Share

Jan 29, 2025

வேடிக்க - 31

வேடிக்க - 31
- R.P. ராஜநாயஹம் 
திருச்சி ரோட்டரி கிளப்பில் Chief guest ஆக கலந்து கொள்ள போன போது, ரயில் பயணத்தின் போது 
டெல்லி குருமூர்த்தியை சந்தித்தேன். காலையில் பெசண்ட் நகர் எலியட்ஸ் பீச்சில் பார்க்கும் வாய்ப்பு.
டெல்லி ஆல் இண்டியா ரேடியோவில் production executive ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பெருமைக்குரிய அனுபவங்களுக்கு சொந்தக்காரர்.
முன்னதாக டெல்லி வானொலி Announcer cum Senior Translater.

தன் வேலை பற்றி குருமூர்த்தி:
"Translator cum announcer and incharge of Tamil unit, வெளிநாட்டு சேவை பிரிவு  தில்லி"

டெல்லி வானொலி பணி பற்றி குரு மூர்த்தி "நான் மூத்த மொழிபெயர்ப்பாளர் மற்றும் அறிவிப்பாளராக   பணிபுரிந்தேன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் பிரிவின் நிகழ்ச்சி பொறுப்பாளராக இருந்தேன்." 

Translator cum announcer and incharge of Tamil unit, வெளிநாட்டு சேவை பிரிவு  தில்லி.

அபூர்வ மனிதர் A.R. ராஜாமணி பற்றி..
ஆரம்ப காலங்களில் ராஜாமணி ராமானுஜ மெஸ்ஸில் தான் இருந்ததாக குருமூர்த்தியிடம் குறிப்பிட்டாராம். போஸ்டல் அட்ரஸ் ராமானுஜர் மெஸ் தான்.

சாகித்ய அகாதமிக்காக திருலோக சீதாராம் குறித்த நூலை ராஜாமணி எழுதியுள்ளார்.

டெல்லி எழுத்தாளர் சங்கத்தை தனி மனிதனாக நடத்திய இலக்கியவாதி.
க.நா.சு, செ.ரவீந்திரனுக்கெல்லாம் ராஜாமணி நெருக்கமான நண்பர். பெண்ணேஸ்வரனோடும் நல்ல பரிச்சயம்.

ராஜாமணிக்கு புரவலர் செ.ரவீந்திரன்.

ராஜாமணி பிரம்மச்சாரி. நிரந்தர வருவாய் எதுவும் இல்லாத நிலையில் வாழ்நாள் முழுவதும் இலக்கிய சேவையே மூச்சாக கொண்டிருந்த உத்தமர்.

தமிழ் பத்திரிகைகளில் டெல்லி விஷயங்கள் எழுதியிருக்கிறார்.

சென்னை வந்தால் ந. முத்துசாமி கூத்துப்பட்டறையில் தங்குவார்.

ராஜாமணி டெல்லி எழுத்தாளர் சங்கத்தை வைத்து எழுத்தாளர் மாநாடு நடத்தியவர்.

ஜெயகாந்தன் டெல்லி வந்த போது ராஜாமணியை சுட்டிச் சொன்னார் 
"அவனக்கூப்புடு. 
என் ஃப்ரண்டு ராஜாமணி"

A.R. ராஜாமணி பற்றி 
அற்புத மொழிபெயர்ப்பாளர் ஷாஜகான் கூறுகிறார்
 "ராஜாமணி நல்ல வாசகர். தில்லியில் நடந்த இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு தவறாமல் வருகை தருவார்.  நிகழ்ச்சிகளைப் பற்றி பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பினாரே தவிர, நல்ல எழுத்தாளர் என்று சொல்ல இயலாது. குழு மனப்பான்மைக்கு ஆளாகாதவர் என்பதால், எல்லாருக்கும் நல்லவர். 

மொழிபெயர்ப்பு என்ற விஷயத்தில், மூலத்துக்கு நேர்மையாக இருப்பது என்பதைவிட, மூலத்தைப் படித்துவிட்டு, சொந்தமாக அடித்து ஆடுவது அவர் வழக்கம்.

ராமானுஜம் மெஸ் முகவரிதானே தவிர, அவர் தங்கியது அங்கு அல்ல. கரோல்பாக்கில் ஒரு வீட்டின் மாடிப்படிக்குக் கீழே ஓர் அறையில். 

கடைசி காலத்தில் குருமூர்த்திதான் ராஜாமணிக்குப் புரவலர்."

....

Jan 28, 2025

வேடிக்க - 32

வேடிக்க -  32

Besant nagar Elliot's beach. 
26.01.2025 
Evening 5.30 p.m.


லண்டனில் இருந்து சென்னைக்கு Project செய்ய வந்திருக்கும் சித்தார்த். England citizen. Born and raised in London.
 Pet dogs நான்கு வயது Axl,
நான்கு மாத வெள்ளை நிற Dion இரண்டையும் பிரிய முடியாத மனநிலை காரணமாக தன்னுடனேயே பிரியத்துடன் கொண்டு வந்து விட்டார்.

If there are no dogs in heaven, then when I die 
I want to go where they went. – Will Rogers

வில் ரோஜர்ஸ் அமெரிக்க தியேட்டர் பெர்ஃபார்மர்.  பைரவர சொர்க்கத்திற்கு தான் 90 வருடங்களுக்கு முன் போயிருப்பார்.

The dog is a gentleman;
 I hope to go to his heaven not man’s.
–Mark Twain

மார்க் ட்வைனும் கூட 120 வருடங்களுக்கு முன்னரே கண்டிப்பாக பைரவ சொர்க்கம் கண்டிருப்பாராயிருக்கும்

ஆறு மாதங்கள் இங்கே இருக்க வேண்டும்.
பீச் வந்திருக்கும் யுவ, யுவதிகள், குழந்தைகள் பலரும் இந்த Axl, Dion இரண்டையும் கொஞ்சி விட்டுத்தான் கடலலைகளை காணச்சென்றார்கள். Eagle statue பக்கம் இந்த வேடிக்க.

Jan 27, 2025

தி.ஜானகிராமன் - ஓர் அறிமுகம்

வலைத்தளத்தில் முதல் முறையாக வெளியாகிறது

தி. ஜானகிராமன் - ஓர் அறிமுகம் ::
 R.P. ராஜநாயஹம் 
இந்த கிருஷ்ணபரமாத்மா 
பல சிசுபாலர்களால் அவமானப்படுத்தப்பட்டார். 
ஒரு இலக்கியப் பாரம்பரியத்தையே துவக்கி வைத்து இந்த துரோணர் ஏகலைவர்களாலேயே கூட
 உதா சீனப்படுத்தப் படுகிறார்.
வீழ்ந்த பின்னும் மறைந்த பின்னும் சிகண்டிகளால் அம்புத் துளைப் படுகிறார் இந்த பீஷ்மர்.

தி. ஜானகிராமன் ஓர் அறிமுகம் என்ற இந்தத் தலைப்பில் ஜானகிராமன் என்ற இலக்கியமகான் சென்ற பாதையை வரைந்து காட்டமுடியுமா? 
''ஞானி சென்ற பாதையும் மீன், குருவி சென்ற பாதையும் வரைந்து காட்ட முடியாது" என்று ஒரு பெரியவர் தன்னிடம் கூறியதாக பிரமிள் என்ற தர்மூ சிவராம் எழுதியுள்ளார். 

நவீன தமிழ் இலக்கியத்தில் ஜானகிராமன் என்ற மாபெரும் சக்தியின் தாக்கம் எத்தகையது? பாரதிக்குப் பின் தேஜஸோடு வந்த இலக்கியவாதி இவர்தான். பாரதிக்கு வாரிசும் கவிஞனாகத்தான் இருக்க வேண்டும் என்று விதி எதும் உண்டோ? பாரதி ஒரு மகத்தான சக்தி. ஜானகிராமனும் கூடத்தான். இரண்டு பேருமே சக்தி உபாசகர்களாயிருந்தும், பெண்மையைக் கனப்படுத்தியவர்கள் 
என்பதும் அவர்களிடையேயிருந்த ஒற்றுமை எனில் வேற்றுமைகள் அதிகம்தான்.
 பாரதி இறந்தபிறகு அவரது அருமையை உலகுக்கு எடுத்துச் சொல்ல நிறையப் பேர் புறப்பட்டார்கள். ஜானகிராமனுக்கு அப்படியில்லை என்பது மிக முக்கிய மான வேற்றுமை.

தலைப்பைத் தொடுவோம். 
தி. ஜானகிராமனைப் பற்றி முதுபெரும் எழுந்தாளர் தி. ஜ. ரங்கநாதன் சொல்வார் ''சிவந்தமேனி, சிரித்தமுகம், விதயமும் விதரணை யும் மிகத் தெரிந்தனர். நண்பர்களின் அன்பைக் கொள்ளை கொள்ளும் சுபாவம் அமைந்த குரல்" 

தஞ்சை மாவட்டம் தேவங்குடியில் 28-06-1921- இல் இராமாயணக்கதை சொல்லும் பாகவதரின் மகனாகப் பிறந்து தஞ்சையில் பள்ளிப்படிப்பு, குடந்தைக் 
கல்லூரியில் நான்காண்டு படித்தபின் இந்திய இளைஞர்களின் விதிப்படி ஈராண்டு சும்மா இருந்திருக்கிறார். அதன்பின் சைதையில் ஆசிரியர் கல்லூரிப் பயிற்சி முடித்து பதினொரு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக, சென்னையில் ஒரு வருடமும், தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை, குத்தாலத்திலுமாகப் பணிபுரிந்திருக்கிறார். 
பின் பதினான்கு ஆண்டுகள் சென்னை அகில இந்திய வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராக இருந்து, புதுடெல்லியில் அகிலஇந்திய வானொலியில் பிரதமக் கவ்வி ஒலிபரப்பு அமைப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். 
பின்னும் ஆகாசவாணி Emeritus Producer பதவி கொடுத்து அவரைக் கௌாவித்தது.

 1979 -ஆம் வருடம் சாகித்ய அகாடமி இவருடைய "சக்தி வைத்தியம்' சிறுகதைத் தொகுப்பிற்குப் பரிசு கொடுத்ததும் 
 சிறு நிகழ்ச்சி. 

கணையாழி இதழின் கௌரவ ஆசிரியர் பதவியில் சிரத்தையோடு இலக்கியப் பணியாற்றிக் கொண்டிருக் கும்போது உடல்தலம் குன்றி 1982 ஆம் வருடம் நவம்பர் (18 ஆம் தேதியன்று வியாழக்கிழமை பகலில் நல்ல வெய்யில் நேரத்தில் அவரது மரணம் நிகழ்ந்து போனது. 

இடைப்பட்ட அவருடைய வாழ்க்கையிலே பள்ளியாசிரியராக இருந்தபோதும், வானொலியின் உயர்ந்த பதவி வகித்தபோதும், சென்னையில், டெல்லியில் வாழ்த்த நேரத்திலும், செக்கோஸ்லாவாகியா, ரொமானியா, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் என்றெல்லாம் சுற்றுப்பயணம் சென்று வந்த காலையிலும் அவருடைய வேர்கள் தஞ்சைக் காவேரிக்கரையிலேயே இருந்தன என்பது மகத்தான விஷயம்.

அவருடைய நாவல்களில் மோகமுள், மலர்மஞ்சம், செம்பருத்தி, (உயிர்த்தேன். அம்மா வந்தாள். மரப்பசு, நளபாகம் ஆகிய ஏழு நாவல்கள் உள்ளதமானவை. 

மோகமுள்ளை இந்திய நாவல்களின் சிகரமாகக் கருதும் வெங்கட்சாமிநாதனால் மலர் மஞ்சத்தையும் சிலாகித்துக் கூறமல் இருக்கமுடியவில்லை.

எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் 'மோகமுள்' எல்லாவற்றையும் மிஞ்சி ராஜ கோபுரம் போல் ஓங்கி உயர்ந்து நிற்பதாகச் சொல்லும் சிட்டிக்கு, தான் விருப்பிய சிறந்த பத்து நாவல் பட்டியலில் அம்மா வந்தாளையும் சேர்க்காமல் இருக்க முடியவில்லை.
அசோகமித்திரன் 'அம்மா வந்தாளையும் மோகமுள்ளையும் விட
 'உயிர்த்தேன்" தான் சிறந்த நாவல் என்று சொல்லுகிறார். 

க.நா.சு. "மோக முள் நாவலைப் பிரமாதமாகப் புகழ்ந்த நான் அவருடைய மிகமிக வெற்றி பெற்ற அம்மா வந்தாளைப் பாராட்டவில்லை' என்ற செய்தியைத் தருகிறார். 

சுந்தரராமசாமியின் எழுத்தைக் கடுமையாகச் சாடும் தி.க. சி க்கு ஜானகிராமனின் எல்லா நாவல்களுமே ரொம்பப் பிடிக்கிறது. அன்பே ஆரமுதே உட்பட .

அம்மா வந்தாள் தொடர்கதையாக எழுதப்படாததால் முழுமையாக வந்திருப்பதாக நேர்ப்பேச்சில் கி. ராஜநாராயணன் கூறுகிறார்.

 மோகமுள் போன்ற முழுமையான நாவலை நான் அதன்பின் தமிழில் படிக்கவில்லை என்று சுஜாதா சொல்லி விட்டார். 

தமிழ் நாவல்களை விமச்சித்த சி மோகன் தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாக மோகமுள்ளையும், நல்ல நாவல்களில் ஒன்றாக அம்மா வந்தாளையும், குறிப்பிடத்தக்க நாவல்களில் ஒன்றாக செம்பருத்தியையும் சுட்டிக்காட்டுகிறார். 

மரப்பசுதான் அவருடைய Master Piece என்று சொல்லும் வாசகர்கள் ஏராளம். 

அம்மா வந்தாளும், மோகமுள்ளும் மலையாளத்திலும் அம்மா வந்தாள் ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கின்றன. காவேரி என்ற பெண் எழுத்தாளர் மரப்பசுவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

 பார்க்கப்போனால் அவருடைய முதல் நாவல் அமிர்தம் மட்டுமே நோல்வியடைந்த நாவல். தொடர்கதைகளாக எழுதப்பட்டவைகளில் பாதிக்கப்பட்டது அன்பே ஆரமுதே. 

"சம்பாஷணைத் திறனை நாவல் எழுத உபயோகித்தவர்கள் இந்த அளவுக்கு 
தி. ஜானகிராமனைத் தவிர வேறுயாரும் இதுவரை தமிழில் இல்லை. என்று எனக்குத் தோன்றுகிறது" என்று நாவல்கலை நூலில் க.நா.சு. குறிப்பிடுகிறார். 

கோவை ஞானி தன்னுடைய "மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்" நூலில் சொல் வதைப் பாருங்கள். "ஒரு நாவலில் வரும் அனைத்துப் பாத்திரங்களையும் அவற்றின் வாழ்தலுக்கான உரிமையோடு படைப்பவர் தி. ஜானகிராமன் ஒருவர் 
மட்டுமே"

தி. ஜானகிராமன் சிறுகதைகள் 
ஈடு இணையில்லாதவை. ஒரு ஆவேசமான கலைஞனை வெளிப்படுத்திய சிறுகதைகள் கிட்டத்தட்ட நூறு அற்புதமான சிறு கதைகள். 
அவரது பன்முகப்பட்ட அக்கறைகளை இக்கதைகளில் காணமுடியும். எத்தனைமுறை படித்தாலும் மீண்டும் மீண்டும் வாசகனை பிரமிக்கவைக்கும் சிறு கதைகள்.
 அவருடைய எழுத்தின் அக்கறையையும் நோக்கத்தையும் சுலபமாக தீர்ப்பிட்டுவிடுவது நுனிப்புல் மேய்பவர்கள் இயல்பு. ஆனால் அது அப்படியல்ல. 

சிறுகுழந்தைகள் இவருக்கு ரொம்பப்பிடிக்கும், மலர்மஞ்சம் நாவலிலும் அவலும் உமியும், நாலாவதுசார் குறுநாவல்களிலும் குழந்தைகள் உலகத்திற்கே அழைத் துச்செய்கிறார். 

சிறுகதைகளில் சிலிர்ப்பு, சத்தியமா, சக்திவைத்தியம், பாட்டியா வீட்டில் குழந்தைக்காட்சி போன்ற கதைகளைப் படித்துப்பாருங்கள். கிருஷ்ணன் நம்பியின் கதைகளைப் போல அற்புதமானவை. 

நம்பிக்கைத்துரோகம் பற்றி கடன்நீர்ந்தது, கங்காஸ்நானம் கதைகளில், முதுமையின் துர்ப்பாக்கிய நிலையை வேண்டாம பூசனி'' 'கழுகு', 'விளையாட்டுப் பொம்மை' கதைகளில்,
முதியவர்களின் மனக்கோளறுகளை ‘பாயசம்' 'குளிர்' போன்ற கதைகளில் நுட்பமாகக் காட்டுவார், 

சங்கீதத்தின் உன்னதத்தை அவர் சொன்னதுபோல யார் சொல்லி யிருக்கிறார்கள். பவழமல்லிப் பூவைப் பார்த்தாலே அவருக்கு தன்யாசி ராகம் தான் ஞாபகம் வரும். 
இயல்பாகவே அவர் சங்கீதப்பயிற்சியும், நல்ல ரசனையும் கொண்டிருத்தார் என்பது நமக்குத் தெரியக்கிடைக்கும் செய்தி.
சமையலையும், சமையல்காரர்களையும் பற்றி கமலம் குறு நாவலிலும், கண்டாமணி சிறுகதையிலும் நளபாகம் நாவலிலும் அனுபவித்து எழுதிய ஜானகிராமன் சமையற்கவையிலும் வல்லவர் என்பது முக்கியமான விஷயம். 

ஏழ்மையின் துயரத்தைப்பற்றி, கடை வீதியில் வேலைபார்க்கும் சிறுவர்களைப்பற்றி, வரப்புக் குறும்பூக்களைப் பற்றிக் கூட கவலைப்பட்ட மகாதிமாவைச் சுலபமாகத் தீர்ப்பிடுவது எந்தவிதத்திலும் நியாயமில்லை.

அவருடைய நகைச்சுவை பிரத்யேகமான அம்சம். ' சின்ன வாக்குவாதம்' என்ற கதையைப் படித்து பாருங்கள். 

மேலும் 'தி. ஜானகிராமனின் பல சிறுகதைகளில் பொய்ம்மையும், போலி அனுஷ்டானங்களும் தர்மத்தின் உச்சமாகக் கௌரவம் பெறும் அவலத்திற்கெதிரான கோபச்சிரிப்பு இழையோடக் காணலாம் என்று ஆதவன் சொன்னது நினைவிற்கு வருகிறது. 

அப்புறம் அந்தப் பெண்கள்.
 “கடவுளைக் காதலியாகப் பாவிக்கப் பழகியிருந்தால் பெண்ணின், ஹிருதய அழகையெல்லாம் முழுதும் பார்த்திருக்க முடியும்' என்ற தி. ஜா. விள வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது. 
யமுனா, புவனா, பாலி, குக்கு, சந்திரா, டொக்கி, செங்கம்மா, அலங்காரம், அம்மணி.
 ந. ஐயபாஸ்கரன் சொல்வதுபோய 'மறக்கமுடியாத வியக்திகள் இவ்வளவு அன்பும், அனுசரனையும் உலகில் கொட்டிக்கிடக்கிறதா என்று பிரமிக்கவைக்கும் பெண்கள்'. 

அவருடைய பயணக்கட்டுரைகள் மூன்று. உதயசூரியன் பயணக்கட்டுரையை முடிக்கும்போது பிளேனில் தான் சந்தித்த அமெரிக்கச் சிறுவனுக்கு மூங்கில் 
பொம்மையொன்றைப் பரிசளித்ததை நினைவு கூர்ந்து, 'அவன் ஊர் பெயர் கூடக் கேட்டு வைத்துக் கொள்ளவில்லை. பையா! இன்னும் அதை வைத்திருக் கிறாயா? கெட்டுப்போக்கி விட்டாயா?'' என்று முடிக்கிறார். 

கருங்கடலும் கலைக்கடலும் நூலில் ரொமானியாவில் ஒருவர் 'நீர் பிராமணரா?" என்று கேட்க ஜானகிராமன் சொல்கிறார். 'பிராமண யோக்யதை ஒன்றும் கிடையாது. பிறந்தது அந்த ஜாதியில். ஆனால் பகுத்தறிவுவாதிகளும், அரசாங்கம், கல்லூரி அதிகாரிகள் எல்லாம் என்னை, பிராமணன் என்றுதான் கூறுகிறார்கள். பகுத்தறிவுவாதிகளுக்குக் கூட மூடநம்பிக்கைகள் சாத்தியம்'. 

சிட்டியுடன் அவர் சேர்ந்து எழுதிய 'நடந்தாய் வாழி காவேரி' யில் காவேரியைப் பார்த்து ‘தண்ணீர் குழாயிலும்தாள் வருகிறது. ஆனால் ஒரு ஆற்றில் ஓடும் போது இப்படியா பாட்டாகக் கேட்கும். கோவிலாக உயரும். கவிதையாகச் சிரிக்கும். கூரறிவாக ஊடுறுவும்' என்று ஆச்சரியப்படுகிறார். 

உதயசூரியன் முன்னுரையில் 'நம்நாட்டில் இன்று நோன்றியுள்ள பிரச்சனைகள் குறைகள் எல்லாம் தற்காலிகமானவை. வெளிநாட்டுச் சிந்தனைகளின் தாக்குத லாலும், உலகப்போக்கின் கிறுக்குகளாலும் ஏற்பட்டவை, இத்தனையையும் சமாளித்து நிற்கிற ஆத்மீக பலமும், பாரம்பர்யத் தொடர்ச்சியும், போலிகளை உண்மையென்று மயங்காத அமைதியும் நம்நாட்டிற்கு உண்டு'. 
இது அவர் நமக்குத் தரும் முக்கிய செய்தி. 

மற்றொன்று, ஒரு கடிதவரிகள் ''வாழ்க்கை. கலை, தத்துவம் அனைத்திலும் Positive Attitude - ஐ ஏற்படுத்தி நிலைநிறுத்துவதுதான் நல்லது என்று நினைக்கிறேன். நம்பிக்கையும் தைரிய மும் விடாமுயற்சியும் தளராமையும், அதேசமயம் மூர்க்கத்தனமான Violence - ன் பிடியில் சிக்காமலிருப்பதும் நம் இளைஞர்களுக்குத் தேவை. சுப்ரமண்யபாரதியின் கவிதைகள் இதற்கு மிகவும் உதவும். நல்ல இளமையில் நம்மைவிட்டுப் போனார் அவர்". 

எழுத்தாளன் ஓரளவு, அனார்கிஸ்ட் ஆக இருப்பது நல்லது என்ற அபிப்ராயம் கொண்ட தி. ஜா. தன்னுடைய எழுத்துபற்றிக் கூறுவது
 'சிறுவயது முதலே என்னுடைய மனதில் "கன்வென்ஷன்' என் சொல்லப்படும்படியான கட்டுப்பாடுகளை எதிர்க்கும்  மனோபாவம் உருவாயிற்று. நம்முடைய மக்கள் மரபையும் (Tradition) கட்டுப்பாட்டையும் ஒன்றுசேர்த்துக் குழப்பிக்கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். கட்டுப்பாடுகள் காலத்துக்கு ஏற்றபடி மாறும் தன்மையுடையன. ஆனால் அவைகளுக்கு நம்முடைய அன்றாடவாழ்வில் 
நிரந்தரமான  இடத்தை அளிக்க முற்படும்போதுதான் தனிமனித சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
சமுதாய நாகரீகத்தின் உயிர்ப்புச்சக்தியுடன் கூடிய ஜீவனாவது இம்மாதிரியான கட்டுப்பாடுகளிலே நசித்துப் போக ஏது இருக்கிறது. மனித உணர்ச்சிகளைப்பற்றி, மன விகாரங்களைப்பற்றி எழுத முற்படும் போது கட்டுப்பாடுகளை அறுத்தெறிய வேண்டியிருக்கிறது."

கு. ப. ரா. வின் சிஷ்யர்களாக
 தி. ஜானகிராமன், எம். வி. வெங்கட்ராமன். கரிச்சான் குஞ்சு, ஸ்வாமிநாத ஆத்ரேயன், அ.கி. ஜயராமன், கம்பதாஸன் என்று பலரும் தங்களைப்பற்றி பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.
 கு. ப. ரா.வின் கடைசி நாட்களையும் அவரது மரணத்தையும் பற்றி, தானும் கரிச்சான் குஞ்சுவும். அனுபளித்த வியாகுலத்தைப்பற்றி யெல்லால் 'வழிகாட்டி'
என்ற தலைப்பில் 
எழுதிய கட்டுரை வாசகர் வட்டம் வெளியிட்ட கு. ப. ரா. வின் 'சிறிதுவெளிச்சம்' என்ற நூலில் வந்துள்ளது. ஜானகிராமனின் சுயத்வமான வீரியமிக்க நேர்த்தியான கட்டுரை அது. 

கணையாழி நவம்பர் 1988- இதழில் திருப்பூர் கிருஷ்ணன்: தி. ஜானகிராமன் நல்ல சிறுகதையாசிரியர். நாவலாசிரியர், அவரைச் சிறந்த நாடகாசிரியர் 
என்று கூடச் சொல்லமுடியுமா? 
கோமல்சுவாமிநாதன் : சந்தேகமில்லாமல் அவரின் நாலுவேலி நிலம், வடிவேலு வாத்தியார் டாக்டருக்கு மருந்து போன்றவை அற்புதமான படைப்புகள்.

 இது கோமலின் கருத்து என்றாலும் தி.ஜா. வின் நாடகங்கள் சாதாரணமானவை தான். நான் நாடகாசிரியன் இல்லை. என்னுடைய இலக்கியத்துறை வேறு என்று தி.ஜா,வே. கூறியுள்ளார். 

"தமிழ் இலக்கியத்திற்கு அவர் செய்த மற்றொரு சேவை மொழிபெயர்ப்புகள்." 'நாவல் கலை' நூலில்
 "க. நா. சு. இப்படி சொல்கிறார். 
க. நா. சுப்ரமணியம், தி. ஜானகிராமன் போன்றவர்கள் பல ஆங்கில ஐரோப்பிய நூல்களை மொழிபெயர்த்து, தமிழுக்கு வளமூட்டினர்."

ஜானகிராமன் மொழிபெயர்த்து சிரேஸியா டெல்ட்டாவின் "அன்னை" நாவல், 

போலந்து கவிஞர் டெட்மேஜரின் கதைகளடங்கிய 'கிரிஸ்' என்ற தொகுதியும் வெளிகத்துள்ளதாகத் தெரிகிறது. 
பர்லாகர் க்விஸ்ட் எழுதிய ஸ்வீடிஷ் நாவல் "குள்ளன்" இவர் மொழி பெயர்ப்பில் வெளிவந்திருக்கிறது. 
அவர் மொழிபெயர்த்த வில்லியம் பாக்னரின் "பன்னிரெண்டு கதைகள்' இன்னும் அச்சுருவம் பெறவில்லை என்றே தோன்றுகிறது. ஹெர்மன் மெல்வின் எழுதிய மோபிடிக் நாவலை யும் மொழிபெயர்த்திருக்கிறார். 

அணுவிஞ்ஞானம், புவியியல் பற்றிய ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 

சாதனை! சாதனை! இத்தனை சாதனைசெய்த ஜானகிராமன் தன்னுடைய தகுதிக்குக் குறைவாகவே கௌரவிக்கப்பட்டார். இந்த கிருஷ்ணபரமாத்மா பல சிசுபாலர்களால் அவமானப்படுத்தப்பட்டவர். ஒரு இலக்கியப்பாரம்பர்யத்தையே துவக்கி வைத்த இந்த துரோணர் ஏகலைவர்களாலேயேகூட உதாசீனப்படுத்தப்படுகிறார். 
வீழ்ந்த பின்னும் மறைந்தபின்னும் சிகன்டிகளால் அம்புத்துளைபடு கிறார் இந்த பீஷ்மர்.

அவருடைய சாதனை உதாசீனப்படுத்தப்படும் என்பதை அவர் அறிந்தேவைத்திருந்தார் என்றே தெரிகிறது. மலர்மஞ்சம் நாவலில் தஞ்சைக்கோவில் பற்றிக் கூறுவது சுயதரிசனமாகவே படுகிறது. 

"ஆட்டுமந்தை படுத்திருப்பது போலீருக்கிறது. மதிலும் கோட்டையும், கோயில் கோபுரம் இடையனை போலவும் நிற்கிறது. 
இவ்வளவும் செய்து என்னஆச்சு? இந்த இரண்டு காக்காய் குடியிருக்கிறதுக்காக இத்தனை பெரிய கோயில் கட்டனுமா? 
எத்தனை கருங்கல்! எத்தளை ஆளு! எத்தனை சில்பி! 

ஒரு மனுஷனுக்கு இவ்வளவு அகம்பாவம்மான்னுதான் இந்த இரண்டு காக்காயும் சிரிச்சுண்டிருக்கு, 
அவ்வளவும் உண்மை, நாமெல்லாம் என்ன சாகசம் பண்ணினாலும் அதுக்கெல்ல்லாம் இப்படி ஒரு காலம் வரும்.
 
ஐந்தாறு எருதின் பருமனுக்கு ஒரு நந்தி, மூன்று ஆள் உயர லிங்கம், வானக் கோலாய் வடித்த கோபுரம், ஆகாயத்தைப் போல பிரகாரம் இவைகளுக்கு மரியாதை இல்லை. யாரும் சீந்தக் காணோம். நானும் அப்படியே இருந்து விட்டால் போகிறது"

இந்த இலக்கிய உலகின் அசமந்தத்தைத் தெரிந்தேதான் தி. ஜானகிராமன் இப்படிச் சொல்கிறாரோ?

....

1989 நவம்பர் மாதம் 19ம் தேதி புதுவை பல்கலைக்கழகத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

"மேலும்" இலக்கிய இதழில் 1990 மே மாத இதழில் வெளி வந்தது.

......

https://www.facebook.com/share/p/1D65gXCeTn/

https://www.facebook.com/share/p/162aWh8J7d/

Jan 20, 2025

வேடிக்க - 30 சொல்லித்திரிவதில்லை மன்மதக்கலை


ஒருவன் தனக்கு girls friends அதிகம் என்றும், தான் Casanova என்றும்
 மார் தட்டுவானாகில் அவன் நிச்சயம்
  மன நோயாளி என்று தான் அர்த்தம்.

பெரிய மச காலி ( Womanizer) நூறு பொம்பளைய சோலி பாத்தவன் என்று தன்னைப்பற்றி பீற்றுபவனும் மன நோயாளியே.

(மச காலி மதுரை வட்டார வழக்கு.

மசை - பெண் 
காலி - அயோக்கியன்,  ரௌடி, காலிப்பயல்.)

"சொல்லித்திரிவதில்லை மன்மதக்கலை"
- Artist JK 

Jan 15, 2025

வேடிக்க - 29




வேடிக்க - 29.



திருநங்கை சுசி. 

பெசண்ட் நகர் நகர் பீச்சில் மேட்டில் இருந்து நடைபாதைக்கு இறங்க சிரமப்பட்ட போது ஓடி வந்து "அப்பா" என்று 
கை பிடித்து உடன் உதவி செய்து விட்டு மேலே வேகமாக நடந்தவள்.
"மகளே, நில்லும்மா" பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து நீட்டிய போது 
சுசி " பணமெல்லாம் வேண்டாம். "என்னோட அப்பா" கறுப்பு வைரமாக ஜ்வலித்து புன்னகையுடன் விறுவிறுவென்று போய் விட்டாள்.

மகா உன்னதமான சுடர்ப்பொறி. Spark. 
Her inner sparkle.

அடுத்தடுத்த தடவை பெசண்ட் நகர் பீச்சில் பார்க்கும் போதெல்லாம் ஏதாவது அவளுக்கு தர வேண்டும் என 'மகளே, இந்தா " கையை நீட்டும் போது 
சுசி "வேண்டாம்ப்பா" 
Always classy, never trashy.

பொங்கல் அன்று பீச்சில் இல்லத்தரசியிடம் 
" நம்ம மக சுசியை என்னோட 
செல்ஃபி எடும்மா" என்றேன்.

Sparkle on, Susi.

Jan 13, 2025

தும்பிக்கய ஊனி நாலு காலயும் மேல தூக்கி...

தும்பிக்கைய ஊனி நாலு காலயும் மேல தூக்கி சங்கு சக்கரமா சுத்தணும்.

இந்த யான தும்பிக்கைய ஊனி, ரெண்டு கால மட்டும் தான் தூக்கிட்டு எறக்கி சர்க்கஸ நிறுத்திடுச்சே. அடச்சே..


வால மரத்தில தொங்க விட்டு ஊஞ்சலாடுமா? அதுவும் முடியாது போல..

பஞ்ச பாண்டவர் எத்தனை பேர் என்பது கேள்வி.
ஒருத்தன்’கட்டில் காலு’ போல ’மூனு பேர்’னு சொல்லி ’ரெண்டு விரலை’ நீட்டி ஆட்டிக்காட்டினான்.
இதில் எத்தனை தப்பு. அவன் விளக்கமாக ’கட்டில் கால்’ எனும்போதே தப்பு. நாலுன்னு சொல்வான்னு பாத்தா கட்டில் காலு போல மூனு பேர் என்கிறான். அதை இன்னும் விரிவாக தன் இரண்டு விரல்களை விரித்து செயல்முறை விளக்கம். அப்ப வாயத்தொறந்து 'ரெண்டு பேர்'ங்கிறான்.

Jan 12, 2025

வணங்கான்

VANANGAN

வணங்கான்

நின்ன எடத்திலேயே ஓடிக்கிட்டேயிருக்கும் பாலா.


கிளம்பின எடத்திலேயே தான் இன்னும் கொஞ்சம் கூட நகராம ...


ஜெராக்ஸ் காப்பியாக பாலா படத்து ஹீரோஸ்.

பாணி மாறாத நிலை

Monotonous Director 

Morbidity 

...

R.P. ராஜநாயஹம் 2009ல் எழுதிய 
பதிவு கீழே :

பாலா படங்கள் 
- R.P. ராஜநாயஹம் 

பாலா படங்களில் சில விஷயங்கள் Repeatஆகின்றன. Similarities தெரிகின்றன.எல்லா படங்களுமே Morbid வகையாய் இருக்கின்றன.

 கதாநாயகர்கள் ரொம்ப மூர்க்கமானவர்கள்.
நந்தா சூரியா, பிதாமகன் விக்ரம், நான் கடவுள் ஆர்யா மிகவும் பலசாலிகள். போலீஸ் இவர்களை கண்டு மிரள்கிறது .

நந்தா சூரியா, நான் கடவுள் ஆர்யா தாய்உறவு சீராக இல்லை. நந்தா சூரியா தாயின் உதாசீனம் கண்டு மன உளைச்சல் அடைகிறார். நான் கடவுள் ஆர்யாவின் உதாசீனம் தாயை கலங்கி தவிக்க விடுகிறது. நந்தா சூரியா மைனர் ஜெயில் என்றால் நான் கடவுள் ஆர்யா பால்யத்தை காசி மடம்.

கதாநாயகி சேது விக்ரமிடம் ,நந்தா சூரியாவிடம் , நான் கடவுள் ஆரியாவிடம் அப்ரோச் செய்யும் காட்சிகள் ஓரளவு ஒத்த தன்மை கொண்டவை. பயந்து பயந்து பேசுவது.

பழைய பாடல்களுக்கு சூரியா சிவாஜி, சந்திரபாபு மாதிரி சிம்ரனுடன் ஆடுவார் .
நான் கடவுளிலும் எம்ஜியார், சிவாஜி, ரஜினி வேசமிட்டு பல பாடல்களுக்கு ஆடுகிறார்கள். கதாநாயகி நிறைய பழைய பாடல்கள் பாடுகிறார்.

பிதாமகன், நான் கடவுள் கதாநாயகர்கள் இருவருமே எதிரியை துவம்சம் செய்ய, சூழலை புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்கள். உசுப்பி விட்ட பிறகு தான் கொந்தளித்து எழுகிறார்கள்.இருவருமே உலக அளவுகோலின் படி மன நிலை பிறழ்ந்தவர்கள். அப்படி தான் வேறுபட்ட கதாபாத்திரங்களையும் மீறி தெரிகிறார்கள்.

'சேது' படத்தில் நெஞ்சை உருக்கும் மனநிலை பிறழ்ந்த பைத்தியங்கள்.
 'நான் கடவுள் ' படத்தில் நெஞ்சை நிம்மதியில்லாமல் அடித்து காயப்படுத்தி ரணப்படுத்தி விடும் மறக்கவே முடியாத உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்கள். எல்லா பிச்சைக்காரர்களின் முகங்களும் அவர்களின் ஊன உருவங்களும் படம் பார்த்து விட்டு வந்த பின்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கின்றன.

கவிஞர் விக்கிரமாதித்தன் நடிகராக ஒரு நல்ல ரௌண்டு வந்து நிறைய சம்பாதிக்கவேண்டும். என் ஆசை இது.

வடிவேலை சில பல படங்களில் நிம்மதி இழக்கச்செய்யும் 'அந்த நான் கடவுள் முருகன் ' இந்த படத்தில் செமை நடிப்பு .

'நான் கடவுள் 'கதை யாருடையது ? பாலாவுடையது என்று தான் டைட்டில் வருகிறது . ஆனால் படத்திற்கு வசனம் எழுதிய ஆள் தன்னுடைய'ஏழாவது உலகம் 'நாவல் தான் 'நான் கடவுள் ' படத்தின் கதை என்று ஆங்கிலப்பத்திரிக்கையில் கூட குறிப்பிடுகிறார் . அப்படியானால் ' கதை ' தன்னுடையது என்று ஏன் பாலா போட்டுக்கொள்ள வேண்டும். திரைக்கதை இவருடைய பெயரில் வருவது யதார்த்தமானது தான் . இயக்குனர் பெயரில் வருவது நியாயம் கூட .

பாலா Your whole future is before you. வயதும் காலமும் , திரையுலகின் மரியாதை,மதிப்பும் இன்னும் நிறைய உங்களிடம் இருப்பதால் இன்னமும் கூட தமிழ் திரையுலகத்தின் முதல் தர நம்பிக்கை நீங்கள் தான்.
Miles to go before you sleep.

இந்த 'நான் கடவுள் 'படத்தை எடுக்க
மூன்று வருடம் தேவை தானா? ரொம்ப ஓவரா தெரியலே.

படத்தில் லாஜிக் ரொம்ப இடிக்கிறது.
மலையாள ப்ரோக்கரை துவம்சம் செய்யும்போது ஆர்யா ஒரு பார்வை பார்த்ததும் மலைகோயில் பக்தர்கள் ஓடி ஒளிவது, அந்த மலையாள ப்ரோக்கரை ஆர்யா என்ன செய்தார் என்பதை ஒருத்தர் கூடவா ஒளிந்திருந்து பார்க்க முடியாது. போலீஸ் ரொம்ப திணறி.......

தீவிரவாதிக்குரிய சகல கல்யாண குணங்களும் பாலாவின் நாயகர்களுக்கு இருக்கின்றன.நந்தா சூரியாவுக்கு  ராஜ்கிரண். நான் கடவுள் ஆர்யாவுக்கு  காசி சாமியார்.
கதாநாயகி கடைசியில் கதாநாயகனால் கொலை செய்யப்பட காசி சாமியாரின் மூளை சலவை தான் காரணமா? 
காசி சாமியார் சொன்ன ஒரு வாக்கியம் கதாநாயகனின் நினைவிற்கு வந்தவுடன் கொலை செய்யும் கதாநாயகன். இது தான் தீர்வா ?

இப்படி காட்சி பார்க்கும்போது ஸ்ரீராம் சேனா, பஜ்ரங் தள தொண்டர்கள்,சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய கொலைகாரன் பாகிஸ்தான் தீவிரவாதி கசாப் எல்லோரும் ஏன் கொள்கை ஓநாய்கள் ஆகிறார்கள் என்பது நினைவுக்கு வருகிறது.

"கொலை " என்பது ஏனைய சினிமாக்காரர்களுக்கு "சாதாரண கத்திரிக்காய் " பாலாவுக்கும் அப்படித்தான் என்பது அவருடைய படங்களிலிருந்து தெரியவருகிறது.

'பருத்தி வீரன்' அமீர் , 'சுப்ரமணியபுரம்' சசிகுமார் ஆகிய நம்பிக்கை நட்சத்திரங்களும் தங்கள் அடுத்த முயற்சிகளில் இந்த' கொலை 'என்ற தீர்வை உதறி தள்ளி நல்ல படைப்பை தரவேண்டும். படம் பார்ப்பவனின் கபாலத்தில் தாக்கி காயப்படுத்த இந்த 'கொலை'யை விட்டால் வேறு தீர்வே கிடையாதா?

'அன்பே சிவம்' படத்தில் நிறைய உரையாடல் கமல், மாதவன் இடையே அந்த படத்தின் கதையை செழுமைப்படுத்தியது. ' நான் கடவுள் ' தீம் 'அகம் பிரமாஸ்மி' பற்றி விளக்கம் ஏதும் இல்லாதது ஏமாற்றமாக இருக்கிறது. இதுவும் ஏதோ காசி சாமியாரின் ஒற்றை வாக்கிய மூளைசலவை போல பதிவாகிவிட்டது.

Jan 10, 2025

மணல் கோடுகளாய்..

R.P. ராஜநாயஹம் மணல் கோடுகளாய்.. 
புதுவை வெங்கட் விமர்சனம் :

போன வாரம் சென்னை புத்தத கண்காட்சியில் வாங்கி வந்த புத்தகங்களில்..
#மணல்_கோடுகளாய்.……
இன்று வாசித்தேன்..
காலை முதல்  பதிவுகள் போடவில்லை.
வாசிப்பில் மும்முரமாக இருந்ததால்.
____
டிரெயினில் தொலை தூரம் தனிமையில் நாம் பயணிக்கும் போது நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கவனிப்போம்.அதில் சிலவற்றை ரசிப்போம்.சிவற்றை கண்டு மனம் வருத்தப்படுவோம் இல்லையா..சில நேரம் கோவப்படுவோம்.சில நேரம் கோவப்படுவோம்.சில நேரம் சுய பச்சாதாபம் கொள்வோம்.
அது போல வாழ்க்கை பயணத்தில்....
சிறு குழந்தையாக பாட்டியோடு திருச்செந்தூர் கோவில் போனதில் ஆரம்பித்து...
வெவ்வேறு கால கட்டத்தில் மதுரை,திருச்சி,திருப்பூர்,பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் வசித்த போது அவரை சுற்றி நடந்த ..அவரை சுற்றியே நடந்த நிகழ்வுகளை மணல் கோடுகளாக வரைந்திருக்கிறார்.சினிமாவில் பணி புரிய வேண்டும் என்ற ஆர்வத்தால் வகித்த Postal Department (Central Government ) வேலையை ..என் சுபாவத்துக்கு ஒத்து வராது என ராஜினாமா செய்து விட்டு வெறும் இரண்டு படங்களில் உதவி இயக்குனராக பட்ட கஷ்டங்களை அப்படியே எழுதியுள்ளார். கூத்துப் பட்டறை,டிராவல்ஸ், பனியன் கம்பெனி வேலை,Spoken English class teacher,ஆங்கில,தமிழ் இலக்கியம், தமிழ்/ஹாலிவுட் சினிமா பற்றிய புள்ளி விபரங்கள்,சுவாரஸ்ய தகவல்கள்,தமிழக அரசியல்,அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் ...இசை பற்றிய குறிப்புகள்..
அப்பப்பா...மனிதர் வியக்க வைக்கிறார்.

சார்லி சாப்ளின் படம் போல இவரது எழுத்தில் நகைச்சுவை இருக்கும். ஆழ்ந்து யோசித்தால் அதன் பின் இவர் பட்ட வலியும் இருக்கும்.Dark humor மாதிரி.இவரது எழுத்து நடை Unique.எதார்த்தமாக இருக்கும்.சம்பவம் எங்கு நடந்ததோ அந்தந்த Slang ல் எழுதுவார்.Colloquial ஆக இருக்கும்.

மிகவும் நன்றி R.p. Rajanayahem. சார்.

...

Dhivya Venkat

Jan 9, 2025

R.P. Rajanayahem interview

Interviewee : R.P. Rajanayahem 
https://m.youtube.com/watch?v=qJfSXuTU_Ng


https://m.youtube.com/watch?v=Ph-6N-MfhZI

Interviewer :  Ashok Sai Ramana 
Channel: Kala veli 

160, 161 Episodes

160, 161 Episodes 

R.P. ராஜநாயஹம் 

சினிமா எனும் பூதம் 

முரசு டிவியில் 

ஞாயிற்றுக்கிழமை காலை எட்டரை மணிக்கு 

12. 01. 2025 
பிரதாப் போத்தன்

19. 01. 2025
மோகன்

Jan 8, 2025

நிஷ்காம்யம்

விஷால் 25 படங்கள் முடித்திருந்த போது அதையொட்டி ஏதோ சானலில் 
நிகழ்ச்சி. 
கூத்துப்பட்டறை ந.முத்துசாமியிடம் விஷால் பற்றி பேச வைக்க 
வந்திருந்தவர்கள் கேமரா ஆன் செய்து 
விஷால் பற்றி கேட்ட போது 
முத்துசாமி "யார் தெரியலையே?"

" சினிமா கதாநாயகன். நடிகர் சங்க பதவியில் இருக்கார்.
கூத்துப்படறை ஸ்டூடெண்ட்டா இருந்தவர்."

" யாருன்னே தெரியாது."

மூன்று மாதங்கள் கோர்ஸில் மாணவராக விஷால் இருந்திருப்பார் போல.

.....

விஜய் சேதுபதி பற்றி டி. வி சேனல் நிகழ்ச்சியில் ந. முத்துசாமியிடம் நடிகர் பற்றி அபிப்பிராயம் கேட்க வந்திருந்தார்கள்.

ந. முத்துசாமி: விஜய் சேதுபதி கூத்து பட்டறையில் அக்கவுண்ட்ஸில் வேலை பார்த்தார்.
அவருக்கு அப்பவே கல்யாணமாகி குழந்தையிருந்தது. வேலை வேணும்னு கேட்டார். வேலை பாத்துக்கிட்டே தான் படிச்சாரு.

கேள்வி : அப்ப இவ்வளவு பெரிய நடிகர் ஆவாருன்னு நெனச்சீங்களா?

முத்துசாமி : அப்டியெல்லாம் நெனக்கல.

......

கூத்துப்பட்டறையில் வேலை பார்த்துக் கொண்டே முழு நேர நடிகர்களுக்கான பயிற்சியும் பெற்றார். 
சுனாமியின் போது கூத்துப்பட்டறை மாணவராக நாகையில் தெரு நாடகங்களில் நடித்தார்.

ந. முத்துசாமியிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் பிரபலமான நடிகர் ஆன பின்பும் கொண்டிருந்தார். எப்போதும் பேட்டியில் கூத்துப்பட்டறையின் முன்னாள் மாணவர் என்பதை பெருமையோடு குறிப்பிடுகிறார்.

தான் நடித்த படத்தில் கூத்துப்பட்டறை அனுபவங்களை காட்சிப்படுத்திய இருக்கிறார்.

ராஜநாயஹம் அங்கே கோ ஆர்டினேட்டர் ஆக இருந்த 
மூன்று முறை கூத்துப்பட்டறைக்கு விஜய் சேதுபதி வந்திருந்த போது விஜய் சேதுபதியை சந்தித்ததில்லை. வாய்க்கவில்லை.

முத்துசாமியின் டி.வி ரிப்பேர் என்று தெரிய வந்த போது உடனே நல்ல டி.வி. வாங்கிக் கொடுத்திருக்கிறார்.



Jan 3, 2025

வேடிக்க - 28 AGE Obsession



AGE Obsession 

 Running 89.

வருகிற ஆகஸ்ட் 21ல எண்பத்து ஒன்பது வயது நிறைவடைகிறது.

பொது ஜனங்கள் : "நிஜமாவா? என்னங்க சொல்றீங்க! 

"89 வயசுன்னா நம்பவே முடியல. ஆச்சரியமா, அதிசயமா இருக்கு.
பாத்தா அப்டி தெரியல. 
88வயசுன்னா தான் நம்ப முடியும்.
 88வயசுன்னு தான் தெளிவா தெரியிது."

89 வயசுல  என்ன புரிஞ்சது? Eternal Mystery.

 மிஞ்சிப்போனா இன்னும் அம்பது வருஷம் இந்த பூலோகத்தில சஞ்சாரம்.

அப்பால மெஷின் ஆஃப் ஆயிடும்.

Indians are Ageists 

Jan 2, 2025

INTEGRITY

Integrity
- R.P. ராஜநாயஹம் 

வருடம் 1999.டெல்லி தெற்கு லோக் சபா தொகுதியில் போட்டியிடும் மன்மோகன் சிங்.

தேர்தல் செலவுகளுக்கே நெருக்கடி.

 குஷ்வந்த் சிங் உதவ முடியுமா என்று தன் மகளுடைய கணவரையே அனுப்புகிறார்.
அரசியல் உலகம் பற்றி எந்த ‘ஜீவித அறிவாளி’க்கும் உள்ள ஆயாசம் குஷ்வந்த் சிங்கிற்கும் உண்டு என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனால் அந்த ஆயாசம் அவருக்கு ஆச்சரியமாகிப்போனது.

முன்னாள் ரிசர்வ் பேங்க் கவர்னர், இந்திய அரசில் முன்னாள் நிதி அமைச்சராய் இருந்த மன்மோகன் சிங் இரண்டு லட்சம் கடன் கேட்கிறார்.
 குஷ்வந்த் சிங் அந்தத்தொகையை உடனே கொடுத்தனுப்புகிறார்.

Manmohan Singh participated in direct elections only once. That was in 1999 from South Delhi.

அந்த தேர்தலில் மன்மோகன் சிங் தோற்றுப்போகிறார். சில நாட்களில் மன்மோகன் சிங்கிடமிருந்து போன். உங்களை சந்திக்க நேரம் ஒதுக்கமுடியுமா என்று குஷ்வந்த் சிங்கிடம் கேட்கிறார். 

மன்மோகன் சிங் வந்து ஒரு பாக்கெட்டை கொடுக்கிறார். “நான் உங்களிடம் வாங்கிய தொகையை செலவு செய்யவேயில்லை.” இவருடைய மருமகனிடம் குஷ்வந்த் கொடுத்த அந்த இரண்டு லட்சம்.
 That kind of thing no politician would do.

......

April 23, 2015 post