Share

Oct 9, 2008

வில்லன் -தமிழ் திரை

தமிழ் திரை நகைச்சுவை நடிகர்களை உலக தரத்துடன் கண்டது . ஆனால் வில்லன் நடிகர்கள் பற்றி அப்படி சொல்வதற்கில்லை .

காமடி ,வில்லன் நடிப்பு இரண்டிலும் கலக்கு கலக்கு என்று கலக்கிய எம் .ஆர் .ராதா , டி.எஸ் .பாலையா இவர்களை வில்லன் நடிகர் லிஸ்டில் சேர்க்க முடியாது.

ஆனால் ஐம்பதுகளில் வந்த பிற வில்லன்கள்

பி .எஸ் . வீரப்பா சரித்திர படங்களுக்கு பொருத்தமானவர் . நிஜமாகவே அப்படி படங்களில் அவர் பக்கத்தில் யாரும் நிற்க முடியாது .வஞ்சிகோட்டை வாலிபன் , மஹாதேவி , நாடோடி மன்னன் ஆகிய படங்கள் நல்ல உதாரணங்கள் .ஆனால் சமூக படங்களுக்கு சற்றும் பொருந்த மாட்டார் .

நம்பியார் நாற்பதுகளில் காமெடியன் , ஐம்பதுகளிலிருந்து வில்லன் .

மனோகர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து வில்லன் ஆனவர் .

சிறு சிறு பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பின் வில்லனாக நடிக்கும் போதே கதாநாயகனாகவும் நடித்து கடைசியில் கோமாளி யானவர் அசோகன் .

நம்பியார் ,அசோகன் , மனோகர் மூவருமே ரொம்ப stereo டைப் . கொஞ்சமும் நடிப்பு பாணி மாறியதே கிடையாது .

அசோகன் மிகையான பாவ்லா நடிப்பு தான் . காட்டு கத்தல் . கதாநாயகனாக பார்க்க சகிக்காது . குணச்சித்ர நடிப்பில் அசத்தியதாக பலரும் அபிப்பராயபடுவார்கள் ."உயர்ந்த மனிதன்" படம் இப்போது பார்த்தால் அவர் நடிப்பு சிரிப்பை உண்டாக்குகிறது . ஆனால் பாவ்லா வேலை செய்து பெரிதாய் நடிப்பது போல மிரட்டுவார் . பல நல்ல டி .எம்.எஸ் பாடல்கள் இவருக்கு அமைந்தது .ஒரே பாணி யில் நடித்தவர் ." நான்" பட வில்லன் ரோல் தான் பின்னால் இவர் காமெடி பண்ண உதவியது . இரவும் பகலும் படத்தில் சொந்த குரலில் பாடிய" ஏறந்தவனை சுமந்தவனும் எறந்துட்டான் " ஏகாந்தமான சூழலில் கேட்டால் மனதை தொடும் தத்துவபாடல் .

நாடக காவலர் ஆர் .எஸ் . மனோகர் பாவம் தோள்களை குலுக்கிக்கொண்டு வசனம் ஒரே பாணியில் பேசிக்கொண்டு வாழ்நாளை ஓட்டியவர் . ஒ .ஏ .கே . தேவர் கணீரென்ற குரல் .ஆனால் ஜெய் சங்கர் பட வில்லன் ரோல் தான் பெரும்பாலும் . சரித்திர படங்களிலும் பெரிய சாதனை செய்ய முடியாதவர் .எஸ்.வி ராம தாஸ் இரண்டாம் தர கற்பழிப்பு நடிகர்.

பின்னால் வந்த ஸ்ரீகாந்த் பாவம் அவரும் பெரிய வில்லன் கிடையாது .

எம் .ஆர் ராதா தான் தனி பாணியில் வெளுத்து வாங்கியவர் . இவரிடம் ஒரு வக்கிரம் sadismஅது வேறெந்த வில்லனிடமும் அந்த காலத்தில் கிடையாது .

அதனால் தான்இப்போதும் காலத்தை வென்ற கலைஞன் .

தமிழில் எம்.ஆர் .ராதாவுக்கு பின் வந்த உண்மையான வில்லன் சத்யராஜ் .ராதாவிடம் இருந்த வக்கிரம் இவரிடம் மட்டுமே இயல்பாய் அமைந்தது.

நாசர் ஒரு நல்ல வில்லன் தான் . வில்லன் மட்டுமல்ல .நல்ல நடிகர் .

அப்புறம் , ரகுவரன் பிரகாஷ் ராஜ் நல்ல பிரமாதமான வில்லன்கள் .

ரகுவரன் ,பிரகாஷ்ராஜ் போல நம்பியாரோ , அசோகனோ , மனோகரோ திறமை காட்டி நடித்ததே இல்லை .

ரகுவரன் , பிரகாஷ் ராஜ் இருவரும் நல்ல குணசித்திர நடிகர்கள் கூட .

ரகுவரன் பற்றி இன்னும் இரண்டு வார்த்தை .

தமிழ் திரையை பொறுத்தவரை கமல் ஹாசன் , ரகுவரன் நடிப்பில் ஜீனியஸ் வகையை சேர்ந்தவர்கள்.

ரகுவரன் - எம் ஆர் ராதா , எஸ் .வி ரங்கா ராவ் போல Scene stealer!

இந்த வகையிலும் நம்பியார் ,அசோகன் ,மனோகர் அடிபட்டு போகிறார்கள்.

ரகுவரன் , பிரகாஷ் ராஜ் இருவருக்கும் உரை போட காண மாட்டார்கள் இந்த மூன்று அந்த கால வில்லன்களும் .

ராதா பாணியை காமெடியில் விவேக் முயன்று பார்த்து வெற்றி பெற்று விட்டார் .

மணிவண்ணன் கூட ராதா பாணி காமெடி தான் .

ரொம்ப நாளைக்கு பிறகு காமெடி தமிழில் சரியாக இப்போது சில வருடம் முன் அமைந்தது .

வடிவேலு - விவேக் கடந்த பத்து வருடமாக காமெடி வெடி வெடித்ததில் காணாமல் போன சிரிப்பு நடிகர் யார் தெரியுமா .

வடிவேலு விவேக் ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போய் விட்ட காமெடியன்

ஜனக ராஜ் !

வில்லனுக்கும் காமெடிக்கும் என்றுமே உதாரண புருஷர்

எம்.ஆர் .ராதா !

12 comments:

 1. Worthwhile Analysis!

  ReplyDelete
 2. வணக்கம் RPR அவர்களே,

  உங்கள் பதிவுகளை பார்க்க நேற்று தான் சந்தர்ப்பம் கிடைத்தது.மூன்று மணி நேரம் இடைவிடாமல் அத்தனை பதிவுகளையும் படித்துவிட்டேன்.ஒரு மிக சுவாரஸ்யமான மனிதரின் எண்ணங்களை படிப்பது மிக்க மகிழ்ச்சி.

  எழுத படிக்க தெரியாத ராதா ரத்தகண்ணீரில் மேல் நாட்டு மனிதர்களின் உடல் அசைவுகளை பிரமாதமாக வெளிப்படுத்தியிருப்பார். மேடையில் இரு வரி மட்டுமே பேசிய பின் காஃபி என்பார்.

  ராதாவின் தெனாவெட்டு சரியான நேரத்தில் வரும் வசனங்களில் தெரியும்.பாகப்பிரிவினை படத்தில் ஒரு கை ஊனமுற்றவராக சிவாஜி நடித்திருப்பார்.அவர் வெளியே செல்லும் பொது ராதா எங்கேடா போறே? என்பார் தனக்கே உரிய குரலில். கோவிலுக்கு என்று சிவாஜி சொல்லியவுடன், ஒத்த கைய வைச்சுகிட்டு கோவிலுக்கு போய் சாமிக்கு சலாமா போடப்போறே என்பார் ராதா.

  ReplyDelete
 3. Nice!

  I see you started Google Adsense! Great!

  ReplyDelete
 4. vivek can fill the vaccum created by radha

  ReplyDelete
 5. RP,

  Actor Nasser also did his part well in doing villain role (Nobody can forget his role in Devar Magan). Of late he is doing good in character roles also (Like in Virumandi)...

  Satheesh.

  ReplyDelete
 6. thanks premji,

  gypsy ,

  M.R.Radha can never be replaced as he is a multi-faceted personality.

  ReplyDelete
 7. Satheesh.

  Ofcourse, you are correct.

  ReplyDelete
 8. //ஜனக ராஜ் !/

  wow!!!! thanks for mentioning my all time favorite comedian.

  What a body language he had?

  Selva kumar

  ReplyDelete
 9. நல்ல பதிவு வாழ்த்துக்கள்;

  அழுக்கறத் தினம் குளித்தும்

  அழுக்கறாத மாந்தரே

  அழுக்கிருந்தது அவ்விடம் ?

  அழுக்கு இல்லாதது எவ்விடம் ?

  அழுக்கிருந்த அவ்விடத்தில்

  அழுக்கறுக்க வல்லீரேல்

  அழுக்கில்லாத சோதியோடு
  அணுகி வாழலாகுமே!''---------சிவவாக்கியார்

  ReplyDelete
 10. M.R Radha - செம செம
  we can't find such a actor in the whole universe itself
  the way he speaks, body language his slang
  வாயிப்பே இல்லை
  எம் ஆர் இராதா நீ
  நடிப்பில் ஒரு மாதா

  ReplyDelete
 11. Yes M.R. Radha is peerless villain. In Bale Pandiya he played excellent double role.

  Coming to Janakaraj, where is he nowadays ?

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.