Share

Feb 28, 2024

மொகுடு

மொகுடு

மொகுடான எழுத்தாளர் ( பெரிய எழுத்தாளர் என்று அர்த்தம்)
பற்றி சரவணன் மாணிக்கவாசகம் எழுதிய பதிவைப் படித்து விட்டு இலக்கியவாதி மொபைலில் கூப்பிட்டு பேசியிருக்கிறார். உண்மையில் பேசுகிற மன நிலை, உடல் நிலை இல்லாத நிலை நல்ல  இலக்கிய அந்தஸ்து படைத்தவருக்கு. ஆனாலும் சரவணன் எழுத்தின் உக்ர வீச்சு தான் இலக்கிய வாதி அழைத்த காரணம். உலக இலக்கிய வாசக விற்பன்னர் அவர். 'உங்கள் பதிவைப் படித்தவுடன் பேசாமல் இருக்க முடியவில்லை.'

'The Last Moghul' என்ற நூல் பற்றி மொகுடுவிடம் 
அந்தஸ்தான இலக்கியவாதி குறிப்பிட்டிருக்கிறார். 
மொகிடு உடனே பகர்கிறார் "லாஸ்ட் மொகல் போன வருஷமே நான் படிச்சிட்டேன்"

"இதிலென்ன இருக்கிறது. மொகிடு தான எல்லா புத்தகங்களையும் முந்திப்படிப்பவர்"
முந்திரிக்கொட்ட தனமா கேக்கலாம்.

புத்தகம் பற்றி மொகிடு கிட்ட இலக்கியவாதி பிரஸ்தாபித்தப்ப 
 புத்தகம் பிரசுரமாகி  ஒரே வாரம்  தான்.

 
இதை சரவணன் மாணிக்கவாசகம் சொன்னவுடன் 1998ல் நடந்த விஷயம் நினைவுக்கு வந்து விட்டது.
Memory is my fate. 

கர்நாடக சங்கீதம் பற்றி 'காலக்குறி' பத்திரிகையில் கட்டுரை எழுத வேண்டியிருந்த கொங்கான் எழுத்தாளனுக்காக
இரண்டு ஆடியோ கேஸட்டில் ராஜநாயஹம் விரிவாக பேசிக் கொடுத்த போது, தவித்து கொங்கான் சொன்னான்.
 'யோவ் என்னய்யா,  புது ராஜநாயஹத்த பாக்றேன்யா. பதினேழு வருஷமா அறிமுகம். ஒன்னோட கர்நாடக சங்கீத ஞானம் பற்றி இவ்வளவு காலம் தெரியாம இருந்திருக்கேன். ஆச்சரியம் " 

பல மாதங்களுக்கு பிறகு மனைவி, குழந்தைகளோடு சுற்றுலா தளம் போயிருந்த போது  தற்செயலாக கொங்கான், மொகிடு இருவரையும்
ஒரு சேர பார்க்க வாய்த்தது. சில நிமிட சந்திப்பு.

 மொகிடு அப்ப மொகிடே அல்ல.
 'பச்சா' எழுத்தாளர்.
உற்சாகமாக கொப்பளித்தார் "கொங்கானுக்காக நீங்க கர்நாடக சங்கீதம் பற்றி விரிவா பேசிக் கொடுத்த ரெண்டு காஸட்டையும் கேட்டேன். புன்னாக வராளி ராகத்த பத்தியெல்லாம் பேசி இருக்கீங்க" 

"இதுல என்ன இருக்கு? நீ சங்கீதம் பற்றி பேசுன ரெண்டு காஸட்டையும் காது கொடுத்து கேட்டுருக்காரு. ஒனக்கு பெரும தானேய்யா" என்று கேட்பவர்கள் கேட்கலாம்.

ரெண்டு ஆடியோ கேஸட்ல கர்நாடக சங்கீதம் பத்தி லெக்சர் கொடுத்திருந்தாலும் அதுல புன்னாக வராளி ராகத்த ஒட்டி எதுவுமே பேசலயே..

..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.