Share

Mar 17, 2016

Edward Albee's "The Zoo story"




எட்வர்ட் அல்பீ எழுதிய  நாடகம் “The zoo story.”
 
எட்வர்ட் அல்பீ 12 வயதிலேயே ஒரு பாலியல் பகடி நாடகம் எழுதியவர்.
 அவர் அதன் பின் எழுதிய இரண்டாவது  நாடகம் தான் இந்த ”மிருகக்காட்சி சாலை கதை”. முப்பது வயது அப்போது. அமெரிக்க நாடகாசிரியர்.

பீட்டர் – ஜெர்ரி என்று இரண்டே கதாபாத்திரங்கள் தான் இந்த நாடகத்தில். நியூயார்க் நகரத்தின் சென்ட்ரல் பார்க். அங்கே பீட்டர் அமர்ந்திருக்கிறான். ஒரு நடுத்தர வர்க்க மனிதனுக்கு மனைவி, இரண்டு மகள்கள், இரண்டு பூனைகள், கிளிகள் என்று பப்ளிஷிங் எக்ஸிக்யூடிவ் தான் பீட்டர். சலிப்பாக கேட்கிறான் :”Am I the guinea pig for today?” நான் தான் இன்று உனக்கு பலியாடா? இன்று உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா?


 ஜெர்ரி ஒரு ஏகாந்தி. மனம் தளர்ந்த மனிதன். அர்த்தப்பூர்வமான உரையாடல் நடத்த ஏங்குபவன். பீட்டரை அணுகி “ நான் மிருகக்காட்சி சாலைக்குப் போனேன்..”என்று ஆரம்பிக்கிறான். அவன் சொந்த வாழ்க்கை பற்றிய விவரங்களை பீட்டரிடம் வலிந்து திணிக்கிறான். “ I don’t like to use words that are too harsh in describing people. I don’t like to. But the landlady is a fat, ugly, mean, stupid, unwashed, misanthropic, cheap, drunken bag of garbage.”
 
 ’நான் ஏன் ஜூவுக்குப்போனேன்’ என்று வள,வள என்று சொல்லி …..அதன் பின் கடைசியில் கத்தியை எடுக்கிறான். கத்தியை பீட்டர் எடுக்கும்படி கீழே போடுகிறான். கத்தியை பீட்டர் தன்னை பாது காத்துக்கொள்ள நினைத்து கையில் எடுக்கும்போது ஜெர்ரி கத்தி தன் நெஞ்சில் பாயும்படி ஓடி வந்து மோதுகிறான். பீட்டர் தான் ’ஐயோ கடவுளே! ஐயோ கடவுளே!” என்று கதறுகிறான். ஜெர்ரி ஒரே தடவை தான் ”ஐயோ கடவுளே!” என்று கடைசியாக சொல்லி விட்டு செத்துப்போகிறான்.
Habit is the ballast  that chains the dog to his vomit, Breathing is habit, Life is habit.


 நாடகத்தில் இரண்டு கதா பாத்திரங்கள். ஆனால் எட்வர்ட் அல்பீ சொல்வார் “ என்னுடைய நாடகத்தில் ஒன்றரை கதாபாத்திரங்கள் தான். ஜெர்ரி முழுமையாக உருவான, முப்பரிமாண கதாபாத்திரம். ஆனால் பீட்டர் குறைபட்ட பாதியான கதாபாத்திரம். முக்கிய பாத்திரமாக்கப்பட்டவன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.