Share

May 21, 2024

நீதியரசர் அக்பர் அலி

20. 05. 2024 திங்கட்கிழமை மாலை 6 மணி 

மாண்புமிகு மிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் குறிஞ்சி இல்லத்தில்  ஜஸ்டிஸ் அக்பர் அலியை சந்தித்தேன்.
காரில் ஏறுவதற்கு முன் நீதியரசர் புன்னகையுடன் 
 tickled my chin and said " சின்னப் பையனா இருந்தீங்க. உங்களுக்கும் வயசாகுதா?"

...

2010

முன்னாள் அட்வகேட் ஜெனரல் R. சண்முகசுந்தரத்தின் 
 மகன் மனு திருமணத்தில் 
என்னைப் பார்த்துவிட்டு பக்கத்தில் இருந்த  நண்பரிடம் உயர் நீதிமன்ற நீதியரசர் அக்பர் அலி  சொன்னார். 

 “ I meet this BOY after thirty years”

அவருக்கு இப்போதும் நான் பையனாகவே தோற்றம் தருகிறேன் என்பது சற்று வித்தியாசமாக, சந்தோஷம் தருவதாக இருந்தது. காலயந்திரத்தில் ஏறி பின்னோக்கி 

பயணம் செய்த சந்தோஷம். 

ஐகோர்ட் ஜஸ்டிஸ் அக்பர் அலி.

 செங்கல்பட்டு ஜட்ஜாயிருக்கும்போது

 காஞ்சி சங்கராச்சாரியாரைத் 

தூக்கி உள்ளே வைத்தவர் இவர் தான். 

ஈகா தியேட்டருக்கு பின் பக்கம் 

ப்ரொஃபசர் சுப்ரமணியம் தெருவில் இருந்த 
மலையாளி முஸ்லிம் எஜுகேஷனல் சொசைட்டி ஹாஸ்டலில் ராஜநாயஹம் தான் சினிமாக்காரன். 

மற்றவர்கள் வக்கீல்கள், டாக்டர்கள். 
இன்னும் இன்கம்டாக்ஸ்,
 டி. வி., ஏர்லைன்ஸ், பேங்க் இப்படி.. 

சினிமா அசிஸ்டெண்ட் டைரக்டரான

 என்னை "டைரக்டர்" என்று தான் கூப்பிடுவார்கள். எல்லோருக்கும் வயதில் ஜுனியர் நான் தான். 

மெஸ் சாப்பாடு அசைவம் தான். 

ஒவ்வொரு நாளும் மட்டன், சிக்கன், ஃபிஷ், பீஃப் என்று மெனு. 

இங்கே தான் நான் பீஃப் சாப்பிட பழகினேன்

எம். இ. எஸ் ஹாஸ்டலில் எங்களோடு இருந்த மலையாள நண்பர் அபுபக்கர் அவர்களின் மகள் திருமணம் அண்ணா நகரில் 2013ல் நடந்தது. 

  அங்கே என்னைப் பார்த்த போது
நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்த   அக்பர் அலி அவர்கள் 
என்னை "டைரக்டர்" என்று தான் அழைத்தார். 

.....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.