Share

Jan 14, 2017

கறுத்தடையான் கவிதையும் சிறுகதையும்


”பழையன கழிதலும், புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே”
நன்னூலின் கடைசி ஸ்லோகம்!

நன்னூலை இயற்றியவர் பவனந்தி முனிவர். ஜைன மதத்தை சார்ந்தவர்.
நன்னூல் விளக்க நூல்கள் இரண்டு உண்டு. 1. நன்னூல் காண்டிகை. 2. நன்னூல் விருத்தி
…………..

இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது தேவையில்லாமல் யாராவது மூக்கை நுழைத்தால் சொல்லுவதற்கு ஒரு சொலவடை. ’நானும் தான் இருக்கேன் நண்டுவளையிலே’ன்னு குறுக்க வர்றியே.
Poking one’s nose!

’மணல் வீடு’ பத்திரிக்கையில் கறுத்தடையான் கவிதை ’அறுதலி’யில்  சொலவடைகள் சில இடம் பெற்றிருக்கின்றன.
அறுதலி என்றால் கைம்பெண்.


“ அறுதலி பிள்ளை விருதாப் போகும்
நொய்யரிசி குழஞ்சு வேகும்
ஓடத்தண்ணி நெளிஞ்சோடும்
சீத்துவமற்ற நாய் கொலச்சுச் சாகும்
பனங்காட்டு பிஞ்ச மத்துவமாய் வெளயும்..
குஞ்சு நோயை கோழி அறிஞ்சிடும்
சின்னச் செம்புகள் சீக்கிரம் நெறஞ்சிரும்..
வங்கோடையிலும் கல்லுக்கிடங்கில் தண்ணியீடு..”
இப்படி சொலவடைகள்!

சில கனமான வரிகள் கறுத்தடையானிடமிருந்து பீறிடுகின்றன.

‘வேமா சாவதை விடவும் கடினமானது பைய்ய வாழ்வது’ ’நீடித்த துயரம் அதிகமும் நீண்டதாகவும் இருக்கிறது’ போன்ற வரி சாமுவெல் பெக்கட்டின் “ Death is a long tiresome business” சம்பந்தப்பட்டது. நகுலன் “ Death also waits. Death has infinite patience” என்பார்.

”உலைக்கு பயந்து தெவசங்கள் தீயில் வீழ்கிறது.
புண்ணை மலத்தும் ஈக்கள் துளையிட்டும் ஈரமேயில்லை..
வியர்வையாய் பெருகும் வீராப்புகள் விரைவில் உலர்ந்தும் விடும்
அழுகையில் வழியும் ஊளமூக்கு துடைத்தாலும் தடம் தெரியும்
சந்தனத்தீற்றல்கள் சரியாய் மறைக்கும் கண்ணவிஞ்ச சாமிகளை..
அறுதலி – ’கருக்கல் கலைகையில் இருட்டுகிறது இன்னும் வேகமாய் அவளுக்கு’
………………..

’தொக்கம்’ என்கிற இலக்கியச் சுண்ணாம்பிதழ்!
இதில் கறுத்தடையான் எழுதியுள்ள ஒரு சிறுகதை
“ சீயக்காயும், வீச்சுப்புரோட்டாவும்”.

’ஒரு தடவையாவது சீயக்காயில் குளித்து வீச்சுபுரோட்டா தின்றவன், அது உடலுறவின் ஓரங்கமாய் மாறி விடுவதை அவதானிப்பான்…………
வீச்சுப்புரோட்டாவின் வீச்சில், மூட்டில் ஓயாது தனப்பொலி..............’

சீயக்காய், வீச்சுப்புரோட்டா இரண்டுமே metaphor!
கதையின் கடைசி வரி –
’முக்கியமற்ற குறிப்புகள் :
சீயக்காய் = கஞ்சா
வீச்சுப்புரோட்டா = கர போகம்.’

…………………………………


http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_20.html

http://rprajanayahem.blogspot.in/2016/06/blog-post_9.html

http://rprajanayahem.blogspot.in/2017/01/blog-post_8.html

http://rprajanayahem.blogspot.in/2014/06/blog-post.html

1 comment:

  1. மரியாதைக்குரிய r.p.r. அவர்களுக்கு
    நான் தங்களைப்பற்றி கேள்விபட்டுளேன் . தற்போதுதான் உங்களுடைய வலைப்பூ முழுவதும் படித்தேன் .
    ஒருமனிதரின் வாழ்வில் இத்தனை திருப்பாங்களா ?
    பிரமிப்பாக இருக்கிறது .
    தங்களுக்கும் தங்கள்குடுபட்டினர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்துக்தங்களுக்கும் தங்கள்குடுபட்டினர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்துக்கள் .

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.