Share

Oct 28, 2012

Catcher in the rye

J.D.Salinger's Catcher in the rye
 ஜான் லென்னனை சுட்டுக்கொன்றவன் அப்போது படித்துக்கொண்டிருந்த புத்தகம் -Catcher in the rye
 முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பினார்! சுட்டவன் கையில் இருந்ததும் இந்த Catcher in the rye நாவல் தான்!
ஜே.டி.சாலிஞ்சர் எழுதிய ஒரே நாவல். 1951ல் வெளி வந்தது.லட்சக்கணக்கில் இன்னும் விற்றுத்தீரும் நாவல்.
There is a marvellous peace in not publishing என்பார். I write for myself and my own pleasure!
அமெரிக்க நாவல் ரொம்ப பிரபலமாகும்போது திரைப்படம் ஆகாமலிருந்ததுண்டா? அது இந்த நாவல் தான்! ’நாவலின் நாயகனாக நான் தான் நடிக்கமுடியும்’ என்று எழுதியவர் பிடிவாதம் பிடித்தால் என்ன தான் செய்ய முடியும்?

ஹோல்டன் கால்ஃபீல்ட் கதை நாயகன். மெண்டல் ஹாஸ்பிடலில் சிகிச்சை
பெறுகிறவன்.


Dont ever tell anybody anything.If you do, you start missing every body.

கால்ஃபீல்ட் மாசிலா குழந்தைமையின் இனிமையான உலகில் இருக்க விரும்புபவன்.ஆனால் பெரியவர்களின் வேஷம் நிறைந்த குரூர உலகை கண்டு பயப்படுபவன்.An Icon for teenage rebellion.

To be a Catcher in the rye means to save children from losing their innocence.
 கால்ஃபீல்ட் செங்குத்தான மலையுச்சியில் விளிம்பின் அருகே விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் காவலனாக தன்னைப் பாவிக்கும் ஒரு பதின்பருவத்தான். அவனுடைய வேலை மலை விளிம்பின் அருகே அதல பாதாளத்தில் விழுந்து விடாமல் குழந்தைகளை கவனமாக காப்பாற்றுவது. அதல பாதாளத்தில் குழந்தை விழுந்து விடும் முன் பிடித்துக்கொள்வது தான்.
 


1950 காலத்தையொட்டி நிகழ்கிற கதை.ஹோல்டன்  கால்ஃபீல்ட் மூன்று பள்ளிகளில் ஃபெயில் ஆகி நான்காவதாக பதினாறு வயதில்  பென்சி ப்ரெப் ஸ்கூலில் சேர்ந்தவன்.
 I have left schools and places I didn't even know I was leaving them.

I dont even know what I was running for- I guess I just felt like it.
In my mind, I'm probably the biggest sex maniac you ever saw.


ஜே.டி.சாலிஞ்சர் வாழ்க்கையில் நடந்த ஒரு காதல் பற்றி சொல்ல சார்லி சாப்ளினினுடைய  மாமனார் பற்றி சொல்ல வேண்டும். யூஜின் ஓ நீல் என்ற அமெரிக்க நாடகாசிரியர். புலிட்சர் விருது,நோபல் பரிசு வாங்கியவர்.
(The Reds (1981) படம்.வாரன் பீட்டி இயக்கி கதாநாயகனாக நடித்தார்.இதில் யூஜின் ஒநீல் கதாபாத்திரத்தை ஜாக் நிக்கல்சன் செய்தார்.)

 

இந்த யூஜின் ஒநீல் மகள் ஊனா ஓ நீல் தான் சாலிஞ்சரின் காதலி. ஊனா ஒநீலுக்கு நீண்ட கடிதங்கள் சாலிஞ்சர் எழுதியிருக்கிறார். 1941ல்  நூல் விட்டுக்கொண்டிருந்தார்சாலிஞ்சர்.ஆனால் சார்லி சாப்ளினை விதி வசமாக ஊனா ஓநீல் சந்திக்க நேர்ந்த பிறகு விதி விளையாடியது. சார்லி சாப்ளின் வாழ்வில் நடந்த  நான்காவது திருமணம் இந்த ஊனா ஒநீலோடு தான்!

 Oona Oneil - 1943.jpg
நான்காவது திருமணமா என்று ஏளனமாக எண்ணி விடக்கூடாது. இந்த திருமணம் தான் சாப்ளின் சாகும் வரை நிலைத்து நின்றது.(1943-1977) அது மட்டுமல்ல. இந்த ஓநீல் மூலம் சாப்ளினுக்கு எட்டு குழந்தைகள். இதில் முதல் மகள் 1965ல் வந்த டாக்டர் ஷிவாகோ படத்தில் ஷிவாகோவின் மனைவி டோன்யா வாக நடித்த ஜெரால்டைன் சாப்ளின்.

...............................3 comments:

  1. ராஜநாயஹம் சார், ஹாலிவுட் நடிகை Rebecca Schaeffer - The GodFather - III - இல் முக்கியமான பாத்திரம் ஒன்றில் நடிப்பதற்கு இவர் பரிசீலிகப்பட்டார். அந்நேரத்தில் Robert John Bardo என்பவனால் Rebecca பரிதாபமாக சுட்டு கொல்லப்பட்டார். கொலை செய்த Bardo கையில் அப்போது "Catcher in the Rye " நாவல் இருந்தது. பிற்பாடு அவர் நடிப்பதாக இருந்த பத்திரத்தில் Coppolo - வின் மகள் "Sofia coppolo " நடித்தார். The GodFather - I கிளைமாக்ஸ் சர்ச் காட்சியில் கைகுழந்தையாக வருவது Sofia தான்.

    ReplyDelete
  2. http://www.trendzrafik.blogspot.in/?m=1

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.