Share

Feb 24, 2026

வேடிக்க - 59

வேடிக்க - 59

இப்போது தான் தெரிகிறது. எதையும் தேட வேண்டாம். அவ்வப்போது வருகிறதைப் பார்த்துக் கொண்டேயிருக்கத்
தோன்றுகிறது 
- தி. ஜானகிராமன்

Go with the flow
- R.P. ராஜநாயஹம் 

பஞ்ச பாண்டவர் எத்தனை பேர் என்பது கேள்வி.
ஒருத்தன் ’கட்டில் காலு’ போல ’மூனு பேர்’னு சொல்லி ’ரெண்டு விரலை’ நீட்டி ஆட்டிக்காட்டினான்.
இதில் எத்தனை தப்பு?
அவன் விளக்கமாக ’கட்டில் கால்’
எனும்போதே தப்பு.
நாலுன்னு சொல்வான்னு பாத்தா கட்டில் காலு போல மூனு பேர் என்கிறான்.
அதை இன்னும் விரிவாக தன் இரண்டு விரல்களை விரித்து செயல்முறை விளக்கம்.
அப்ப ரெண்டு பேர்ங்கிறான்.
நாட்டில் பல பல Citizenship act ’பப்பள பள பள’ விளக்கங்களை கேட்கும்போது
இந்த 'கட்டில் கால் போல மூனுபேர்னு சொல்லி ரெண்டு விரலைக்காட்டுறது' தான் ஞாபகத்துக்கு வருகிறது.

மக்கள் பாவம்.
'ஆடு வளக்கறவன நம்பாது.
அறுக்கறவன தான் நம்புமாம்'னு சொலவடை.

கொஞ்சம் விபரமானவர்களாக தங்களை நினைத்துக்கொள்ளும் படித்த நடுத்தர வர்க்கத்தவர்களுக்கு ’வேடிக்க பாக்கற வேல’ தான் அதிகபட்ச சாத்தியம்.

இவர்களுக்கு ஓஷோ சொல்லியிருக்கிற விஷயம் ஒன்றை சுட்டிக்காட்டினால் மேலும் குற்றவுணர்வின்றி விச்ராந்தியாக இருப்பார்கள்:
” நீ எதுவும் செய்ய வேண்டாம்
என்று அஷ்டவக்கிரர் கூறுகிறார்.
எது நடந்து கொண்டிருக்கிறதோ அது நடந்து கொண்டிருக்கிறது.
அதனோடு நீ ஐக்கியமாகி விடு.
சும்மா பார்த்துக்கொண்டிருப்பதன் மூலம் சாட்சித்தன்மையில் இருப்பதன் மூலம்
நீ முக்தி பெறுகிறாய்.
எந்தப்பயிற்சி முறைகளிலும் சிக்கி விடாதே.”

Even if you feel guilty, go with the flow.
In the future, the priest is not needed,
neither is the psychoanalyst needed.
Both those professions are anti-human;
But they can go
only if man is freed of guilt;
otherwise they cannot go.
Even if you feel guilty, go with the flow.
- Osho

அடைய வேண்டிய அந்தஸ்தை இழந்து, தகுதிக்கேற்ற அங்கீகாரத்தையும் இழந்து பொருள், பொன் இழந்தவர்கள்
தங்களைப் பற்றிய சுய தரிசனமாக
‘வலிமையின்றி சிறுமையில் வாழ்வான் காலம் வந்து கை கூடுமப்போதிலோர் கணக்கிலே புதிதாக விளங்குவான்’ (கண்ணன் என் அரசன்) என்ற பாரதியின் வரிகளை வாய்விட்டுச்சொல்லிக்கொள்ளலாம்.

பொறுமையா உன் வேலைய செஞ்சிக்கிட்டே இரு.
உன் மதிப்பு புரியும்போது பெரும்புகழ் கிடைக்கும்.
”கண்டதெல்லாம் கடிய விலையானால் இந்திராணிப் பட்டு
இருந்த விலையாகும்.”


’ஒவ்வொரு நாள் காலையிலும் நம்பிக்கைகளை அரற்றியவாறு அறுந்து தொங்கும் மனதின் நாண்களை இழுத்துக் கட்டினாலும் மாலைக்குள் அது தொய்ந்து போய்விடுகிறது’ என்று சுந்தர ராமசாமி ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலில் சொல்லும் யதார்த்தம் இன்றைய லோகாயுத சிக்கல்கள் மூலம் தெளிவுபடுகிறது.


வீட்டு வாசலில் கோலம் போடுவதற்கு கூட
சாஸ்திரம் இருக்கிறது,
போடுகிற கோலம் தெற்கு நோக்கி முடியக்கூடாதாம்.
ஆனால் இன்று தலையாய முக்கியப்பிரச்னைகளில் கூட ’அள்ளித்தெளித்த அவசரக்கோலம்’.

கோலம் விஷேச அரசியல் அந்தஸ்து பெறுகிறது.
’புளித்த மாவு’ கூடத்தான் இலக்கிய அந்தஸ்து அடைந்தது.

மிச்சல் ஃபூக்கோ சொல்வதை சொல்லி முடிக்கலாம்: “ஒன்றை எழுத ஆரம்பிக்கும்போது
அதன் முடிவில் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால்
அதை எழுதுவதற்கான தைரியம் தான்
உங்களுக்கு வந்து விடுமா?
முடிவு என்னவென்று தெரியாமல்
 இருக்கும்போது தான்                                                     
 இந்த விளையாட்டுக்கு அர்த்தமுண்டு.”

......

மீள் பதிவு 


Feb 19, 2026

தாழன் சைஸ் சரியில்ல

தாழன் சைஸ் சரியில்ல 

https://www.facebook.com/share/v/182qXFc6oW/

எம்ஜிஆரின் அமெரிக்கையான நடிப்பு.

பழைய படமாக டூரிங் தியேட்டரில் பார்க்கும்  "மதுர தர டிக்கட்" ரசிகர்கள் 
அசோகன் விரல் சுண்டும் ரீயாக்ஸனுக்கு 'ஹீரோவிற்கெதிரான வில்லன் மைண்ட் வாய்ஸ்' ஆக கோரஸாக கூப்பாடு 
" தாழன் சைஸ் சரியில்ல"

Feb 12, 2026

R.P. Rajanayahem 205th episode


R.P. ராஜநாயஹம்
'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 3ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

வருகிற ஞாயிற்றுக்கிழமை
15.02.2026
205 வது நிகழ்ச்சி

https://www.facebook.com/share/p/17sEQ8g7Bk/

Feb 10, 2026

தீப்பொறி ஆறுமுகம் வேடிக்க - 57


தீப்பொறி ஆறுமுகம் 
- R.P. ராஜநாயஹம் 

தீப்பொறி ஆறுமுகம் இரண்டு விஷயங்களை மறைக்கிறார். காமராஜர் காலத்தில் ஸ்தாபன காங்கிரஸில் பேச்சாளராக தீப்பொறி இருந்த விஷயம். மற்றொன்று 15 வருடங்களுக்கு முன் அதிமுகவுக்கு தாவியதைப் பற்றி.. காலம் காலமாக அவர் தி.மு.கவிலேயே இருந்து கொண்டு இருப்பது போல இந்த பேட்டிகளில் பேசியிருக்கிறார்.

ஸ்தாபன காங்கிரஸில் தீப்பொறி பேச்சாளராக இருந்த போது “பெருந்தலைவர் எப்போதும் என்னைப் பார்க்கும்போதெல்லாம் “டேய்…பேச்ச கொறை. அடாவடியா பேசாதேன்னு திட்டறாரு”ன்னு பேசியதை அறிந்தவர்கள் இன்றும் உண்டு.

அவர் அதிமுகவுக்கு தாவுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் இரவு திருச்சி உறையூரில் “என் தலைவன் கலைஞர்” என்று உரக்கக்கூறும்போதெல்லாம் தன் தலையை இரண்டு கைகளால் அழுந்தப்பிடித்தவாறு கூப்பாடு போடுவதை நான் கேட்டிருக்கிறேன். அப்படி அவர் தலையைப் பிடிக்கும்போது இந்த வார்த்தைகளைச் சொல்வது ஏதோ மலையைப் புரட்டுகிற விஷயமாக்கும் என்ற ஒரு தோரணையும் பிரயாசையும் தெரியச் செய்வார்.

ஜூவி முதல் பேட்டியில் ஸ்டாலின் வந்து பார்ப்பார் என்கிறார்.
அடுத்த பேட்டியில் ஸ்டாலின் வந்து பார்த்து பொருளுதவி செய்த விஷயம் தெரிய வருகிறது.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராய் இருந்த காலத்தில் தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் போக மற்ற பொழுது போக்குகளில் தீப்பொறி ஆறுமுகம் பேச்சும் முக்கிய இடம் பெற்று இருந்தது.

தீப்பொறியார் ஒரு ஊரில் பேசுகிறார் என்றால் கடையை சற்று முன்னதாகவே அடைத்து விட்டு வியாபாரிகள் மீட்டிங்கிற்கு அவசர,அவசரமாக ஓடுவார்கள். இரவு ஒன்பது மணிக்கே ஊரில் பரபரப்பு தெரியும். அன்று சினிமா தியேட்டர்களில் செகண்ட் ஷோவுக்கு கூட்டம் குறைவாகத்தான் இருக்கும்.
எல்லா ஊர்களிலும் தீப்பொறி பேச்சுக்கு நல்ல கூட்டம் கூடும்.

எம்.ஜி.ஆரை கிழித்த கிழி….

1977ல் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக ஆகியிருந்த போது…
அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் இந்தியா வந்து விட்டுப்போனார். ஒரு வேளை சென்னைக்கு கார்ட்டர் வர நேர்ந்திருந்தால்… என்ன நடந்திருக்கும்? என்று தீப்பொறி காட்சிப்படுத்திய விதம்!

கார்ட்டர், இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் இருவரும் மீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்து இறங்குகிறார்கள். எம்.ஜி.ஆர் வரவேற்கிறார். மொரார்ஜி தமிழக முதலமைச்சரை கார்ட்டருக்கு அறிமுகப்படுத்துகிறார். எம்.ஜி.ஆர் அமெரிக்க ஜனாதிபதியுடன் கைகுலுக்குகிறார்.

கார்ட்டர்,தேசாய்,எம்.ஜி.ஆர் மூவரும் ஒரே காரில். கார் வெளியே வருகிறது. அங்கே எதிரே எம்.ஜி.ஆர் நடித்த ’மீனவ நண்பன்’ கட் அவுட். லதாவின் தொடையில் தன் தலையை வைத்திருக்கும் எம்.ஜி.ஆர்!

கார்ட்டர் அந்த கட் அவுட்டை பார்க்கிறார். காரில் உட்கார்ந்திருக்கும் எம்.ஜி.ஆரைப் பார்க்கிறார். கட் அவுட்டைப்பார்க்கிறார். எம்.ஜி.ஆரை உற்றுப்பார்க்கிறார். மீண்டும் கட் அவுட் பார்க்கிறார். காரில் உட்கார்ந்திருக்கும் எம்.ஜி.ஆரைப் பதற்றத்துடன் பார்க்கிறார். எம்.ஜி.ஆர் புன்னகைக்கிறார். மொரார்ஜி நெளிகிறார். பிரதமருக்கு தர்மசங்கட நிலை. கார்ட்டர் அதிர்ச்சியுடன் மொரார்ஜியிடம் கட் அவுட்டை காட்டி காரில் உட்கார்ந்திருக்கும் எம்.ஜி.ஆரையும் விரலால் சுட்டி கேட்கிறார்: ’என்ன இது?! அவன மாதிரியே இவன் இருக்கிறான்! இவன மாதிரியே அவன் இருக்கிறான். அவன மாதிரியே இவன்! இவன மாதிரியே அவன்!’
பெருமையான புன்னகையுடன் காரில் உட்கார்ந்திருக்கும் எம்.ஜி.ஆரை எரிச்சலுடன் பார்த்துவிட்டு பாரதப் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியிடம் சொல்கிறார் : ’இவன் தான் அவன்…. அவன் தான் இவன்….’

கார்ட்டர் காறித்துப்பியிருக்க மாட்டானா? நல்ல வேளை அவன் தமிழ் நாட்டுக்கு வரல!

இதை வார்த்தைகளால் எப்படி எழுதினாலும் ஆறுமுகம் இதைச் சொல்லுவதும், செய்யும் கொணஷ்டைகளும் நேரில் பார்த்தால் தான் புரியும். எழுதியெல்லாம் விளக்க முடியவே முடியாது.

மேட்டூர் டேமில் தண்ணீர் முழுவதுமாக வற்றிப்போய் விட்டதை தீப்பொறி விளக்குவது – “ டேம்ல தண்ணீ கொறஞ்சி..கொறஞ்சி.. 100 அடி… அதுவும் கொறைஞ்சி 80 அடி.. அப்புறம் 50 அடி.. 30 அடி உயரம் தான் தண்ணி… அதுவும் வத்தி 10 அடி..5 அடின்னு ஆகி கடைசியில டேம் எம்.ஜி.ஆரா ஆயிடுச்சி.. டேய்.. டேம் எம்.ஜி.ஆரா ஆயிடுச்சி.. புரிஞ்சா புரிஞ்சுக்க..புரிஞ்சா புரிஞ்சிக்க… புரியலன்னா பக்கத்தில ஒக்கார்ந்திருக்கிறவன கேட்டுத் தெரிஞ்சிக்க..”

’எம்.ஆர்.ராதா சுத்தமா வேல செய்யத்தெரியாதவன்…அரை குறையா…….அவன் மட்டும் சரியா இவன் தொண்டயில போட்டிருந்தான்னா எவ்வளவு நல்லாயிருந்திருக்கும்! தமிழ் நாடு தப்பிச்சிருக்கும்.’

(ஒரு விஷயம். எம்.ஆர் ராதா சிறையில் இருந்த போது ராதாவின் மகன் எம்.ஆர்.ஆர்.வாசு ரத்தக்கண்ணீர் நாடகம் போடுவார். தி.மு.கவில் உறுப்பினராக இருந்த வாசு ரத்தக்கண்ணீர் வசனம்பேசும்போதே சொல்வது: ’சுடத்தெரியாதவனெல்லாம் சுட்டுப்புட்டு உள்ள போய் ஒக்காந்துகிட்டான்!’)

அ.தி.மு.கவிலும் மதுரை லோக்கல் பேச்சாளன் தீப்பொறிக்கு மதுரையிலேயே கொடுத்த பதிலடி: “ டேய்! தீப்பொறி.. பாவம்டா நீ… நீ பாட்டுக்கு மீட்டிங்,மீட்டிங்னு ஊர் ஊரா போயிடுற..ஒன் பொண்டாட்டிய பக்கத்து வீட்டு கோனான் டொல்த்திக்கிட்டு இருக்கான் அது தெரியுமாடா உனக்கு?!”

இன்று விக்கிரகங்களாக ஆகி விட்ட இளையராஜா, ரஜினி காந்த் பற்றியெல்லாம் மிக ஏளனமான தொனியில் தான் தீப்பொறி பேசுவார்.
“ ’ஏய்..ஆத்தா.. ஆத்தோரமா வாறியா…’ டேய் ஆத்தாளயே ஆத்தாரமா வான்னு கூப்புடுறியேடா …….உங்கோத்தாளயெ கூப்பிடிறியெ…நீ விளங்குவியா..”

ரஜினிய ‘இந்த மெண்டல் பய பேச்ச, நடிப்ப படத்துல எப்படிடா ரசிக்கிறீங்க..’
’எனக்கு ஒரு ஆச.. இந்த மெண்டல் பய ரஜினிக்கும், கொன்னவாயன் நெடுமாறனுக்கும் (பழ.நெடுமாறன்) பேச்சி போட்டி வைக்கணும்..ரெண்டு பயல்ல எவன் ஜெயிக்கிறான்னு பாக்கணும்.’

இடது கம்யூனிஸ்ட் பி.ராமமூர்த்தி கால் ஊனமுற்றவர். அதிமுக முசிறிபுத்தன் வீல் சேரில் தான் இருப்பவர்.
“ எனக்கு ஒரு ஆச… இந்த பி.ராமமூர்த்திக்கும் முசிறிபுத்தனுக்கும் ஓட்டப் பந்தயம் வெக்கணும்.. எவன் ஜெயிக்கிறான்னு பாக்கணும்”

முசிறி புத்தன் கொந்தளித்து அதிமுக மேடையில் “ தீப்பொறி ஆறுமுகம் என் வீட்டுக்கு வந்தப்ப வெள்ளி டம்ளர்ல பால் கொடுத்தோம்…குடிச்சான்.. டம்ளரை காணல… திருடிட்டுப்போயிட்டான். திருட்டுப்பய..”
இதற்கு தீப்பொறியின் பதில் “ நான் முசிறிபுத்தன் வீட்டுக்குபோனது நிஜம்.. பால் குடிச்சதும் நிஜம்…பால் குடிச்சேன்…பால் குடிச்சேன்.. ஆனா டம்ளர்ல இல்ல… டம்ளர்ல இல்ல..டம்ளர்ல இல்ல! புரிஞ்சுக்க..கூட்டத்தில இருக்கிறவன் புரிஞ்சா புரிஞ்சிக்க… புரிஞ்சா புரிஞ்சிக்க… இல்லன்னா பக்கத்தில இருக்கிறவன கேட்டுத் தெரிஞ்சிக்க..உங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓய்ஞ்சி போயிடுவன்டா”

சினிமாக்காரர்கள் யாரையும் பற்றி நையாண்டி தான்.
விசு படங்கள் “மணல் கயிறு”, ”குடும்பம் ஒரு கதம்பம்” வந்திருந்த நேரம்.
”இப்ப ஒர்த்தன் வந்திருக்கான்யா..! விசு… நல்ல வேளை! அவன் பேரு ’குசு’ இல்ல..!”

மக்வானா மத்திய அமைச்சராயிருந்தவர். அவர் பெயரை தீப்பொறி சொல்லும்போது ”மக்வானா, மக்குவானா, நக்குவானா, நக்குவானா”

காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்று ஒரு கட்சியை குமரி அனந்தன் நடத்திக்கொண்டிருந்தார். கா.கா.தே.கா!
குமரி அனந்தன் கட்சிப்பெயரை பழைய சினிமா பாட்டாகத்தான் ஆறுமுகம் பாடுவார்! _ “ஈனா, மீனா, டீகா, காகா காகா தேகா, ஈனா, மீனா, டீகா! காகா காகா தேகா! (இந்த பொன்ன கண்டதும் போத உண்டாகுதே!)”

”இந்த கம்யூனிஸ்ட்காரன் இருக்கானே.. விஞ்ஞானி தகரத்தை என்னக்கி கண்டுபிடிச்சானோ அன்னக்கே…அன்னக்கே..அன்னக்கே தகரத்தை இப்படி நெளிச்சி..அப்படி நெளிச்சி கம்யூனிஸ்ட்காரன் உண்டியல கண்டு பிடிச்சுட்டான்யா.. உடனே உண்டியல ஆட்டி ஆட்டி குலுக்கி..” உண்டியல் குலுக்குவதை மேடையில் தீப்பொறி நடித்தே காட்டும்போது கம்யூனிஸ்ட்களே அடக்க முடியாமல் சிரிக்க வேண்டியிருக்கும்.

சட்ட சபையில் உறுப்பினராய் இருந்தார் பழ நெடுமாறன்.
கேரளாவுக்கு எருமை மாடுகள் கடத்தப்படுவதை பேசிய
நெடுமாறன் பற்றி ” சட்ட சபையில இவன்.. இந்த கொன்னவாயன் பேசறான் – ’கே…கே..ஏ…ரளாவுக்கு எ…எ..எ..எருமை மாட்ட… க..க..கடத்துறாங்கே..’ எரும மாட்டுப்பய… சட்டசபையில இதயாடா பேசுறது?”

மதுரை முன்னாள் மேயர் மதுரை எஸ்.முத்து பற்றி “ நான் அவன மதிக்கிறேன். முத்துக்கிட்ட எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.. தண்ணியடிக்க மாட்டான்…சிகரெட் கிடையாது.. சூதாட மாட்டான்.. பொம்பள விஷயத்துலயும் சுத்தமானவன். ஆனா ஒன்னு.. பக்கத்தில ஒர்த்தன் பாக்கெட்ல ஒரு பத்து ரூபா வச்சிருந்தான்னா எப்படியாவது அத அடிச்சிடுவான்.பத்து ரூபாய லவட்டாம விட மாட்டான். விடவே மாட்டான்.”

"ராஜீவ் காந்திய நல்லா கவனிச்சுப்பாருங்க..உத்துப்பாருங்க… சோன் பப்டி விக்கிறவன் மாதிரியே இல்ல!?"

ஜெயலலிதா ஓவர் கோட் போட்டிருந்த சமயத்தில் “ இடுப்புல தான பாவாட. ஆனா கழுத்துல பாவாடைய கட்டிக்கிற ஒரே பொம்பள ஜெயலலிதா தான்.”

இன்று கவுண்டமணி, வடிவேலு ஜோக்குகளை எப்போதும் பலரும் பேசி, நினைவு கூர்ந்து மகிழ்கிறார்கள் இல்லையா? அது போல அன்று நாகேஷ், சுருளிராஜன் ஜோக்குகளை உரையாடல்களில் நினைவு கூர்ந்து ரசிப்பது போல தீப்பொறி ஜோக்குகளும் திரும்பத்திரும்ப பேசி ரசிக்கப்பட்ட நிலை. Indecent, improper, bawdy pleasantries!
தீப்பொறி ஆறுமுகத்துக்கு நடிகர்களுக்கு ஈடான நட்சத்திர அந்தஸ்து இருந்தது.
…...

மீள் பதிவு

https://www.facebook.com/share/p/1DztdtL8SZ/


வெற்றி கொண்டான் வேடிக்க - 58


வெற்றிகொண்டான்
- R.P. ராஜநாயஹம் 

" LIVE IN SECLUSION. SHOW NO INTEREST IN POLITICS AND THE COMMUNITY.”
- EPICURUS

1940களில்எம்ஜியார் கதர் உடுத்தி காங்கிரஸ்காரராக, ருத்ராட்ச மாலை, நெற்றியில் திருமண் என்று இருந்தவர் தான்.
ஆனால் அவருக்கு பெரிதாய் அரசியல் ஆர்வம், ஈடுபாடு, நோக்கம் ஏதும் கிடையாது என எம் .ஆர் .ராதா சொல்வார். 

எம்ஜிஆருக்கு சினிமாவில் எப்படியாவது முன்னுக்கு வர ஆர்வம் இருந்தது .உடம்பை மிகவும் கவனமாக பேணுவதில் அக்கறை இருந்தது. மது,சிகரட் கிடையாது.

அப்போது மராட்டிய சிவாஜியாக எம்ஜியாரை நாடகத்தில் நடிக்க வைக்க வேண்டி பெரியார் விரும்பி சொல்லி விட்டாராம். எம்ஜியாருக்கு அரசியல் சாயம் பூசிக்கொள்ள விருப்பமில்லாததால் மறுத்து விட்டார். 
பின்னர் ஈ.வி . கே சம்பத் தான் சிவாஜியாக நாடகத்தில் நடித்தாராம்.
அதன் பின்னர் வி.சி.கணேசன் அந்த நாடகத்தில் சிவாஜியாக நடித்து பெரியார் வாயால் சிவாஜி கணேசன் என அழைக்கப்பட்டு பிரபலமாகி திரையுலகிலும் சிவாஜி கணேசன் ஆனார்.

எம்ஜியார் முதல் முறையாக முதல்வர் ஆனபோது நடந்த விஷயம்.
எம்ஜியார் தன் அரசியல் பிரக்ஞை ரொம்ப பழைமையானது என வலியுறுத்த வேண்டி ' அன்றைய தினம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, மகாத்மா காந்தி அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது, நானும் உண்ணாவிரதம் இருந்தேன் ' என என்னத்தையோ உளறினார். 

தீப்பொறி ஆறுமுகத்தோடு ஒப்பிட முடியாத ரொம்ப வித்தியாசமான விசேஷ தன்மை கொண்ட பிரமாத வக்கிர பேச்சாளர் வெற்றி கொண்டான். பேச்சு அடர்த்தியாக இருக்கும்.

உடனே வெற்றிகொண்டான் இதை தன் பாணி தாக்குதலுக்கு பயன்படுத்திக்கொண்டது இப்படி.
" குல்லாக்காரப்பய வாயத்தொறந்தாலே புழுகித்தள்ளுறான். காந்தியும் நானும் ஒண்ணா ஒரே மேடையிலே உண்ணாவிரதம் இருந்தேன்னு சொல்லுறாய்யா. இவன் பொய்யுக்கு அளவே இல்லாம போயிடிச்சே. நான் கூட நம்ம கோடம்பாக்கம் காந்தி கிட்டே " ஏலே, நீயாடா? உன்னோட குல்லாக்காரன் சேர்ந்து ஏதும் உண்ணாவிரதம் இருந்தானாடா?"ன்னு கேட்கிறேன்.அவன் பதறிப் போய் " சத்தியமா நான் இல்லே அண்ணே ..." ன்னு புலம்புறான். குல்லாக்காரப்பய மகாத்மா காந்தியாத்தான்யா சொல்றான்."

(காந்தியார் உண்ணாவிரதம் இருக்கிறபோதெல்லாம் நாடெங்கும் பலரும் அப்போது உண்ணாவிரதம் இருப்பார்கள் தான்.)

குல்லாக்காரப்பய.... குல்லாக்காரப்பய என்று எம்ஜியாரை கோமாளியாக சித்தரித்து வெற்றி கொண்டான் அப்போது கூட்டத்தை சிரிக்கவைத்து பலருக்கு வயிறே புண்ணாகி விடும்.

எம்ஜியார் திடீரென்று " நான் மன்றாடியார் பரம்பரை " என்றார். 
கலைஞர் கருணாநிதி தன் பதிலாக 
" ஆம். டெல்லியில் மன்றாடிய 
பரம்பரை" என்றார்.

அப்போது திமுக மேடைகளில் 
வெற்றி கொண்டான் செய்த கலாட்டா-
" நான் பக்தவத்சலத்தை பார்க்கப் போயிருந்தேன். அவர் அழுது கொண்டே சொன்னார்.
" இந்த குல்லாக்காரப்பய என்ன நிம்மதியா சாக விடமாட்டான் போல இருக்குப்பா.''

" ஏன்யா இப்படி கவலைப்படுகிறீர்கள் ?" என்று நான் கேட்டேன்.

பெரியவர் பக்தவத்சலம் விம்மிக்கொண்டே சொன்னார் 
" திடீர்னு குல்லாக்காரன் 'நான் முதலியார். பக்தவத்சலம் தான் எங்க அப்பா' ன்னு சொல்லிட்டா 
என்ன செய்யறது?"

தமிழக முதல்வர் ஆக இருந்த காலத்தில் பத்திரிகைகளில் கார்ட்டூனில் பக்தவத்சலத்தை குரங்கு போலவே வரைவார்கள்.ஜெயந்தி நடராஜனின் தாத்தா.

மோகன் குமாரமங்கலம் விமான விபத்தில் மறைந்த மறு நாள் மதுரை ஆரப்பாளயத்தில் நடந்த திமுக கூட்டத்தில் வெற்றி கொண்டான் பேசியது :
கடவுள் மோகன் குமாரமங்கலத்திடம் கேட்டார் " மோகன்,  நீ கலைஞரை ரொம்ப திட்டுற .

மோகன் குமாரமங்கலம் பதில் : ஆமா கடவுளே . அது தான என் வேலை. திமுக வை எம்ஜியாரை வைத்து உடைத்ததே என் வேலை தான் . இந்திராகாந்தி இந்த மாதிரி வேலை செய்யறதுக்காகவே என்ன மத்திய மந்திரியாக்கி வச்சிருக்கு கடவுளே.

கடவுள் : மோகன், நீ இந்த மாதிரி வேலையை நிறுத்து . கலைஞரை திட்டாதே.

மோகன் : முடியாது கடவுளே 

கடவுள் : அப்ப நீ கலைஞரை திட்டுவே?

மோகன் : ஆமா கடவுளே 

கடவுள் : திட்டுவ நீ?

மோகன் : ஆமா திட்டுவேன் .

கடவுள் : சரி, நீ ஏறு ப்ளேன்ல.

எம்ஜியார் ஆட்சியில் முதல் முறையாக கருணாநிதி கைது செய்யப்பட்ட நிகழ்வைப் பற்றி வெற்றி கொண்டான் : மாஜிஸ்ட்ரேட் சொன்னார் ' கருணாநிதியை கைது செய்ய உத்தரவிடுகிறேன் '. அப்படி சொன்னது தான் தாமதம். 
அந்த கோர்ட்டுக்கு எதிரே 
ஒரு ஓட்டல். நல்ல பெரிய ஓட்டல் . நீங்க ஓட்டல்காரன் கிட்டே இப்ப கேளுங்க. இன்னைக்குப் போயி கேளுங்களேன். 
அவன் சொல்வான் ." இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி " 
ஓட்டல் இருந்த இடத்த கை நீட்டி காட்டி இன்னைக்கும் சொல்றான் ." இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி "

( கருணாநிதி கைது உத்தரவைக் கேட்டவுடன் கொதித்துப்போய் ஆவேசத்தில், உடனே ,உடனே
 உடன் பிறப்புகள் ஓட்டலை அடித்து நொறுக்கி விட்டார்களாம்..இப்போ வெறும் பொட்டல் தான். ஓட்டல் கட்டிடம் தூள் தூளாகி விட்டது என்று அர்த்தம்)

நாவலர் நெடுஞ்செழியன் பற்றி வெற்றி கொண்டான் : அது ஒன்னு இருந்துச்சுய்யா எங்க கிட்டே. 
நல்லா நெடு,நெடுன்னு, கொழு, கொழுன்னு .. 
அடிச்சி பிரியாணி பண்ணியிருந்தா அம்பது பேர் சாப்பிட்டிருக்கலாம். விட்டுப்புட்டோம்.

திருச்சி திமுக கூட்டமொன்றில் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் ஜெயலலிதாவின் வீடு பற்றி வெற்றி கொண்டான் : டே, உன் தலைவி ஜெயலலிதா வீட்டுக்கு வேதா நிலையம்னு பேர் எப்படி வந்துச்சி தெரியுமா. வேதாசலம் முதலியார்னு மதுராந்தகத்துலே ஒர்த்தன். 
அவன் தான் ஜெயலலிதா அம்மா சந்தியாவை கொஞ்ச நாள் 
அந்த காலத்திலே ஓட்டிக்கிட்டு இருந்தான். அவன் கிட்ட இருந்து புடுங்குன வீடு தான்  உன் தலைவியோட ' வேதா நிலையம் '

உடனே கூட்டத்தின் முன் வரிசையில் சேரில் உட்கார்ந்திருந்த அத்தனை திமுக பெண்களும் கூட்டத்தை விட்டு அவசரமாக வெளியேறி விட்டனர்.

......................................
மீள் பதிவு 2009

https://www.facebook.com/share/p/1GfEdGyBJn/

Te Quiero


Te Quiero 

Te quiero"
அப்போது பதினெட்டு வயது. படித்துக்கொண்டிருந்த டெனிஸ் ராபின்ஸ் நாவல் 'Brief Ecstasy'ல் படித்த
"Te quiero".
 ஸ்பானிஷ் மொழியில் 
"Te quiero" என்பது “I love you”.
இந்த ஸ்பானிஷ் "Te quiero" வை கடிதத்தில் பல இடங்களில் மீண்டும் மீண்டும் தெளித்தேன். குழம்பட்டுமே. தவிக்கட்டுமே. இது என்ன வார்த்தை, என்ன அர்த்தம்…
...

கடந்த காலங்களில் 
 பல முறை பல சந்தர்ப்பங்களில்
 Te Quiero எப்போதுமே உபயோகப்படுத்த வேண்டியிருந்திருக்கிறது 

Nov 16, 2017
Memory is my fate

கருத்தழிவின் கழிவு காதலன் பிதற்றல்
- பிரமிள்

Gabie Dear, Nothing to dance with the pen?
என்று குறிப்பு எழுதிய காதலிக்கு உடனே, உடனே
”என் இதய கீதமே!
இதோ என் பேனா தா, தை, தக்க தை போட ஆரம்பித்து விட்டது” என கடிதம் எழுதினேன்.
மீராவின் ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ கவிதைத்தொகுப்பில் இருந்து கவிதையெடுத்து கடிதத்தில் திணித்தேன்.
“ நீ முதல் முறையாக தலை சாய்த்து கடைக்கண்ணால் பார்த்த பார்வை என் நெஞ்சில் முள்ளாய் தைத்து விட்டது. முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும். இன்னொரு முறை பார்”

"Te quiero"
அப்போது நான் படித்துக்கொண்டிருந்த டெனிஸ் ராபின்ஸ் நாவல் 'Brief Ecstasy'ல் படித்த
"Te quiero".
 ஸ்பானிஷ் மொழியில் 
"Te quiero" என்பது                         “I love you”.
இந்த ஸ்பானிஷ் "Te quiero" வை கடிதத்தில் பல இடங்களில் மீண்டும் மீண்டும் தெளித்தேன். குழம்பட்டுமே. தவிக்கட்டுமே. இது என்ன வார்த்தை, என்ன அர்த்தம்…

ஒரு பாட்டு எழுதி பாடி பாட்டு போட்டிகளில் பரிசு வாங்கியிருக்கிறேன்.
”மாங்குயில் பாடிடும் கீதம் கேளாய் வாழிய மாதவளே
வாழ்வினில் புதுமை வளமே காண வருகை தந்தோய் வாழி
சிரிக்கவைத்தேன் அது தவறென்றால்
உன்னை அழுக வைத்தேன் அது சரிதானா?
நீ இல்லை என்றால் காலமெல்லாம்
உன் நினைவு வந்து மொழி சொல்லுமே
நினைவு வந்து மொழி சொல்லுமே
இருக்கின்ற நீ எனக்கில்லையென்றால்
அந்த இல்லாத இறைவனும் இருக்கட்டுமே
உன் மனம் புண்பட இறைஞ்சுகிறேன்
என் அகமே நெகிழ மறந்து விடு
அகமே நெகிழ மறந்து விடு”

Benchmark Love.

Love is a resurrection.

.....

இப்ப "With Love" ல
Te quiero பயன்படுத்தப்பட்டுள்ளது

With Love ஹீரோ இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் ரசிகன். 
யுவனின் போஸ்டர் பார்த்த போது
ராஜநாயஹம் 'சினிமா எனும் பூதம்' சீரியலில் இப்போது ஒளிபரப்பான 204 வது எபிசோட் "யுவன் ஷங்கர் ராஜா" தான் என்பது நினைவுக்கு வருகிறது.

Feb 8, 2026

சிங்காநல்லூர் ரோட்ல

சிங்காநல்லூர் ரோட்ல ராமானுஜ நகர் அருகே " சார், நீங்க ராஜநாயஹம் தான?"
மாஸ்க் அணிந்திருந்தும் அடையாளம் கண்டு பிடித்து கேட்டார்.
V. முருகேசன். TNCD Building construction ல் வேலை பார்க்கிறார்.
அருமையான வாசகர்.

R.P.ராஜநாயஹம் எழுத்தை 15 வருடமாக 
வாசித்துக்கொண்டிருக்கிறார்.நேற்றைய பதிவை கூட படித்திருக்கிறார். அன்போடு பேரன் பேத்திகள் பற்றி கூட விசாரித்தார்.

 முரசு டிவியில்"சினிமா எனும் பூதம்" சீரியல் இருநூறு தாண்டி விட்டது பற்றி பாராட்டி முருகேசன் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

Feb 6, 2026

204, 205 Episodes

204, 205 episodes 

R.P. ராஜநாயஹம் 
"சினிமா எனும் பூதம்"
தொலைக்காட்சி தொடர் 

1. யுவன் ஷங்கர் ராஜா 

2. G.V. பிரகாஷ் குமார்

வருகிற ஞாயிற்றுக்கிழமைகளில் 

முரசு டிவியில் 
காலை எட்டரை மணிக்கு

.....

R.P. ராஜநாயஹம்
'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 3ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

.....

சினிமா எனும் பூதம் 202, 203 episodes

202, 203 episodes 

சினிமா எனும் பூதம் 

 இசையமைப்பாளர்கள் 

1. பரத்வாஜ் 
" உனைப் பார்த்தபின்பு நான் நானாக இல்லையே"

2. சிற்பி 
" எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா"

வருகிற ஞாயிற்றுக்கிழமைகளில் 
முரசு டிவியில் 
காலை எட்டரை மணிக்கு

Anal Cough and Blowing the nose

மதுரயில மாலையில் கல்லூரியில் இருந்து அழகான பேராசிரியை 
 வீடு திரும்பும் போது 
அரசரடி ஆரப்பாளையம் சாலையில் 
வீடுள்ள தெருவில் நுழைகையில் பலமான சப்தம் வரும்படி ANAL Cough. Fart. 
அங்கே நின்று கொண்டிருந்த குருவி மண்டையன், தொல்லை, மண்ட மூக்கன், ஆட்டு மூக்கன் காதுகளில் இன்ப தேனாக பாய்ந்தது என்றால் கேட்கவும் வேண்டுமா?
வாய் விட்டு கோரஸாக சிரித்து விட்டார்கள்.
அதன் பிறகு நீண்ட பல வருடங்களுக்கு அந்த பேராசிரியைக்கு பேரு "குசுவினி"

பெங்களூருவில் அழகான பங்களாவில் ஷூட்டிங். முதல் நாள் சுதாகர் ஷூட்டிங். டாக்ஸி டிரைவர் காக்கி ட்ரஸ். பிஸியான நடிகர்.
ஷாட் ஆரம்பிக்கிற நேரத்தில் சுதாகர் வீட்டு ஹாலில் இருந்து வெராண்டாவிற்கு போவதை பார்த்து, அழைக்க போன அந்த வினாடியில் மூக்கை பலமாக சீந்திக் கொண்டு இருந்த அந்த கதாநாயகன்.  
Blowing the nose.
மூக்கிலிருந்து அளவு அதிகமாக பச்சை நிறத்தில் கெட்டிச்சளி வெராண்டாவை ஒட்டியிருந்த க்ரோட்டன்ஸ் செடி இலை மீது கட்டியாக விழுவதை பார்க்க நேர்ந்தது.

சுதாகரின் இந்த  காப்பி கலர் சர்ட் போட்ட ஸ்டில் அந்த படத்தில் தான்.

சி.பா. ஆதித்தனார் இங்கிலாந்தில் படித்து கொண்டிருந்த போது காந்தியார் நிகழ்ச்சி ஒன்றில் ஜர்னலிஸ்ட். காந்தி திடீரென வெளியேறுவதை பார்த்து பின்னாலே போயிருக்கிறார். எதற்கு என்று எல்லோரிடமும் கேள்விக்குறி.

Scoop news ஆதித்தனார் மறு நாள் செய்தி பத்திரிகைக்கு தந்திருக்கிறார். காந்தியார் வாயில் ஆடிக்கொண்டிருந்த பல்லை பிடுங்கி போட்டு விட்டு வந்து பேச்சை தொடர்ந்தாராம்