Share

Sep 21, 2009

ஏ.கே.ராமானுஜன்

A.K.Ramanujan- A transcultural poet!
Modern India's finest English-language poet!


குறிஞ்சி - தலைவன் கூற்று

யாயும் ஞாயும் யாராகியரோ ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ?
யானும்
நீயும் எவ்வழியறிதும் ?
செம்புலப்பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

-செம்புலப் பெயனீரார்.

What could my mother be to yours?
What kin is my fatherto yours anyway?
And howDid you and I meet ever?
But in love our hearts have mingled
as red earth and pouring rain

Translated by A.K.Ramanujan (Kuruntokai - 40)

ராமானுஜன் 'தமிழர்களுடைய 2000 ஆண்டு இலக்கிய வாழ்வில் சங்கப் பாடல்களுக்கு இணையான எழில் கொண்ட கவிதை ஏதும் அவர்கள் எழுதிவிடவில்லை .உலக இலக்கியத்திலும் சங்கப் பாடல்களுக்கு ஈடான சாதனை ரொம்ப சொற்பமானவை தான் ' என்ற உறுதியான அபிப்பராயம் கொண்டிருந்தார் .

ஏ.கே.ராமானுஜன் 1993ல் தன் 64 வயதில் மறைந்து விட்டார்.சிக்காகோ பல்கலைகழக பேராசிரியர் .தென்னிந்திய மொழிகளில் விற்பன்னர் . மைசூரில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தவர் .தந்தை கணிதப் பேராசிரியர் .வானசாஸ்திரம் ,ஜோதிடசாஸ்த்திரம் இவற்றில் கரைகண்டவர் ராமானுஜனின் தந்தை .
ஏ.கே.ராமானுஜன் ஆங்கிலம் ,கன்னடம் ,தெலுங்கு ,சம்ஸ்கிருதம் ,தமிழ் போன்ற மொழிகளில் கரை கண்டவர். மொழியியல் பேராசிரியராக அமெரிக்காவில் இருந்தபோது சங்கக்கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சாதனை படைத்தவர். நாட்டுப்புற கதைகளில் உன்னிப்பான கவனம் கொண்டிருந்தவர்.படைப்புத் திறன் மிக்க கவிஞர். 1976 ல் ராமானுஜனுக்கு இந்திய அரசு 'பத்மஸ்ரீ 'விருது வழங்கி கௌரவித்தது.

இவர் கவிதை 'தற்கொலைக்கு எதிராக ஒன்று , இரண்டு அல்லது மூன்று விவாதங்கள் '

'தற்கொலையை முயற்சிக்காதே !
நீ ஏற்கனவே இறந்திருக்கலாம் !
கொல்வதற்கு ஏதும் மிச்சமில்லாமல் இருக்கலாம் ...
இதை விட மோசம் சம்பிரதாயமாக
இறக்கலாம் - இறந்து
டாக்டர் செர்டிபிகேட்களையும்
மீறி சாசுவதமாக வாழலாம் ...'
...
வாழ்க்கையில் எத்தனையோ பிரபலங்களை எத்தனையோ பேர் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் . அவர்களுடன் புகைப் படம் எடுத்துக்கொண்டு , உற்சாகமாக பிரமுகர்களை இம்ப்ரஸ் செய்வதாக அவர்களுக்கு மாலை , அன்பளிப்பு கொடுத்துக் கொண்டு ..
இந்த பிரமுகர்கள் SELF-CENTRED PERSONS! தாங்கள் விஜயம் செய்யும் அந்தந்த ஊரில் சந்திக்க நேரும் பணக்காரர்களிடம், படித்தவர்களிடம், உத்தியோகஸ்தர்களிடம்,சாமானியர்களிடம் கூட செயற்கையாக சிரித்து பேசி ' போஸ்' கொடுப்பார்கள்.ஆனால் கைகுலுக்கிய அடுத்த நிமிடம் மறந்து விடுபவர்கள் .
ஏ.கே.ராமானுஜன் இந்த விஐபி சந்திப்பு அனுபவத்தில் சிக்கி மீண்டு எழுதிய
Confessionகவிதை. :

ஒரு பிரபலத்தை சந்தித்ததும்

"அவன் நினைவிலிருந்து
கண்ணாடி பிம்பம் போல
விலகப் போகிறேன் ...
பின் ஏன் புத்திசாலித்தனத்தைக்
காட்டிக்கொண்டேன்? "

6 comments:

 1. r u a eng lit grad?

  ReplyDelete
 2. ராஜ்,
  ராமானுஜன் சங்கப்பாடல்களைத்தாண்டி, நம் ஆத்மாநாமின் கவிதையைக்கூட மொழி பெயர்த்திருக்கிறார்.எனக்கும் ஆத்மாநாமுக்கும் இடையில் ஒரு விவரிக்க இயலாத தொடர்பு உள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார்.
  அவர் மொழி பெயர்த்த ஆத்மாநாமின் கவிதை கீழே:

  கவிதையின் தலைப்பு He to Me or Me to Him:

  When I was translating
  twenty years ago
  the saints who sang
  ten centuries ago about siva
  without any thought of me

  I didnt have any
  thought of a young man
  in Madras ten years ago
  who would read them

  through my words
  night and day
  his hand toying with pills
  his eyes with colours
  turning on wheel

  swallowing them
  with the poems
  that had no thought
  of him or me who had

  no thought of him
  gasping in the mist
  between day and the needles
  in the wrist between
  to be or not to be

  leaving behing poems
  for me to read
  and to translate this week
  without a thought
  of him who had thought

  of me and the saints
  who spoke through me
  to him yet had told him
  nothing nothing at all.

  ReplyDelete
 3. ராஜ்,
  ஆத்மாநாமைப்பற்றி ராமானுஜர் கவிதை எழுதி உள்ளார்.தவறாக ஆத்மாநாமைக்கூட மொழிபெயர்த்துள்ளார் எனப் பின்னூட்டத்தில் தவறாகக்குறிப்பிட்டுள்ளேன்.

  மன்னிக்கவும்.

  -- கார்த்திக்

  ReplyDelete
 4. Karthick!

  Thanks a lot.

  Beautiful poem on Athmanaam by AK Ramanujan.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.