Share

Jul 1, 2016

கவிதையும் கரண்டியும்


தி.ஜானகிராமனின் கடைசி நாவல் நள பாகம். 

இதில் ‘சமையல் கலைஞன்’ காமேஸ்வரன் 
(சமையல்காரன் என்று சாதாரணமாக சொல்ல முடியவில்லை) சொல்வான் 
“பாரதியார் எங்க அண்ணா தான். அம்பாள் எங்க அண்ணா கையில கவிதைய கொடுத்தா. என் கையில கரண்டிய கொடுத்தா..” 
அந்த வயதில் இதை அன்று படித்த போது கண் கலங்கி விட்டது.


காஃப்கா கூட சொன்னானே! – ‘தாஸ்தயேவ்ஸ்கி எனக்கு ரத்த உறவு! என் நெருங்கிய சொந்தக்காரன்!” 

ரஷ்ய நாட்டு தாஸ்தயேவ்ஸ்கி இறந்து இரண்டு வருடங்களுக்குப் பின் பிறந்தவன் ஜெர்மன் மொழியில் எழுதிய காஃப்கா. இன்றைய செக்கோஸ்லேவியா மண்ணைச்சேர்ந்தவன்.
காஃப்கா, நீட்ஷே இருவருக்கும் ஒரு சின்ன ஒற்றுமை உண்டு.

இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் கல்யாணம் கேன்ஸல் ஆகியிருக்கிறது.
......................................................


உதவாத உறவும் வேண்டாத சொந்தமும் விபரீத முடிச்சுகளாகி கழுத்தை நெருக்கி …. சுற்றத்தை உதறி… உதறி….
Somethings are best when left unsaid!
“ நேசமிலா வங்கணத்தின் நன்று வலிய பகை” - ஔவையின் வார்த்தைகள்.
கண்ணதாசன் சொல்லவில்லையா? “சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை”

When nothing goes right, go left- இந்த வார்த்தைகளை அசை போடும்போதே இதுவும் நினைவில் நிறைகிறது- If you are going through the hell, keep going!

At sixes and sevens.. in confusion and disagreement..ஏன்? ஏன் இந்த விஷாதம்? The stupid are cocksure and the intelligent are full of doubt! சரி தானே?! Confusion now has made his masterpiece.
........................................


தூண்டில் காரனிடம்
சிக்கி விட்ட மீன்
நாசியில் ஊசி நுழைந்த வேதனையோடும்
புதிய நம்பிக்கையோடும்
மீதி வாழ்வின் முன் வாசலில்
மெல்ல நீந்திப் பார்க்கிறது
பாதியளவு நீர் நிரம்பிய தோள்பையுள்
- ஃப்ரான்சிஸ் கிருபா
வாழ்வின் பெரும்பகுதியை கடந்து விட்ட எவருக்கும் இந்த கவிதையின் சூழல் தான். An uphill struggle at breakneck speed.
ருத்ரையாவின் ’அவள் அப்படித்தான்’ படத்தில் ஒரு பாட்டு.
ஜானகி பாடியது.
”வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை”
சரி.. ஆனால் இந்தப்பாட்டில் கேமரா அபத்தமாக கடலையும் அலைகளையும் காட்டுவது ஏனோ?!

........................................

திருச்சியில் ந.முத்துசாமி ’சுவரொட்டிகள்’ நாடக நிகழ்வுக்காக போயிருந்த போது பிஎஸ்என்எல் டிவிசனல் மேனேஜர் (ஓய்வு) கோவிந்தராஜு, டாக்டர் கிராமியன், பேராசிரியர் டாக்டர் காசி மாரியப்பன் வந்திருந்தார்கள்.
கோவிந்தராஜு இரண்டு முறை வருத்தப்பட்டார் ‘முன்னர் பார்த்த ராஜநாயஹம் தோற்றம் இன்று பார்க்க மிகவும் உருக்குலைந்து போய் விட்டது’
அந்தக் காலங்களில் நான் நல்ல லட்சணமாய் இருந்திருப்பேன் போலும்.
வறுமை, துயர் படுத்தும் பாடு இப்படி!
திருச்சி பேராசிரியர் காசி மாரியப்பன் வேதனையுடன் கூறிய வார்த்தைகள்
“காலம் எல்லோருக்கும் முகத்தில் கோடு போடும் என்றால் ராஜநாயஹம் முகத்தில் கீறல் போட்டு விட்டது!”
இவர் 14 வருடங்களுக்கு முன் என்னைப் பற்றி சொல்வார் “ உங்கள் ஆற்றல் எல்லாம் காற்றில் வீணாகிறது!”
அதிகமாக நான் எழுதாமல் இருப்பது குறித்தும், என் பேச்சு இலக்கியக் கூட்டங்களில் மிகவும் சுவாரசியமாக இருப்பது குறித்தும் இப்படி காசி.மாரியப்பன் குறிப்பிடுவார்.
……………………………………………………………..

 
No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.