பத்து பேர் இருக்கிற இடத்தில் எப்போதும் என்னுடைய நகைச்சுவை வெடிகள் சரம் பட்டாசு போல கொண்டாட்டம், குதூகலமாக இருக்கும். சிரித்து முடியவில்லை என்று வயிற்றைப்பிடித்துக்கொள்வார்கள். I’m always seriously humourous.
இது இன்று நேற்று அல்ல. பள்ளி, கல்லூரி காலத்தில் இருந்து என்னுடைய நகைச்சுவை விருந்து நடந்தே வந்திருக்கிறது. In the trueman there is a joker concealed – who wants to amuse and delight others.
சில வருடங்களுக்கு முன் என்னைப் பற்றி இணையத்திலேயே சினிமா நடிகர் ஒருவர் சொன்னார்.
“ ராஜநாயஹம் தமிழ் திரையுலகில் சிறந்த நகைச்சுவை நடிகராக வந்திருக்க வேண்டியவர். இயக்குனராக முயன்று தோற்றார்.”
இந்த நடிகர் கல்லூரி கால நண்பர். சினிமாவில் கதாநாயகனாகக் கூட நடித்தவர்.
மேலே சொன்னது பற்றி நான் மறுக்க ஒன்றுமில்லை. என்னைப் பற்றி அபிப்ராயம் சொல்ல யாருக்கும் உரிமை இருக்கலாம். என் தகுதி, தோல்விகளை அவரவர் பார்வையில் விமர்சிக்கலாம்.
மேலே சொன்னது பற்றி நான் மறுக்க ஒன்றுமில்லை. என்னைப் பற்றி அபிப்ராயம் சொல்ல யாருக்கும் உரிமை இருக்கலாம். என் தகுதி, தோல்விகளை அவரவர் பார்வையில் விமர்சிக்கலாம்.
’இனிய நண்பர் ராஜநாயஹம்’ என்பதாக என்னை விளித்திருந்தார். சந்திக்க வேண்டும் என்ற தன் ஆர்வம், ஆவலையும் வெளிப்படுத்தியிருந்தார். சந்தோஷம். But I have to steel my heart against sentiments of kindness and pity.
நான் ஒரு மிக அழகான விலையுயர்ந்த ஃபாரின் கோட் இவருக்கு அன்பளிப்பாக கொடுத்திருக்கிறேன். சட்டை கூட கொடுத்திருக்கிறேன். அதனால் நான் அந்த நடிகருக்கு ஒரு இனிய நண்பன் தான் என்று சொல்லப்படுவதை எப்படி மறுக்க முடியும்?
இதை அடுத்து அவர் சொன்ன ஒரு விஷயம் தான் வடி கட்டின பொய்.
“ ஆங்கில இலக்கியம் மட்டுமே படித்துக் கொண்டிருந்த ராஜநாயஹத்தை நாங்கள் தான் ஜெயகாந்தனையும், தி.ஜானகிராமனையும், சுந்தர ராமசாமியையும் படிக்க வைத்தோம்.” என்று ஒரு பெரிய குண்டை தூக்கிப்போட்டிருந்தார்.
ஆங்கில இலக்கியம் படித்தவன் ராஜநாயஹம் என்பது உண்மை தான். இதற்கு மாற்றுக்கருத்து கிடையாது.
ஆனால் அதை அடுத்து அந்த நடிகர் சொன்ன வார்த்தைகள் தான் கடைந்தெடுத்த புளுகு.
ராஜநாயஹத்திற்கு இலக்கிய உலகில் ஒரு அடையாளம் இருக்கிறது. அதற்கான க்ரெடிட்டை இவர் தனக்கு எடுத்துக்கொண்டு விட்டார்!
இலக்கியத்திற்கு ஸ்நானப்ராப்தி கூட இல்லாத நபர்!
’நாங்கள்’ என்பது ஏதோ ஒரு பெரிய இலக்கிய வட்டமோ?
“…. ராஜநாயஹத்தை நாங்கள் தான் ஜெயகாந்தனையும், தி.ஜானகிராமனையும், சுந்தர ராமசாமியையும் படிக்க வைத்தோம்.”
Why should one dress me in deceptive, false statement?
ராஜநாயஹம் செத்த பிறகு தானே இப்படி ஒரு ஆள் பொய் சொல்லலாம்.
எனக்கு தெரியும். அந்த நடிகருக்கும் தெரியும். இவரோ அல்லது இவரைச் சேர்ந்த யாருமோ எனக்கு நவீன தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தவே இல்லை என்கிற உண்மை.
இந்த க்ரெடிட்டை யாருக்காவது கொடுக்க வேண்டுமென்றால் சவ்வாஸ் பரூக் alias பெரிய சேட்டுக்குத் தான் கொடுக்க முடியும். ஆங்கில இலக்கியம் நான் முதலாமாண்டு படிக்கும்போது பெரிய சேட்டு மூன்றாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவர். ஜெயகாந்தனை இவர் தான் எனக்கு வாசிக்கக் கொடுத்தவர்.
சுந்தர ராமசாமியை கல்லூரி காலத்தில் நான் எப்படி முதல் முதலாக வாசித்தேன் என்பதை ’பிரசாதம் செய்த மாயம்’ என்ற என் கட்டுரையில் தெளிவாக நான் எழுதியிருக்கிறேன்.
அந்த நடிகரோ அப்போது எகனாமிக்ஸ் தமிழ் மீடியம்.
இவரிடம் காலத்தால் கொஞ்சமும் transformation ஏற்படவேயில்லை என்பதே இந்தப்பொய் மூலம் தெரிய வருகிறது. பக்குவமடையவேயில்லை. Stagnant person. Hypocrisy இருப்பதால் தான் இப்படியெல்லாம் தம்பட்டமான புளுகு வருகிறது. Stay humble or perish.
யார் அந்த சினிமா நடிகர் கேள்வியை யாரும் கேட்கவே வேண்டாம். ஹேஸ்யமாக இவர்?, அவர்!
- இப்படி கமெண்ட் செய்யவும் வேண்டாம். மார்க்கெட் போன நடிகராக சொல்ல முடியாது. மார்க்கெட்டுக்கே வராத நடிகர்.
- இப்படி கமெண்ட் செய்யவும் வேண்டாம். மார்க்கெட் போன நடிகராக சொல்ல முடியாது. மார்க்கெட்டுக்கே வராத நடிகர்.
……………………………………………………………..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.