Share

Jun 25, 2024

What a piece of work is Rajanayahem

R.P. ராஜநாயஹம் பற்றி 
மேன் மக்கள் 

Dass Ilango : ஞாபக சக்தியில் கலைஞருடன்           தங்களை ஒப்பிட்டிருந்தேன். 

Kannan P. Samy : It is just not memory power, but remembering things that matter, paying attention to details - it's about living life intensively. 
R. P. sir is perfect example of that. 
So is Kalaignar or Charu. 
High intensity life. 
Pity that they are the most misunderstood people. 

Prabhu Rajadurai : I'm sure, had you got that chance 
you would have been an interesting companion to persons like KARUNANITHI with your anecdotes and histrionic skills, R. P. Rajanayahem 

Vaidheeswaran Sundaram : வாழ்க்கையை விரித்துப் போட்ட பரந்த  வியப்பு  நிறைந்த  விதானம்  
அவர்  வெளிப்பாடுகள்

தேவேந்திர பூபதி : துக்கத்தைக் கூட வலியின்றி கடத்தல். தொடர்ந்து வாசித்து வருகிறேன்.. 
அனுபவத்தை மீறின அறிவில்லை.. 
பகிருங்கள். அறிந்து கொள்கிறோம், 
R. P. ராஜநாயஹம் சார். 
Data bank R. P. sir. 

Arunan Sivakumar : Not only Data bank sir. 
Think Tank too. 
We are grateful to you for ever. 

சுரேஷ் காத்தான் : ஊஞ்சலாட்டு அல்ல உங்கள் பதிவுகள்... உச்சந்தலையில் நச்சென்று 
இறங்கும் சுத்தியலடிகள். 

Hariharan Sarvesan : ராஜநாயஹம் ஸ்வாமீ,
 நீர் முந்தைய பிறவிகளில் ராஜரிஷியாக வாழ்ந்திருப்பீர்கள். 

A. B. Rajasekaran : முக நூலில் நான் ஒரு வரி விடாமல் படிக்கும் எழுத்துகளில் ஒன்று 
திரு. R. P. ராஜநாயஹம் அவர்களுடையது. 
ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் பயங்கர interesting ஆன எழுத்து நடை, அவர் ஒரு தகவல் களஞ்சியமும் கூட. பன்முக திறமையாளர்.

Senthil Kumaran : நீங்கள் எழுதும் காலத்தில் நாங்கள் வாசகனாக இருப்பதே மிகப் பெரிய ஆசீர்வாதம் சார்.

Mohan Hariharan : R. P. ராஜநாயஹம் அவர்களை சிறிது காலத்திற்கு முன் தான் Facebook ல் அறிமுகம் கிடைத்தது.
அவருடைய வீச்சு, கதை, இலக்கியம், நாடகம், நடிப்பு, தமிழ், ஆங்கிலம் போன்ற பல துறைகளிலும் பரந்து விரிந்து ஆழமானது. அவைகளை விவரிக்கும் தன்மை ஒரு சுவாரஸ்யமான படிப்பினைகள். 
I'm simply fascinated by his articles.

SriVathsan : Either happiness or sorrow,  it is in extreme level in your write up. 
Your biggest fan.
ஆச்சர்யம், அபூர்வம்  இவற்றின் உச்சமான அதிசய மனிதர் சார் நீங்கள். தகவல் புதையல்களின் சுரங்கம். பன்முக திறமைகளின் ஒரே முகம். உங்கள் வாசகனாக இருப்பதில் எனக்கு கர்வம். 

Veeranmani Balamurugan : நீங்கள் ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம். 
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை.

Jun 23, 2024

நான் வரல

கவிஞர் வைத்தீஸ்வரனும் மாமியும் முதியோர் இல்லத்தில். மாதம் அறுபதாயிரம் பெற்றுக் கொண்டு சேவை செய்யும் முதியோர் இல்லம்.
தனியாக அபார்ட்மெண்ட் வீடு தருகிறார்கள். வசதியான முதியோர்களுக்கான இல்லம்.

பழம் பெரும் நடிகர் சகஸ்ரநாமத்தின் தங்கை மகன் வைத்தீஸ்வரன் என்பது தெரிந்ததே. 

ந.முத்துசாமியும் ஞானக்கூத்தனும் மாயவரம் பள்ளியில் வகுப்பு தோழர்கள்.
பள்ளியிலேயே முத்துசாமி தி.மு.க.
ஞானக்கூத்தன் தமிழரசுக் கழகம்.

ஞானக்கூத்தன் இறந்த போது துக்க வீட்டில் ந. முத்துசாமியிடம் வைத்தீஸ்வரன் சொல்லியிருக்கிறார்.
"அடுத்து நாம தான் போகணும்"

முத்துசாமி கூத்துப்பட்டறையில் ராஜநாயஹத்திடம் பேசும் போது நினைவு கூர்ந்தார்: "வைத்தீஸ்வரன் அடுத்து நாம தான் போகணும்னு சொன்னார். 
நான்
 'நீங்க வேணா போங்க. நான் வரல'ன்னு மனசுக்குள்ளயே சொல்லிக்கிட்டேன்."

முத்துசாமி மறைந்த அன்று அஞ்சலி செலுத்தும் போது வைத்தீஸ்வரன் கண்ணீர் விட்டு தேம்பினார்.

திருவண்ணாமலை தொப்பியம்மா - திருவல்லிக்கேணி ஒரு ரூபாய் சித்தர்

People seek miracles.

People seek Big Gods that can do big miracles.

Many rich men and the poor search for thousands of tiny miracles.

அஷ்டமாசித்தி யடைந்தோர் ஏறுயர்த் தோர் சித்தராய் விளையாடிய செயல்கள் பற்றி பல கதைகள்.

தி. ஜானகிராமன் பிடி கருணை சிறுகதை சித்தர் பற்றி.

பிரமிளுக்கு சித்தர்கள் மேல் பிரமிப்பும், பிரமையும், பிரேமையும் மிகுதியாக இருந்தது.

சாது அப்பாத்துரையின் தியானதாரா நூல் எழுதினார்.  தன் மரணத்திற்கு பிறகு வெளியாக வேண்டும் என்பது பிரமிள் விருப்பமாயிருந்திருக்கிறது. ஆனால் விசிறி சாமியார் தான் மறுத்து ஆணையிட்டிருக்கிறார் ' இல்லை இல்லை நூல் இப்போதே வரட்டும் ' 

கடையிற்சாமி, கெட்ட வார்த்தை பேசும் யோகர் சித்தர் பற்றி சொல்லியிருக்கிறார். 

கசடதபற இதழ் ஒன்றில் பிரமிள் எழுதியிருந்தார் 
" நிஜின்ஸ்கி போன்ற மேதைகள் கூட தீர்வு காணமுடியாததை கையெழுத்து கூட போடத்தெரியாத அனாமதேயம் தீர்த்து வைத்த போது  கலாச்சாரம் என்றால் என்ன?" என்று திகைத்தேன் " 

பிரமிள் குறுநாவல் "ஆயி"

இது பற்றி கடிதத்திலும், நேரிலும் விசாரித்தபோது பிரமிள் விளக்கவில்லை.

'தமிழின் நவீனத்துவம்' நூலை விசிறி சாமியாருக்கு சமர்ப்பணம் செய்தார்.
Dedicated to Yogi Ramsurat Kumar of Tiruvannamalai.

சித்தர்களை தேடி அலைபவர்கள்,
சித்தர் சமாதிகளை வணங்குபவர்கள், குரு பூஜை நடத்துபவர்கள் பலரும் இங்கே.

தர்கா, சூஃபி.

ஏசப்பா ஸ்தோத்திரம். உம்மை வணங்குகிறோம் ஐயா 

அதிசயம் நடந்து விடாதா?
 தவிப்பு, தத்தளிப்பு நிரந்தரம்.
இருப்பவனும், இல்லாதவனும் சித்தர் வழிபாட்டில். படித்தவனும் பாமரனும்.

சினிமாக்காரர்களும், அரசியல்வாதிகளும்.

சகிக்க முடியாத அளவுக்கு ஆயாசம் ஏற்படுகிறது.
பயங்கர பேராசைக்காரர்கள் தான் இப்படி சித்தர்களை தேடி அதிசயம் நடந்து விடாதா என்று அலைபவர்கள்.
சித்தர்களை உருவாக்கி பிழைப்பு நடத்துபவர்கள்.

இவர்களை வணங்குபவர்கள் பலரும் பல பலஹீனங்கள் உடையவர்கள்.
கேரக்டர் இல்லாதவர்கள்.
Analyse செய்து பார்த்தாயிற்று.




Current Siddha Stars
திருவண்ணாமலை தொப்பியம்மா,

திருவல்லிக்கேணி ஒரு ரூபாய் சித்தர்.

.....

Sep 1, 2009

நாயைக்கறந்தா நாட்டுக்கு பால் தருவது!?
- R.P. ராஜநாயஹம் 

கரிச்சான் குஞ்சு எழுதிய "பசித்த மானிடம்" நாவலில்
திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேசனில் தனியிடம் பார்த்து அமர்ந்து கணேசன் பணத்தை தன் பையில் இருந்து எடுக்க முயற்சி செய்யும்போது போலீஸ் பசுபதி பார்க்கிறார். 
கணேசன் குஷ்டரோகி.
" இந்த ஊருக்கு நான் புதியவன். பிச்சையெடுத்து சாப்பிட்டு பிச்சைக்காரர்களுடன் கலந்து வாழ முடிவு செய்திருக்கிறேன் " என்கிறான்.

பசுபதி தீவிர ஆன்மீகவாதி.
" எவ்வளவு பழுத்த ஞானம் இருந்தால் இந்த முடிவுக்கு வர முடியும்!" புல்லரித்து, செடியரித்து, மரமரித்து சிலிர்த்துப் போகிறார்.

கணேசன் உள்ளதை உள்ளபடி சொல்கிறான் "அப்படி கிடையாது நான் ஒரு அழுகல், எச்சிக்கலை நாய். மலத்தில் மகிழும் பன்றி."

பசுபதி விடுவதாய் இல்லை. மேலும் சிலிர்த்து " நாய் போல் பன்றி போல், நாணம் இல்லா நக்கனுமாய், பேய் போல்,பித்தனைப்போல் பிரம்மவித்து தோன்றிடுவான்" ஒரு செய்யுள் எடுத்து விட்டு கணேசனை வழிபடுகிறார்.

கணேசன் " நான் உதவாக்கரை . காசு பணம் சுகபோகம் கண்டவன். பண்ணின பாவத்தால் அழுகிச்சொட்டுகிறது உடம்பு.
நான் ரொம்ப நல்லாயிருப்பேன் முன்னெல்லாம். அந்த உடம்பு செத்துப்போயிடுச்சி
 இது புது உடம்பு " யதார்த்தமாய் இப்படி சொல்வதையும் 
பசுபதி தத்துவார்த்தமாக எடுத்துக்கொண்டு "கொஞ்சமா பேசினீங்க. ஆனால் நிறைய சொல்லிட்டீங்க. அதிலேயும் ரத்தினச்சுருக்கமா, பழைய உடம்பு செத்துப்போயிடுச்சின்னு சொன்னீங்களே. இதுவரை எனக்கு புரியாத ஞானங்கள் எல்லாம் புரியுதுங்க" வியந்து கணேசனை சித்தன் என்றே நம்புகிறார்.

பசுபதி பின்னால் போலீஸ் வேலையிலிருந்து ரிட்டயர் ஆனதும் சேத்ராடனங்களுக்கு சாமி கும்பிட கிளம்பும் முன் " சாமி, நல்லா பாருங்க என்னை. கண்ணால் வரும் ஞானம் பொன்னாலும் வராது. உங்க கண்பார்வை பட்டதால் நீங்க காட்டிய எல்லா தத்துவங்களும் எனக்கு நல்லா புரியது "
இல்லாத ஒன்றை இருப்பதாக பாவித்து சாதாரண சராசரி அல்லது சராசரிக்கும் கீழானவர்களை மகான் ஆக காட்டும் வறட்டு ஆன்மீகத்தை கரிச்சான் குஞ்சு
சத்தமில்லாமல், கோஷமே இல்லாமல் பசித்த மானிடத்தில் மட்டுமல்ல

"குச மேட்டு சோதி " சிறுகதையிலும் காட்டுகிறார்.

கோவில் கோபுரத்தடியில் விவாதம் செய்யும் நண்பர்களில் ஒருவன் சொல்கிறான் " இந்த நவீன காலத்திலும் வீண் பிரமைகள்.  நம்புவது நல்லது என்றால் நாயைக்கறந்தா நாட்டுக்கு பால் தருவது " என்று இந்த மூட குருபக்திப் பற்றி சொல்கிறான்.  ஒரு வேடிக்கையை அப்போதே நடத்தி காட்டுகிறான். அங்கே இருக்கிற ஒரு பைத்தியத்தைக் கிளப்பி கடைவாசலில் ஒரு சீப்பு பழம் வாங்கி தருகிறான். அந்தப் பைத்தியம் பழத்தை தின்னும்போது அதன் வாயிலிருந்து நழுவி விழுவதை பிடிக்க ஏந்துவது போல தன் கையை நீட்டிக்கொண்டே நிற்க ஆரம்பிக்கிறான். சீப்பு,சீப்பாக பைத்தியம் சாப்பிடுகிறது. கூட்டம் கூடிவிடுகிறது .
 " என்ன? என்ன!"
இவன் சொல்கிறான் " ஒரு துளி எச்சல் கேட்கிறேன். சாமி தரமாட்டேன்னுது"

இருபத்தாறு மாதத்தில் குசமேட்டில் அந்த பைத்தியம் விஷேசமான மகானாக ஆக்கப்பட்டு ஆஸ்ரமம், பூஜை, மேல்நாட்டு வெள்ளைக்கார பக்தர்கள் என்று அமர்க்களப்பட்டு விடுகிறது.

" ஒரு மாதிரியான கூட்டம் " கரிச்சான் குஞ்சுவின் குறுநாவல். 

மயிலாப்பூரில் வசிக்கும் ஜெயாவின் 'அப்பா, அம்மா , அக்கா,தம்பி ' 
இவர்கள் தான் மிக பலகீனமான 'ஒரு மாதிரியான' கூட்டம். 
பெரியப்பாவிடம் டெல்லியில் வளரும் பெண் ஜெயா. பெரியப்பா ரொம்ப ஸ்ட்ராங் கேரக்டர். ஜெயாவின் பெரியப்பா அவளுடைய அப்பா பற்றி இப்படி சொல்கிறார் : "என் தம்பி ஒரு வெறும் ஆள். சுத்த உதவாக்கரை.
 குதிரை ரேஸ், சீட்டாட்டம்னு சூதாடியே வீணாப் போனவன். இப்போ இந்த (காஞ்சி ) பெரியவாள் பைத்தியம் வேற ஏற்பட்டிருக்கு. வெறும் ஆஷாடபூதித்தனம், பூஜை, கீஜை ன்னு வேற கூத்தடிக்கிறான் "

காஞ்சி மடத்தின் மீதான போலி அனுஷ்டான பித்து பற்றி இப்படி பிராமண எழுத்தாளர் நாற்பது,  ஐம்பது வருடங்களுக்கு முன் எழுதி இருக்கிறார்.

மறைந்த எழுத்தாளர் ஆதவன் சொல்வார் :
"தி ஜானகிராமன் கதைகளில் ஆஷாடபூதித்தனத்திற்கும்,
போலி அனுஷ்டானங்களுக்கும் எதிரான ஒரு கோபம் 
எழுத்தில் இழையோடக்காணலாம். கரிச்சான் குஞ்சு கதைகளும் அது போலத்தான்."

https://youtu.be/dYiA2ND7vVs?si=HjuksAb9zmwUAQ3H

Jun 21, 2024

ராஜநாயஹம் நூல்கள் - ஓவியர் முரளிதரன் கிருஷ்ண மூர்த்தி பார்வை

ஓவியர் முரளிதரன் கிருஷ்ண மூர்த்தி :

"..சமீப காலத்தில் நான் படித்த புத்தகங்கள் பல....இருந்தாலும் இவ்வளவு சுவாரசியமாக வும் எளிய நடையோடும் இருக்கும் Mr.ராஜநாயஹம்  புத்தகங்கள். தனிரகம்..❤
.சினிமா,இலக்கியம்,ஓவியம்.நாடகம்.ஏன 
பல விஷயங்களை தொட்டு எழுதிய அருமையான புத்தகங்கள் இவை ..👍🍀.
   எல்லோருக்கும் கட்டாயம் பிடிக்கும்.
.
....I wish every body buy this collection. 👍🌻"

https://www.facebook.com/share/p/6GTBAvH5NNKyVttV/?mibextid=oFDknk


R.P. ராஜநாயஹம் நூல்கள் பற்றி ஓவியர் JK

R.P. ராஜநாயஹம் நூல்கள் 

 காரணச்செறிவு,

கிளர்ந்தெழும் தாபம்,

அதி மதுர மதுர,

கிளர்ந்தெழும் தாபம்

நான்கு நூல்கள் பற்றியும் 

ஃபேஸ்புக்கில் ஓவியர் JK 

கலை இயக்குநர், ஓவியர் JK :

"திருவாளர் ராஜநாயஹம் அவர்களது கைவண்ணத்தில் வெளி வந்துள்ள இந்த புத்தகங்கள் மிக மிக சுவாரஸ்யமான செய்திகளை தம்முள்ளடக்கிய..அதி அற்புதமான பதிவுகள்.
. இந்த தொகுப்புகளை  

வாசக
நண்பர்களுக்கு என் சார்பில்
நான் பரிந்துரைக்கிறேன்..
அன்புடன். JK "

Jaya Kumar



Jun 20, 2024

ராஜநாயஹம் தழல் வீரம் - ராஜா ஹஸன் பார்வை


தழல் வீரம் - கட்டுரைத் தொகுப்பு ஆசிரியர்:             R.P. ராஜநாயஹம் 
ஜெய்ரிகி பதிப்பகம்- பெங்களூரு கிடைக்குமிடம் யாவரும் பப்ளிஷர்ஸ் பக்கங்கள் :272
விலை: Rs.300
அலைபேசி: 86438 42772
----------------------------------------------------------------------
ராஜா ஹஸன் பார்வை 

Raja Hassan 

R.P.ராஜநாயஹம்  கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியச் சூழலில் இயங்கி வருபவர். ஆங்கில இலக்கியம், தத்துவம் ,அரசியல், சினிமா, கலை, படைப்பாளிகளுடன் நட்பு என  இவர் எழுதிக் குவிக்காத தகவல்கள் இல்லை.

 தன்னுடைய எழுத்தை இதுவரை யாரும் கை கொள்ளாத பாணியில் தனித்துவமாக சிறப்பான எழுத்து நடையில் ஞாபக அடுக்குகளின் குண நலன்களோடு எழுதுபவர்.

அனைத்திற்கும் மேலாக நகைச்சுவை இழையோடும் எழுத்துகள் ..எழுத்தின் அழுத்தத்தை கூட்ட அல்லது குறைக்க வல்லவை. 'தழல் வீரம்' என்ற இந்த கட்டுரைத் தொகுப்புகள்..  இவரது பரந்துபட்ட எழுத்துகளில் ஒரு பானை சோறு எனலாம். ராஜநாயஹம் யார் என அறிவதற்கு இந்த கட்டுரைத் தொகுப்பு கட்டியம் கூறுகிறது என்பேன்.

இத்தொகுப்பின் கட்டுரைகள் எந்தவித பாசாங்கும் இன்றி நேரடியாக எழுதப்பட்டுள்ளன .கெட்ட வார்த்தைகள் தனது படைப்பில் வருவதை குறித்து R.P.ராஜநாயஹம் அவற்றின் ஆதி அந்தங்கள், இந்த கூச்சம் எதனால் வருகிறது ?என்று இரண்டு பக்கங்களில் ஆராய்ந்து எழுதியுள்ளார்.

அபார நினைவாற்றல்... ஒன்றிலிருந்து ஒன்று தாவிச் செல்லும் தகவல் பறவை ராஜநாயஹம் எழுத்துகளில் பறந்து கொண்டிருக்கிறது.

தமிழ் இலக்கியச் சூழலில் பலராலும் அறியப்படாத படைப்பாளர்களான கிருஷ்ணன் நம்பி, சார்வாகன், கோபி கிருஷ்ணன், சம்பத் போன்றவர்களைப் பற்றி மிகச் சிறந்த அனுபவங்களையும் அவர்தம் படைப்புகள் குறித்த விமர்சனங்களையும் தொகுப்பில் ராஜநாயஹம் இணைத்திருப்பது மிகவும் சிறப்பு .
குறிப்பாக கிருஷ்ணன் தம்பியின் "தங்க ஒரு கதை "பற்றிய அவரின் விவரிப்பு மிகவும் அருமை.

ஆங்கில எழுத்தாளர் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆசிரியர் குஷ்வந்த் சிங் குறித்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் இதுவரை எங்கும் கேள்விப்பட்டிராதவை. அவருக்கும் அவரது மனைவிக்கிடையிலான பிரச்சனைகள்,மண வாழ்வில் குறுக்கிட்ட பிரபல அரசியல்வாதிகள், அதிகாரிகள் என வெளிப்படையாக குஷ்வந்த் சிங் எழுதி இருப்பவை பற்றி தழல் வீரத்தில் ஆசிரியர் மூலமாக காண்கிறோம்.

கிருஷ்ணமேனன் லண்டனில் ரெஸ்டாரன்ட்களில் சர்வராக வேலை பார்த்து பின்னர் அதே லண்டனில் இங்கிலாந்தின் இந்தியத் தூதராக ஆகி இந்திய எம் பி ஆகி நேருவின் அமைச்சரவையில் இந்திய ராணுவ மந்திரியாகி ....சினிமாவாக எடுத்தால் கூட சற்று மிகையாகவே தெரியும் கதைகளை மிகச் சுருக்கமாக விளக்கி இருப்பது மிகவும் சிறப்பு. ("அவ்வப்போது ஆபாசம் தான் அரியணையில் அமர்கிறது.. அவ்வப்போது அரியணையே ஆபாசத்தின் மேல்")

கி.ராஜநாராயணன் அனுபவங்கள் குறித்து ராஜநாயஹம் தனி புத்தகமே எழுதலாம் அந்த அளவுக்கு கிராவுடனான சந்திப்புகள்.. உரையாடல்கள் நிறைய உள்ளன. ஒரு பானை சோற்றுப் பதமாக கிரா குறித்த கட்டுரைகளில் இருவருக்குமான உறவு, வாத்ஸல்யமான நட்பு... வாசிக்கும் நம்மை நெகிழச் செய்கிறது.
 
'நீட்டி முழக்கி, கூறியது கூறல் இவரிடம் இல்லை.
 பத்து வரிகளிலேயே ஒரு கட்டுரையை முடித்திருக்கிறார்..

 இவரது எல்லா கட்டுரைகளிலுமே இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இங்கு என அந்த எழுத்து தாவுதல் இயல்பாக நடந்து கொண்டே இருக்கிறது...!

Quotes.. ஆங்காங்கே விரவிக் கிடக்கிறது.

தன் எழுத்திற்கான கச்சாப்பொருளை ராஜநாயஹம் எங்கே கண்டடைந்திருப்பார் ? என நினைக்கையில் அனைத்துமே அவரது மூளையில் பதிவான நினைவு அடுக்குகளின் தொகுப்புகள்.. அவற்றை இழை இழையாக உலக திரைப்படங்கள், உலக இலக்கியங்கள், பழந்தமிழ் இலக்கியங்கள், தமிழின் ஆகப்பெரும் எழுத்தாளர்கள், திரை ஆளுமைகள், இசை பற்றிய பதிவுகள் ...தன் அனுபவத்திலிருந்து ராஜநாயஹம் எடுத்தாண்டிருப்பது .... வாசகனை வியப்பில் ஆழ்த்துகிறது.

சாரு நிவேதிதாவின்,
" எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்சி பனியனும்"  படைப்பு குறித்து ஆசிரியர் பகிர்ந்திருக்கும் தகவல்கள் மிகவும் சிறப்பு ❤️.

'ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை 'அவசியம் வாசிக்கப்பட வேண்டிய கட்டுரை. கடந்த 2002 ல் படைப்பாளிகளுடன் கருத்தரங்கம் ஊட்டியில் நடைபெற்றது. அவற்றின் நிகழ்வுகளை ஆசிரியர் விவரித்து இருக்கும் விதம் மிகவும் அருமை.

சுந்தர ராமசாமியின் 'அழைப்பு' கதையில் ஒருவரி,' நினைவின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் பிழைகளின் அவமானம்'. என்ற மேற்கோளுடன் அந்தக் கட்டுரை முடிகிறது. 

நடிகர் ஏவிஎம் ராஜன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி  மத போதகராக இருக்கும் நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன்பே இயேசு கிறிஸ்துவை பற்றி அவர் ,திரைப்படத்தில் கூறியதை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டு எழுதி இருப்பது எவ்வளவு பெரிய நினைவாற்றலுடன் ராஜநாயஹம் இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை புலப்படுத்துகிறது.

தழல் வீரத்தில் இதைப் போன்று மிசா ராமசாமி, மோத்தி,  சிலராமன் போல பல ஆளுமைகள் வந்து செல்கிறார்கள். இந்த சம்பவங்களின் தொகுப்பை ஆசிரியர் சுவாரசியமாக அளித்ததே இப் புத்தகத்தின் அழகு.

மதுரை அமெரிக்கன் கல்லூரி காலகட்ட நினைவுகள் அப்போதைய நிகழ்வுகளை  அந்த வட்டார வழக்கிலேயே பகடியுடன் வழங்கி இருப்பது.. ராஜநாயஹத்தின் கட்டுரைகள் இப்படித்தான் இருக்கும் என்ற படிநிலையைத் தகர்த்து,' எது மாதிரியும் இல்லாத ஒரு புது மாதிரியான எழுத்து வகை' என அறிகிறோம்.

தழல்வீரத்தின் கட்டுரைகள் திரும்பத் திரும்ப வாசிக்க வைக்கின்றன. 

கட்டுரைகளை ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுது மனக்கண்ணில்  நாம் உணரும் சித்திரங்கள் ... அவை நமக்குத் தரும் சிலிர்ப்பான வாசிப்பனுபவம் இந்நூல் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. 

அனைத்து துறைகளைப் பற்றியும் தமிழில் நகைச்சுவையுடன் சுவாரசியமாக சுருக்கமாக கூறும் இந்த 'தழல்வீரம்'  அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நூல்.


பிச்ச

அடையார் ஆனந்த பவன் முன்னாலே பிச்சைக்காரர் பவ்யமாக கை நீட்டி 
வசனம் " பசி, பட்டினி, துன்பம், துயரம், துலாபாரம்" 

அடையாரில் இருக்கும் இந்த அடையார் ஆனந்த பவன் தான் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்டதாம்.  ஒட்டியே முதலாளி பங்களா.

பங்களாவுக்கும் ஆனந்த பவனுக்கும் நடுவில் ஏழைகளுக்கு மூன்று வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

தெனமும் மூணு வேளை அன்னதானம் நடக்கிற எடத்துல பிச்ச கேக்கற Irony.

அப்பல்லோ மெடிக்கல்ஸ் போய் மருந்து வாங்கிக் கொண்டிருக்கையில் அதே ' பசி பட்டினி, துன்பம், துயரம், துலாபாரம் ' அங்கே ஆஜர். 

Body language இப்ப வேற லெவல்.
 "எரநூறு ரூபாக்கு பத்து, இருபது ரூபா சில்லறை இந்தா. முழு எரநூறு நோட்டு குடு"

அவரை உற்றுப் பார்க்காமல் இருக்க முடியுமா?

கல்லாவில் இருந்த பெண் பத்து இருபது ரூபா நோட்டுகள செக் பண்ணிட்டு எரநூறு முழு நோட்டு கொடுக்கிற நேரத்தில் பர்ஸில் கத்தையா இருந்த நூறு ரூபாய் நோட்டுகள பிச்சைக்காரர் எண்ணினார்.
இந்த நோட்டையும் பர்ஸில் வைத்து விட்டு
நிமிர்ந்த நன்னடை, நிமிர்ந்த பார்வையுடன் நடந்தவர் கதவை திறந்து வெளியேறு முன் திரும்பி என்னை மேலும் கீழுமாக பார்வையால் அடித்து பார்த்து பார்த்து சத்தமாக சொன்னார் " வர்ரேன் தலைவரே"

இந்தாள செல்ஃபி எடுக்காம விட்டாச்சே. சே.. மிஸ்ஸாயிடுச்சி. அடையார் ஆனந்த பவன் முன்னாலேயாவது எடுத்திருக்கலாம்.

"பிச்சை எடுப்பவர் ஒட்டகத்தில் அமர்ந்து பிச்சை கேட்டாலும் விருப்பமிருந்தால் கொடுங்கள்..இல்லையென்றால்          அமைதியாக கடந்து சென்று விடுங்கள்" 
- நபிமொழி.

அனா, ஆவன்னா...
ஒட்டகத்தில் வந்து பிச்சையெடுத்தால் கடந்து போய் விடலாம்.

எலியட்ஸ் பீச்சிலே, அடையார் ஆனந்த பவன்ல நச்சரிப்பு தாங்க முடியவில்லை. குளித்து விட்டு வந்து யாரும் பிச்சை எடுப்பதில்லை. கந்தையானாலும் கசக்கிக்கட்டாமல்,
ரொம்ப அழுக்காக 'பசி, பட்டினி, துன்பம் துயரம் துலாபாரம்' கெஞ்சல். ஆலிங்கனம் பண்ணாத குறை தான். நெருங்கி கையால் தொட்டு, தொட்டு தான் கேட்கிறார்கள்.

Jun 19, 2024

ஞானப் பழத்தைப் பிழிந்து

அப்பா சென்ட்ரல் எக்ஸைஸில் பழனியில் சப் இன்ஸ்பெக்டர் ஆக இருந்தார். அப்படி போஸ்ட் இருந்தது. அப்புறம் திருச்சியில் நான் ஆறாம் வகுப்பு படிக்கிற சமயம் அப்பா கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர் ஆனார். 
அப்புறம் பல வருடம் கழித்து மதுரையில் சூப்ரண்ட் ஆஃப் கஸ்டம்ஸ்.

பழனியில்  அப்பா அடையாளம் 
'போயிலை இன்ஸ்பெட்டர்'. 
புகையிலைக்கு வரி போடுவதால்.

வேலை கடுமை. இருபது மைல் சைக்கிளில் அநேகமாக தினமும் போக வேண்டும். பிறகு பழனி திரும்பி வர வேண்டும். பல இரவுகள் காட்டுப் பகுதியில் படுத்திருந்திருக்கிறார்.
அப்படி தூங்கும் போது திடீரென்று விழித்துப் பார்த்தால் தலைக்கு மேலே நல்ல பாம்பு படமெடுத்துக் கொண்டு.

சென்ட்ரல் ஆஃபிஸில் இருந்த சிப்பாய்                          சவட முத்து மாமாவின் சிரித்த முகம் இன்றும்  நினைவில்.
சரவணன் சவட முத்துவின் தந்தை.

அப்பா காலை பல ஊருக்கு போய் புகையிலை குடோன்களை செக் செய்து வரி போட்டு விட்டு மதியம் ஆஃபிஸ் வந்தால் அஸிஸ்டண்ட் கலெக்டர் விசிட். தாமதமாக இரவில் வீட்டுக்கு வந்தார்.

சாப்பிடும் போதே " டேய் தொர, தூங்கிடாதே. நம்ம ரெண்டு பேரும் ஜாலியா கே.பி. சுந்தராம்பாள் கச்சேரிக்கு போவோம்.ஆச்சி பாட்டு நல்லா இருக்கும்"

லிட்டில் ஃபளவர் கான்வென்ட்டில் இரண்டாம் வகுப்பு நான் படித்துக் கொண்டிருந்தேன்.
மார்கழி பனி.
தலைக்கு கம்பளி குல்லா வைத்து ஸ்வெட்டர் போட்டு விட்டு அம்மா அனுப்பி வைத்தாள்.
சைக்கிளில் முன்னால் அமர்ந்து அப்பாவுடன்.

வெள்ளை சேலையில் பாட்டி சுந்தராம்பாள் பாடினார். பரவசத்தில் அப்பா.

பசுமையாக ஞாபகம்.
 'ஞானப் பழத்தைப் பிழிந்து' பாடும் போது எலுமிச்சை பழத்தை 
தன் முன் நீருடன் இருந்த டம்ளரில் சுந்தராம்பாள் பிழிந்தார்.
ரசிகர்கள் கரகோஷம். டம்ளரை எடுத்து பருகினார். நீண்ட நேர கைத்தட்டல் அடங்கியவுடன் ஆச்சி  சிரித்த முகத்துடன் பாடலை தொடர்ந்தார்.

லோகத்துல நடக்காத விஷயம் எத்தனையோ

ஏவிஎம் குமரன் பேட்டியில இந்தியில பாபி ஹிட் ரிஷி கபூர ஜெயசுதாவோட ஜோடியா போட்டு நடிக்க வைக்க நடந்த முயற்சி பற்றி சொன்னார்.பாபி ஹீரோ ஐம்பதாயிரம் அட்வான்ஸையும் லவட்டிட்டானாமே.

ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி மாதவிக்கெல்லாம் முன்னால கமலோட நடிச்ச ஜெயசுதா.

கமலுக்கு மிக பொருத்தமான ஜோடி.

40 வருடங்களுக்கு முன்
 ஜெயசுதா பற்றி கமல் Reminiscence " அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே"

ஸ்ரீப்ரியா அவள் அப்படித்தான்

ஸ்ரீதேவி மூன்றாம் பிறை 

மாதவி ராஜபார்வை

போல

 கமல் ஹாசனோடு 
ஜெயசுதாவுக்கு படம்
நல்லதா சொல்ற மாதிரி 
 எதுவுமே 
இல்லாமல் போய் விட்டது.

லோகத்தில இப்படி நடக்காம போன விஷயம் எத்தனையோ.

Jun 18, 2024

இத கேளுங்க


1988ம் ஆண்டில் ஒரு எழுத்தாளரின் முதல் சிறுகதை தொகுப்பு காவியா வெளியீடு. 
கோவை வேலாயுதம் என்னிடம் அதன் முதல் பிரதியை  நல்ல தொகைக்கு நான் வாங்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். 

கோவை ரெட் கிராஸ் பில்டிங்கில் நடந்த அந்த புத்தக வெளியீட்டு விழாவில் அந்த நூலின் 
முதல் பிரதியை பத்து மடங்கு தொகை கொடுத்து காவியா சண்முக சுந்தரத்திடம் இருந்து பெற்றுக்கொண்டேன். 
அந்த நிகழ்வில் புவியரசு, சிற்பி ஆகியோர் 
கலந்து கொண்டனர். 
கூட்டம் முடிந்ததும் பலரும் 
என்னை சூழ்ந்து கொண்டனர். 

காவியா சண்முக சுந்தரம் அன்று பெங்களுர் பஸ் ஏறும்போது சொன்னார் ." இந்த விழாவுக்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சியான விஷயம்                                                        ராஜநாயஹம் என்ற நல்ல மனிதரை
 சந்தித்தது தான் "

அந்த சிறுகதை எழுத்தாளர் நெகிழ்ந்து போய் அவருடைய முதல் சிறுகதை தொகுப்பின்
 முதல் பிரதியை நான் வாங்கி 
அந்த நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தியதையும் பாராட்டி ஒரு கடிதம் எழுதினார்.

அதன் பிறகு இந்த எழுத்தாளர் தன்னுடைய இரண்டாவது சிறுகதை நூல்
 கோவை வேலாயுதம் வெளியிட இருப்பதாக சொன்னார். 

மணிக்கொடி சிட்டி ( சி என் அண்ணாதுரையின் வகுப்பு தோழர் ) அவர்களிடம் தன் சிறுகதை தொகுப்புக்கு முன்னுரை வாங்கி தர சொன்னார். 

நான் அதற்காக பழனியிலிருந்து வந்து கோவையிலிருந்த சிட்டியிடம் அந்த எழுத்தாளரை ஆட்டோவில் அழைத்து போய் அறிமுகப்படுத்தி அவரது இரண்டாவது சிறுகதை தொகுப்புக்கு அவரை முன்னுரை தர சொல்லி வேண்டினேன். 

எனக்காக அவருக்கு நான் கேட்டுகொண்டதற்காக முன்னுரை எழுதி தந்தார்.

விஜயா பதிப்பகம் வேலாயுதத்தையும் நான் தான் சிட்டிக்கு அறிமுகப்படுத்தினேன். 

ஒரு விஷயம். சாஷ்டாங்க நமஸ்காரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை அன்று தெரிந்து கொண்டேன். வேலாயுதம் சிட்டியின் காலில் விழுந்த வேகம் .. வேலாயுதம் உடம்பில் பலமாக அடி பட்டிருக்குமோ என நான் ஒரு நிமிடம் கவலைப்படும் படியாக இருந்தது. 
அந்த அளவிற்கு பெரியவர்களுக்கு மரியாதை எப்படி செய்ய வேண்டும் என ஒரு Demonstration!வலிந்து செய்வதல்ல. வெகு இயல்பாக. 

பின்னர் அந்த எழுத்தாளர் எனக்கு மீண்டும் ஒரு கடிதம் நான் சிட்டியிடம் முன்னுரை வாங்கி கொடுத்த சிறுகதை தொகுப்பு பற்றி எழுதினார். 

 " இந்த தொகுப்பை பதிப்பாளர் வேலாயுதம் 
ஆறு மாதம் கழித்து தான் தன்னால் வெளியிட முடியும் என்று சொல்கிறார். 
என்னுடைய பத்தாண்டு கால தவம் இந்த சிறுகதைகள். 
நீங்கள் இதற்கு ஒரு தொகை அவருக்கு
 அனுப்பி வைத்தால் அவர் உடனடியாக வெளியிடுவார். 
இந்த உதவியையும் நீங்கள் செய்தால்
 என் இலக்கிய வாழ்வு செழிக்க முடியும் " 
- இப்படி..இப்படி. 

நான் அப்போது உடனே ஒரு நல்ல தொகை விஜயா வேலாயுதம் அவர்களுக்கு அனுப்பி
 அந்த இரண்டாவது சிறுகதை தொகுப்பை 
உடன் வெளியிட சொன்னேன்.
வேலாயுதம் ' இந்த இலக்கியவாதிகள் உலக நடப்பு தெரியாதவர்கள். ராஜநாயஹம், நீங்கள் இப்படி அந்த எழுத்தாளருக்காக இந்த தொகையை அனுப்பியது உங்கள் தாராள மனசு தான். 
எனக்கு வருத்தம் தான் .' என்றார். 
நான் ' பாவம் அந்த எழுத்தாளர். அவர் சிறுகதைகள் உடனே வர உதவுங்கள் என கெஞ்சுகிறார் ' என்று முடித்து கொண்டேன்.

அந்த எழுத்தாளரின் அந்த தொகுப்பு
" நன்றி
திரு சிட்டி
திரு ராஜநாயஹம் "
என்ற குறிப்பு முன்பக்கத்தில் அச்சிட்டு 
அப்போது எனக்கு பிரதி தரப்பட்டது .

அந்த எழுத்தாளர் நாற்பது வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டவர். 
அந்த திருமணத்திற்கு வாழ்த்து சொல்லி ஒரு மணி ஆர்டர் அனுப்பி வைத்தேன்.

புதுவைக்கு நான் சென்ற பின் வேலாயுதம் 
அந்த எழுத்தாளர் புத்தகம் வெளிவர
 நான் கொடுத்த தொகையை பல மாதங்கள் கழித்து திருப்பி அனுப்பி விட்டார்.

நான் பல வருடம் கழித்து 2003 ல் திருப்பூர் வந்த பின் நான் வேலாயுதம் அவர்களிடம் தொலை பேசியில் பேசி திருப்பூரில் செட்டில் ஆகியுள்ள விஷயம் சொல்லி விட்டு அந்த குறிப்பிட்ட எழுத்தாளர் எப்படி இருக்கிறார் என விசாரித்து விட்டு, எழுத்தாளரின் தொலை பேசி எண்ணையும் வாங்கி 
அந்த எழுத்தாளருக்கு போன் செய்து
 " நான் R .P . ராஜநாயஹம் பேசுகிறேன் " என்றேன்.
நல்ல எழுத்தாளர் தான் அவர். 
அவர் பதில் என்ன தெரியுமா ?
" ராஜநாயஹம்..... ராஜநாயஹம்..... நீங்க .. நீங்க ... நீங்க .. ..என்னிடம் பழகியிருக்கீங்க இல்ல ...."

 அவருடைய மூளையை கடுமையாக கசக்க ஆரம்பித்தார்.தவித்தார் ..தத்தளித்தார் ...
தக்காளி வித்தார் .. 
ராஜநாயஹம் யாரு ..தனக்கும் அவருக்கும் 
என்ன சம்பந்தம் என்று கண்டு பிடிக்க 
ரொம்பவே சிரமப்பட்டு விட்டார் பாவம். 

வேறு யாராய் இருந்தாலும் 
அவர் இப்படி நடந்து கொண்டவுடன் 
போனை உடனே கட் செய்திருப்பார் தானே? 
நான் அப்படி செய்யவில்லை. 
அதன் பிறகு கூட ஒரு பதினைந்து நிமிடம் 
அவரை பேச விட்டு கேட்டு கொண்டிருந்தேன்.( இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் பலர் எப்போதும், போன் நாம் போட்டால் வள வள வள என்று நிறைய பேசுவார்கள் )

..........

மீள் 2008

Jun 17, 2024

ஓவியங்களாக R.P. ராஜநாயஹம்

ஓவியங்களாக R.P. ராஜநாயஹம்

1st sketch by JK Jaya Kumar 

2nd Muralidharan Krishnamoorthy 

3rd and 4th by sketches  TSounthar Sounthar

Jun 16, 2024

ஓவியமாக R.P. ராஜநாயஹம்

ஓவியமாக R.P. ராஜநாயஹம்

ஓவியக் கலைஞர் JK வரைந்திருக்கிறார்.

நெஞ்சார்ந்த நன்றி JK sir 


Jun 15, 2024

பாக்யராஜ் - பாலாஜி மோதல்

பாக்யராஜ் - பாலாஜி மோதல்
- R.P. ராஜநாயஹம் 

"கே. பாலாஜிக்கு
 மறு பக்கம் உண்டு. யாருக்குத்தான் 
மறு பக்கம் இல்லை?"  -
'சினிமா எனும் பூதம்' நூலில் 
R.P. ராஜநாயஹம் 

விதி படத்தில் 'போஸ்ட் மேன்' காட்சிகளை பாக்யராஜே இயக்க வேண்டும் என்பது கே.விஜயன் வேண்டுகோள். 'உங்களை நான் இயக்க மாட்டேன். உங்க டைரக்ஸன்  பாக்க ரொம்ப ஆசை'

விஜயனுக்காக எழுதிக்கொண்டு வந்திருந்த பேப்பரை தூக்கிப் போட்டு விட்டு ஷாட் கூட பிரிக்காமல் விறுவிறுவென்று ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே வசனம் எழுதி ஷூட் செய்ததைப் பார்த்து விஜயன் உள்பட பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் யூனிட்டே பிரமித்திருக்கிறது.

உதவி இயக்குநர்கள் லிவிங்ஸ்டன், இளமுருகு, விஸ்வம் மூவரையும் 
போஸ்ட்மேன் காட்சியிலேயே பார்க்க முடியும்.

பாக்யராஜ் தன்னுடைய அசிஸ்டெண்ட்களை வைத்துக்கொண்டே, 
தான் நடிச்ச காட்சிகளை 'விதி'யில் இயக்கியிருக்கிறார்.

பாலாஜி எண்ண ஓட்டம் 'இதுக்கு சம்பளம் எவ்வளவு கேட்பாரோ, ரொம்ப கேட்டுடுவாரோ' 

வேலை முடிந்தவுடன் பாக்யராஜிடம் சம்பளம் பற்றி கேட்ட போது இவர் பதில் "சம்பளமெல்லாம் வேண்டாம். எனக்கும் அஸிஸ்டெண்ட்களுக்கும்
ஆளுக்கு இரண்டு ஷர்ட் மட்டும் எடுத்து கொடுங்கள், போதும் "

பாலாஜிக்கு பெரும் ஆசுவாசம். இன்ப அதிர்ச்சி.

விதி செய்யும் விளைவினுக்கே வேறு செய்வார் புவி மீதுளரோ?

'விதி'யோடு போகாமல் 'என் ரத்தத்தின் ரத்தமே' யாக நேர்ந்தது விதி.

"என் ரத்தத்தின் ரத்தமே" 
பட தயாரிப்பில் கே. பாலாஜி நடவடிக்கைகள்.

வழக்கமான ரீமேக் பாணியில் பாக்யராஜிடம் வந்திருக்கிறார்.

Mr. India போனி கபூர் தயாரிப்பில் தம்பி அனில் கபூரை promote செய்வதற்காக 300 reel வரை செலவழித்து எடுக்கப்பட்ட படம். ஸ்ரீதேவி கதாநாயகி.

அதை கே. விஜயன் இயக்கத்தில் பாக்யராஜ் கதாநாயகன் எனும் போதே பாக்யராஜ் சொல்லியிருக்கிறார்
 " ரீமேக் படம் எதற்கு? புதிதாய் கதை ரெடி பண்ணலாம்"

கந்தன் புத்தி கவட்டுக்குள்ள. 
பாலாஜி பிடிவாதம். 
His Remake obsession is popular.மிஸ்டர் இண்டியா ரீமேக் ரீமேக் ரீமேக் தான்.

கே. பாக்யராஜ் படங்களை இந்தியிலும் தெலுங்கிலும் ரீமேக் ரீமேக் செய்து கொண்டிருந்தார்கள்.

Recidivist Balaji made a hell a lot of mistakes again and again. Repeated errors.

திருத்த முடியாத தவறாளியாக தயாரிப்பாளர் பாலாஜி.

விநாசகாலே விபரீத புத்தி.

ஸ்ரீதேவி தமிழில் நடிக்க மறுத்தார்.
பாக்யராஜுக்கு ஃபோன் போட்டு ஸ்ரீதேவி கண்ணியமாக விளக்கியிருக்கிறார்.
'இந்தியில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால் தமிழில் நடிக்க வருவது சிக்கல்கள் ஏற்படுத்தும். Tabloids gossip பிரச்சினைகள்..'

Mr. India படத்தில் ஸ்ரீதேவி காட்சிகளை பயன்படுத்த முடியாத நிலை பாலாஜிக்கு.

ராதாவை புக் செய்ய பாலாஜி முயன்ற போது பாக்யராஜ் ஹீரோ என்பதால் ராதா அதிகமாக சம்பளம் கேட்டார். 

பாலாஜி கோபமாகி 'I will teach her a lesson' என சொல்லி மீனாட்சி சேஷாத்ரியை புக் செய்திருக்கிறார்.

ஃப்ளைட் டிக்கெட், தங்க வைக்கிற செலவு எகிறியது.

ஒவ்வொரு முறையும் ஷூட்டிங் வரும்போது கெஸ்ட் ஹவுஸில் தங்க மறுத்து மீனாட்சி சேஷாத்ரி ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கினார்.

கேமராமேனுக்கு உடம்பு சரியில்லை. 
அதனால் ட்ரிக் ஷாட் அனுபவமில்லாத 
புது கேமராமேன்.

ஏ.எல். நாராயணன் கேட்ட சம்பளம் கிடைக்காததால் மெல்ல ஒதுங்கிக் கொண்டார்.

பாக்யராஜிடம் பாலாஜி கேட்டார் 'ஷூட்டிங் போது நீங்களே டயலாக் பொறுப்பை பார்த்து செய்து கொள்ளவேண்டும் '

டைரக்டர் விஜயன் நோய் வாய்ப்பட்டு மரணம்.
விஜயன் மகன் சுந்தர் கே. விஜயனை உடன் வைத்துக் கொண்டு இயக்கத்தையும் பாக்யராஜ் பார்த்துக்கொள்ள பாலாஜி வேண்டிக் கேட்டார்.

பாலாஜி சொன்னவற்றை யெல்லாம் ஒத்துக்கொண்டு செய்திருக்கிறார்

ஐந்து மணிக்கு இவர் நடிக்கிற பகுதி முடிந்தவுடன் கிளம்பியிருக்கிறார்.

ட்ரிக் ஷாட் எடுப்பதில் இவருக்கென்ன வேலை.
அனுபவமில்லாத கேமரா மேனிடமும் சுந்தர் கே. விஜயனிடமும் ட்ரிக் ஷாட் எடுப்பது விஷயமாக instruction கொடுத்து விட்டு கிளம்பிய பின் 
ட்ரிக் ஷாட் ஷூட்டிங் ரொம்ப நேரத்தை விழுங்கியிருக்கிறது.

பழி இவர் மேல். பாக்யராஜ் ஐந்து மணிக்கே கிளம்பி விடுகிறார்.

இந்த படத்திற்கு சம்பளத்துடன் கோவை ஏரியாவும் இவருக்கு தருவதாக பாலாஜி ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கோவையிலும் இவரே வெளியிட திட்டமிட்டு தியேட்டர் பார்த்திருக்கிறார்.
பாக்யராஜ் அண்ணன் தன்ராஜிடம் தியேட்டர் பார்க்க சொன்னபோது தயாரிப்பாளர் பாலாஜி தன்னிச்சையாக தியேட்டர் பார்க்கிற விஷயம் தெரிய வந்திருக்கிறது.

நம்பிக்கை துரோகம்.

'கோவை ஏரியாவும் சம்பளத்தோடு தருவதாக சொல்லியிருக்கிறீர்கள்' 
என்பதை எடுத்துச் சொன்ன போது
பாலாஜி பொய்
'இல்லவே இல்லை. நான் அப்படியெல்லாம் சொல்லவேயில்லை ' 

பாக்யராஜ் - பாலாஜி மோதல்.

Producers Councilக்கு பாக்யராஜ் போயிருக்கிறார்.
ஏ.வி.எம். சரவணன்
 "பாலாஜி யார் சொன்னாலும் கேக்கவே மாட்டாரு"

அடுத்து FEFSIக்கு பாக்யராஜ் போயிருக்கிறார்.

பாலாஜி தன் செல்வாக்கை பயன்படுத்தி 
போலீஸே 
FEFSI president ஐ கன்னத்தில் அறைந்து சிறையில் அடைத்த சம்பவம் ஈடேறி விட்டது.

FEFSI சாலை மறியல்,  பஸ்ஸை தாக்குவதுமாக விஷயம் பூதாகரம்.

முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களை பாக்யராஜ் நேரில் சந்திக்கிறார்.
கலைஞர் உடனே FEFSI president ஐ ஜெயிலில் இருந்து விடுவிக்க உத்தரவிடுகிறார்.

இந்த களேபரங்களுக்கிடையே,
பூர்ணிமா பாக்யராஜ் மூலம் பாக்யராஜை சந்திக்க ரஜினிகாந்த் அப்பாயிண்ட்மென்ட் கேட்டிருக்கிறார்.
ரஜினியை வரச்சொல்லி பாக்யராஜ் தலையசைக்கிறார்.
ரஜினி வள்ளுவர் கோட்டம் லேக் ஏரியா வீட்டிற்கு வருகிறார்.

"பாலாஜியிடம் மோதல் எதற்கு?"

பாலாஜி கோபம் பற்றி ரஜினி " பாலாஜி முரட்டு ஆளு. துப்பாக்கிய தூக்கி காட்றார்"
பாக்யராஜ் " நீங்க உடனே அவர ' என்னங்க பாக்யராஜ சுட்டுடுவேன்னு துப்பாக்கிய காட்றீங்க. நீங்க செய்றது பெரிய தப்பு, அராஜகமான அநாகரீகம்.' னு அங்க சொல்லியிருக்கணும். அதை விட்டுட்டு எங்கிட்ட வந்து எதுக்கு மோதல்னு பஞ்சாயத்து பேசுறீங்க. அவருக்கு என் வீடு தெரியுமே. இங்க வந்து தான என்ன புக் பண்ணாரு. அந்த துப்பாக்கிய எடுத்துக்கிட்டு இங்க என் வீட்டுக்கு வரச்சொல்லுங்க. "
ரஜினிகாந்த் " இல்ல. இது தப்புன்னு அங்கயே சொல்லிட்டேன் " 
இதை சொல்லி விட்டு ஒதுங்கிக் கொண்டார்.

என் ரத்தத்தின் ரத்தமே ஓடவில்லை. தோல்வி.

பூர்ணிமா பாக்யராஜை ஏதாவது நிகழ்ச்சியில் பார்க்கும் போதெல்லாம் பாலாஜி குடும்பத்தில் மற்றவர்கள் அன்பாக பேசியிருக்கிறார்கள்.
பாலாஜிக்கு கிட்னி ஃபெய்லியர்.

 

ஜெயலலிதா ஆட்சியில் அவர் பிறந்த நாளிற்கோ எததற்கோ பாலாஜியிடம் ஆசி பெற்றார்.

பாலாஜி மகன் " He is counting his days"

பூர்ணிமா பாக்யராஜ் விருப்பப்படி கே.பாலாஜியை சந்திக்க சம்மதிக்கிறார்.
Your gentleness shall force more than your force move us to gentleness. 
(Shakespeare in 
As you like it)

Gentleness is a strong hand with a soft touch. 

பாலாஜியே வீட்டில் தானே தயாரித்த ஐஸ்கிரீம் அன்போடு கொடுத்து பாக்யராஜையும், பூர்ணிமாவையும் உபசரித்திருக்கிறார்.

Gentle Bhagyaraj still speaks truth, sometimes even painful truth, but in doing so guards his tone so the truth can be well received.

https://www.facebook.com/share/p/E4AEgG6ZDxa53nZ1/?mibextid=oFDknk

Jun 12, 2024

ராஜநாயஹம் அதி மதுர மதுர -கிளர்ந்தெழும் தாபம் விமர்சனம் - சிவகுமார் கணேசன்

சிவகுமார் கணேசன்:

அதிமதுர மதுர
(வயது வந்தவர்களுக்கு மட்டும்)
கட்டுரைகள் 
R.P. ராஜநாயஹம் 
JAIRIGI பதிப்பக வெளியீடு 
பக்கங்கள் 67 
விலை ரூபாய் 100

நம்மில் பெரும்பாலான ஆண்களும், சில பெண்களும்  பால்யத்தில்  மறைக்கப்பட்ட உடல் உறுப்புகள் குறித்தும், காமம் குறித்தும் இடக்கர் அடக்கலின்றி வெளிப்படையாகப் பேசும் பல நபர்களைச் சந்தித்திருப்போம்.
R.P.ராஜநாயஹம், மதுரையில் அமெரிக்கன் கல்லூரி மாணவனாக இருந்த காலகட்டத்தில், மதுரையில் தன்னைச் சுற்றி இருந்த மனிதர்களைக் குறித்து, அவர்களின் விசித்திரமான குணாதிசயங்களைக் குறித்துப் பேசுகிற கட்டுரைகளின் தொகுப்பு

அந்த மனிதர்களின் வாழ்வு,அவர்களின் அரசியல் புரிதல்கள்,எந்த விதக் குற்றவுணர்வுமின்றி அவர்கள் புரிகின்ற குற்றங்கள் என கஞ்சா, சாராயம், பெண்கள் சூழ வாழ்ந்த எளிய மனிதர்களைப் பற்றிய பதிவுகள் வாசிக்க அவ்வளவு சுவாரஸ்மாக இருக்கின்றன.

ராஜநாயஹத்தின் வழக்கமான, நகைச்சுவை மிளிரும்  தடைகளற்ற மொழியில் எழுதப்பட்ட கட்டுரைகளை வாசிக்கையில், ஆலமரத்தானும், குருவி மண்டையனும், ஒத்தக் காதனும் ஒச்சுவும் நம் முன்னே இரத்தமும் சதையுமாக நடமாடுவதுதான் ராஜநாயஹத்தின் எழுத்தின் வெற்றி

கிளர்ந்தெழும் தாபம் 
கட்டுரைகள் 
(வயது வந்தவர்களுக்கு மட்டும்)
R.P. ராஜநாயஹம் 
JAIRIGI பதிப்பக வெளியீடு
பக்கங்கள் 110 
விலை ரூபாய் 150

வெளி கிரகத்திலிருந்து வந்திருக்கும் ஒருவன், நம்முடைய திரைப்படங்கள், புத்தகங்கள் இவற்றையெல்லாம் பார்த்தால் மிகப் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாவான்.இங்குள்ள மனிதர்கள் ஏன் இவ்வளவு காமவெறி பிடித்து அலைகிறார்கள் என்று. அதே நேரம் இங்கு இருக்கும் யாரையாவது அழைத்து அவன் காமத்தைப் பற்றிப் பேசினால், அதைவிட மிகப் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாவான். ஏனென்றால் அந்த மனிதன் சொல்லுவான். காமம் மிகப்பெரிய பாவம்

இப்படி ஒருமுறை ரஜனீஷ் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

காமத்தின் வழிதான் வந்தோம். ஆனாலும் இங்கு பொது வெளியில் காமத்தைப் பற்றி விரிவாகப் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது.
தான் வாழ்ந்த மதுரை முதலான இடங்களில், தான் பணிபுரிந்த திரைப்படத் துறையில், தான் வாசித்த தமிழ் மற்றும் பிற மொழி இலக்கியங்களில் கிளர்ந்து எழுகின்ற காமத்தைப் பற்றி ராஜநாயஹம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

பிரமாண்டமாக எழுகிற காமத்தின் பிரவாகத்தில் சிக்கிய மனித மனமும் உடலும் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகின்றன என்பதை சுவையான நடையில் பேசுகிற புத்தகம்

இந்த இரு புத்தகங்களையும் வாசிக்கும் நீங்கள் அதிர்ச்சி அடையலாம்.அல்லது என்னைப் போல், நீங்கள் கடந்து வந்த பால்யத்தில் சந்தித்த இது போன்ற நபர்களை குறித்த நினைவுகளை யாரும் அறியாமல் ரகசியமாக மீட்டவும் செய்யலாம்.

Jun 11, 2024

சுரேஷ் கோபி - ப்ரசாந்த் நந்தா

பாக்யராஜ் ஆபிஸில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்த
சுரேஷ் கோபியை 
இயக்குநரை சந்திக்கவே விடாமல் அவருடைய அசிஸ்டெண்ட்கள் ரொம்ப அவமானப்படுத்தியதைப்பற்றி கேள்விப்பட்டதுண்டு.
இப்போது அவர் மத்திய அமைச்சர் ஆகி விட்டார். 
பாக்யராஜிடம் இது பற்றி பாண்டிச்சேரியில் சொன்ன போது
அவர்"உங்கள விரட்டி அவமானப்படுத்தினாங்கள்ள, 
சுரேஷ் கோபியையும் அப்டி பண்ணியிருக்கானுங்க."

அப்போது பாக்யராஜ் இன்னொரு சமாச்சாரம் சொன்னார்.

பாக்யராஜின் பெரும் ரசிகர்
 ஒடிசா நடிகர் இயக்குநர் ப்ரசாந்த் நந்தா.

இவர் ஒடிசா முன்னாள் அமைச்சர். இப்போது பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர். 
இவர் 'அந்தஸ்தோடு' பாக்யராஜை தேடி வந்து சந்தித்திருக்கிறார்.

Jun 10, 2024

With Bhagyaraj in Hotel Ocean Spray

10. 06. 2024 திங்கட்கிழமை

பாக்யராஜுடன் பாண்டிச்சேரி


Hotel Ocean Spray 

ஆசியாவிலேயே பெரிய ஸ்விம்மிங் பூல் இந்த ஓஸன் ஸ்ப்ரே ஹோட்டலில் தானாம்.

இருபத்தி மூன்று ஏக்கர் விஸ்தாரமான 
5 Star Hotel. 
Beautiful infrastructure. Wonderful environment.
212 ம் எண் அறையில் இருந்து வெளியே நின்று வெராண்டாவை பார்த்தால் பிரமாண்டமாய் இருக்கிறது.

"You can reach Swimming pool from Balcony" விளம்பரமே இப்படி. 

இப்போது இந்த ஹோட்டல் Antique piece.

தண்ணீரில்லாத ஸ்விம்மிங் பூல்.
இவ்வளவு பெரிய ஹோட்டலில்
 24×7 restaurant இல்லை.

Jun 9, 2024

நடேஷுடன் சந்திப்பு

09.06.2024

கூத்துப்பட்டறைக்கு நான்கரை ஆண்டுகளுக்கு பின் 

கூத்துப்பட்டறை அதிபர் நடேஷ் அவர்களை சந்திப்பதற்காக நண்பகல் நேரத்தில்.

Jun 8, 2024

கல்லு பீடத்தில

திருப்பூர் D. மயில் சாமியின் ( இவரைப் பற்றி R.P. ராஜநாயஹம் 'கிளர்ந்தெழும் தாபம் - 1'ல் குறிப்பிடப்பட்டுள்ளது)
 தகப்பனார் இறந்த போது
 அந்த பெரிய காரியத்திற்கு வந்திருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் 
சி.கே. குப்புசாமி அந்த நேர பனியன் தொழில் சிக்கல் பற்றி உரக்க சொன்னார். 
" இன்னும் பல வருடத்துக்கு இப்படித்தான் இருக்கும். ' ஆண்டவன் இருக்கான். திருப்பூர காப்பாத்துவான்'னு நீயா சொல்லிக்க வேண்டியது தான். 
கல்ல நட்டு வச்சி 'சாமி'ன்ற. அது வந்து ஒன்ன காப்பாத்துமா? கல்லு எப்படி
 திருப்பூர காப்பாத்தும்?"

சி.கே. குப்புசாமி காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்காரர் 

ஜார்க்கண்ட் - தெலிங்கானா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனின் சித்தப்பா சி.கே. குப்புசாமி. அப்பாவின் சகோதரர்.

கல்ல கடவுள்னு நம்பற வரைக்கும்
 கல்லு பீடத்தில ஒக்காந்திருக்கும்.

பாக்யராஜ் இல்லத்தில் 07.06.2024

07.06. 2024 
நண்பகல் 12.30 முதல் இரவு 9 மணி வரை.
பாக்யராஜ் வீட்டிலேயே பகல் விருந்துணவு. 

நீண்ட அருமையான பன்முக உரையாடல்.
Leave the world behind, Tail gate, Knock at the Cabin, Duel 
திரைப்படங்கள்.


நாற்பத்தைந்து வருடங்களாக வற்றாத இளமை சுறுசுறுப்பு. 

K. Bhagyaraj என்பதற்கு நியுமராலஜி குறியீடு Number of Prince. 
வயது ஏறினாலும் இளமையான தோற்றம்.
19ல் பெயர் உடையவர் முதுமையிலும் மிகுந்த சுறுசுறுப்பாக இருப்பார். மெர்க்குரி விளக்கு போல பிரகாசம் கூடிக்கொண்டேயிருக்கும்.

7ம் தேதி பிறந்தவர் (ஜனவரி 7)போராடி தொழிலில் நினைத்தே பார்க்க முடியாத பெரும் உச்சம், கெளரவம் காண்பவர். இவருடைய தொழிலில் இருக்கிற பிறர் பொறாமைப்படும் அளவுக்கு கொடி கட்டிப் பறப்பார்கள். (கமல் நவம்பர் 7)

பாக்யராஜ் புத்திசாலித்தனமான பஞ்ச்:
 "மனுஷன் தான் 1,2,3,4,5ன்னு நம்பர கண்டு பிடிச்சான். மனுஷன் வந்த பிறகு தான கணக்கு வந்தது. இதிலயே நியூமராலஜி அபத்தம்னு தெரியுதே."

பாக்யராஜ் 1983ம் ஆண்டு ஏ.வி.எம். ஸ்டுடியோவிற்குள் காரில் நுழைகிறார்.
ஏ.வி.எம். 'ஜி' தியேட்டர் பகுதியில் சுவற்றில் ஏறி சினிமாக்காரர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கமல் ஹாசன் ஸ்டூல் மீது ஏறி நின்று எட்டிப் பார்க்கிறார்.

பாக்யராஜ் என்ன எதற்கு என அறிய காரை நிறுத்தச் சொல்கிறார். கமல் ஹாசனே ஸ்டூலில் இருந்து இறங்கி வந்து சொல்கிறார் " ஒங்க விஷயம் தான். ஒங்க"முந்தானை முடிச்சு" படத்துக்கு வந்திருக்கிற கூட்டத்த பாக்கத்தான். " 

ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரில் தான் கட்டுக்கடங்காத கூட்டம்.

https://www.facebook.com/share/p/z7X4XnxDCsy5W5Xr/?mibextid=oFDknk

Jun 7, 2024

டோரா பயணம்

காடு, மலை, பென்னியோட வீடு.. 
ஆறு, பாறை, முதலையோட ஏரி.. 
காடு, வரையிற பாலம், 
கோட்டை, பென்னியோட குட்டி வீடு.. 
ஏரி, சுரங்க பாதை, வானவில்லுன்னு
 இங்க சென்னைக்கு வந்ததில இருந்து 
ஒவ்வொரு விஷயத்துக்கும், 
ஒவ்வொரு எடம் கண்டு பிடிக்க 
டோராவோட பயணங்கள் மாதிரி தான்.

இயக்குநர் பாக்யராஜுடன் ஜூன் 2ம் தேதி திங்கட்கிழமை அவருடைய காரில் பாண்டிச்சேரி போயிருந்ததும் டோரா பயணம் தான்.