Share

Sep 4, 2024

சிவனணைந்த பெருமாள்

வேடிக்க - 15

1.'வாழை'யில பையன் பெயர் சிவனணைந்தான். 
இந்த பெயர் எங்கள் குடும்பத்திலேயே உண்டு.
தாய் மாமா பெயர் 'சிவனணைந்த பெருமாள்'. அம்மா வேலம்மா தம்பி.
விக்ரமசிங்க புரம் 
'பசுக்கடவெள' தளவா பிள்ள மகன் சிவனணைந்தபெருமாள் 
தவமிருந்து பெற்ற பிள்ளை என்பதால் 'பண்டாரம்' என்று pet name. 

குள்ளமான, நல்ல லட்சணமான தாய்மாமா சிவனணைந்த பெருமாள் 
எம்.ஜி.ஆர் ரசிகர். பாபநாசத்தில் நாடகத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். 
கல்யாண மேடையில் தாலி கட்டும் மாப்பிள்ளைக்கு காக்கா வலிப்பு வரும்படியான  காட்சியில் பிரமாதமாக நடித்து  கலக்கிய மாமா பற்றி பலரும் சொல்வார்கள்.  

மாமாவோட பழனி ஜெயராம் தியேட்டரில்
எம்ஜிஆர் "பணத்தோட்டம்" பார்த்தது பசுமையாக நினைவில்.

நல்ல மேடைப் பேச்சாளர். சத்யமங்கலம் பெரிய கொடிவேரி பள்ளி நிகழ்ச்சிகளில் சொற்பொழிவு சிறப்பாக செய்வதை சிறு பையனாக ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பார்த்திருக்கிறேன். நேர்த்தியாக உடை அணிவார். 
கிறித்துவ புனிதர் லாரன்ஸ் பதிதர்களால் கொல்லப்படும் காட்சியை தத்ரூபமாக விவரித்தார். நெருப்பில் வாட்டி வதைத்த போது லாரன்ஸ் மரண தண்டனையின் போது சொன்னாராம் ' இந்த பக்கம் வெந்து விட்டது. மறு பக்கம் திருப்பிப் போடப்பா '

சத்யமங்கலம் கொடிவேரியில் வாத்தியார் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். 
பட்டப் பெயர் 'குள்ள வாத்தியார்'.
 தாத்தா பாபநாசம் 'பசுக்கடவெள' தளவா பிள்ள, 
'சட' பெரியம்மா, அம்மா வேலம்மா,  குள்ளமானவர்கள் தான். 


மதுரையில் அம்மா அப்பா கல்யாண விசேஷத்துக்கு ஏதோ ஊருக்கு போயிருந்தார்கள்.
வீட்டுக்கு தந்தி வந்தது. 
வாங்கிப்பிரித்தால்
" Sivan Anaintha Perumal Expired"

2. கொட்டுக்காளி படத்தில் கதாநாயகன், கதாநாயகிக்கு பெரிய வேலை எதுவுமே இல்லை. படம் விந்தைகள் காட்டுகிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.