Share

Mar 5, 2024

என் கேள்விக்கென்ன பதில்


'என் கேள்விக்கென்ன பதில்' 1978 ம் ஆண்டு வெளிவந்த படம்.
ரஜினி, ஸ்ரீப்ரியா, விஜயகுமார் நடித்த படம்.
P. மாதவன் இயக்கத்தில் வண்ணப்படம்.

இதில் ஒரு பாத்திரம்.
ஸ்ரீப்ரியா இந்த பாத்திரத்தை கிண்டல் பண்ணி பாடுவது போல பாட்டு. 
" ஓட்ட வண்டி மகராசா, நாட்டுப்பொண்ண பாத்தீங்களா?"

ரஜினிகாந்த் இந்த கதாபாத்திரத்தைப் பார்த்து பாடுகிற காட்சியும் படத்தில் உண்டு. 
'I'm nobody, he is somebody'

கதாநாயகி ஸ்ரீப்ரியாவை காரில் கடத்திச் சென்று வைக்கோல் போரில் தள்ளி விட்டு கற்பழிக்க முயல்கிற காட்சியும்.


நடிகர் யாருக்கும் இப்படி காட்சிகள் இருக்கிற கதா பாத்திரம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தவிக்கச்செய்யும். வாய்ப்பு கிடைத்தால் பெரிய ஓப்பனிங் என புதிய நடிகரை ஏங்கச் செய்யும்.

படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்காந்த் வாய்ப்பு பெற்றார். அப்போது 'இனிக்கும் இளமை'யிலும் நடித்துக் கொண்டிருந்தார்.

சினிமாவில் விஜய் காந்த் கடுமையான போராட்டம் ஆரம்ப நேரம். 
ஷூட்டிங்கில் விஜய் காந்த் நடிக்க ஆரம்பித்தபின் தான் வாய்ப்பு பறி போகிறது. பெருத்த அவமானம்.

சிலோன் மனோகர் பின்னர் அந்த ரோலில் நடிக்க வாய்ப்பு பெற்று நடித்து படம் ரிலீஸ். 
அந்த ரோலில் சிலோன் மனோகர் இல்லாமல் விஜய் காந்த் நடித்திருந்தால் 
 'என் கேள்விக்கென்ன பதில்' தான்
 முதல் படமாக இருந்திருக்கும்.

இந்த படம் ரிலீஸ் ஆகி மூன்று மாதங்களில் விஜய் காந்த் முதல் படமான சுதாகர் கதாநாயகனாக நடித்த 'இனிக்கும் இளமை' வெளியானது.

1979ல் விஜய் காந்த் பேட்டி பத்திரிகையொன்றில்.
ரஜினி காந்த் சாயலில் இருப்பதினால்
என் கேள்விக்கென்ன பதில் படத்தில் ரஜினியால் தான் 
வாய்ப்பு பறி போனதாக உடைந்து போய் சொல்லியிருந்தார்.

இப்போது ரஜினிகாந்த்  போட்டி பற்றி தன்னுடைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் காந்த் பறிக்கிற சூழல் இருந்தது என கூறியதாக அறிய வந்த போது
இந்த விஷயம் ஞாபகம் வருகிறது.

(ஜெயசித்ராவுக்கு பின்னால் கணவரான மங்கள நாயகன் கணேஷ் 'என் கேள்விக்கென்ன பதில்'
படத்தில் வக்கீலாக நடித்த காட்சி உண்டு.
டயலாக்"சட்டம் அதுக்கு எடம் குடுக்கலியே சார்")

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.