Share

Sep 25, 2009

தோரோ வாழ்ந்த வால்டன் ஏரி

'வால்டன் ' சம்பிரதாயமான சுயசரிதை வகையை சேர்ந்ததல்ல .நகரத்தை விட்டு இரண்டு வருடம் தான் வாழ்ந்த வாழ்க்கையை வால்டன் மூலம் பேசுகிறார் தோரோ.
தன்னை சார்ந்திருத்தல் , தனிமை , ஆழ்ந்த அவதானிப்பு . இயற்கையுடன் ஒன்றிய நிலை - இவை தான் வால்டன் ஏரிக்கரையில் தோரோ வின் அனுபவம் .


Thoreau's Walden – Non-fiction,American classic. Walden can be read a hundred times without exhaustion.

குல்சாரி நாவலில் சிங்கிஸ் ஐத்மாத்தவ் "பாதி வாழ்வைக் கனவுகளிலே அல்லவா கழிக்கிறோம் . வாழ்க்கை இத்தனை இனிமையாக இருக்க இது தான் காரணமோ ! நாம் காணும் கனவுகள் எல்லாம் நனவாதில்லை என்பதால் தான் வாழ்க்கை நமக்கு உயிருக்கு உயிரானதாகி விடுகிறதோ?"

ந.சிதம்பர சுப்பிரமணியம் ' என்று வருவானோ ' சிறுகதையில் " கனவு காண்பதும் ,காத்திருத்தலுமே மனிதர்களுடைய வாழ்க்கையை உயர்த்தி ரசமுள்ளதாக செய்கின்றன '

" அவ்வளவு நறுக்கு தெறிச்சாப்பல நம்ம ஜன்மம் அமைஞ்சதுன்னா அப்புறம் பிறவி எடுத்ததுக்கு என்ன தான் அழகு இருக்கு " - " மலர் மஞ்சம் " நாவலில் தி.ஜானகிராமன் கேட்கிறார் .

தோரோ " உன்னுடைய கோட்டையை ஆகாயத்தில் கட்டி விட்டாயா ? உன் வேலைக்கு எந்த இழப்பும் வந்து விடவில்லை . கோட்டை ஆகாயத்தில் இருக்கவேண்டியது தான் . இப்போது அஸ்திவாரத்தை கோட்டையின் கீழ் அமைத்து விடு " என்று சுலபமாக வால்டனின் முடிவில் சொல்கிறார்.
Never stop dreaming.
When you want something,
all the universe conspires in helping you to achieve it.
- Paulo Coelho in 'The Alchemist': A novel about following your dream.

Zen and the art of Motorcycle Maintanance நூலில் வரும் பீட்ரஸ் தன்னோடு எடுத்துச்செல்லும் புத்தகங்களில் 'Walden ' ஒன்று.
பிறந்தபோது இருந்த ஞானம் இப்போது தனக்கு இல்லையே என தோரோ எப்போதும் கவலைப் பட்டுக்கொண்டே தான் இருந்தார் .
However mean your life is, meet it and live it;do not shun it and call it hard names.
இதையே ஜெயகாந்தன் " வாழ்க்கை எவ்வளவு மலிவானதாக இருந்தாலும் அழகானதாகவே இருக்கிறது " - 'லட்சாதிபதிகள் ' கதையில் !
வால்டனில் எக்கானமி சேப்டரில் தோரோ ஒரு நாயைப் பற்றி- அந்த நாய் தன் எஜமானரை காண வரும் ஆடையுடுத்திய அன்னியர்களைப் பார்த்து கண்டபடி குலைக்கும் . ஆனால் நிர்வாணமான திருடன் முன் அமைதியாய் வாலாட்டும் .
வால்டனை எழுதிய ஹென்றி டேவிட் தோரோ என்று அறியப்பட்டவர் என்றாலும் அவருடைய புகழுக்கு அவருடைய பிரபலமான Civil Disobedience கட்டுரை பிரதான காரணம்.அரசாங்க சட்டங்கள் பற்றிய மறுதலிப்பை தோரோ முன் வைத்தார் . மக்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமான சட்டங்களை ஏற்க மறுக்கவேண்டும் என Civil Disobedience கட்டுரையில் குறிப்பிட்டார் .The Rights and Duties of the Individual in relation to Government.In fact the government is primarily an agent of corruption and injustice. Because of this, it's "not too soon for honest men to rebel and revolutionize.
தோரோ தன் மனசாட்சிப் படி நடந்து கொண்டதற்காக ஒரு நாள் சிறையில் கழிக்க நேர்ந்தபோது எமர்சன் அவரைக் காணவந்தார் ." தோரோ! நீ ஏன் இப்படிஇங்கே?" என்று வேதனையுடன் கேட்ட போது தோரோ " எமர்சன் ! நீ ஏன் இங்கே இல்லை?" என்று திருப்பிக் கேட்டார்.
அமெரிக்காவில் அடிமைத்தனம் ஒழிந்ததில் தோரோவின் Civil Disobedienceகட்டுரை பிரதான பங்கு வகித்தது. "I ask for, not at once no government, but at once a better government"
காந்தியார் 'சத்யாக்ரகம்' என்ற போராட்ட கொள்கையை தோரோவின் Civil Disobedience கட்டுரை தலைப்பில் இருந்து எடுத்துக்கொண்டார் என்று தான் சொல்லவேண்டும் . தோரோ மீது காந்தியார் மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார் . மார்ட்டின் லூதர்கிங் ஜூனியரும் தான்.
தமிழில் ஒரு சில எழுத்தாளர்கள் ' தாரூ ' என்று தோரோவை குறிப்பிட்டு இருக்கிறார்கள் .
To be a philosopher is not merely to have subtle thoughts,nor even to found a school, but so to love wisdom as to live according to its dictates, a life of simplicity, independence,magnanimity, and trust.
- Thoreau

3 comments:

  1. "However mean your life is, meet it and live it;do not shun it and call it hard names". What a clarion call !

    ReplyDelete
  2. அப்புறம் தோரோவின் எளிமை நாட்டம், தன் தேவைகளுக்குத் தானே உற்பத்தி காணுதல். இதுகளும் காந்தியார் (செட்டியார், கோனார் என்பது போல் இருக்கிறது - என்ன செய்ய?) தோரோ வழி கண்டடைந்தவை ஆகலாம். பார்சலுக்குப் பயன்படுகிற ஒரு மரப்பெட்டிக்குள் ஓர் ஆள் உறங்கி எழுந்திருக்கலாம் என்றார் தோரோ. இன்று, அமெரிக்கர்கள்தம் அழிவுசெலவுக்கு உலக மொத்த உற்பத்தியும் பற்றாது போல் இருக்கிறது. ஆனால் காந்தியாரைவிட எளிய இந்தியர்கள் நிறையவே இருக்கிறார்கள். ஒரு பெட்டிக்குள் குடித்தனம் நடத்திய ஒரு அம்மையாரை மும்பை தாராவியில் பார்த்திருக்கிறேன் (வறுமைதான்). தோரோவை எடுத்துக்காட்டி அதைப் பதிவுபண்ணியும் இருக்கிறேன்.

    நாய் குரைத்தது/க்காதது, எமர்சன் சிறைக்குள் இல்லாதது - நல்ல நகைச்சுவை.

    - ராஜசுந்தரராஜன்

    ReplyDelete
  3. Thank you Rajasundararajan Sir! This is the real comment!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.