R.P ராஜநாயஹம். கலை,இலக்கியம்,இசை,நாடகம்,திரை என அவர் தொட்டு செல்லும் பரப்புகள் ஆகாய விரிவு கொண்டவை.அதிசயக்கத் தக்கவை. இணைய தேடு பொறிகளும் தோற்றுப் போகும் சங்கதிகளின் சரித்திர சாம்ராஜ்யம் அவருடையது.நகையும்,பகடியும்,துயரும்கூத்தும்,தத்துவமும்,தன்னம்பிக்கையும்அவலமும் என தீராத அலைகளை உமிழும் சாகர இதழ்களின் இயக்கம். நான் வியக்காத நாளேயில்லை இந்த ஜீவ நதியின் நீர் முடிச்சுகள் எங்கு தோன்றி எப்படி வற்றாது வழிகிறதென.எழுதியெழுதி மேற் செல்லும் அவரின் நவரசம் சொட்டும் வார்த்தைகளின் ஊர்வலத்தின் பெருங்கூட்டதில் சிறு புள்ளியாய் நானும் நகர்கிறேன் என்பது மனதிற்கு போதுமானதாய் இருக்கிறது. அந்த ஆசுவாசம் தரும் நிழலடியில் இளைப்பாறுதலின் வழி இந்த இடர்மிகு வாழ்வை கடந்து விடலாம் எனும் நம்பிக்கையை இதயத்தில் துளிர்க்க வைக்கிறது. வாழ்வின் இலக்கற்ற ஓடத்தின் துடுப்புகளை அவர் ஒரு போதும் தளர விடுவதேயில்லை. Rajanayahem R.p. ஒரு பெயரல்ல எவராலும்,எப்போதும் துடைத்தெறியவே முடியாது உறைந்து விட்ட அனுபவங்களின் வரலாறு.
- வீரன் மணி பாலமுருகன்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.