Share

Jan 1, 2019

Something


’ராஜராஜ சோழனின் ஆவி இன்னும் சாந்தியடையவில்லை.’
கார்ப்பரேட் சாமியார் ரவிசங்கருக்கு இப்படி ஒரு கவலை.
’அனுமன் ஒரு தலித்.’ இப்படி ஒரு கண்டுபிடிப்பு.
இட்லி விலை பற்றி Thesis. அம்மா உணவக இட்லி துவங்கி அம்மா சாப்பிட்ட அப்பல்லோ இட்லி வரை.

இது மாதிரி விஷயங்களெல்லாம் மூளைய சிரமப்படுத்தாதா? கண்ணுக்கே சிக்கலாகாதா? ஒற்றை தலைவலி வராதா. Sighs and heaves. Discord and Dismay.

Nothing could be done. பெக்கட்டின் ’வெய்ட்டிங் ஃபார் கோடா’ நாடகத்தின் முதல் வசனம் இது.
What are we waiting for? Who could be of any help? What power shapes our way? There is no me and you.

டாரண்டினோவுடைய 'பல்ப் ஃபிக்சன்' படத்தில் லான்ஸ் என்ற பாத்திரம் சொல்வது: If you are alright, say something.
அதற்கு மியா பதில் : Something.

ஷேக்ஸ்பியரின் ஹாம்லட் “ Something is rotten in the state of Denmark.
அம்புலி மாமா கதை சின்ன பையனா இருக்கப்ப படிச்சது.
லூயிஸ் கரோல் எழுதின ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் பெரிய பையனா ஆனப்புறம் படிச்சு சுவைச்சது.

Alice in wonderland syndrome என்பது நிரந்தரமா?
ஜோனாதன் ஸ்விஃப்ட் கதைத்த கலிவர்’ஸ் ட்ராவல் லில்லிபுட் தீவு சித்திரவதை இனி தீர்வில்லாத தன்மையதாக யதார்த்தத்தில் சுற்றி வருகிறதா?
Can’t suffer fools and foolings.
ஒரு பீற்றல் பூதகி தேவையேயில்லாமல் மூக்கை நுழைத்து வார்த்தைகளை அள்ளித்தெளித்து விட்டு போன பின் அது பற்றி ’அற்ப சுபாவங்களை சகித்துக்கொள்ள முடிவதில்லை’ என ந.முத்துசாமி தன் மன வலி பற்றி என்னிடம் சொன்னார்.
ரசிகமணி டி.கே.சி ஒரு மோசமான மனிதர் பற்றி சொன்ன ஒரு வரி “ காண்டாமிருகம் சைவம் தான். ஆனா ஆள கொன்னுடும்”
தி.ஜானகிராமன் “ இந்த மனிதர்கள் எந்த கைக்குட்டையால் தங்கள் நெஞ்சின் ஈரத்தை துடைத்துக்கொள்கிறார்கள். நரகத்தில் நெய்த கைக்குட்டையாலா?”
கிங் லியரில் ஷேக்ஸ்பியர் “ Is there any cause in nature that makes these hard hearts?”

"Another year ! Another deadly blow!"
-Wordsworth
"Month follows month with woe,
And year wakes year to sorrow"
-Shelley

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.