Share

Oct 13, 2008

வித்வத் வேறு பிராபல்யம் வேறு

முதல் முதலாக 'அழைத்தால் வருவேன் 'படத்திற்காக வெளிப்புற படபிடிப்புக்காக பெங்களூர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் . நாங்கள் டெக்னிசியன்கள் ஒரு நாற்பது பேர் ரயிலில் . நான் உதவி இயக்குனர் . திரையுலகில் என் முதல் பயணம் . ஒரு மூன்று பேர் எங்கள் முன் அமர்ந்திருக்கிறார்கள் . எங்களிடம் பேசவே இல்லை. ஏழுமணி நேரம் ஆகும் போது பெங்களூர் கண்டோன்மென்ட் ஸ்டேஷன் வந்த போது ஒருவர் எங்களிடம் கேட்கிறார் ' நீங்கள் எல்லோரும் சினிமாக்காரர்களா ?'
மற்றவர்களில் ஸ்டில் போடோக்ரபர் ' ஆமாம் ' என்கிறார் . ஒரு அசோசியட் இயக்குனர் ' ஏன் என்ன விசயம் ? ' என்கிறார் . அந்த மூவரில் ஒருவர் ' நான் ஒரு ஜோஷியம் சொல்லட்டுமா
எல்லோரும் ஆர்வமாகி விட்டனர் .
ஹேர் ட்ரெசர் " சொல்லுங்க சொல்லுங்க "
அவர் சொல்கிறார் ' நாங்க முசல்மான்கள் . சாயபுமார் . திருவல்லிகேணியிலே மட்டன் கடை வைத்திருக்கிற கசாயு தான் நான் . ஆனாலும் சொல்றேன் .' என்றவர் என்னை சுட்டினார்
' இந்த பையன் சினிமாலே பெரிய ஆளா வருவான்.
பெரிய ஹீரோ நடிகரா வருவான். இன்ஷா அல்லா !'
'எப்படி சொல்றீங்க '
'நான் ஒரு ஏழுமணி நேரமா கவனிச்சேன் . ஏனோ எனக்கு உறுதியாக தோன்றுகிறது '

என்னிடம் பிரியத்துடனும் கனிவுடனும் சொல்கிறார் .
' நீ பெரிய ஆளா வரும்போது இந்த கசாயுவை ஒரு தடவையாவது நினைப்பாய். இன்ஷா அல்லா !'

1 comment:

  1. தாங்கள் செய்துங்கநல்லூர் ஆள் என்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. செய்துங்கநல்லூர், கருங்குளம், ஸ்ரீவை. தென்திருப்பேரை குறித்தும் எழுதுங்களேன்.

    திரை உலகை பற்றி எழுதும்போது தாங்களாவது பெண்களை நடத்தும் விதம் பற்றி எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்தேன். தாங்களும் எல்லாரையும் போல (sujaatha, balakumaran, s.ramakrishnan, jeyakaanthan..) அதை தவிர்த்து மற்ற எல்லாம் எழுதி உள்ளீர்கள்.

    My concern is why heroine or female actress should share her body to get a chance. Cant we stop this practice at least in this internet age?

    நன்றி மற்றும் வாழ்த்துக்களுடன்

    குப்பன்_யாஹூ

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.