Share

Mar 8, 2015

Parodox and Myth





 பரிட்சார்த்த முயற்சிகள் ஒன்றிரண்டு 'குடிசை','தேநீர்' என்று செய்து தன்னை தமிழ் நாட்டு சத்யஜித்ரே என்று காட்டிக்கொள்ள மெனக்கிட்டு, ஒரு டைரக்டர் அது நடக்காமல் போனது ஒரு பக்கமிருக்க, ஒரு சினிமா பத்திரிக்கையில் பேட்டி கொடுத்தார்.
அப்போது எஸ்.பி.முத்துராமன், ஐ.வி.சசி போன்றவர்கள் தமிழில் பிஸியான மசாலா பட டைரக்டர்களாக இருந்த நேரம்.
 “நான் இனி கலைப்படங்கள் எடுக்கப்போவதில்லை.மசாலா படங்கள் இயக்க முடிவு செய்து விட்டேன். எவ்வளவு நாள் தான் கஷ்டப்படுவது. எனக்கும் கார்,பங்களா வசதியெல்லாம் வேண்டாமா?இலட்சியத்தையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டேன். இனி பிரமாண்டமான மசாலா படங்கள் இயக்கி, சம்பாதிக்க ஆரம்பிக்கவேண்டும்” அந்த டைரக்டர் இந்த மாதிரி அர்த்தத்தில் அந்த சினிமா பத்திரிக்கை பேட்டியில் சொல்லியிருந்தார் 
An Absurd,contradictory parodox.
இப்படி பேட்டி கொடுத்த டைரக்டர் என்ன எதிர்பார்த்தார் என்றால் உடனே பல பெரிய தயாரிப்பாளர்கள்  இவரிடம் வந்து படம் செய்யச்சொல்லிக் கேட்பார்கள் என்பது தான்.
ஆனால் இவர் எதிர்பார்த்த மாதிரியெல்லாம் நடந்து விடவில்லை. இவர் மசாலா படம் டைரக்ட் செய்ய வேண்டும் என்று  தமிழ்த்திரையுலகில் யாரும் வேர்த்து வடியவில்லை.
இது ஒரு black humour. A macabre joke!
A disappointed Idealist!
பத்து வருடம் முன் கூட பரிட்சார்த்த படமாகத்தான் எதையோ சந்திர சேகர், சார்லியை வைத்து செய்திருந்தார். An Idealist and hopelessly naive.
ருத்ரையா 'அவள் அப்படித்தான்' மூலம் உச்சத்தை எட்டியவர். 
மகேந்திரன் 'உதிரிப்பூக்கள்' கொடுத்தவர்.
ஆனால் இப்படி  எந்த சாதனையும் அந்த கலைப்பட இயக்குனர் செய்ததில்லை.

அவர் ஜெயபாரதி!
................

மனோரமா நகைச்சுவை நடிகையாக பிம்பம் இருந்தாலும் சின்னத்தம்பி வெளி வந்த பின் பல படங்கள் க்ளைமாக்ஸில் அழுது ஒப்பாரி வைக்கும்படியாயிருந்தது.

நகைச்சுவை நடிப்பில் மனோரமா,சச்சு,மாதவி,ரமாப்ரபாஇவர்கள் நால்வரும் நாகேஷுக்கு ஜோடியாக கொடிகட்டியவர்கள். 

காந்திமதி.

கோவை சரளாவும் நகைச்சுவை நடிகையாக பல வருடங்களாக அறியப்படுபவர்.

மனோரமா “தற்பெருமை” என்ற விஷயத்தை திரையில் சிறப்பாக செய்தவர்.
மனோரமா ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்திருக்கலாம். அவர் தான் தலை சிறந்த நகைச்சுவை நடிகை என்பது ஒரு Unrealistic Myth.
The great enemy of the truth is not the lie but the myth.

மனோரமாவை விட நகைச்சுவையை நேர்த்தியாக வெளிப்படுத்திய
கதாநாயகிகள் ஜெயசித்ரா,ஸ்ரீப்ரியா. இருவரிடம் இருந்த ஹுயூமர் சென்ஸ்.
கஜினி படத்தில் அசின் செய்த பாத்திரம் ஸ்ரீப்ரியாவுக்கு வெல்லம் மாதிரி.
ஊர்வசி எனும் ராட்சசி – கமல் இப்படி சொல்வார். மைக்கல் மதன காமராஜன் துவங்கி ஊர்வசி நகைச்சுவை.. “ நான் மானஸ்தி..”
‘வாமணன்’ படம் வரை ஊர்வசி தூள் கிளப்பியிருக்கிறார். ஜெய்,சந்தானம் இருவருடனும் ஊர்வசி அடிக்கும் லூட்டி. மனோரமாவெல்லாம் ஊர்வசி பக்கத்தில் நிற்கவே முடியாது.சான்ஸே இல்லை!




...................................................... 
http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_3133.html


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.