Share

Oct 12, 2009

பூனைக்கண்

பூனைக்கண் புவனேஸ்வரி கைது விவகாரம் தினமலர் - நடிகர் சங்கம் பிரச்னையாக நீண்டு நிற்கிறது.

வேடிக்கைஎன்னவென்றால் சில வருடங்களுக்கு முன் விஜயகுமார் குடும்பம் பற்றி வெளிப்படையாக இதே பாணியில் அவதூறாக பேட்டி கொடுத்தவர் ராதா ரவி. இப்போது நடிகர் சங்க பொதுச்செயலாளராக அவரும் ஓநாய் கண்ணீர் வடித்துள்ளார். இன்னொரு வினோத வேடிக்கை இதில் பாதிக்கப்பட்ட ஷகிலா பற்றி சினிமாப்படங்களில் அவதூறாக ஜோக் அடித்தவர் விவேக் . அவர் தான் எல்லோரையும் தூண்டி விட்டுப்பின் மேடையிலும் சங்கு சக்கர சாமி வந்து திங்கு திங்குன்னு குதித்திருக்கிறார் .
Double Standard !

நடிகர் சங்க கூட்டத்தில் காமெடியன் ரஜினி காந்த் !வக்காலத்தாக துக்ளக்தனமாக "ரெண்டு வேளை சோத்துக்காக இப்படி சோரம் போகிறார்கள் '' என்று அரிய உண்மையை,யாரும் அறியமுடியாத உண்மையை சொல்லிஅருளியிருக்கிறார்.எதற்காக இதை இந்த இடத்தில் சொல்லவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களே நடிகர் சங்கத்தில் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

கொஞ்ச நாள் முன் ஜூனியர் விகடனில் எல்லா கதாநாயக ,நாயகி பற்றியும் அந்தரங்க விஷயங்களை வெளிச்சமாக்கி"இவர் தான் உங்க ஹீரோ " தொடர் கட்டுரை பூனை பெயரில் வெளியானது .நடிகர் நடிகைகளின் வாழ்க்கை Erotic ஆனது தான் என்பதன் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த தொடரை வைத்து ஜூனியர் விகடன் சர்குலேசன் எகிறியது .

சில வருடங்களுக்கு முன் குமுதம் பத்திரிகையில் 'பதக்கூர் ஸ்ரீநிவாசலு ' நடிகர் நடிகைகளின் அந்தரங்கங்கள் பற்றி விலாவாரியாக எழுதிய தொடர் கூட சர்குலேசனை அதிகரிக்க செய்தது .

'கிசு ,கிசு ' விஷயங்களில் தங்களைப்பற்றி எழுதவேண்டும் என்று ஏங்கிய இயக்குனர்கள் , நடிகர் ,நடிகைகள் , தயாரிப்ப்பாளர்களும் உண்டு.

மீடியாக்கள் அடாவடி என்பது ஊரறிய தெரியக்கிடக்கிற விஷயம்.

மீடியாக்களால் விரட்டப்பட்டு ,துரத்தப்பட்டு , தப்பிக்க பல பிரயத்தனங்கள் செய்து தோற்றுப்போய் சலித்துப்போனவர் இங்கிலாந்து இளவரசி டயானா. கடைசியில் பாரிசில் ஹோடேலில் இருந்து வெளியேறி பத்திரிகை ,டி .வி ஊடகங்களின் கழுகு பார்வை , நாய்ப்பாய்ச்சல் விரட்டல் எல்லாவற்றையும் மீறி காரில் ஏறி காதலனுடன் பறந்தபோது விபத்திற்குள்ளாகி உயிர் விட்ட டயானாவின் கோர மரணம் பற்றி ஒரு ஆங்கிலப்பத்திரிக்கை வெளியிட்ட தலைப்பு செய்தி :
The Pursuit is over! Diana has come home!

காந்தியார் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது :
I believe in EQUALITY for every one except REPORTERS and PHOTOGRAPHERS.

6 comments:

  1. என்ன சொல்ல வாறிங்க...

    ReplyDelete
  2. One of the best unbiased, impartial and fair report on the happenings of the fall-out of Bhuvaneswari case.
    Hats off to you.

    ReplyDelete
  3. இந்த பதிவு தான் உங்க எழுத்துல 'TOP'-னு சொல்ல முடியறதுல்ல... எல்லா பதிவுகளுமே மிக நல்லா இருக்குது சார். 'Press-Film Industry' விசயத்துல இதுக்கு மேல சொல்றதுக்கு எதுவுமே இல்லங்க... :-)

    அன்புடன்,
    ஒவ்வாக்காசு.

    ReplyDelete
  4. I believe in EQUALITY for every one except REPORTERS and PHOTOGRAPHERS // ஆச்சர்யமாக இருக்கிறதே... காந்தி பத்திரிகையாளர்கள் மீது பெருமதிப்பும், அன்பும் கொண்டவராக இருந்தார் என்றுதானே அறிந்திருக்கிறேன். மேலதிக விபரங்கள் கிடைக்குமா...?!

    ReplyDelete
  5. Selvendran!
    please refer this

    http://www.quotationspage.com/quote/1273.html

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.