Share

Apr 13, 2025

ரிக் ஷா ராசுக்குட்டி

ரிக் ஷா ராசுக்குட்டி 

ரிக் ஷாக்காரன் கணேசன் 

செகண்ட் ஷோ பார்த்து விட்டு வரும் போது கணேசன் ஏ.ஏ. ரோட்டில்  டீக்கடையில் 
" தொர வாங்க,
நம்ம பலகாரம் சாப்பிட்டு வீட்டுக்கு போங்க"

டீக்கடையில் மூன்று 'பன்' வாங்கி, பன்ன பிச்சிப்போட்டு பால் சேர்த்து அடுப்பில் வைத்து, ஜீனி போட்டு கிண்டி சுட சுட உண்ணத்தந்திருக்கிறான்.
ருசி பிரமாதம்.
பல தடவை இப்படி மறக்க முடியாத பின்னிரவு உபசரிப்பு. 

ஆரப்பாளையத்தில் 
குடிசை வீட்டில் பட்டதாரி கவுன் போட்ட போட்டுக்கொண்டு கணேசன் எடுத்த போட்டோ, டாக்டர் ஸ்டெதாஸ்கோப் போட்டு கணேசன், போலீஸ் அதிகாரி யூனிபார்மில் அதே கணேசன். ஃப்ரேம் போட்டு சுவற்றில்.
குடிசைக்குள் குனிந்து  நுழைந்து பார்த்த போது ரிக் ஷா கணேசன் விசித்திர ரசனை மறக்கிற விஷயமா?
ரிக்ஷா கணேசன் படித்து, பின் எம்ஜிஆர் போல ஷேக்ஸ்பியர் படித்து விட்டு 
ரிக் ஷா ஓட்டிக்கொண்டிருந்தார் போல என்று எண்ணி விட வேண்டாம்.

அவர் படித்தவரல்ல.

 ஆசையோடு போட்டோ ஸ்டுடியோவிற்குப் போய் வித விதமாக தன்னை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டவர்.
உளவியல் பின்னணி விசித்திரமானது.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஏக்கம் கொண்டிருந்தார்.


ரொம்ப வருஷம் கழிச்சி ராசுக்குட்டி படத்தில் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்த போது யாரிடமும் கணேசன் பற்றி சொல்லவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு (11.04.2025) டைரக்டர் பாக்யராஜ் சாரிடம் கணேசன் பற்றி சொன்னேன்.


There are so many Rasukkuttis around here. Bhagyaraj always portrayed sparks of such lively characters in his movies

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.