோ.ரா என்று பெயரை மொழிபெயர்த்து –மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் -“ம.கோ.ரா பாமர மக்களை எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்?’” என்று சவால் விடுபவன்.

பிராமண துவேசம் குருவி மண்டையனுக்கு அதிகம். எதிரே யாராவது பிராமணரைப் பார்த்தால் சைக்கிளை மேலே ஏற்றி விட்டு ’ப்ரேக் பிடிக்கல சாமி’ என்று சொல்வான்.

தேம்பாவணி ஒட்டிய 3வது தெருவிலிருந்து நான் வெளியே வருகிறேன்.ஒரு பிராமண வாலிபன் குடுமி வைத்துக்கொண்டு என்னிடம் ’கோச்சடைக்கு பஸ் இப்ப இருக்றதா?’ என்றான். எனக்கு அவனைப் பார்க்க அம்மாவந்தாள் அப்பு ஞாபகம் வந்தது.அதே நேரம்”வீ..வீ..” என்று குருவிமண்டையனின் விசில் சத்தம். திரும்பிப்பார்க்கிறேன்.ஐந்தாவது தெருவிலிருந்து சைக்கிளில் வெளி வந்த குருவிமண்டையன் “துரை!அவனை நிறுத்தி வை.விட்டுடாத..” என்று சைகை செய்கிறான்.

அதே நேரம் அந்த ஸ்டாப்பில் ஒரு பஸ் வந்து நின்றது. நான் பதற்றத்துடன் அந்த பிராமண இளைஞனை “ இதில உடனே ஏறு” என்றேன். அவன் “இல்லை…இது கோச்சடை போகுமா” என்று இழுக்கும்போதே “முதல்ல ஏறு சாமி.அரசரடி போய் கோச்சடை மாறிக்க..சீக்கிரம் ஏறு” என்று வலுக்கட்டாயமாக நகர ஆரம்பித்த பஸ்சில் ஏற்றி விட்டேன்.

வேகமாக சைக்கிளில் வந்த குருவி மண்டையன் என்னை வெறுப்புடன் பார்த்து “ ச்சீ தமிழ் இன துரோகி..ஆரிய அடிவருடி.. ஒரு ரம்மியமான மாலைப்பொழுதை கெடுத்து விட்டாயே..” என்று பொருமினான்.”பாப்பானையும் பாம்பையும் கண்டா உடனே அடிக்கனும்ப்பா” என்றான் அந்த கறுப்புச்சட்டைக்காரன்.

1977 தேர்தலில்  திமுகவிற்கு ஓட்டு கேட்க புது நுட்பமான யுக்தி கையாண்டான்.

ஹார்வி நகர்,சோமசுந்தரம் காலனி போன்ற இடங்களில் இரவு நேரம் கொலாப்புட்டன்,ஆட்டுமூக்கன்,ஒத்தகாதன்,தொல்லை ஆகியோருடன் சைக்கிளில் நுழைந்து “ டேய் ஆரியப்புண்ட மகன்களா.” என்று ஒரு சவுண்டு. உடனே வீட்டு விளக்குகள் அணைக்கப்படும்.கதவுகள் சாத்தப்படும்.அந்த வீடுகளில் உள்ள அத்தனை காதுகள் மட்டும் தீட்டப்படும்.

 ”ஒழுங்கா எம்.ஜி.ஆருக்கு ஓட்டுப்போட்டுடங்கடா. தி.மு.கவுக்கு ஓட்டுப்போட்டீங்கன்னா ஒருத்தன் கூட உயிரோட இருக்க மாட்டீங்கடா. டே ஆரிய நாய்களா.. ஒழுங்குமயிரா அண்ணாதிமுகவுக்கு ஓட்டுப்போடலீன்னா அழிஞ்சே போவீங்கடா.ங்கொம்மால ஓக்க.. எம்.ஜி.ஆர் வாழ்க! கோத்தா புண்டையில ஓக்க..அண்ணாதிமுக வாழ்க!”
........

http://rprajanayahem.blogspot.in/2012/07/carnal-thoughts-34.html

 

3 comments:

  1. யார் அந்த குருவி மண்டையன் ? இப்போதும் இருக்காரா??

    ReplyDelete
    Replies
    1. He is no more. The irony is all his life he has besmirched the brahmins but he was very oftendishonoured by the other caste who are dominant in Madurai

      Delete
  2. அற்புதமாக எழுதுகிறீர்கள் :-)பழைய தகவல்களை சுவைபட தருகிறீர்கள் :-)

    amas32

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.