Share

Apr 13, 2025

ரிக் ஷா ராசுக்குட்டி

ரிக் ஷா ராசுக்குட்டி 

ரிக் ஷாக்காரன் கணேசன் 

செகண்ட் ஷோ பார்த்து விட்டு வரும் போது கணேசன் ஏ.ஏ. ரோட்டில்  டீக்கடையில் 
" தொர வாங்க,
நம்ம பலகாரம் சாப்பிட்டு வீட்டுக்கு போங்க"

டீக்கடையில் மூன்று 'பன்' வாங்கி, பன்ன பிச்சிப்போட்டு பால் சேர்த்து அடுப்பில் வைத்து, ஜீனி போட்டு கிண்டி சுட சுட உண்ணத்தந்திருக்கிறான்.
ருசி பிரமாதம்.
பல தடவை இப்படி மறக்க முடியாத பின்னிரவு உபசரிப்பு. 

ஆரப்பாளையத்தில் 
குடிசை வீட்டில் பட்டதாரி கவுன் போட்ட போட்டுக்கொண்டு கணேசன் எடுத்த போட்டோ, டாக்டர் ஸ்டெதாஸ்கோப் போட்டு கணேசன், போலீஸ் அதிகாரி யூனிபார்மில் அதே கணேசன். ஃப்ரேம் போட்டு சுவற்றில்.
குடிசைக்குள் குனிந்து  நுழைந்து பார்த்த போது ரிக் ஷா கணேசன் விசித்திர ரசனை மறக்கிற விஷயமா?

ரொம்ப வருஷம் கழிச்சி ராசுக்குட்டி படத்தில் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்த போது யாரிடமும் கணேசன் பற்றி சொல்லவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு (11.04.2025) டைரக்டர் பாக்யராஜ் சாரிடம் கணேசன் பற்றி சொன்னேன்.


There are so many Rasukkuttis around here. Bhagyaraj always portrayed sparks of such lively characters in his movies

Apr 9, 2025

168th 169th Episodes in Murasu TV

R.P. Rajanayahem 168th 169th Episodes 
R.P. ராஜநாயஹம் 
சினிமா எனும் பூதம் 

முரசு டிவியில் 

13.04. 2025 ஞாயிற்றுக்கிழமை 

20.04.2025 ஞாயிற்றுக்கிழமை 

காலை எட்டரை மணிக்கு 

ஜெமினி ஸ்டூடியோஸ் S.S. வாசன் 

ஏ.வி. எம்  ஸ்டுடியோஸ் A.V. மெய்யப்பன் 
......

'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல்                                                                   ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
R.P. ராஜநாயஹம் 
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது.

......

Apr 4, 2025

போக் ரோடு சிவாஜி வீடு

08. 01. 1994 


ஜெமினி கணேசனுடன்
 சில மணி நேரங்கள் அளவளாவிக்கொண்டிருந்த போது
சிந்திய சுவாரசியமான விஷயம்
" சிவாஜி கணேசன் இப்ப இருக்கற 
போக் ரோடு வீடு முன்னால விலைக்கு வந்தப்ப எங்கிட்ட தான் வந்தாங்க. எனக்கு வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்புறம் தான் சிவாஜி கிட்ட கேட்டாங்க. அவர் வாங்கினாரு."
Loose words are gold coins.

ஜெமினி கணேசன் அப்ப அந்த வீட்ட விக்க வந்த ஹவுஸ் ஓனர் யாருன்னு கூட சொன்னாரு. 
இப்ப ஞாபகத்தில வரல.

பாரம்பரியமான பழமையான வீட்டுக்கு  mystic fictional nature உண்டு. 
எமிலி ப்ரான்ட்டியின் 'உதரிங்க் ஹைட்ஸ்' நாவல் நினைவுக்கு வருகிறது.
"blowing with a dull roaring sound". 

Emily Bronte 's Wuthering heights.

Apr 1, 2025

Fool and April 1st

Fool and April 1st

"பக்கத்து தெருவில சேவல்குட்டி இருக்காமே"

"இன்னக்கி யார் என்ன சொன்னாலும் நம்பாம கவனமாயில்லன்னா முட்டாக்கழுத  ஆயிடுவோம்"





Shakespeare's "A Midsummer Night's Dream," 

The most  quote involving a donkey (or "ass") is Bottom's transformation into an ass-headed creature,
 with his companions reacting with fear and humor, as seen in lines like "O Bottom, thou art changed! What do I see on thee?" and "You see an ass head of your own, do you?". 

Puck, a mischievous fairy, casts a spell that changes Bottom, a weaver and amateur actor, into an ass-headed creature. 

Recollect Another Shakespeare's two different quotes below on 'Fool' and 'April'

"Better a witty fool than a foolish wit."

"April hath put a spirit of youth in everything."

Mar 26, 2025

Cat And Mouse strategy

Who will bell the Cat? 
Cat And Mouse strategy

Mouse nail polishing the Cat.
The cat's claws may be sharp, but it's the mouse's wits that keep it safe.
In the game of life, even the smallest creature can outsmart the mightiest predator.

அமெரிக்கன் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் ஜான் சகாயம்

ஜான் சகாயம் இறந்து விட்டாரா?

Dr. Faustus என்றாலே நினைவுக்கு வரும் ஜான் சகாயமா? அடையாளம் தெரியவில்லையே.

"ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை" கட்டுரையில் பேராசிரியர் ஜான் சகாயத்தையும் குறிப்பிட்டிருக்கிறேன்.
"ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் மிகவும் விசேஷமானவர்கள். வசந்தன் தான் எனக்கு ஹேம்லட். நெடுமாறன்தான் மார்க் ஆண்டனி. ஜான்சகாயம் தான் 
டாக்டர் ஃபாஸ்டஸ். 
தமிழ் சாலமன் பாப்பையாவின் வகுப்பைவிட வெளியேதான் அவர் பேச்சு சுவாரசியமாயிருக்கும்."

அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய பேராசிரியர்களில் மறக்கவே முடியாத ஆளுமை.

வகுப்பில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்.
பல முறை கண்டிக்கப்பட்டிருக்கிற ராஜநாயஹம்.

குறும்பு ராஜநாயஹம் பற்றிய
 ஜான் சகாயம் sarcastic satire 
"Gabie , Try to get a degree. You won't be handcuffed when you get a degree."

 ஜான் சகாயமா புகைப்படத்தில்?

வகுப்பெடுக்கும் போது சீரியஸ் ஆக இருக்கிறார் என்று தோன்றியதுண்டு. 
ஆனால் இடையிடையே subjectக்கு relevant ஆக இல்லாவிடினும்  inconsequential remarks he was making as part of a polite lecture.

This 'மல்லிகை மன்னன் மயங்கும்' business 
என்று ஜான் சகாயம் சார் சொன்னது பசுமையாக மனதில் பதிந்திருக்கிறது.

நான் எடிட் செய்த ( A book of blank verses composed underneath a bough,
 edited by Gabie) "மரத்தடி மகாராஜாக்கள்" நூலில் 
என் காதல் வசன கவிதையை('கூடுமானால் இந்த பாத்திரம் என்னை விட்டு விலகட்டும்') வரிக்கு வரி ரசித்து படித்துப் பாராட்டினார்.

Steel heart against sentiments and emotions


Steel heart against sentiments and emotions

சம கால நடப்புகள் பற்றிய 
கடும் அதிர்ச்சியோ, 
அதீத பரவசமோ எப்போதுமே கிடையாது. முடிந்தவரை எல்லோருமே விவாதிக்கும் விஷயங்களை 
தொட விரும்பியதில்லை.

Mar 24, 2025

Child Prodigies - Miniature Adults

ஜூடா (12 வயது)
வெரோனிகா (13 வயது)
Siblings.
இருவரும் Study from Home.
US syllabus. Junior College படிக்கிறார்கள்.

Wondrous children.

B.tech எல்லாம் முழுமையாக படித்திருக்கிறார்கள்.

இலக்கியம் அத்துப்படி.

ஆங்கிலத்தில் தான் வாசிப்பு.
க்ரைம் அண்ட் பனிஷ்மென்ட் நாவல் பற்றி 
பிக்சர் ஆஃப் டோரியன் க்ரே
லிட்டில் விமன் நாவல்கள் பற்றியெல்லாம் 
பதின்மூன்று வயதில் வெரோனிகா விமர்சனப் பார்வையுடன் தெளிவாக பேசுகிறாள்.
ஜேன் ஆஸ்டன் படித்திருக்கிறாள்.

  பன்னிரெண்டு வயது குழந்தை ஜூடா கேட்சர் இன் த ரை படித்திருக்கிறான்.

Little Prince, Outsider, Thus spoke Zaradhustra 
படிக்க சொன்னேன்.
உடனே குறித்துக் கொள்கிறார்கள்.

Both children are voracious readers. They read a lot in English.

Linguistic scholars. 

வெரோனிகா அழகாக பாடுகிறாள்.
She sang a song " I don't understand what you have spoken" 
Properly.

ஜூடா வாத்தியங்கள் பரிச்சயம்.

ஜூடாவுக்கு டெக்னாலஜி ஆர்வம் அதிகம்.
தேடலில் அடுத்தடுத்து தாவிக்கொண்டே இருக்கிறான்.

நான் பாடிய பாடலை ஆடியோ ரிக்கார்ட் செய்து இப்போது இசை கோர்த்து விட்டான்.

குழந்தைகளின் ஆர்வங்களுக்கு
 முழு சுதந்திரம் தரும் பெற்றோர் 
ஜெபா, ஜாஸ்வா.
Gifted parents.
Talented siblings.

Vanity Van


Vanity Van

சினிமால வேனிட்டி வேன் வந்தபோது நட்சத்திரங்களின் வசதி, அதன் செளகரியம் தாண்டி,
 முகச்சுளிப்பு பல முந்தைய திரை ஆளுமைகளிடம் இருந்து பெரு மூச்சுடன் எழுந்ததுண்டு.
பாலாஜி, பஞ்சு அருணாசலம் போன்றவர்களுக்கு பிந்தைய படத்தயாரிப்பு பட்ஜெட் பற்றியெல்லாம் கடும் கருத்து வேறுபாடு, கசப்புணர்வு இருந்தது. கேரவன் வேன் குறித்த அதிருப்தி பற்றி சொல்ல வேண்டியதில்லை. காலம் மாறிவிட்டதை அதிர்ச்சியுடன் கவனித்தார்கள்.

1960களில் 70களில் நடிப்பில் தனித்த பாணியுடன் அசாதாரண வெற்றி பெற்ற தர்மேந்திரா. சிரிக்கும் போது ஜவஹர்லால் நேருவின் Beaming Smile.
படப்பிடிப்பிற்கிடையே 
கயிற்று கட்டிலில் Siesta.

Mar 22, 2025

அருண்குமார் குமாரவேலு

அற்புதமான அருமை நண்பர் அருண்குமார் குமாரவேலு அவர்களுடன் முதல் முறையாக
 21.03. 2025 வெள்ளிக்கிழமை மதியம் பீளமேட்டில் சந்திப்பு.
வேலை நெருக்கடியிலும் பெருந்தன்மையோடு தேடி வந்தார். நெகிழ்ச்சி.
செல்ஃபி எடுக்க மறதி.

https://www.facebook.com/share/p/15cyCDAFWu/

Mar 18, 2025

சேற்றுத்துளி தெளித்த தாமரை - Caravaggio painting

Caravaggio painting 

 "சேற்றுத்துளி தெளித்த தாமரை போல்
சீதை பிரகாசமாகவும் இருந்தாள்.
பிரகாசமாக இல்லாமலும் இருந்தாள்."

தி .ஜானகிராமன் இதை  'ஆரத்தி' சிறுகதையில் சொல்கிறார் .

கம்பன் சொன்னதைத் தான் மேற்கோள் காட்டியிருக்கிறாரா? ராமாயண பாகவதரின் மகன் தி.ஜானகிராமன்.

சேற்றுத்துளி தெளித்த தாமரை - Caravaggio painting

Caravaggio painting 

 "சேற்றுத்துளி தெளித்த தாமரை போல்
சீதை பிரகாசமாகவும் இருந்தாள்.
பிரகாசமாக இல்லாமலும் இருந்தாள்."

தி .ஜானகிராமன் இதை  'ஆரத்தி' சிறுகதையில் சொல்கிறார் .

கம்பன் சொன்னதைத் தான் மேற்கோள் காட்டியிருக்கிறாரா? ராமாயண பாகவதரின் மகன் தி.ஜானகிராமன்.

Mar 17, 2025

Wondrous

பீளமேடு 
மசக்காளியம்மன் ரோடு
பாலன் நகரில் 
மகன் அஷ்வத் குடியிருக்கும் வீட்டின் மாடியில் குடியிருக்கும் செல்வாவின் அப்பா பெயர் 
அஷ்வத்தின் அப்பா பெயர் தான்.
செல்வா அப்பாவின் இனிஷியல் கூட R.P. தான்.
Rare Coincidence.
Wondrous.

"This is wondrous strange. There are more things in heaven and earth, than are dreamt of in your philosophy."
 - Shakespeare in Hamlet

Mar 14, 2025

Appreciation Star

Appreciation Star

கோயம்புத்தூர் பீளமேடு, காலை.
எல்லா பள்ளிக்குழந்தைகள் போலவே தான் அதி காலை எழுந்து காலை கடன் முடித்து சீருடை அணிந்து, சாப்பிட்டு விட்டு, நேற்று மாலை செய்து முடித்த 
'ஹோம் ஒர்க்' சரி பார்த்து, கிளம்புகிற நேரத்தில் பூக்குட்டி அவசரமாக ரொம்ப சின்ன star எடுத்து ராஜநாயஹம் கையில், மணிக்கட்டுக்கு மேலே விரல்களுக்கு கீழே ஒட்டி விட்டு 
சொன்னாள் "Very good தாத்தா. Appreciation star. எடுக்கக்கூடாது. Sixty minutes"

கிச்சனில் பிஸியாயிருந்த ஆச்சியை "Very good ஆச்சி..கையை நீட்டு.  Congratulations" 
star ஒட்டி விட்டு 
" தாத்தா, ஆச்சிக்கு rule என்னன்னு சொல்லிடு" 

பூக்குட்டி அப்பா அஷ்வத்துடன் கிளம்பும் போதே ஆச்சியிடம் 
ராஜநாயஹம் தாத்தா குரல்
" எப்ப எடுக்கணும்னு சொல்றேன்"

Mar 7, 2025

Besant Nagar Beach Singer Rajanayahem

What அடி ராக் mummy 
What what thoughtsஸு,
My chestடு shakeகுதடி

.....

இப்ப பெசண்ட் நகர் பீச்சில் பாடும் போது 
கேள்வி "உங்க வயசு என்ன சார்?"

ராஜநாயஹம் பதில் : Ninety Six running.
இப்படி சொல்லும் போது கேட்கிற யாருமே திகைத்து விளம்புவது
'என்ன சொல்றீங்க? நம்பவே முடியல. 
96 வயசா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே.
உங்கள பாத்தா 95 வயசு தான் தெரியுது. ஏன் பொய் சொல்றீங்க. 95 வயசுங்கறத ஏன் மறைக்கிறீங்க. 96 வயசுன்னு மிகையா சொல்றீங்களே.'

இன்றைக்கு 16 வருடங்களுக்கு முன்
2009ம் ஆண்டிலேயே 
வலைத்தளத்தில் ராஜநாயஹம் புகைப்படங்கள் காணக்கிடைத்ததில்லை.
நிறைய யூகங்கள். 

பழைய எழுத்தாளர்,
 ராஜநாயஹத்திடமே சொன்னார். 'வலையுலகில் "பெரியவர் ராஜநாயஹம்" என்று தான் முத்திரை.

அப்போது பின்னூட்டத்தில் கூட கேள்வி
" இந்த தள்ளாத வயதில் உனக்கு இவ்வளவு திமிரா?"

2012ல் தான் மூத்த மகன் கீர்த்தி ஃபேஸ்புக்கில், ப்லாக்கில் ராஜநாயஹம் புகைப்படங்களை பழைய பதிவுகளிலும் கூட upload செய்தான்.

பெசண்ட் நகர் பீச் 
R.P. ராஜநாயஹம் பாடிய பாடல்கள் 

1.    03. 03. 2025

கூன் பிறையை போற்றிடுவோம்.
 குர் ஆனை ஓதிடுவோம் 

2.    01. 03. 2026

அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்

https://www.facebook.com/share/p/15NFSeJZho/

அமெரிக்கன் காலேஜில் படிக்கும் போது 
ராஜநாயஹம் கலக்கல்.

மரத்தடியிலும்,
 காஸ்மோ பாலிட்டன் க்ளப்  பஸ்ஸிலும்

"அடி What அடி ராக்mummy What what thoughtsஸு.
My chest Shakeக்குதடி, சிறு Eyeஆடி Noseகுத்தி,
மாணிக்க red, மச்சானை pullலுதடி.
Five,six rupeesஸுக்கு மணிgarland
Your neckக்குக்கு suitableலடி
அடி our city மீனாட்சி seeத்தாலும்
அவ Eyesக்கு sorrowவடி
அடி without fail I youவை jail எடுப்பேன்.
Single double ஆக இருக்கட்டுமே
அட Aunti, அவ பெத்த U-foam மெத்தை
அட ராக்mummy Marriage வைபோகமே!
Decorative மெஜுராவில்  White mummy story, daily daily Walkக்குதடி.”https://www.facebook.com/100006104256328/posts/4075347439345358/?app=fbl

Mar 4, 2025

ரோஷம்

திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தில் அமுதன் அடிகள் என்னிடம் கு.அழகிரிசாமியின் சிறுகதைகளை அங்கே ஒரு பிரபலத்திற்கு தந்துதவும்படி சொன்னார். ”புத்தகங்கள் திரும்ப கிடைக்கும். நான் பொறுப்பு” என்றார்.

அதன் படி அந்த மனிதர் என் வீட்டுக்கு வந்து என்னிடம் இருந்த அனைத்து அழகிரிசாமி சிறுகதை தொகுப்புகளையும் வாங்கிச்சென்றார்.
அவருக்கு அழகிரிசாமி கதைகள் கட்டுரை எழுத வேண்டியிருக்கிறதாம். ஒரே மாதத்தில் திருப்பித்தருவதாக சொன்னார். ஆறு மாதமாக தரவேயில்லை.

அமுதன் தர்மசங்கடத்துடன் கையை பிசைந்தார். என்ன இந்த மனிதர் இப்படியிருக்கிறார் என்று வேதனைப்பட்டார்.

நான் மனந்தளரவில்லை. அவருடைய வீட்டுக்குப் போய் விட்டேன். அவருடைய மனைவி தான் இருந்தார். புத்தகத்தை திருப்பித்தர நினைவு படுத்தி விட்டு வந்தேன்.

ஒரு வாரம் கழித்து அவர் தன் மகளை அழைத்துக்கொண்டு வந்தார். 
முகம் விளங்கவில்லை. 
புத்தகங்களை திருப்பி கேட்டு அவரை அவமானப்படுத்தி விட்டதாக கருதுகிறார் என்பது அவர் முக விலாசத்தில் தெளிவாக தெரிந்தது. 

“நானெல்லாம் ரொம்ப கௌரவமானவன். ரோஷமானவன்” டயலாக் சொல்லி புத்தகங்களை திருப்பி தந்து விட்டு
 நன்றி சொல்லாமலே 
திரும்பிச் சென்று விட்டார்.

Beach songs

03.03. 2025
Besant Nagar Beach 
Morning

1. ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார் 

2. Koraa Kaagaz Thaa Ye Man Meraa
Likh Liyaa Naam Is Pe Teraa

3. Khilte hain gul yahan khil ke bikharne ko

Milte hain dil yahan milke bichhadne ko

https://www.facebook.com/share/p/14vAkbvBgC/

https://www.facebook.com/share/p/141h4ewfkb/

Mar 3, 2025

தீரா வன்மம்



அவர் கவிஞர்.  கலைஞரின் பெரும் பக்தர். அவரைப் பார்க்க போயிருந்த போது,
எம்ஜிஆர் பற்றி எரிச்சலோடு " நீங்க
 ஒரு தேவடியாப்பயல பத்தி எழுதுறீங்களே. அவன் இங்க தான் இருந்தான்" 
Tiger footed rage.The dragon and his wrath.

இன்னொருவர் 
சிவாஜியின் அத்தியந்த பக்தர்.
அவரோடு பேசும் போது எம்ஜிஆர் பெயரையே உச்சரிப்பதில்லை என தெரிய வந்தது. " அவன் பேரயே நான் சொல்ல மாட்டேன் " 

 Tongue  tells the anger of heart

- Shakespeare

96 வயசா? பாத்தா 95 தான் தெரியிது


இப்ப பெசண்ட் நகர் பீச்சில் பாடும் போது 
கேள்வி "உங்க வயசு என்ன சார்?"

ராஜநாயஹம் பதில் : Ninety Six running.
இப்படி சொல்லும் போது கேட்கிற யாருமே திகைத்து விளம்புவது
'என்ன சொல்றீங்க? நம்பவே முடியல. 
96 வயசா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே.
உங்கள பாத்தா 95 வயசு தான் தெரியுது. ஏன் பொய் சொல்றீங்க. 95 வயசுங்கறத ஏன் மறைக்கிறீங்க. 96 வயசுன்னு மிகையா சொல்றீங்களே.'


இன்றைக்கு 16 வருடங்களுக்கு முன்
2009ம் ஆண்டிலேயே 
வலைத்தளத்தில் ராஜநாயஹம் புகைப்படங்கள் காணக்கிடைத்ததில்லை.
நிறைய யூகங்கள். 

பழைய எழுத்தாளர்,
 ராஜநாயஹத்திடமே சொன்னார். 'வலையுலகில் "பெரியவர் ராஜநாயஹம்" என்று தான் முத்திரை.

அப்போது பின்னூட்டத்தில் கூட கேள்வி
" இந்த தள்ளாத வயதில் உனக்கு இவ்வளவு திமிரா?"

2012ல் தான் மூத்த மகன் கீர்த்தி ஃபேஸ்புக்கில், ப்லாக்கில் ராஜநாயஹம் புகைப்படங்களை பழைய பதிவுகளிலும் கூட upload செய்தான்.

பெசண்ட் நகர் பீச் 
R.P. ராஜநாயஹம் பாடிய பாடல்கள் 

1.    03. 03. 2025

கூன் பிறையை போற்றிடுவோம்.
 குர் ஆனை ஓதிடுவோம் 



2.    01. 03. 2026

அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்

https://www.facebook.com/share/p/15NFSeJZho/

Feb 23, 2025

Besant Nagar Beach Fun

22. 02. 2025
Evening 

- Besant Nagar Beach 

5 p.m

Hare Rama Hare Krishna


- Besant Nagar Beach 
6.15 p.m

ராஜநாயஹம் பாடிய பாடல்கள் 

1. அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்.
பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்.

2. தேவன் கோவில் மணி ஓசை 
நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும் பாசத்தின் ஓசை மணி ஓசை 

3. கோரா காகஸ் தா ஏ மன் மேரா
லிக்லியா நாம் இஸ்பே தேரா 

4. கில் தேஹைன் குல் யஹான் 
கில் கேபி கர்ணகோ
மில் கேபி சடுணகோ
மில் தேஹைன் தில் யஹான்

Feb 17, 2025

மஹா சிவராத்திரி மஹோற்சவம். பெசண்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோயில்






15.02. 2025
7 pm

மஹா சிவராத்திரி மஹோற்சவம் - 2025

பெசண்ட் நகர் ஸ்ரீரத்னகிரீஸ்வரர் ஆலயம் 
நாதஸ்வரம் 
செந்தன் அமுதன் & பார்ட்டி 
மங்கள இசை

....

16.02. 2025

7.46 pm

ரத்னகிரீஸ்வரர் ஆலயம் 

சீர்காழி சிவசிதம்பரம் 

1."இல்லை என்பான் யாரடா 
என் அப்பனை
தில்லையை பாரடா"

ஹரி காம்போதி ராகம்

சுத்தானந்த பாரதி கீர்த்தனை

8.10 pm

2. "பூ மேல் வளரும் அன்னையே,
ஒளி பொருந்தும் பொன்னே
இரட்சிப்பாய் என்னையே
செழுங்கமலப் பூ மேல் வளரும் அன்னையே"

ஆனந்த பைரவி ராகம்

மழலை சிதம்பர பாரதி கீர்த்தனை

8.30 pm

3.  "சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள்"

சிந்து பைரவி ராகம் 

உளுந்தூர்பேட்டை சண்முகம் பாடல்

......

17. 02. 2025 
திங்கட்கிழமை 

7 pm.

மஹா சிவராத்திரி மஹோற்சவம் 

ரத்னகிரீஸ்வரர் கோவிலுக்கு போகும் போது சென்ற இரண்டு நாட்களாக நிகழ்ச்சிகளுக்கு  உடை Tee shirt, shorts.
டவுசர் போட்டு வருவதை கவனித்து விட்டு 
வேட்டி கொடுத்து கட்டிக்கொள்ள வைத்து பின் நாற்காலியில் அமரச்சொன்னார்கள்.
Be a Roman in Rome.


எல். புவனேஸ்வரி உபன்யாசம்.
நாயன்மார்கள் பற்றி 

..

ரத்னகிரீஸ்வரர் ஆலயம் 
மஹா சிவராத்திரி மஹோற்சவம் 

18.02. 2025

7.30 pm


காயத்ரி கிரீஸ்  வாய்ப்பாட்டு

"சம்போ மஹாதேவா சங்கர் கிரிஜா ரமணா

சம்போ மஹாதேவா சரணாகத 
 ஜன ரக்சாகர அம்போருஹா .."

காமவர்தணி (பந்துவராளி) ராகம் 

தியாகராஜர் கீர்த்தனை

..

7.50 pm 

"அகிலாண்டேஸ்வரி ரக்ஸமம் அகாம
சம்ப்ரதாய நிபுண ஸ்ரீ"

துஜாவந்தி ராகம்

முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனை

..

8 pm

"நம்பி கெட்டவர் எவரய்யா?"

ஹிந்தோளம் ராகம் 

பாபநாசம் சிவன் பாட்டு

..

8.15 pm

"வானனை மதி சூடிய மைந்தனை,
தேனனை, திரு அண்ணாமலையனை,
ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
ஆனனை,---அடியேன் மறந்து உய்வனோ? "

திருநாவுக்கரசர் பாடல் 

கீரவாணி ராகம்



......

மஹா சிவராத்திரி மஹோற்சவம் 

20.02. 2025 

பத்மபூஷன் திருச்சூர் V. ராமச்சந்திரன் கச்சேரி 

6.45 pm

தத்வமறிய தரமா 

ரீதிகௌளை ராகம் 

பாபநாசம் சிவன் பாட்டு 

......

7 pm

ஆனந்த நடமாடுவார் தில்லை

பூர்வி கல்யாணி ராகம் 

இயற்றியவர் நீலகண்ட சிவன்

.....

7.10 pm

"ஸ்ரீ வைதேக ராகம்"

வைத்தீஸ்வரன் கோயிலில் பாடப்படும் அபூர்வ கீர்த்தனை

....

"உன்னடியே கதியென்றடைந்தேன் தாயே"

பஹுதாரி ராகம் 

ஜி. என். பாலசுப்பிரமணியம் இயற்றிய கீர்த்தனை.
 எம்.எல். வசந்த குமாரி, திருச்சூர் ராமச்சந்திரன் இருவருக்கும் குருநாதர் ஜி.என்.பி.

.......

7.45 pm

"பார்வதி நாயகனே சரணம்"

சண்முகப்ரியா

பாபநாசம் சிவன் பாட்டு

......

22.02.2025

மஹா சிவராத்திரி மகோற்சவம் 

டாக்டர் M. நர்மதா 
வயலின் 

பூங்குளம் சுப்ரமணியம் 

கடம் J. ராமதாஸ்


7.15 pm

"நாத தனுமனுஷம்" 
தியாகராஜா
சித்தரஞ்சனி 


7.30 pm

முத்து தாண்டவர்
மாயமாளவ கௌள

பைராகி ராகம் ரேவதி 
ஓ சம்போ

"பராத்பரா"
வாச்சஸ்பதி ராகம்
பாபநாசம் சிவன்
இளைய சிவன் பற்றி அருணகிரிநாதர் 
"முத்தை தரு பத்தி திரு நகை"
கௌள ராகம்

......

23.02.2025  Evening 

 Maha Shivratri Mahotsavam
வைஷ்ணவி ஆனந்த் பாட்டு
ஸ்ரத்தா வயலின் 
மடிப்பாக்கம் சுரேஷ் மிருதங்கம் 
கல்யாணி விஸ்வநாதன் தம்பூரா 

6.50. pm 

                                                           
இன்னமும் சந்தேகப்படலாமோ 
அநுபல்லவி                                                                                                                                  
பொன்னம்பலந்தனில் தாண்டவமாடிய
பொன்கழலை நினைவில் வைக்கத் தெரிந்த நீதான் 
இன்னமும் சந்தேகப்பட லாமோ?

கோபால கிருஷ்ண பாரதி 
கீரவாணி ராகம் 

....

7 pm 
"இலலோ ப்ரணதார்த்தி ஹருடனு சுபே ரெவரிடரே "

தியாகராஜ கீர்த்தனை 

அடானா ராகம் 

.....

7.20 pm

"அருள வேண்டும் தாயே  அங்கயற் கண்ணி நீயே
எனக்கருள வேண்டும் தாயே... "    

எம்.எம். தண்டபாணி தேசிகர் கீர்த்தனை 

சாருமதி ராகம்

.....


ஏதய்யா கதி எனக்கு                                          ஏதய்யா கதி

மா தயாநிதி உமாபதி சுகுமார வரகுணநிதி
நீதான் அல்லது வேறு      

கோட்டீஸ்வர அய்யர் இயற்றிய பாடல் 

சல நாட்டை  ராகம்

....

" சந்திர சூட சிவசங்கர் பார்வதி
ரமண நினகே நமோ நமோ" 

புரந்தரதாஸர் கீர்த்தனை 

.....