யக்ஞோபவிதா முப்புரி நூல்
அம்பது வருஷ கத ரெண்டு
1.வெங்கட் சாமிநாதன் டெல்லியில் இருந்து சென்னைக்கு வருகிறார்.
ரயில் நிலையம். தன்னைப் பார்க்க வந்த சச்சிதானந்தத்திடம் "'யோவ் சச்சி,சொந்த பந்தங்கள பாக்க வேண்டியிருக்கு. ஒன் பூணூல கழட்டிக்கொடுய்யா."
மௌனி உபாசகர் சச்சியை
பிராமணர் என்றே சாமிநாதன் நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
....
2. தெலுங்கு நடிகர் மோகன் பாபு நடித்து வெளி வராத பழைய தமிழ் படம்.
'புது யுகம் பிறக்கிறது'
பைலட் ப்ரேம்நாத் ப்ரொட்யூசர் சலீம் எடுக்க ஆரம்பித்து ட்ராப் ஆகி விட்டது.
கதாநாயகன் மோகன் பாபு. இளம் பிராமணர் வேடம்.
ப்ரேக் முடிஞ்சு மீண்டும் ஷாட் எடுக்கிற நேரம்.
பஞ்சகச்சம் கட்டியிருந்த தமிழறியா மோகன் பாபு வெறும் மார்பாய் இருக்கிறதை கவனித்து விட்டு,
நெஞ்சில் குறுக்காக விரலை ஆட்டி ஆட்டிக்காட்டி
அசிஸ்டென்ட் டைரக்டரைப் பார்த்து மழலை கூப்பாடு 'பூலு பூலூ பூலூ '
"ணூ" மறந்து போச்சி, பாவம் .
'பூலு பூலூ பூலூ'
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.