Share

Aug 20, 2017

Bigg Boss scraps


ஆரவ் ஒரு நவீன இளைஞன்.
நடிகை ஓவியா காதலிக்கிறாள். அவனிடம் பிரச்னை இருக்கிறது.  இவளை உதாசீனப்படுத்துகிறான். அவள் மிகுந்த வியாகூலமடைகிறாள். அவளுக்கு ஆறுதலாக ஒரு முத்தம் கொடுக்கிறான். அது “மருத்துவ முத்தம்”.
You must remember this.
A kiss is just a kiss, a sigh is just a sigh.


அவள் அந்த முத்தத்தை அவனிடம் இருந்து விரும்பி, முழு மனதுடன் தான் வாங்கியிருப்பாள். ஏனெனில் அவள் அவனை மிக நேசிக்கிறவள்.
அவன் அவளுடைய காதலை நிராகரிப்பதற்கு காரணம் இருக்கலாம். ஒரு வேளை அவன் முஸ்லீம் என்பதால் மனத்தடை இருக்கலாம். இன்னொரு பெண்ணை விரும்பிக்கொண்டிருக்கலாம்.
கனியிருக்க ஏதோ ஒரு காயை கவர்ந்திட விரும்புகிறானோ என்னவோ? அது அவன் தலையெழுத்து.

அருகுளது எட்டியேயாயினும் அல்லிக்கொடி படரும். இது ஓவியா தலையெழுத்து.

அவன் வில்லி காயத்ரி கண்ட்ரோல்ல இருக்கான். அவள் இவனை “பேர கெடுத்துக்காத தம்பி”ன்னு சாம்பிராணி போடுறாள்.

இன்னொரு பஃபூன்! கவிங்கன்! ஓவியா கிட்ட “ உனக்கு எங்க என் நெனப்பு இருக்கு”ன்னு நூல் விடுறான்.
ஆரவ் இவனளவுக்கு கண்ணியக்குறைவானவன் அல்ல.
அவள் கிளம்ப இருப்பது தெரிந்து தூங்கி எழுகிறவள் படுக்கையில் உட்கார்ந்து கவிஞ்சன் தடவுகிறான். தலையில கை வக்கிறான். கூந்தலுக்குள்ள கை விடுறான். முடிய நல்லா கசக்கி ஷாம்பு போடற மாதிரி விரலால கோதுறான். ஊள அழுகை வேற.
பொதுவா இந்த மாதிரி நடவடிக்கைகள் “ நான் ரெடியாயிருக்கேன். நீ அவன ஏம்மா பிடிச்சிட்டு தொங்கணும்”னு நாக்க தொங்கப்போடும் ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடு.
அல்லது “ நீ அவனோட ஆளாயிருந்தா எனக்கென்ன.. கல்லு காஞ்சிக்கிட்டு இருந்தா நான் தோச சுடத்தான் செய்வேன்”

நல்ல வேளை. அவ கிளம்பும் போது “ no more emotional dramas”னு சொல்லிட்டு போயிட்டா. இல்லன்னா கவிஞ்சன் பாய்ஞ்சி கட்டிப்பிடிச்சி, கண்ண மூடி சொக்கி, கெறங்கு, கெறங்குன்னு கெறங்கியிருப்பான், குரங்கு!
இவன பத்தி பொம்பளங்க எந்த கம்ப்ளைண்டும் பண்ணலயே என்பது பரணியை காயப்படுத்தற விஷயம்.

”புது சினேகம் என்பது சரியாக வேகாத சோறு போல” என்பார் தி.ஜானகிராமன். இந்த சினேங்க்க்கனின் சினேகம் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு சரியாக வேகாத சோறு போல என்பது அவர்களுக்கு அவனுடைய புறணி மூலம் தான் புரியும்.
பரணி பற்றிய கேள்விக்கு கவிங்கன் பொய் சொல்லும்போது கண்கள் கிடந்து அல்லாடியது.

எப்படியோ காயத்ரி இன்று வெளியேற்றப்படுகிற விஷயம் விஷேசமானது.
வெளியே வந்ததும் தலித்துகளுக்கு விரோதமாக அவள் பரணி பற்றி பயன்படுத்திய வார்த்தை ஒன்றே அவளை பெட்டிப்பாம்பாக சுருண்டு படுக்க வைத்து விடும்.
அவள் திருந்த எந்த வாய்ப்புமே இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் திட்டமிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாகத் தான் புலம்புவாள்.

ஒவ்வொரு சனி, ஞாயிறிலும் கமல் ஹாசன் சினேகன், காயத்ரி விஷயத்தில் பாரபட்சமாக கண்டும் காணாமல் நடந்து கொள்கிறார். Selective Amnesia and wilful blindness!

கவிங்கன் முகஸ்துதியில உலக நாயகனை கவுத்துட்டான். பாரதி, கண்ணதாசனுக்கு அடுத்து கமலஹாசன்னு!
தாழன் சைஸ் சரியில்ல. கொம்புத்தாழன்.

 

..................................

https://rprajanayahem.blogspot.in/…/find-funny-side-to-bigg…

https://rprajanayahem.blogspot.in/…/graceless-inelegant.html

http://rprajanayahem.blogspot.in/…/08/bigg-boss-bullshits.h…

http://rprajanayahem.blogspot.in/2017/08/good-bad-ugly.html

http://rprajanayahem.blogspot.in/…/07/pigs-in-bigg-boss.html

http://rprajanayahem.blogspot.in/2017/07/blog-post_19.html


http://rprajanayahem.blogspot.in/2017/07/blog-post_11.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.