Share

Apr 2, 2009

49 (o)

நேற்று ஒரு நிழற்படம் பார்க்க கிடைத்தது . தொல்.திருமாவளவன்
(பவ்யமாக!), குலாம் நபி ஆசாத் , ப சிதம்பரம் , தங்க பாலு வுடன் கருணாநிதி நடுநாயகமாக ஜுனியர் விகடன் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.
கூட்டணி தலைவர்கள் ஒருங்கிணைந்து காட்சி தருகிறார்கள்.
எப்படி? ஒரு மாதம் இருக்குமா ? தொல் திருமா " காங்கிரசை வேரடி மண்ணோடு சாய்ப்பேன். தமிழகத்தில் பூண்டோடு ஒழிப்பேன் " என சூளுரைத்தது!
விடுதலை சிறுத்தைகள் இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கவே மாட்டோம் என காங்கிரஸ் மீசை முறுக்கியது!

மன சாட்சி இல்லாத அரசியல்வாதிகள்!
என்ன ஒரு ஹிப்போக்ரசி!' தேர்தல் பாதை திருடர்கள் பாதை 'என்று திருமா முன்பு சொன்னது சரி தான்!!
இலங்கை பிரச்னை தேர்தல் வரவும் மறைந்து விட்டது.

ஒரே நேரத்தில் வைகோ கட்சி அதிமுக இல்லையேல் பி ஜே பி யுடன் கூட்டு பேச்சு வார்த்தை. தோட்டத்தில் வைகோவுக்கு அவமானம் என செய்தி . பி ஜே பி வலை வீச்சில் வைகோ. நாளொரு செய்தி என்பது கூட தவறு மணிக்கொரு செய்தி , வினாடிக்கொரு கூட்டணி மாற்றம் இருக்கும் போல.

திமுக விலிருந்து எம்ஜியார் விலகினார். எம்ஜியார் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர் .
திமுக விலிருந்து வைகோ விலகினார் . வைகோ தொண்டர் செல்வாக்கு தான் பெற்றிருந்தார். தொண்டர்கள் பலர் அவர் பின் திமுக விலிருந்து வந்தார்கள். தொண்டர்கள் தேர்தலில் வேலை செய்ய முடியும். மக்கள் செல்வாக்கு தான் வாக்குகளை பெற்று தரும். மக்கள் செல்வாக்கு என்பதை வைகோ நினைத்து கூட பார்க்க முடியாது.
இப்போது இரண்டாம் மட்ட தலைவர்கள் மறுபடியும் திமுக விற்கு போய் விட்ட பின் அம்மா இவரை அவமானப்படுத்துகிறார். மதிமுக பலகீனப்பட்டு விட்டது என்று ஜெயலலிதா உதாசீனப்படுத்துகிறார் போலும்! நியாயம் தானே. இலங்கை பிரச்னையில் இரு துருவமாக இருந்து கொண்டு ஜெயலலிதா - வைகோ இணைந்து அரசியல் பண்ணியதே அபத்தம்.


பண்ருட்டி ராமச்சந்திரன் மூலம் காங்கிரசுடன் டெல்லியில் வெளிப்படையான பேச்சு வார்த்தை நடத்தி விட்டு இப்போது தனியாக போட்டியிடும் விஜயகாந்த் வினோத அரசியல் வியாதி. பாவம் நாற்பதில் ஒரு தொகுதி டெபாசிட் கிடைத்து விட்டாலே வெற்றி விழா கொண்டாட வேண்டியது தான் .

இந்த அரசியல் கூட்டணிகளை நிராகரிக்க  '49 (o)'   தான். . ஆமாம் . '49 (o)' ! 

ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் இன்றைய சூழலில் ஆதரிக்க விரும்புகிறேன் !
பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் வேரூன்ற முயற்சிப்பதை பற்றி நான் ஏற்கனவே கிண்டல் அடித்திருக்கிறேன் . தமிழகத்தில் அந்த தேசிய கட்சியும் ஒரு சர்பத் ஸ்டால் தான் . இருந்தாலும் கூட கன்னியாகுமரி வாக்காளர்கள் பலர் படித்தவர்கள் . எனவே அந்த தொகுதிக்காரர்கள் மட்டும் சிவகாமிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் . என்னவோ இந்த தேர்தலை பொறுத்தவரை ஒரே ஒரு நல்ல வேட்பாளர் தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சிவகாமி தான் . பாராளுமன்றத்திற்கு போக தகுதியும் அவருக்கு இருக்கிறது.
.......................

3 comments:

 1. "என்னவோ இந்த தேர்தலை பொறுத்தவரை ஒரே ஒரு நல்ல வேட்பாளர் தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சிவகாமி தான் . பாராளுமன்றத்திற்கு போக தகுதியும் அவருக்கு இருக்கிறது."

  I honestly agree with you...

  ReplyDelete
 2. //என்ன ஒரு ஹிப்போக்ரசி !' தேர்தல் பாதை திருடர்கள் பாதை 'என்று திருமா முன்பு சொன்னது சரி தான் !!//

  திருமா!திருடா!

  ReplyDelete
 3. சாரு புத்தக விழாவில்
  சிவகாமி பேசியதை கேட்டேன்
  மேல்பூச்சு இல்லாத பேச்சு
  அமைதியான திர்க்கமான பேச்சு
  (தமிழச்சி பக்கத்திலிந்தும் அழகாய் தெரிந்தார்)
  கன்னியாகுமரி மக்கள் கவனிக்கவும்
  thank u RP

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.